
பெயர்தான் விஜயலட்சுமி. ஆனால் இவருக்கும் ரிசர்வ் பேங்க் உரிமையாளர் 'மகாலட்சுமிக்கும்' நேர் பார்வை இல்லாமல் போகிறளவுக்கு துரதிருஷ்டம் துரத்திக்கொண்டிருக்கிறது விஜியை. ஆணானப்பட்ட ரஜினிக்கே ஜோடியாக நடிக்கிற பாக்கியம் கிடைத்தும் அது கைக்கெட்டாமல் போகிற நிலைமைதான் ஏற்பட்டது அவருக்கு. சுல்தான் தி வாரியர் படத்தில் முதன் முதலில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பார் என்று இவரைதான் கூறினார்கள். நாலைந்து நாட்கள் ஷுட்டிங்கும் போனது ரஜினியுடன். அப்புறம் படமே...?
நீண்ட இடைவெளிக்கு பிறகு கிடைத்த 'வனயுத்தம்' படத்தில் சந்தன வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியாக நடித்தார் விஜயலட்சுமி. ரிலீசுக்கு நாள் குறித்த நிலையில் அதற்கும் செக் வைத்தார்கள் தமிழ்நாட்டில்.
காத்திருந்து கவலைப்படுவதை விட, வில்லியாகவாவது நடிப்பை தொடரலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம் விஜயலட்சுமி. தமிழ்படம் என்ற படத்தை எடுத்த சி.எஸ்.அமுதன் இயக்கும் அடுத்தபடம் 'இரண்டாவது படம்'. இதில்தான் வில்லியாக நடிக்கிறார் விஜயலட்சுமி.
No comments:
Post a Comment