தமிழில் அஜித்குமார் நடிப்பில் வெளியான "வரலாறு' படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்படுகிறது. "காட்பாதர்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் உபேந்திரா அஜித் ரோலில் நடிக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் ரூ.1.5 கோடியாம். இதுவரை வேறு எந்த ஒரு இசையமைப்பாளரும் இது போன்று சம்பளம் வாங்கியது இல்லையாம்.
இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அப்போது பட தயாரிப்பாளர் மஞ்சு கூறுகையில், "இந்த படத்தில் 2 பாடல்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் புது மெட்டு போட்டுள்ளார். மீதமுள்ள பாடல்களுக்கு தமிழ் பாடல்களில் இருந்து மெட்டெடுத்துக் கொடுத்துள்ளார். தற்போது பின்னணி இசை கோர்பில் அவர் மும்முரமாக இருக்கிறார்' என்றார்.
No comments:
Post a Comment