Sunday, 17 June 2012

"அளவில்லா இன்பம் தருகிறது தாய்மை"-ஐஸ்வர்யா ராய் பேட்டி


     தாய்மை தனக்கு அளவற்ற பேரின்பம் அளிப்பதாக நடிகை ஐஸ்வர்யா ராய் தெரிவித்தார். இங்கிலாந்து வாழ் இந்தியரும் எம்.பி.யுமான கேத் வாஸ், 25 ஆண்டுகளாக பதவி வகிப்பதை முன்னிட்டு லண்டனில் விருந்தளித்தார். அதில் ஐஸ்வர்யா ராய், அவரது கணவர் அபிஷேக் பச்சன் பங்கேற்றனர். அப்போது ஐஸ்வர்யா ராய் கூறுகையில், ‘‘தாயாக கிடைத்துள்ள அனுபவம் பேரின்பம் தருகிறது. அதை ரசிக்கிறேன், நேசிக்கிறேன். இப்போதை க்கு குழந்தையை வளர்ப்பதே எனது முன்னுரிமை. மீண்டும் நடிக்க வருவது பற்றி உடனடி திட்டம் இல்லை’’ என்றார். அபிஷேக் கூறுகையில், ‘‘குழந்தையை கவனிக்க நான் நேரம் ஒதுக்காதததை குற்றமாக நினைக்கிறேன். அந்த கடினமான வேலை களை ஐஸ்வர்யாதான் செய்கிறார்’’ என்றார்.

No comments:

Post a Comment