Sunday, 17 June 2012

ஓவியாவை அதிர்ஸ்ட தேவதையாக எண்ணும் களவாணி விமல்!

  மனம் கொத்தி பறவை படத்திற்கு பிறகு டைரக்டர் ‌எழில் அடுத்து இயக்க இருக்கும் திரைப்படத்தில் களவாணி விமல் தான் ஹீரோ. 

தனக்கு ஓவியா தான் ஹீரோயினாக வேண்டுமென்று அடம்பிடிக்கிறாராம் நம்ம விமல். அதற்கு கோடம்பாக்கத்திக் கிசுகிசுக்கப்படும் காரணம் இது தான்…

விமலுக்கு சினிமாவில் ஹீரோ அந்தஸ்த்து ஏற்படுத்தி தந்த படம் களவாணி. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஓவியா நடித்து இருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானது. அதேபோல் இப்போது வெளிவந்த கலகலப்பு படமும் ஹிட்டாகி உள்ளது. கலகலப்பில் விமலுக்கு, ஓவியா ஜோடி இல்லை என்றாலும் அவரும் ஒரு பார்ட்டாக அந்தபடத்தில் இருந்தார்.

 இதனால் விமல், ஓவியாவை அதிர்ஸ்ட தேவதையாக எண்ணுகிறாராம்…!

 இது எங்க போய் முடிய போவுதோ…!

No comments:

Post a Comment