Monday, 18 June 2012

பொதுவாக என் மனசு தங்கம் ரீமேக் பாடலை திரையிடத் தடை?


  சூர்யா புரொடெக்ஷன்ஸின் பிரமாண்ட தயாரிப்பில் ஐங்கரன் இண்டர்நேஷனல் வெளியீட்டில் அண்மையில் திரைக்கு வந்துள்ளது சுந்தர் சியின் முரட்டுக்காளை.
  சுந்தர் சி. ஸ்நேகா மற்றும் விவேக் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது.
  இப்படத்தில் இடம்பெற்ற 'பொதுவாக என் மனசு தங்கம்' ரீமேக் பாடலுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இந்நிலையில் சரிகம இசைத்தட்டு வெளியீட்டாளர்கள் ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளை படத்தில் இடம்பெற்றுள்ள பொதுவாக என் மனசு தங்கம் பாடலின் உரிமை தங்களிடம் உள்ளதாகவும், அதனால் வேறு யாரும் அனுமதியின்றி வெளியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கொல்கத்தா உயர்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
 இதனால் மேற்படி பாடலை திரையிடக்கூடாது என உறுத்துக்கட்டளையை நீதிமன்றம் வழங்கியுள்ளது. இதையடுத்து திரைப்படத்தில் அந்த பாடல் மட்டும் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
  1980ம் ஆண்டு ரஜினிகாந்த் ஜெய்ஷங்கர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிப்படமாக உருவாகிய முரட்டுக்காளை திரைப்படத்தை ரீமேக்காக செல்வ பாரதி இயக்கியுள்ளார். 2008ம் ஆண்டே இப்படத்தின் படப்பிடிப்புக்கள் அனைத்தும் முடிவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment