Saturday 14 July 2012

ஷங்கர்-ன் "ஐ" படத்தின் first look போஸ்டர்....


ரஜினி குழந்தை மாதிரி!





ரஜினி குழந்தை மாதிரி என்று ரஜினியுடன் கோச்சடையான் படத்தில் நடிக்கும் நடிகை தீபிகா படுகோனே கூறியுள்ளார். கே.எஸ்.ரவிகுமார் மேற்பார்வையில் சௌந்தர்யா அஸ்வின் இயக்கும் கோச்சடையானில் ரஜினி, தீபிகா படுகோனே நடிக்கின்றனர்.


கோச்சடையான் படத்தில் நடித்த அனுபவம் பற்றி பேசியபோது தீபிகா “ரஜினியின் திறமையை பார்த்து நான் ஆச்சர்யப்பட்ட தருணங்கள் பல. ஒவ்வொரு காட்சியும் நடித்த பிறகு இயக்குனர் ஓகே சொன்னதும், ரஜினி முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியை வேறு எந்த நடிகரின் முகத்திலும் காண முடியாது. குழந்தை போன்ற முகபாவம் கொண்டவர் ரஜினி.

அதேபோல் சகநடிகர்களின் திறமையை பாராட்டாமல் விடமாட்டார். நான் பார்த்த நடிகர்களிலேயே அமிதாப்பச்சன், ரஜினி ஆகியோருக்கு மட்டும் தான் இது போன்ற முகபாவம்” என்று கூறி புன்னகைத்தார்.


டிசம்பர் மாதம் ரஜினியின் பிறந்தநாளன்று தான் ரிலீஸ் என்பதால் கோச்சடையான் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் மந்தமாகவே நடந்துகொண்டிருக்கின்றன.

பில்லா 2 - அஜித்தை தவிர வேறொன்றும் இல்லை!




முதல் விஷயம், படத்தில் அஜித் அகதியாகவே இருக்கிறாரே தவிர அவர் இலங்கை அகதி என்று எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. ( ரொம்ப சாமர்த்தியமாக நடந்துகொண்டதாக இயக்குனர் நினைத்துக் கொள்ளலாம்! ) இரண்டாவது அவர் அகதிகளுக்கு எந்த உதவிகளும் செய்யவில்லை. 


பில்லா படத்தில் எவ்வளவு தூரம் நடந்தாரோ, அதைவிட அதிக தூரம் பில்லா-2 வில் நடந்திருக்கிறார். சண்டை, கொலை, கொள்ளை என படம் முழுக்க ஒரே ரத்தத் தெரிப்பு தான். குருவி சுடுவது மாதிரி ஆட்களை சுடுவது, காய்கறி வெட்டுவது மாதிரி மனிதர்களை வெட்டுவது என படம் முழுக்க டுமீல் டுமீல்! சதக் சதக்! சத்தங்கள் தான். படத்தின் ஹைலைட்டாக நிற்பது ஒரே ஒரு விஷயம், அது அஜித்தின் உழைப்பு!


அகதியாக தமிழகத்தின் எல்லைக்குள் வந்து சேர்கிறார் அஜித். ஒரு அக்கா சென்னையில் இருப்பதாக சொல்லி அகதிகள் முகாமில் அடைக்கலமாகிறார். மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து சென்னைக்கு வைரத்தை கடத்தும் தொழிலில் தெரியாமல் இறங்குகிறார். 


காசு நிறைய கிடைத்ததும், இதே தொழிலை ஏன் தொடரக்கூடாது என்று நினைத்து, தொடர்ந்து சில கடத்தல் வேலைகளில் இறங்குகிறார். அதன் ஆரம்பமாக சில கொலைகளும் செய்கிறார். கொலைகளும் கொள்ளைகளும் தொடர்கின்றன. 


படம் முழுக்க இருப்பது மூன்றே விஷயம் தான். அவை ரத்தம்! ரத்தம்! ரத்தம்! அஜீத்தின் கடத்தல் தொழில் மாநிலம் விட்டு மாநிலம் என வளர்ச்சி அடைகிறது. தனக்கு எதிராக வரும் எல்லோரையும் கொலைசெய்கிறார். பின் கண்டம் விட்டு கண்டம் தாவுகிறார் அஜித். இறுதியில் உலகலாவிய டானாக எப்படி ஆனார் என்பதே கதை!


படத்தின் ஒளிப்பாதிவு ஹாலிவுட் தரத்தில் இருப்பது படத்தின் ப்ளஸ். அஜித்தை மாஸாகவும் க்ளாஸாகவும் நேர்த்தியாக படம் பிடித்திருக்கிறது ஆர்.டி.ராஜசேகரின் கேமரா. படத்தின் வசனங்கள் பல இடங்களில் ரசிக்க வைக்கிறது. 


அஜித்தின் நடிப்பைவிட அவர் திரையில் தோற்றமளித்த விதம் பிரமாதம். கூலிங் கிளாஸ், கோட்டு சூட்டு என ஹாலிவுட் நடிகர் மாதிரி நச்சுன்னு இருக்கிறார். இப்போதைய தமிழ் சினிமாவின் வேற எந்த ஹீரோவுக்கு இந்த கெட்-அப் ஒத்துவராது என்பதில் சந்தேகமில்லை. ( தொப்பையை குறைத்தால் நல்லா இருக்கும், சண்டைபோடும் போது கால தூக்க ரொம்பவே கஷ்டப்படுகிறார் அஜித் ) 


பார்வதி ஓமனகுட்டனும் ப்ரூனா அப்துல்லாவும் வந்து போறாங்களே தவிர, படத்தில் ஹீரோயின் என்று யாரும் இல்லை. அதுவும் ஹீரோயின்களிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது எதுவுமே படத்தில் இல்லை. காதல் காட்சிகளுக்கு இடமே இல்லை. இன்னும் சொல்லப்போனால் படத்தில் காதலே இல்லை. கவர்ச்சியும் இல்லை.





முதலமைச்சரை கொலை செய்வது, இவ்வளவு நடந்து முடிந்தும் படத்தில் போலிஸ் வராதது, அஜித்தை அடித்து உதைத்து முகம் முழுக்க காயம் இருந்தாலும், அடுத்த சீனில் மொழு மொழுன்னு அமுல் பேபி மாதிரி இருப்பது, என பல காட்சிகளில் லாஜிக் இல்லை. 


அப்போ என்ன தான் இருக்குன்னு நீங்கள் கேட்டா, அதற்கான பதில் அஜித் என்ற ஒரு வார்த்தைதான் பதிலாக இருக்க முடியும். ஆம், அஜித்தை தவிர படத்தில் வேற எதுவும் ஸ்பெஷல் இல்லை. அஜித்தே எங்களுக்கு ஸ்பெஷல் தான் என நினைக்கும் தல ரசிகர்கள் பில்லா-2 வை கொண்டாடுவதில் ஆச்சர்யம் எதுவும் இருக்க முடியாது.

புதிய சாதனை படைத்த அஜித்: ஒரு மாலை செலவு மட்டும் ஒன்றரை லட்சமாம்!


இப்படி ஒரு ரசிகர் பட்டாளம் மற்ற நடிகர்களுக்கு இருக்குமா என்று தெரியவில்லை. அந்த வகையில் அஜீத் கொடுத்து வைத்தவர்தான்.

ரசிகர் மன்றமே தேவையில்லை என்று ஒரே ஸ்டேட்மென்ட்டில் கலைத்துப் போட்டு போய்க் கொண்டே இருந்தவர்தான் அஜீத். ஆனால் அதற்கெல்லாம் நாங்கள் சளைத்து விடுவோமா என்று அஜீத்தின் பின்னால் ராணுவம் போல அணிவகுத்து அசத்திக் கொண்டிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

தமிழ் நடிகர்கள் யாருமே இதுவரை இப்படி ஒரு முடிவை எடுத்ததில்லை. எனக்கு மன்றமே தேவையில்லை என்று தைரியமாகவும், தீர்க்கமாகவும் சொல்லி ஒரு நல்ல நாளாகப் பார்த்து மன்றத்தைக் கலைத்தவர் அஜீத். அதைப் பார்த்து அனைவருமே ஆச்சரியப்பட்டனர். இனி எங்கே அஜீத் பின்னால் ரசிகர்கள் நிற்கப் போகிறார்கள். அதிருப்தி அடைந்து கலைந்து போய் விடுவார்கள் என்றுதான் நினைத்தனர்.

ஆனால் மங்காத்தா படத்தின் ரிலீஸின்போது திரண்ட அஜீத் ரசிகர்கள் அனைவரையும் வியக்க வைத்தனர். மன்றம் வேண்டாம் என்று அஜீத் சொன்னாலும், அதைப் பொருட்படுத்தாமல் மிகப் பெரிய அளவில் மங்காத்தாவை கொண்டாடினர் அஜீத் ரசிகர்கள்.

இப்போது பில்லா 2 பட ரிலீஸின்போதும் அஜீத் ரசிகர்கள் கலக்கி விட்டார்கள். திரையிட்ட இடமெல்லாம் திருவிழாக் கோலம்தான். அஜீத் கட் அவுட்டுக்கு பூஜை செய்வது, பாலாபிஷேகம் செய்வது என வழக்கம் போல கலக்கிய அவர்கள் மேலும் ஒரு படி போய் மிகப் பெரிய அளவில் செலவு செய்து பூமாலையும் போட்டுள்ளனர் அஜீத் கட் அவுட்டுக்கு.


பெங்களூரிலிருந்து சென்னைக்கு படையெடுத்து வந்திருந்த அஜீத் ரசிகர்கள் ஆல்பட் தியேட்டரில் மிகப் பெரிய ராட்சத பூமாலையை போட்டு அனைவரையும் வியக்க வைத்தனர். இந்த பூ வேலைப்பாட்டுக்கான செலவு ரூபா ஒன்றரை லட்சமாம். இதைக் கேட்டவுடன் பலருக்கும் மயக்கம்தான் வந்தது. இவ்வளவு பெரிய செலவு செய்து அஜீத்தை கொண்டாடும் ரசிகர்களா என்று வியந்து விட்டனர்.

குத்து பாடலுக்கு நடனம் ஆட மாட்டேன்..





ஐட்டம் நம்பர் எனப்படும் குத்து பாடலுக்கு நடனம் ஆட மாட்டேன் என்றார் ஸ்ருதி ஹாசன். இது பற்றி அவர் கூறியதாவது: பாலிவுட்டில் நான் அறிமுகமான ‘லக்Õ படம் தோல்வி அடைந்தது பற்றி கேட்கிறார்கள்.

அப்படம் சரியாக ஓடவில்லை என்று எனக்கு தெரியும். ஆனால் தியேட்டரில் படம் ரிலீஸ் ஆனபோது ஒருவர்கூட தியேட்டரைவிட்டு பாதியில் எழுந்து செல்லவில்லை. இப்படம் ஓடாததற்கு காரணம் அதன் தலைவிதிதான்.

ஆனால் ‘லக்Õ படத்தில் நடித்ததற்காக நான் வருந்தவில்லை. பெரிய நடிகரின் மகளாக பிறந்ததால் சினிமாவின் கதவு எனக்கு எப்போதுமே திறந்திருந்தது. அது எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பு. பட வாய்ப்புகள் நிறைய வந்தாலும் நல்லவற்றை தேர்வு செய்து நடிக்கிறேன். என் அப்பாவிடம் படம் பற்றி கருத்து மட்டுமே கேட்பேன்.

பட வாய்ப்புகள் பெற்றுத்தர வேண்டும் என்று எந்த நேரத்திலும் அவரிடம் வற்புறுத்தியது கிடையாது. இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று அவரும் என்னை கட்டாயப்படுத்தியதில்லை. குத்து பாடலுக்கு நடனம் ஆடுவீர்களா என்கிறார்கள். எனக்கு நடனம் பிடிக்கும்.

ஆனால் ஒரு பாடலுக்கு ஆடும் வாய்ப்பை ஏற்க விரும்பவில்லை. அதுவும் குத்துபாட்டுக்கு கண்டிப்பாக ஆட மாட்டேன். இவ்வாறு ஸ்ருதி ஹாசன் கூறினார்.

விஷாலுக்கு ஜோடி யார்? த்ரிஷா,சுனேனா இடையே போட்டி.



      விஷால் நடிக்கும் படம் சமர். முதலில் இதற்கு சமரன் என்று பெயரிடப்பட்டிருந்தது. தலைப்பை மாற்றியது ஏன் என்பதற்கு பட இயக்குனர் திரு கூறியதாவது: எல்லா செயலும் கடவுள் அருளால் நடக்கிறது என்றும், உழைப்பால்தான் நடக்கிறது என்றும் நம்பும் இருவகை எண்ணம் கொண்டவர் உலகில் இருக்கிறார்கள்.

ஆனால் இதையும் மீறி வேறுவொரு சக்தி ஒரு வாலிபனை வழிநடத்துகிறது. அதற்கு விடை தேடும் கதைதான் சமர். ஹீரோ விஷால். பாங்காக்கில் வசிக்கும் தமிழ் பெண்ணாக த்ரிஷா. மற்றொரு ஹீரோயின் சுனேனா. இருவரின் யார் விஷாலுக்கு ஜோடி என்பது படத்தின் சஸ்பென்ஸாம். தாய்லாந்து, பாங்காக் மற்றும் ஊட்டி, மூணாறு, கொடைக்கானல் காட்டு பகுதிகளில் ஷூட்டிங் நடந்துள்ளது.

ஆக்ஷன் த்ரில்லராக உருவாகிறது. யுவன் சங்கர் ராஜா இசை. ரிச்சர்டு ஒளிப்பதிவு. முதலில் இப்படத்துக்கு ‘சமரன்Õ என பெயரிடப்பட்டது. ஆனால் இதே பெயரை மாதவன் உள்ளிட்ட பிரபல நடிகர்களை வைத்து படம் இயக்கிய இயக்குனர் ஒருவர் பதிவு செய்து வைத்திருந்தார். அவரிடம் பலமுறை அணுகி தலைப்பை விட்டுக்கொடுக்கும்படி கேட்டபோது மறுத்துவிட்டார். இதையடுத்து பெயரை மாற்றினோம். சமர் என்றால் போர் என்று பொருள்.

யோஹன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் ஹாலிவுட் நடிகை யார்? கவுதம் மேனன் தீவிர முயற்சி


      யோஹன் படத்தில் ஹாலிவுட் நடிகையை நடிக்க வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய்-கவுதம் மேனன் கூட்டணி, விரைவில் யோஹன் அத்தியாயம் ஒன்று என்ற படத்தின் மூலம் இணைய உள்ளது. படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தை உலகளவில் கொண்டு செல்ல இயக்குனர் திட்டமிட்டுள்ளார்.

அதன் முதற்படியாக படத்துக்கு யோஹன் என பெயரிடப்பட்டுள்ளது. இது உலகளவில் நன்கு பிரபலம் அடைந்த பெயர். இதன் அடுத்த கட்டமாக படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹாலிவுட் நடிகையை நடிக்க வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதற்குண்டான பணிகளில் கவுதம் மேனன் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரூ.1 கோடியே 40 லட்சத்திற்கு சொகுசு கார் வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.


     இளம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அண்மையில் புதிய ஜாகுவார் எக்ஸ்ஜே ரக வெளிநாட்டு கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த காரின் மதிப்பு மட்டும் ரூ.1 கோடியே 40 லட்சம். ஒரு மினி அபார்ட்மெண்ட்டில் உள்ள அனைத்துவித வசதியும் இந்த காரில் உள்ளது.

மேலும் காருக்கு, தனக்கு ராசியான டி.என்.09 சி.ஏ. 1 என்ற ஃபேன்ஸி நம்பரை வாங்கியுள்ளார். இதற்காக மட்டும் தனியே சில லட்சங்களை செலவழித்துள்ளதாக கூறப்படுகிறது.

வாலு படத்தில் சந்தானத்தின் சம்பளம் ஒன்றரை கோடி. சிம்புவுக்காக குறைத்து வாங்கியதாக பேட்டி.





சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவர இருக்கும் திரைப்படம் வாலு. புதுமுக இயக்குனர் விஜய் சந்தர் இயக்கும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். படத்தில் நடிப்பதற்காக ஐம்பது நாள்கள் கால்ஷீட் ஒதுக்கித் தந்திருக்கிறார் நகைச்சுவை நடிகர் சந்தானம்.

இதற்காக அவருக்கு மொத்தமாக ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது. இதனிடையே சந்தானத்தை அனுகிய தயாரிப்பு தரப்பு சம்பளத்தை குறைக்கும்படி கேட்டிருக்கிறது.

அதற்கு சினிமாவில் வாய்ப்பளித்த சிம்புக்காகதான் இவ்வளவு குறைவான சம்பளம் என பதிலளித்திருக்கிறார். உண்மைதான்... தற்போதைய நிலவரப்படி ஒரு நாள் கால்ஷீட்டுக்கு ரூ.10 லட்சத்திருந்து ரூ.12 லட்சம் வரை பெறுகிறார் சந்தானம்.

முதல் நாளிலேயே திருட்டு டிவிடி ரிலீஸ். பில்லா 2 படக்குழுவினர் அதிர்ச்




அஜீத் குமார் நடித்த பில்லா படத்தின் திருட்டு டிவிடி, அந்தப் படம் வெளியான நான்கு மணி நேரங்களில் மார்க்கெட்டுக்கு வந்துவிட்டது!

அஜீத்குமார், பார்வதி ஓமணக்குட்டன், புருனா நடித்துள்ள படம் பில்லா 2, இன்று உலகம் முழுவதும் அதிக திரையரங்குகளில் வெளியானது.

