
பாலிவுட்டின் முன்னணி நடிகை கரீனா கபூரை தன்னுடைய படத்தில் ஒரு பாட்டுக்கு ஆட வைக்க தீவிர முயற்சியில் இறங்கி இருக்கிறராம் எஸ்.ஜே.சூர்யா. வாலி, குஷி, நியூ, அன்பே ஆருயிரே போன்ற படங்களை இயக்கிய டைரக்டர் எஸ்.ஜே.சூர்யா, சில காலம் டைரக்ஷனுக்கு ஓய்வு விட்டு சில படங்களில் ஹீரோவாக வலம் வந்த அவர், தற்போது மீண்டும் ஒரு படத்தை இயக்கி, தயாரிக்கவும் செய்வதோடு அப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமாக இருக்கிறார். இப்படத்திற்கு இசை என்று பெயர் வைத்துள்ளார். படத்தின் நாயகனாக அவரே நடிக்க அவருக்கு ஜோடியாக சாவித்திரி என்ற புதுமுகத்தை அறிமுகம் செய்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருகையில், படத்தில் ஒரு பாட்டுக்கு இந்தியில் கொடிகட்டிப் பறக்கும் கரீனா கபூரை தனது இசை படத்தில் ஒரு பாடலுக்கு ஆட வைக்கப் போகிறாராம். இதற்காக கரீனாவிடம் சூர்யா பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.
எஸ்.ஜே.சூர்யாவின் இசைக்கு செவி சாய்ப்பாரா கரீனா...! பொறுத்திருந்து பார்ப்போம்!!
No comments:
Post a Comment