Monday, 18 June 2012

வாய்ப்பு கிடைத்தால் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிப்பேன்: நடிகை தேவயானி

 கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வெள்ளித்திரையில் கொடிகட்டிப்பறந்த நடிகை தேவயானி தற்போது சின்னத்திரையில் கவனம் செலுத்தி வருகின்றார்.
 காதல் கோட்டை, சூரிய வம்சம் போன்ற படங்களில் நடித்து திரையுலகில் தனக்கென ஒரு சூப்பர் மார்க்கெட்டை உருவாக்கிக்கொண்டவர் நடிகை தேவயானி.
  பின்னர் இயக்குனர் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டு இரு குழந்தைகளுக்கு தாயாக உள்ளார்.

 இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை தேவயானி, தற்போது சின்னத்திரையில் கவனம் செலுத்தி வருவதாக கூறினார்.
   ஏனென்றால் கதைக்கேற்ற வேடங்கள் சின்னத்திரையில் கிடைப்பதாகவும் அதில் நடிப்பது திருப்தியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
  கொலிவுட்டில் பல நாயகன்களோடு நடித்தாலும் இன்னும் சூப்பர் ஸ்டாருடன் நடிக்க வில்லை. வாய்ப்பு கிடைத்தால் அவருடன் இணைந்து நடிப்பேன்.
  தற்போது என் கணவர் ராஜகுமாரன் இயக்கியுள்ள “திருமதி தமிழ்” படத்தில் நடித்துள்ளேன் என்றார்.

No comments:

Post a Comment