Friday 12 October 2012

மாற்றான் : விமர்சனம்



முதல் ஷாட்டிலேயே ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள் பிரசவம். ஒருவர்க்கு மட்டும் தான் இதயம் இருப்பதை சொல்லும் டாக்டர் "ஒருவர் மட்டும் தான் இருக்க முடியும்" என்று சொல்ல, தாயார் " நான் பார்த்துக்குறேன் " என்று போராடி (கணவர் + டாக்டர்க்கு கன்னத்தில் அறை) வளர்க்கிறார்


சூர்யா தந்தை ஒரு மில்க் பவுடர் தொழில் செய்து கொழிக்கிறார். அதனை பற்றி துப்பறிய வருகிறார் ஒரு வெளிநாட்டு பெண்மணி. முதலில் அவர் தான் வில்லி என்பது போல் செல்லும் கதை அப்படியே உல்ட்டா அடித்து சூர்யா தந்தை பக்கம் கையை காட்டுகிறது. தன் தொழிலில் வெற்றி பெற எதுவும் செய்ய தயாராய் இருக்கும் சூர்யாவின் தந்தையினால் ஒரு சூர்யா இறக்க, அவரது இருதயம் இன்னொரு சூர்யாவிற்கு பொருத்தப்படுகிறது.

இங்கு இடைவேளை.

அதன் பின் பிழைத்த சூர்யா தன் தந்தையின் தகிடுதத்தத்தை வெளிகொணர்ந்து வெற்றி பெறுவார் என எந்த சிறு குழந்தையும் சொல்லிவிடும்.

ப்ளஸ் 

கே. வி ஆனந்த ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாச கதைக்களன் எடுப்பார். அறிவியல் டச் இருந்த அவரது கனா கண்டேன் போல இதுவும் அறிவியல் பின்னணியில் அமைந்த படமே. ஜெனடிக், ஆராய்ச்சி போன்றவற்றை எவ்வளவு தூரம் எளிமைபடுத்த முடியுமோ அவ்வளவு தூரம் செய்துள்ளார். வித்தியாச கதை என்னும் விதத்தில் பாராட்டுகள்

முதல் பாதியில் சூர்யாவின் உழைப்பு அசரவைக்கிறது. சுஜாதாவின் கணேஷ் வசந்த் போல ஒருவன் புத்திசாலி மற்றவன் வாலு என்ற அந்த இரு பாத்திரங்கள் மிக சுவாரஸ்யம்.

மூன்று பாட்டுகள் அருமை. படமாக்களில் அப்படியே கே. வி ஆனந்த் டச் தெரிகிறது. "கோ"- வில் வரும் அமளி துமளி பாடல் மாதிரியே நாணி கோணி பாடலின் சில லொகேஷன்கள் உள்ளது.

காஜல் அகர்வாலை வெறும் பாடல்களுக்கு மட்டுமின்றி கதையோடு இணைந்து வரும் விதத்தில் நன்கு பயன்படுத்த, காஜல் அழகு, டான்ஸ் ஆகியவற்றுடன் நடிக்கவும் செய்துள்ளார்

சூர்யாவின் தந்தையாக வருபவர்

சூர்யாவின் தந்தையாக நடிக்கும் நடிகர் யார் என தெரியவில்லை. பணக்கார தொனி மற்றும் குள்ளநரித்தனம் சரியே வெளிப்படுகிறது

இரட்டையர்கள் கலக்கும் முதல் பாதி நிச்சயம் பெரிய ப்ளஸ். ஆண்- பெண் கிஸ் அடிப்பதை "தல கறி சாப்பிடுறான்" என்பதாகட்டும் போலிஸ் ஸ்டேஷன் சென்று பெண் போலீசிடம் " நாங்க இந்த பொண்ணை லவ் பண்றோம் " என்பதாகட்டும் கலக்கல். (அதுவும் அந்த பெண் போலிஸ் ரெண்டு பேரும் ஒட்டி இருக்கீங்களே "அப்போ" என்ன பண்ணுவீங்க என்பதும் அதற்கு சூர்யா பதிலும் தியேட்டரில் சவுண்டை கிளப்புது)

மைனஸ்

படத்துக்கு உடனடி தேவை கத்திரி. படம் மூன்று மணி நேரம் ஓடுதுன்னு நினைக்கிறேன். கடைசியில் ஏராளமான மக்கள் உட்கார முடியாமல் எழுந்து போய் கதவுக்கு பக்கத்தில் நின்ற பின்னும் பத்து நிமிஷம் படம் ஓடுது :(

இடைவேளைக்கு பின் தந்தையை மாட்டி வைக்க போகிறார் என்பது தான் கதை என்று அனைவருக்கும் தெரிந்தாலும்,  கழுத்தை சுற்றி மூக்கை தொடும் கதை போல சற்று போர் !

ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக் இருக்கு. கே. வி ஆனந்த் பொதுவாய் இதில் நிறைய ஜாக்கிரதையாய் இருப்பார். ஒட்டி பிறந்தவர்களில் ஒருவர் தான் கார் ஓட்ட முடியும். (அவர்கள் உருவ அமைப்பு மற்றும் நமது காரில் ஸ்டியரிங் உள்ளிட்டவை ஒரே பக்கம் இருப்பதால்) ஆனால் ஒவ்வொரு முறை ஒவ்வொருவர் ஓட்டுகிறார். போலவே உளவு பார்க்க வந்த பெண்ணை தெரிந்தும் கூட அப்படியே சூர்யா அப்பா அனுப்புவதற்கும் எந்த லாஜிக்கும் இல்லை.

ப்ளே பாயாக இருக்கும் அகிலன் காஜலையும் சைட் அடிப்பதாய் காட்டுகிறார்கள். அப்புறம் அவரே விமலன் லவ்வுக்கு ஹெல்ப் பண்ணுகிறார். அதை விட கொடுமை விமலனை லவ் பண்ணும் காஜல் அவர் இறந்ததும் "காதல் போயின் காதல்" என உடனே மற்றவரை லவ் பண்ணுகிறார்.

உக்ரேனியா (தானே அது?) செல்லும் போது கதை ஒழுங்கா தான் இருக்கு. அங்கு நடப்பவை ஒரு லெவலுக்கு மேல் குழப்பமாயிடுது. சூர்யாவை அரஸ்ட் செய்பவர்கள் யார்? மொட்டை அடித்து ராணுவ உடையில் இருப்பவர் நாட்டு அதிபரா? அவரே துப்பாக்கி எல்லாம் எடுத்து சுடுறார் ! எல்லா டாக்குமெண்ட்ஸ் உடன் கடைசியில் சூர்யாவைஅனுப்பி வைக்கிறார்.. ஒரே குயப்பமா இருக்கு என மக்கள் புலம்பல் கேட்குது

கால் முளைத்த பூவே-க்கு பாலே டான்ஸ் என நிறைய எதிர்பார்ப்புடன் இருந்தால் நம்ம ஊரில் செட் போட்டு வெளிநாட்டு டான்சர் வைத்து ரொம்ப சுமாராய் எடுத்து விட்டனர்.

விசில் அடித்து கொண்டும் டான்ஸ் ஆடி கொண்டும் முதல் பாதி படம் பார்த்த இளைஞர்கள், படம் முடிந்து வரும்போது சற்று புலம்பி கொண்டு தான் வருகிறார்கள்

மொத்தத்தில்   செக்ஸ், வன்முறை போன்றவை இல்லாததாலும் வேறு நல்ல படங்கள் தற்போது இல்லாததாலும், நல்ல முயற்சி என்கிற அளவில் ஒரு முறை பார்க்கலாம் !

மாற்றான்: முதல்பாதி வென்றான்... இரண்டாம்பாதி கொன்றான்... 

Tuesday 9 October 2012

விஜய் VS விஜய்! ரஜினி படம் மாதிரி இருக்கும்!


இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கும் படங்கள் பிரச்சனைகளுக்கு பஞ்சமில்லாமல் இருக்கும். அப்படி பல பிரச்சனைகளைத் தாண்டி, வெளிவந்த ‘தாண்டவம்’ ரசிகர்களிடையே ‘சுமார்’ என்ற அளவிலான வரவேற்பையே பெற்றுள்ளது. “என் ஒவ்வொரு படத்திலும் நான் ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டு வருகிறேன். அந்த அனுபவங்கள் தான் என்னை அடுத்தடுத்த நிலைக்கு கொண்டு செல்கின்றன” என்று கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது “பல பிரச்சனைகளைத் தாண்டி தாண்டவம் படம் வெளியானது. துணை இயக்குனர் பொன்னுசாமி UTV-யிடம் ஒரு ஸ்கிரிப்ட் கொடுத்திருந்தார். என் படத்தையும் UTV எடுத்ததால் பொன்னுசாமிக்கு சந்தேகம் வந்துவிட்டது. அது நியாயமான சந்தேகம் தான் அவரை யாரும் குறை சொல்ல முடியாது. அதனால் என் ஸ்கிரிப்டை அவரிடம் கொடுத்து படிக்கச் சொல்லி, என் படத்தையும் அவருக்கு திரையிட்டு காட்டினேன். மேலும் சில பிரச்சனைகள் வந்ததால் அவர் நீதிமன்றத்தை அணுகினார். நீதிமன்றத்திலும் சில விளக்கங்களை கொடுத்தபின், இப்போது பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டது.

நான் பொன்னுசாமி இயக்கும், படத்தை தயாரிக்கிறேன் என்றோ, பணம் தருகிறேன் என்றோ வெளிவந்த தகவல்கள் அனைத்தும் பொய்யானவை. உண்மையிலேயே அவர் திரைக்கதை நன்றாக இருக்கிறது. அவர் கண்டிப்பாக அதை படமாக எடுப்பார்.

இப்போது நான் நடிகர் விஜய்யை இயக்கும் படத்தின் டிஷ்கஷனில் பிஸியாக இருக்கிறேன். விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அறிந்து அதை என்னால் பூர்த்தி செய்ய முடியும். ஏனென்றால் நானும் அவரது ரசிகன் தான். காதலுக்கு மரியாதை போன்ற படங்களிலெல்லாம் நான் அவரை அவ்வளவு ரசித்துள்ளேன். விஜய்யை வைத்து படம் இயக்குவது ரஜினியை வைத்து படம் இயக்குவதைப் போன்ற உணர்வு எனக்கு. ஏனென்றல் ரஜினி அளவிற்கு விஜய்க்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த படம் ஒரு ரஜினி படம் மாதிரி இருக்கும்.

படம் பண்ணலாம் என ஒப்புக்கொண்டதிலிருந்து விஜய் இதுவரை என்னிடம் ஒன்றே ஒன்று தான் கூறியிருக்கிறார். ‘உங்கள நம்பி படத்துல நடிக்கிறேன். நீங்க தான் எல்லாத்தையும் பாத்துக்கணும்” என்பது தான் அது. அவர் என் மேல் வைத்துள்ள நம்பிக்கையை நான் கப்பாற்றுவேன். இந்த படத்தில் சந்தானம், நாசர் இருவரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை. படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த படத்திற்கான தலைப்பு இதுவரை முடிவு செய்யப்படவில்லை. விஜய் படத்திற்கு ஏற்றது போல தலைப்பு வைக்க வேண்டும் என காத்திருக்கிறோம்” என்று கூறினார்.

விஜய் நடிப்பில் விஜய் இயக்கும் இந்த படத்திற்கு முதலில் தலைவன் என பெயர் வைத்திருப்பதாக தகவல் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார் என்று திரைவட்டாரத்தில் பேசப்படுகிறது.

விஜய்யின் துப்பாக்கி ரிலீஸ்! அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடிக்கும் படத்திற்கு துப்பாக்கி என பெயர் வைத்ததில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, முடிவடையாததால் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் டிரெய்லர், இசை வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. வழக்கில் வெல்வது முக்கியமல்ல படத்தின் ரிலீஸ் தான் முக்கியம் எனும் வகையில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஏ.ஆர்.முருகதாஸின் டீம் வேறு ஒரு டைட்டிலையும் தயார் செய்து வைத்துக்கொண்டு அக்டோபர் 5-ஆம் தேதி தீர்ப்பிற்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் தலைப்பு இதுவரை அறிவிக்கப்படவில்லை.

அஜித்குமாரின் கட்டுமஸ்தான உடலமைப்பை பார்க்க ஆவலாக இருக்கும் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்பது விஷ்ணுவர்தன் படத்தின் டிரெய்லரையும் அஜித்குமாரின் கெட்-அப்பையும் தான். விஷ்ணுவர்தன் படத்தின் டிரெய்லர் தீபாவளியன்று வெளியிடப்படும் எனத் தெரிகிறது. சென்ற தீபாவளிக்கு அஜித்குமார் நடித்த மங்காத்தா படத்தின் போஸ்டர்கள் வெளிவந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

அதே போல் இந்த வருடமும் அஜித்குமார் நடிக்கும் படத்தின் போஸ்டர்கள் வெளிவரவிருக்கின்றன. ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் வகையில் போஸ்டர் டிசைன் செய்யப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார் இயக்குனர் விஷ்ணுவர்தன். அஜித்குமார் சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ள இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் நாளை ரிலீஸாகிறது.

விஜய்யோடு மோதும் யானை..! – ஹாட் நியூஸ்


ஒருவழியா துப்பாக்கியைக் கைப்பற்றிய விஜய் பட ரசிகர்களுக்கு பேரானந்தமா தீபாவளி ரிலீசா வரப்போற ‘துப்பாக்கி’ பற்றி ‘புதூ…’ செய்தி இது.

‘தீபாவளி ரேஸ்’னாலும் தீபாவளிக்கு நாலு நாள் முந்தியே ‘துப்பாக்கி’யை ரிலீஸ் பண்ணும் திட்டத்திலிருக்காங்க. அதாவது 9 – ம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகவிருக்கு ‘துப்பாக்கி’. அதோட தீபாவளிப் போட்டியா களமிறங்கப் போகுது பிரபுசாலமனோட ‘கும்கி’.

வழக்கமா பெரிய ஸ்டார்களோட படங்கள் வரும்போது சின்ன நடிகர்களோட படங்களை ரிலீஸ் பண்ண பயப்படுவாங்க. அதாவது ‘யானை’ வரும்போது ‘முயல்’, ‘நரி’ மாதிரி சின்ன அனிமல்ஸ் எல்லாம் வழிவிட்டு நிக்கணும்கிறது சினிமா வியாபார நியதி.

அப்படிப் பார்த்தா யானைக்கு நிகரான விஜய் படம் வரும்போது நிஜமான யானைப் படமான ‘கும்கி’ யும் களம் இறங்கறது ஆச்சரியம்தான். ஆனா ‘கும்கி’ வெளியாகப் போறது தீபாவளியான நவம்பர் 13 – அன்னைக்கே.

ஆக, இந்த வருஷ தீபாவளி, விஜய் ரசிகர்களுக்கு 9 ம் தேதியாவும், மத்த ரசிகர்களுக்கு அஸ் யூஷுவல் 13ம் தேதியுமா வரப்போகுது..!

அமிதாப் 70வது பர்த்டே : ரஜினிக்கு அழைப்பு




அமிதாப்பச்சனின் 70 வது பிறந்த நாளுக்கு வரும்படி ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு அக். 11ம் தேதி 70 வயது பிறக்கிறது.

இதை பிரமாண்ட விழாவாக நடத்த திட்டமிட்டுள்ளார் அவரது மனைவி ஜெயா பச்சன். இதற்கான விழா மும்பையில் உள்ள திரைப்பட நகரில் நடக்கிறது. ஏராளமான பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ரஜினியும் அமிதாப்பும் கடந்த 30 ஆண்டாக நெருங்கிய நண்பர்கள். இதையடுத்து ரஜினியை விழாவில் பங்கேற்க கேட்டிருக்கிறார் ஜெயா பச்சன். அவரும் குடும்பத்தினருடன் பங்கேற்பதாக கூறி இருக்கிறார்.


இரவு 8.30 மணிக்கு விழா தொடங்குகிறது. நடிகர், நடிகைகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 11 மணிக்கு இரவு பார்ட்டி தொடங்குகிறது. இதற்கான அழைப்பிதழில் விருந்துக்கான கார்டும் இணைக்கப்பட்டிருக்கிறது.

அமிதாப் நடத்திய குரோர்பதி நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருக்கிறது. அவர்கள் சேர்ந்து அமிதாபுக்கு சிறப்பு பரிசை அளிக்க உள்ளனர்.

தலைவன் ஆகும் தளபதி விஜய்


கிரீடம், தெய்வத்திருமகள், தாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் விஜய், அடுத்து, நடிகர் விஜய்யை வைத்து, தலைவன் என்ற படத்தை இயக்குகிறார்.

படம் பற்றி இயக்குனர் விஜய் கூறுகையில், "நான் இதுவரை, ஐந்து படங்களை இயக்கி உள்ளேன். "தாண்டவம் படத்திற்கு பல தடைகள் இருந்தன. அதையெல்லாம் உடைத்து, படம் வெற்றி பெற்றுள்ளது.

தற்போது, அடுத்த பட வேலையில், "பிசி ஆகி விட்டேன். விஜய்யை வைத்து, அதிரடி ஆக்ஷன் படம் ஒன்றை இயக்குகிறேன். படத்திற்கு, "தலைவன் என, தலைப்பு வைத்துள்ளேன்.

பிரபல தயாரிப்பாளர் சந்திரப்பிரகாஷ் ஜெயின், படத்தை தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பாடல் உருவாக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. விஜய்யின், "இமேஜ்க்கு ஏற்ற தலைப்பு என்பதால், ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்கிறார், இயக்குனர் விஜய்.

மீண்டும் இளைய தளபதியுடன் இணையும் சத்யராஜ்



நடிகர் சத்யராஜ் மீண்டும் இளைய தளபதி விஜய்யுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளார்.ஷங்கர் இயக்கத்தில் வெளியான நண்பன் படத்தில் விஜய்யும் சத்யராஜும் இணைந்து நடித்தனர்.

நண்பன் படத்திற்கான ஊடகங்களின் சந்திப்பில், இந்தியாவின் மிகச்சிறந்த நடிகராக விஜய்யை காண்கிறேன் என நடிகர் சத்யராஜ் புகழ்ந்து தள்ளினார்.

இந்நிலையில் தாண்டவம் விஜய் இயக்கும் அடுத்த படத்தில் இளைய தளபதி விஜய் நாயகனாக நடிக்கிறார்.இதற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளநிலையில் இப்படத்தில் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக இயக்குனர் விஜய் கூறியுள்ளார்.

படத்திற்கான தலைப்பு இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இப்படத்தை ‘விஷ்ணு புரொடக்சன்ஸ்’ சார்பில் சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரிக்கிறார்.

இரட்டையர்களாக நடித்ததால் இரண்டு சம்பளமா? சூர்யா பதில்





சூர்யா ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக, இரு வேடங்களில் நடித்திருக்கும் படம், 'மாற்றான்'. இந்த படத்தை கே.வி.ஆனந்த் டைரக்டு செய்திருக்கிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்து இருக்கிறது.




'மாற்றான்' படத்தை பற்றிய அறிமுக நிகழ்ச்சி, சென்னையில் நேற்று மாலை நடந்தது. அதில் கலந்துகொண்டு நிருபர்கள் மத்தியில் சூர்யா பேசினார். அவர் கூறியதாவது:




நான் எடுக்கிற ஒவ்வொரு முடிவையும் மிக கவனமாக எடுக்க வேண்டிய காலகட்டம் இது. ஒவ்வொரு முடிவும் சரியாக இருக்கிறதா? என பலமுறை யோசித்து, மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறேன். அப்படி மிக கவனமாக எடுத்த முடிவுதான், 'மாற்றான்'.




இந்த படத்துக்காக, ஒன்றரை வருடம் உழைத்து இருக்கிறேன். ஒன்றரை வருடமும் 'மாற்றான்' படத்துக்காக என்னை நான் அர்ப்பணித்துக்கொண்டேன்.




ஒட்டிப்பிறந்த சகோதரர்களை பற்றிய கதை மட்டுமல்ல. அப்பா-மகன் பாசம் இருக்கிறது. சமூக நலன் சார்ந்த கரு இருக்கிறது. ஒரே கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடிய படமாக இருக்காது. ஆங்கில படமோ அல்லது வேறு எந்த படத்தின் நகலும் அல்ல. 4 வருடங்களாக உட்கார்ந்து எழுதப்பட்ட கதை. இதில், அகில்-விமல் என்ற 2 சகோதரர்களாக நடித்து இருக்கிறேன்.




இவ்வாறு சூர்யா கூறினார்.




அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு சூர்யா அளித்த பதில்களும் வருமாறு:




கேள்வி: 'மாற்றான்' படத்தில் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக நடித்து சாதனை புரிந்து இருக்கிறீர்கள். அடுத்த சாதனை எது?




பதில்: இது, ஒரு முதல் முயற்சி. இதில் நடித்தது புது அனுபவமாக இருந்தது. இதை சாதனை என்று சொல்ல மாட்டேன். ஒரு புதிய முயற்சி என்று சொல்லிக்கொள்ளலாம்.




கேள்வி: இரட்டையர்களாக நடித்ததால், இரண்டு சம்பளம் வாங்கினீர்களா?




பதில் (சிரித்தபடி): ஒரே சம்பளம்தான் வாங்கினேன்.




மேற்கண்டவாறு சூர்யா பதில் அளித்தார்.




டைரக்டர் கே.வி.ஆனந்த், இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவாளர் சவுந்தர், ஆர்ட் டைரக்டர் ராஜீவன், எழுத்தாளர்கள் சுபா, பாடல் ஆசிரியர்கள் நா.முத்துக் குமார், விவேகா, தாமரை, ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ரங்கராஜன் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்கள்.

ரஜினிக்கு ரூ.240 கோடி சம்பளம் கொடுக்க முன்வந்த ஹன்ஸ்ராஜ் சக்சேனா.


விரைவில் ஹன்ஸ்ராஜ் சக்சேனா தொடங்கவுள்ள புதுப் படத்தில் நடிக்க ரஜினிக்கு ரூ 240 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக ஒரு நாளிதழ் கிளப்பிய செய்தியால் மீடியா உலகம் பரபரத்துக் கிடக்கிறது!

ஒட்டு மொத்த இந்தியாவிலேயே அதிக வசூலை ஈட்டிய படம் ரஜினி நடித்த எந்திரன். அதற்கு முன்பு சிவாஜி, வசூலில் பல சாதனைகளைப் படைத்து இந்திய திரையுலகினரை வியக்க வைத்தது.

இப்போது ரஜினி நடித்துவரும் கோச்சடையான் படம் உலகம் முழுவதும் ஹாலிவுட் படத்துக்கு நிகராக வெளியாகும் நிலையில் உள்ளது.

ரஜினியை வைத்து படமெடுத்தால், அது உலக அளவிலான பெரும் வசூலுக்கு உத்தரவாதம் என்பதால், அவருக்கு எவ்வளவு கோடிகள் வேண்டுமானாலும் கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர்.

இந்த நிலையில், இதுவரை இந்திய சினிமாவில் யாரும் கேட்டிராத பெரும் தொகையான ரூ 240 கோடியை சம்பளமாகத் தர சக்சேனா முன்வந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

சமீபத்தில் ரஜினியைச் சந்தித்தாராம் ஹன்ஸ்ராஜ் சக்சேனா. தனக்கு 30 நாட்கள் மட்டும் கால்ஷீட் தந்தால் போதும், ஒரு புதிய மெகா பட்ஜெட் படத்தை உருவாக்கிவிடுவேன் என்று கூறினாராம்.

இந்தப் படத்தில் ரஜினியுடன் தெலுங்கின் டாப் நடிகர் ராம்சரண் தேஜாவை நடிக்க வைக்கத் திட்டமாம்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் நேரடியாக வெளியிட்டு, இந்த பெரும் தொகையை வசூலிக்கத் திட்டமாம்.

விஷயத்தைக் கேட்ட ரஜினி, யோசித்துச் சொல்வதாகக் கூறிவிட்டாராம்.

சக்சேனா சொல்லும் கணக்குப்படி பார்த்தால் ரஜினிக்கு ஒரு நாளைக்கு ரூ 8 கோடி சம்பளம். ஹாலிவுட்டில் முதல் நிலை நடிகர்களுக்கு இணையான சம்பளம் இது.

இதுகுறித்து சாக்ஸ் பிக்சர்ஸ் தரப்பில், "இந்த திட்டம் குறித்து இப்போதே கருத்து சொல்வது சரியல்ல. பேசிக் கொண்டிருக்கிறோம். ரஜினி சார் சரி என்றதும், ராம்சரண் தேஜாவை அணுகப் போகிறோம்," என்று தெரிவித்துள்ளனர்.

மணிரத்னம் படத்தின் மூலம் இரண்டாவது இன்னிங்ஸை துவக்கும் ஐஸ்வர்யாராய்.


மணிரத்னம் இயக்கும் புதிய படத்தின் மூலம் தனது அடுத்த இன்னிங்ஸை தொடங்குகிறாராம் ஐஸ்வர்யா ராய்.புகழ் பெற்ற நடிகையான ஐஸ்வர்யா ராய், கர்ப்பமான பிறகு நடிப்பதை நிறுத்திவி்ட்டார். குழந்தைப் பெற்ற பிறகு, தாறுமாறாகிவிட்ட உடம்பை சீரமைத்துக் கொள்வதில் படுபிஸியாக உள்ளார்.

இந்த நிலையில் அவரை மீண்டும் நடிக்க வைக்க சில தயாரிப்பாளர்கள் முயற்சித்து வருகிறார்கள்.ஒரு நல்ல திரைக்கதை கிடைத்தால் மீண்டும் நடிக்க தயார் என ஐஸ்வர்யா ராய் கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார்.இந்த நிலையில் தனது பேவரிட் இயக்குநரான மணிரத்னம் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம் ஐஸ்வர்யா ராய்.

கடல் படம் முடிந்ததும் இந்தப் படத்தை எடுக்கப்போகிறாராம் மணிரத்னம். ஆங்கில நாவல் ஒன்றை தழுவி எடுக்கப்படும் படம் இது.ஏற்கெனவே மணிரத்னம் இயக்கத்தில் இருவர், குரு, ராவணன் போன்ற படங்களில் நடித்துள்ளார்

முருகதாஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்.






நடிக்க மாட்டேன் என மறுத்து வந்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் திடீரென ஹீரோவாக நடிக்க சம்மதித்துள்ளார். இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், ஹாலிவுட்டின் ஃபாக்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து தமிழில் படங்களை தயாரிக்கிறார். Ôஎங்கேயும் எப்போதும்Õ படத்தை அதுபோல் தயாரித்தார். அடுத்து, தனது உதவியாளர் ராஜசேகர் இயக்கும் படத்தை தயாரிக்கிறார். இசை சம்பந்தமான கதை இது. இதில் ஹீரோவாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிக்க உள்ளார்.


ஜி.வி.பிரகாஷ் கூறும்போது, முருகதாஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க கேட்டிருக்கிறார்கள். இப்போது தமிழ், இந்தி படங்களில் பிசியாக இசையமைத்து வருகிறேன். அதே நேரம் படத்தில் நடிப்பது தொடர்பாகவும் பேச்சு நடத்தி வருகிறேன். இது பற்றி உடனே எதையும் சொல்ல முடியாதுÕÕ என்றார்.


இதற்கு முன் ஜி.வி.பிரகாஷை ஹீரோவாக நடிக்க வைக்க பல இயக்குனர்கள் முயன்றார்கள். Ôநடிப்பு ஆசை இல்லை. இசையில் மட்டுமே கவனம் செலுத்துவேன்Õ என கூறி வந்தார் பிரகாஷ். இசையமைப்பாளர், நடிகராக ஜெயிக்க முடியுமா என அவருக்கு சந்தேகம் இருந்ததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் ஆண்டனி நடிப்பில் நான் வெளியாகி ஹிட்டானது. விமர்சகர்களும் இப்படத்தை பாராட்டினர். இதையடுத்து பிரகாஷுக்கும் நடிப்பில் சாதிக்கலாம் என தைரியம் வந்திருக்கிறது என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ஒரே படத்தில் ஜீவா,ஆர்யா,விஷால்,ஜெயம்ரவி,சந்தானம். சுந்தர் சியின் அதிரடி திட்டம்.







இயக்குநர் மற்றும் நடிகர் சுந்தர் சி தற்போது மத கஜ ராஜா மற்றும் கலகலப்பு பாகம் 2 படங்களை இயக்குவதில் பிசியாக உள்ளார்.

கலகலப்பு படத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நடிகர்களை வைத்து இயக்கியது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. எனவே, தற்போது, ஒரு புதிய படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார்.

ஜீவா, ஜெயம் ரவி, விஷால், ஆர்யாவுடன் சந்தானத்தையும் இணைத்து ஒரு புதிய படத்தை தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் எப்போதும் போல நமது சந்தானம் சிரிக்க மட்டும் அல்லாமல், வில்லனாகவும் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.

நான் ஈ’ பட டைரக்டர் ராஜமவுலி இயக்கும் படத்தில் ரஜினி?






ரஜினி நடிக்கும் கோச்சடையான் படம் முடிந்து ரிலீசுக்கு தயாராகிறது. அடுத்து ரஜினி யார் இயக்கத்தில் நடிப்பார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிக்கப் போவதாக வதந்தி பரவியது. இவர் ஏற்கனவே ‘அயன்’, ‘கோ’ ஹிட் படங்கள் எடுத்துள்ளார். தற்போது சூர்யாவை ஒட்டிப் பிறந்த இரட்டையராக நடிக்க வைத்து ‘மாற்றான்’ படத்தை எடுத்து வருகிறார்.

கே.வி. ஆனந்திடம் கேட்டபோது ரஜினி படத்தை இயக்கவில்லை என மறுத்து விட்டார். தற்போது ராஜமவுலி இயக்கத்தில் ரஜினி நடிக்கப் போவதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. ராஜமவுலி தெலுங்கில் முன்னணி இயக்குனராக உள்ளார். இவர் சமீபத்தில் டைரக்டு செய்த ‘நான் ஈ’ படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெற்றிகரமாக ஓடி கோடிக்கணக்கில் வசூலை குவித்தது. இந்த படத்தை ரஜினிக்கு திரையிட்டு காட்டினார். படம் அவருக்கு மிகவும் பிடித்து போனது இந்திய சினிமாவில் முக்கிய படமாக இது இருக்கும் என்று பாராட்டினார்.

ரஜினிக்கேற்ற கதையொன்றை ராஜமவுலி தயார் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கதை ரஜினிக்கு பிடித்து போனதாம். இவரும் அடிக்கடி சென்னையில் சந்தித்து கதை பற்றி விவாதிக்கிறார்களாம். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தமிழ், தெலுங்கில் தயாரிக்க திட்டமிட்டு உள்ளனர்.

ராகவேந்திரர் கோயிலுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.10 கோடி நன்கொடை





மந்திராலயம் கோயிலுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.10 கோடி நன்கொடை வழங்க உள்ளார். மந்திராலயத்தில் ஸ்ரீ ராகவேந்திரர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஸ்ரீராகவேந்திரரின் தீவிர பக்தரான நடிகர் ரஜினிகாந்த், இக்கோயிலுக்கு அடிக்கடி வருவது வழக்கம். மேலும் இக்கோயிலின் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு பலமுறை நன்கொடை வழங்கியுள்ளார்.

இது குறித்து கோயில் நிர்வாக அதிகாரிகளான மாதவசெட்டி, சுயமிந்தரா சாரி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:




ஸ்ரீராகவேந்திரர் கோயிலுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.10 கோடி நன்கொடை வழங்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். இந்த நன்கொடை மூலம் மண்டபம் பின்புறமுள்ள பழைய கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டு பக்தர்கள் தங்கும் ஏசி வசதியுடன் கூடிய 25 அறைகள் கட்டப்படும். மேலும் 100 அறைகளும் கட்டப்பட உள்ளது. இதுதவிர கோயில் சுற்றியிலும் பூங்காக்கள் அமைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செல்வராகவன் படத்தில் நடிக்கிறேனா? சிம்பு






செல்வராகவன் இயக்கத்தில் நடிப்பது நிஜமா என்றதற்கு பதில் அளித்தார் சிம்பு. கோலிவுட்டில் சிம்பு, தனுஷ் கடும் போட்டியாளர்கள். ஒருவரையொருவர் மறைமுகமாக தாக்கி படங்களில் வசனம் வைப்பது முதல் பல விஷயங்களில் கருத்து மாறுபாடு காட்டுபவர்கள்.

இதனால் தனுஷின் அண்ணன் செல்வராகவனும் சிம்புவும் ஒருவருக்கொருவர் நேருக்கு நேர் பேசிக்கொள்ளாமல் தலை கவிழ்ந்துகொண்டு சென்ற சம்பவங்கள் நடந்திருக்கிறது. சமீபகாலமாக சிம்பு, தனுஷ் இடையே திடீர் நட்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து செல்வராகவனும் சிம்புவும் புதிய படத்தில் இணைய உள்ளனர் என்ற தகவல் கோலிவுட்டில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.




தனுஷை வைத்து ‘காதல் கொண்டேன், ‘மயக்கம் என்ன, ‘புதுப்பேட்டை ஆகிய படங்களை இயக்கிய அவரது அண்ணன் செல்வராகவன் சிம்புவை வைத்து படம் இயக்க இருப்பதால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாறுபட்ட காதல் கதை அம்சம்கொண்ட இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

இது பற்றி சிம்புவிடம் கேட்டபோது, இப்படம் பற்றி இப்போதைக்கு பேசுவது முந்திரிக்கொட்டை சமாச்சாரமாக இருக்கும். ஆனால் இதுபற்றி செல்வராகவனுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு மத்தியில்தான் இப்படத்தின் பணிகள் தொடங்க உள்ளன. பெரிய தயாரிப்பு நிறுவனம் இதை தயாரிக்க உள்ளது என்றார்.

எனது ரமணா படத்தில் வரும் மாணவர்கள் போல் எல்லோரும் மாற வேண்டும். ஏ.ஆர்.முருகதாஸ்





2011-ம் ஆண்டு தண்டி யாத்திரை பாதையில் நடைபயணம் மேற்கொண்ட திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கு பாராட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.




விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசியதாவது:-




என் குரல் எப்படி இருக்கும் என நானே முதன் முதலில் கேட்டது இந்த கல்லூரியில் நடைபெற்ற கலை விழாவில்தான். படிக்கும் போது, மிகவும் தாழ்வு மனப்பான்மையுடன் இருந்தேன். பிஷப் ஹீபர் கல்லூரி ஆசிரியர்கள் வகுப்பறையில் பாடங்கள் மட்டும் இன்றி நாட்டு நடப்புகளையும் எடுத்து கூறுவார்கள்.




3 ஆண்டு கல்லூரி வாழ்க்கையில் 30 ஆண்டு அனுபவம் பெற்றேன். நான் பார்த்த முதல் நகரம் திருச்சி. கல்லூரி படிப்பு காலத்தில் எனக்குள் இருந்த கூச்சம் எங்கே போனது என்று தெரியவில்லை.




தவறுகளை தட்டிக்கேட்கும் மனநிலை எனக்குள் உருவானது. தவறுகளை எதிர்த்து எப்படி போராடுவது என்று தெரியாத நிலை. எனவே ஒரு நக்சலைட்டாகவோ, அல்லது அரசியல்வாதியாகவோ ஆகலாமா? என்று கூட நினைத்தேன்.




2-வது உலகப்போரை நிறுத்தியது அலறியபடி ஆடையின்றி ஓடி வந்த ஒரு சிறுமியின் புகைப்படம்தான். ஒரு புகைப்படம் ஒரு போரை நிறுத்தும் அளவுக்கு வலிமை படைத்தது என்றால், திரைப்பட துறையின் மூலம் சமுதாய பணி செய்யலாம் என்ற எண்ணத்தில் நான் திரைப்பட துறையில் நுழைந்தேன்.




எனது படங்களில் சமுதாய சீர்கேடுகளை சீர்திருத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் காட்சிகள் இடம்பெற வைத்து வருகிறேன். காந்தி சென்ற பாதையில் சென்று வந்த மாணவர்கள் அவர் அடைந்ததை அடைய வேண்டும்.




எனது ‘ரமணா’ படத்தில் காட்டியவாறு மாணவர்கள் எந்த துறையில் இருந்தாலும் நல்லது செய்ய வேண்டும். ஊதியத்துக்கு பணி செய்வதை மட்டுமே லட்சியமாக கொள்ளாமல் சமுதாய கடமைகளையும் ஆற்ற முன்வர வேண்டும்.




இவ்வாறு அவர் பேசினார்.

காக்ரோச் படத்தை காப்பியடித்து எடுத்ததா நான் ஈ? உலக மகா கடுப்பில் ராஜமெளலி





நான் ஈ படம் படம் தமிழில் பெற்ற வரவேற்பும், வசூலும் அதைத் தொடர்ந்து ராஜமவுலிக்கு இங்கு கிடைத்துள்ள மவுசும், அப்படியே டமாலென சரியும் அளவுக்கு ஒரு மேட்டர்...

நான் ஈயை அவர் சுட்டது காக்ரோச் என்ற குறும்படத்திலிருந்து என் தகவல் வெளியானதிலிருந்து உலகமகா கடுப்பில் இருக்கிறார் மனிதர்.

இந்த காக்ரோச் வெளியானது கடந்த 2010 மார்ச் மாதத்தில். ஒரு ரஷ்ய இயக்குநர் உருவாக்கிய படம் இது. இதைத்தான் அப்படியே தழுவி எடுத்து நான் ஈ-யாக்கி விட்டாராம் ராஜமவுலி.

நான் ஈயில் வருவதைப் போலவே, ஹீரோ ஒரு பெண்ணைக் காதலித்து திருமணத்துக்கு முன்பே விபத்தில் இறந்துவிடுகிறா். உடனே கரப்பான் பூச்சியாக மறுபிறவி எடுத்து, காதலிக்காக ஏங்குவது காக்ரோச்சின் கதை.

இந்தக் கதையில் ஒரு வில்லனைப் புகுத்தியிருப்பது மட்டுமே ராஜமவுலியின் சாதனை என மீடியாவில் செய்தி பறக்க, ராஜமவுலி ஏக அப்செட்.

ஆனால் இவற்றையெல்லாம் மறுத்துள்ள ராஜமவுலி, தான் காக்ரோச் படத்தைப் பார்க்கவே இல்லை என்றும், வில்லனால் பழிவாங்கப்படும் ஒருவன் நாயாகப் பிறந்து பழிவாங்கும் ஒரு அனிமேஷனை இன்ஸ்பிரேஷனாக வைத்து இந்தப் படத்தை எடுத்ததாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

சரி விடுங்கப்பா... அவனவன் போஸ்டரையே காப்பியடிக்கிறான்... இதுல யாரை நொந்து என்ன பிரயோசனம்!

விஷாலை ஓரங்கட்டும் முன்னணி இயக்குனர்கள்!


அவன் இவன் படத்தில் பாலாவின் கைவண்ணத்தால் வித்தியாசமான பர்பாமென்சை வெளிப்படுத்தியிருந்தார் விஷால். அதன்காரணமாக அதுவரை அவரை ஒரு கல்லூரிப்பையன் என்று மட்டுமே நினைத்திருந்த இயக்குனர்கள், அவரை மனதில் கொண்டு வித்தியாசமான கோணங்களில் கதை பண்ணத் தொடங்கினர். ஆனால் அப்படி தன்னைத்தேடி வந்தவர்களின் முன்னணி இயக்குனர்களின் கதைகளை மட்டுமே ஓகே செய்து வைத்திருந்தார் அவர்.

இந்த நிலையில், வெடி படம் ஊத்திக்கொண்டதால், ஏறின வேகத்திலேயே விஷாலின் மார்க்கெட் இறக்கம் கண்டது. அதனால் சமர், மதகஜராஜா போன்ற படங்களில் தற்போது நடித்திருப்பவரை, அடுத்தடுத்து புக்பண்ணயிருந்த முன்னணி இயக்குனர்கள் விஷாலுக்காக ரெடி பண்ணி வைத்திருந்த ஸ்கிரிப்டுகளுடன் கார்த்தி, ஆர்யா போன்ற நடிகர்களை முற்றுகையிட்டு வருகின்றன. இதனால் மனசொடிந்து போயிருக்கிறார் விஷால். இதன்காரணமாக, அடுத்து தனது தாய்மொழியான தெலுங்கு சினிமாவில் முழுமையாக காலூன்றவும் சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

தன்னுடைய படத்தை பிரபலப்படுத்த தல நடிகரின் பெயரை பயன்படுத்தும் நடிகர்.





வசந்தமான பால இயக்கத்துக்கு ஹீரோக்கள் யாரும் கால்ஷீட் கொடுக்காம இருந்தாங்களாம்... இருந்தாங்களாம்... மலையாள பக்கம் போகலாமான்னு கூட இயக்கம் யோசிச்சாராம். அந்த நேரத்துலதான் பாய்ஸ் ஹீரோ இயக்கத்தை சந்திச்சாராம். தானே முன்வந்து இயக்கத்துக்கு கால்ஷீட் கொடுத்தாராம்... கொடுத்தாராம்... நல்ல இயக்குனர்களை மத்தவங்க மதிக்க கத்துக்கணும்னு சக ஹீரோக்களுக்கு பாய்ஸ் மறைமுகமா டோசும் விட்டிருக்காராம்...



வாரண இயக்கம் இயக்குற பொன் ஈவ்னிங் படத்தோட ஷூட்டிங் முடிஞ்சதுன்னு பட யூனிட்டார் நெனச்சாங்களாம்... நெனச்சாங்களாம்... ஆனா இன்னும் சில சீனுங்க பாக்கி இருக்குன்னு இயக்கம் தரப்புலயிருந்து சொல்லி இருக்காங்களாம். முடிஞ்சதா நெனச்சோம். மறுபடியும் தொடர்கதையா இருக்கேன்னு நொந்துபோன டெக்னீஷியன்ஸ், அதையாவது சீக்கிரமா எடுத்து முடிங்கன்னு உதவி இயக்குனருங்ககிட்ட புலம்புறாங்களாம்...




ஜாயின் அடிச்ச டபுள் ஆக்ஷன் கேரக்டர்ல நடிச்சிருக்க பிரகாச ஹீரோ, தல, பஞ்ச் நடிகர் ஃபேனா நடிச்சிருக்காராம்... இருக்காராம்... இந்த சீன டிரைலர்யும் போட்டுகாட்டி ரெண்டு ஹீரோ ஃபேன்சுங்க மத்திலயும் சலசலப்ப ஏற்படுத்திட்டாங்களாம். தன்னோட ஃபேன்ஸ தவிர மத்த ஹீரோக்கள் ஃபேன்ஸயும் கவர்றதுக்காக இப்படியொரு டெக்னிக்க யூஸ் பண்ணிருக்காங்களாம். ‘எதுஎப்படியோ ஃபேன்ஸுங்க மத்தில மோதல் வந்துடாம பாத்துக்கங்க‘னு சில பெரிசுங்க அட்வைஸ் கொடுத்திருக்காங்களாம்.

இங்கிலீஷ் விங்கிலீஷ். விமர்சனம்



    

நடிப்பு : ஸ்ரீதேவி, ப்ரியா ஆனந்த், அஜீத்,

இசை :அமித்ரி தேவ்
ஒளிப்பதிவு :லஷ்மன் உடேகர்
தயாரிப்பு : ஈராஸ் இன்டர்நேஷனல், ஆர் பால்கி
எழுத்து & இயக்கம் : கௌரி ஷிண்டே

பெண்ணிய நோக்கில் படம் எடுப்பதாக எத்தனையோ பெண் இயக்குநர்கள் வந்திருக்கிறார்கள். ஆனால் பெண்ணின் உணர்வை, மனநிலையை ஒருவரும் உண்மையாக பிரதிபலித்ததில்லை. அல்லது அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால் கௌரி ஷிண்டே விதிவிலக்கு. முதல் முறையாக மிக அழகான, உணர்வுப் பூர்வமான படைப்பைத் தந்திருக்கிறார். ஒரு அழகான ரோஜா செண்டுடன் அவரை வரவேற்போம்!

மிக எளிமையான கதை. பாலச்சந்தர் அல்லது பாலுமகேந்திரா படங்களில் பார்த்துப் பழக்கப்பட்ட வகை பாத்திரம்தான். கதையோட்டம் கூட சில இடங்களில் எதிர்ப்பார்த்த மாதிரியேதான் உள்ளது. ஆனால் இதை எல்லாம் மீறி நம்மைக் கட்டிப் போடுகிறது படமாக்கப்பட்ட நேர்த்தி.

ஆங்கிலம் தெரியாத ஒரே காரணத்துக்காக கணவனிடமும் மகளிடமும் சின்னச் சின்ன அவமானங்களைச் சந்தித்து மனதுக்குள் வெம்பும் ஒரு மனைவி, தாய்.. அந்த தாழ்வுணர்ச்சியிலிருந்து மீண்டு, தனக்கான மரியாதையை மீட்டெடுப்பதுதான் இங்கிலீஷ் விங்கிலீஷ்.

படம் தொடங்கிய ஒரு சில நிமிடங்களில் அல்லது ஒரு பாத்திரம் அறிமுகமான அடுத்த நிமிடத்தில் மனதுக்குள் விழுந்து, நமக்குள்ளேயே பயணிக்கிற ரசாயனம்தான் இந்தப் படத்தின் ஸ்பெஷல்!

இன்னொன்று... ஸ்ரீதேவி. முகத்தில் முதுமையின் வரவு கையெழுத்திட்டிருந்தாலும், அந்த உறுத்தல் ஒரு சில நிமிடங்கள்தான்... ஷசியை ரசிக்க, அவரோடு அமெரிக்கா செல்ல, இங்கிலீஷ் கற்க, கிடைக்காத மரியாதைக்கான ஏக்கத்துக்காக அவருடன் கண்ணீர் சிந்த நாமும் தயாராக நிற்கிறோம். வெல்கம் பேக்!

மிகப்பெரிய திருப்பத்துக்கான காரணங்கள் என்று நாம் நினைப்பதைக் கூட, ஜஸ்ட் ஒரு பார்வையில், ஒரு இறுக்கமான பாவத்தில் அல்லது ஒரு சிரிப்பில் உணர்த்தும் அந்த அழகியலுக்காக கௌரி ஷிண்டேவுக்கு இன்னுமொரு ரோஜா.

படத்தின் அழகுக்கு அழகு சேர்ப்பது இரண்டு நிமிடங்களே வரும் அஜீத். வாவ்... என்ன ஒரு இயல்பான, தன்னம்பிக்கை தரும் நடிப்பு. நிச்சயம் அந்த வேடத்துக்கு வேறு யாரும் பொருத்தமாக இருக்க முடியாது. ஹேன்ட்ஸம் தல!

ஒவ்வொரு பாத்திரமும் அப்படியே மனதுக்குள் விழுந்து அழுத்தமான தடயங்களாகிப் போகிறார்கள்.

குறிப்பாக ப்ரியா ஆனந்த். பெண் மனசு பெண்ணுக்குத்தான் புரியும் என்ற பழமொழியை மெய்ப்பிக்கும் பாந்தமான நடிப்பு. மனதை வருடும் அழகு.

ஸ்ரீதேவியின் கணவனாக வரும் அதில் ஹூஸைன், நண்பராக வரும் மேதி, அந்த இங்கிலீஷ் ட்யூஷன் டேவிட், பாகிஸ்தானி இளைஞன் என அனைவருமே இயல்பாக பொருந்திப் போகிறார்கள்.

க்ளைமாக்ஸில் ஸ்ரீதேவி நிச்சயம் பேசுவார் என்பது தெரிந்து விடுகிறது. அதற்காக அவர் ஆங்கிலத்தில் வெளுத்துக் கட்டுவது போல காட்டாமல், இயல்பாக பேச வைத்திருப்பது இன்னும் நம்பகத்தன்மையைத் தருகிறது.

அமித்ரி தேவின் பின்னணி இசை இதமான வருடல். லஷ்மன் ஷின்டேவின் ஒளிப்பதிவு, அமெரிக்காவை காதலிக்க வைக்கிறது. மண்ணின் மைந்தர்கள் என்று சொல்லிக் கொண்டு நாட்டை, நகரத்தை குப்பைத் தொட்டியாக வைத்திருக்கும் இந்தியர்கள் நிச்சயம் வெட்கித் தலைகுனிய வேண்டும். தன் மண்ணை உண்மையாக நேசிப்பவன் அதை அழகாக சுத்தமாக வைத்திருப்பான்!

வசனங்கள் எளிமை, ஆனால் வலிமை.

ஒரு உதாரணம்:

"ஆங்கிலம் தெரியாமல் அமெரிக்கா போய் எப்படி சமாளிப்பாய்?"
"நீ தமிழ் தெரியாமல் தமிழ்நாட்டில் எப்படி சமாளிக்கிறாயோ அப்படி!!"

பெண் இயக்குநர்களுக்கு புதிய கவுரவத்தை தேடித் தந்திருக்கிறார் கௌரி ஷின்டே!