Sunday, 17 June 2012

இளவரசி போல இந்தியாவில் நடத்துகின்றனர்: எமி ஜாக்சன்

   இந்தியாவில் தம்மை இளவரசி போல நடத்துவதாக நாயகி எமி ஜாக்சன் லண்டன் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
கொலிவுட்டில் மதராஸபட்டிணம் படத்தின் மூலமாக அறிமுகமான எமி, தற்போது திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்.

தற்போது சியான் விக்ரமுடம் தாண்டவம் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்துவருகின்றார்.

இந்நிலையில் லண்டனில் பேட்டியளித்த எமி ஜாக்சன், இந்தியர்கள் தம்மை இளவரசி போல நடத்துகின்றனர். அங்கே புதிய உலகத்தை காண்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

கொலிவுட் அல்லாது பாலிவுட்டிலிலும் எமி நடித்துள்ளார். இயக்குனர் கௌதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா இந்தி ரீமேக்கில் எமி நடித்தார்.

இப்படம் போதிய வரவேற்பை பெற்றுத்தரா விட்டாலும் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் எமியின் முகம் நன்கு பதிந்து விட்டது.

தற்போது சியான் விக்ரமுடன் நடித்துக்கொண்டிருக்கும் தாண்டவம் படத்தின் இசை, எதிர் வரும் ஓகஸ்டில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment