திரிஷா தெலுங்கு நடிகர் ராணாவை லவ்வினார். அதை பிபாசா கெடுத்தார் என்பதெல்லாம் பழைய சங்கதி!
தற்போதைய சூடு, பிரபுதேவா அடுத்து ஹிந்தியில் இயக்க இருக்கும் படத்தில் திரிஷாவுக்கு கதாநாயகி வாய்ப்புத்தர வாக்குறுதி கொடுத்திருக்கிறாராம்! ஏற்கனவே அக்ஷய்குமார் ஜோடியாக ப்ரியதர்ஷன் இயக்கத்தில் இளம் கலெக்டராக த்ரிஷா நடித்த ’கத்தா மிட்டா’ அவருக்கு கசப்பான அனுபவமாக அமைந்து விட்டது!
ஆனால் அடுத்து மிகச்சரியான ஒரு ஸ்கிரிப்டில் மறு அறிமுகம் ஆகவேண்டும் என்பதுதான் த்ரிஷாவின் திட்டம், அதை மிகச்சரியாக நிறைவேற்றிக் கொள்ள இருகிறார். அதற்கு பிரபுதேவாவும் கைகொடுக்கிறார் என்கிறார்கள்!
இதனால் பிரபுதேவாவின் புது ஃப்ரெண்ட் லிஸ்ட்டில் சேர்ந்திருகிறார் த்ரிஷா. ஹைதராபாத்தில் நடந்த பிரபுதேவாவின் பர்த்டே பார்ட்டியில் பாலிவுட் ஸ்டார்களுடன் த்ரிஷாவும் கலந்துகொண்டார். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இறுதிஆட்டம் முடிந்ததும், ஷாரூக்கானுக்கு பிரபுதேவா அளித்த நள்ளிரவு பார்ட்டியிலும் த்ரிஷா இருந்தார். மும்பையில் நடந்த ‘ரவுடி ரத்தோர்’ படத்தின் பிரிமியர் ஷோவிலும் பிரபுதேவாவின் இன்வைட்டினால் கலந்துகொண்டு வந்துள்ளார் த்ரிஷா. ஆக பிரபு இயக்கத்தில் எப்போது வேண்டுமானலும் த்ரிஷாவின் பாலிவுட் ரீ எண்ட்ரி இருக்கும் என்கிறார்கள்.

No comments:
Post a Comment