Sunday, 17 June 2012

இரு வாரங்களில் 112 கோடி ரூபாய் வசூல் செய்த பிரபுதேவாவின் படம்

    நடன இயக்குனராக இருந்து இயக்குனராக மாறிய பிரபுதேவா தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் படங்களை இயக்கியுள்ளார். இவர் பெரும்பாலும் ஒரு மொழியில் வெற்றி பெற்ற படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்து விடுவார். 

தெலுங்கில் வெற்றி பெற்ற 'போக்கிரி' படத்தை, தமிழில் விஜயை வைத்து அதே பெயரில் படம் இயக்கினார். அப்படம் தமிழில் வெற்றி பெறவே, அதை அப்படியே இந்தியில் சல்மான்கானை வைத்து 'வான்டட்' என்ற பெயரில் ரீமேக் செய்தார். இந்தியிலும் அப்படம் வெற்றி பெற்றது.


அந்த வரிசையில் தமிழில் வெற்றி பெற்ற 'சிறுத்தை' படத்தை ஹிந்தியில் 'ரவுடி ரத்தோர்' என்ற பெயரில் ரீமேக் செய்தார் பிரபுதேவா. தமிழில் கார்த்தி நடித்த வேடத்தில் அக்ஷய் குமாரும், தமன்னா நடித்த வேடத்தில் சோனாக்ஷி சின்ஹாவும் நடித்தனர்.


இருவாரங்களுக்கு முன்பு வெளியான இத்திரைப்படம், அங்கு வசூல் மழை பொழிந்து வருகிறதாம். படம் வெளியான இருவாரங்களில் 112 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாம். இதனால் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கும் பிரபுதேவா, இவ்வெற்றியால் தனது இயக்குனர் பதவிக்கு அதிக பொறுப்பு கூடியிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.


மும்பை பட உலகை கலக்கும் தமிழ் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் என்றால், அவருக்கு போட்டியாக பிரபுதேவாவும் வளர்ந்து கொண்டிருக்கிறார் என்று பாலிவுட் தரப்பினர் பேசிவருகிறார்களாம்.

No comments:

Post a Comment