
சமுத்திரக்கனி இயக்கும் படம், "நிமிர்ந்து நில்! ஜெயம்ரவி இரண்டு வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில், அமலா பால், மேக்னாராஜ் இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர். இந்த படம் பற்றி, சமுத்திரக்கனி கூறியதாவது: வாழ்க்கையில் எந்த சந்தர்ப்பத்திலும் நிமிர்ந்து நிற்க வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில், இந்த படம் உருவாகிறது. இதில், 25 மற்றும் 48 வயது என, இரண்டு மாறுபட்ட தோற்றத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார். வேறு மாநிலத்தை சேர்ந்த, வெவ்வேறு மொழி பேசக்கூடிய, ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட இருவர் சந்தித்துக் கொண்டால் எப்படி இருக்கும்... என்னென்ன நிகழும் என்பதைத் தான், புதிய கோணத்தில் சொல்லப் போகிறேன். "இந்த படத்துக்காக, மூன்று படத்துக்கான கடின உழைப்பை தரப் போகிறேன். காரணம், இது என் கேரியரில் மிக முக்கிய படம்.
No comments:
Post a Comment