
நடிகை கார்த்திகாவை தொடர்ந்து கால்ஷீட் பிரச்னை காரணமாக விஷாலின் எம்.ஜி.ஆர். படத்திலிருந்து நடிகை டாப்ஸியும் விலகியுள்ளார். சமர் படத்திற்கு பிறகு நடிகர் விஷால், சுந்தர்.சி-யின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். படத்தில் விஷாலுக்கு மூன்று வேடம் என்பதால் படத்திற்கு மத கஜ ராஜா என்றும் அதை சுருக்கி எம்.ஜி.ஆர் என்று பெயர் வைத்துள்ளனர். முன்னதாக இப்படத்தின் நாயகியாக கோ கார்த்திகா ஒப்பந்தமானார். ஆனால் டைரக்டர் தன்னிடம் சொன்ன கதை ஒன்று, இப்போது படத்தின் கதையை அவர் மாற்றிவிட்டார் என்று கூறி கார்த்திகா இப்படத்தில் இருந்து விலகினார். இதனையடுத்து அந்த இடத்திற்கு டாப்ஸி ஒப்பந்தம் செய்யப்பட்டார். இப்போது அவரும் விலகிவிட்டார். இந்தி படம் ஒன்றில் டாப்சி நடிக்க இருக்கிறார். இந்த படத்தை விளம்பரபடுத்துவதற்காக மும்பை செல்ல வேண்டும் என்றும் எனவே ஜூலை முதல் வாரத்தில் சில நாட்கள் என்னால் நடிக்க வர முடியாது என்றும் டாப்சி கூறினாராம். இதனையடுத்து அவர் அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மாறாக அவருக்கு பதில் வரலெட்சுமி நடிக்கிறார்.
No comments:
Post a Comment