இந்தப் படம் இன்று காலை சென்னையில் வெளியானது. ஆனால் உலகின் மற்ற பகுதிகளில் நேற்று இரவே வெளியாகிவிட்டது.

இதனால், படத்தின் திருட்டு டிவிடி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. அதற்கேற்றார்போல, இந்தியாவில் படம் ரிலீசான நான்கு மணி நேரங்களுக்குள் சுடச் சுட பில்லா 2 படத்தின் டிவிடிக்கள் விற்பனைக்கு வந்துவிட்டன.

இணையதளங்கள் சிலவற்றிலும் இந்தப் படம் வெளியாகியிருப்பதாகத் தெரிகிறது.

திருட்டு டிவிடி வெளியாகியிருப்பது பில்லா 2 படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு ஷாக் கொடுத்திருக்கிறது.

கதாநாயகன் அஜீத் வரமாட்டேன் என அடம்பிடித்த நிலையில், படத்தின் விளம்பரங்களுக்கு பெரிய அளவில் செலவழித்த தங்களுக்கு, திருட்டு டிவிடி விவகாரம் பெரும் சிக்கலைத் தந்திருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் கூறியுள்ளனர்.

நாளை அல்லது அதற்கடுத்த நாள் அநேகமாக போலீசாரை சந்திக்கவிருக்கிறார்கள், திருட்டு டிவிடிக்கு எதிராக மனு கொடுக்க!

ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கும் 6 புதிய படங்கள்!


Aascar films producing 6 filmeவானத்தைப்போல, அந்நியன், தசாவதாரம் உள்பட பல படங்களை தயாரித்த ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் ஒரே சமயத்தில் 6 புதிய படங்களை தயாரிக்கிறார். அதில் ஒரு படத்தில் கமல்ஹாசன் நடித்து இயக்கவுள்ளார். இன்னொரு படம், ஐ. இந்த படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். ஷங்கர் இயக்குகிறார். அந்நியன் படத்தை அடுத்து, விக்ரம் - ஷங்கர் மீண்டும் இணையும் படம் இது.

மற்றொரு படத்துக்கு, `பூலோகம் என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில், ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், பொன்வண்ணன், சண்முகராஜன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். என்.கல்யாண கிருஷ்ணன் இயக்குகிறார். இவர், டைரக்டர் ஜனநாதனிடம் உதவி டைரக்டராக இருந்தவர். படத்தின் வசனத்தை ஜனநாதன் எழுதியிருக்கிறார்.

ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கும் இன்னொரு படம் வல்லினம். நடிகர் நகுல் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை அறிவழகன் இயக்குகிறார். இவை தவிர அர்ஜூன் நடிக்கும் ஒரு படம், தனுஷ் ஒரு படம் என மொத்தம் 6 படங்களை ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

Friday 13 July 2012

பில்லா 2-திரை விமர்சனம்


என்னதான் பணத்தைக் கொட்டி படமெடுத்து, அதற்கு வண்டி வண்டியாய் விளம்பரம் செய்தாலும், கதை என்ற தூண் வலுவாக இல்லாவிட்டால் என்ன ஆகும் என்பதற்கு அஜீத் குமார் நடித்துள்ள பில்லா 2 ஒரு சிறந்த உதாரணம். மேலும் சக்ரி டோலெட்டியின் இயக்க திறமை மீது ஆரம்பத்திலிருந்தே அஜீத் ரசிகர்கள் கொண்டிருந்த அவநம்பிக்கை நிரூபணமாகியிருக்கிறது. படத்தை ஸ்டைலாக எடுக்க வேண்டும், கலர் டோன் இப்படி இருக்க வேண்டும், யாரும் போகாத இடத்துக்குப் போய் படமாக்க வேண்டும் என்று யோசித்தவர்கள், கொஞ்சம் வித்தியாசமான கதையாக சொல்லத் தவறிவிட்டார்கள். படத்தின் கதை? ஒரே வரியில் சொன்னால்... டேவிட் பில்லா நடக்கிறார்... திரும்பிப் பார்க்கிறார்... எதிரி என்றல்ல... எதிரில் வருகிறவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளுகிறார்... அல்லது கழுத்தை அறுக்கிறார். இது முடிவல்ல ஆரம்பம் என்று சொல்லும் போது படம் முடிந்தே விடுகிறது! கதையின் ஆரம்பம் என்னவோ நன்றாகத்தான் உள்ளது. ராமேஸ்வரம் அகதிகள் முகாமில் ஈழத்து அகதியாக அறிமுகமாகும் அஜீத்துக்கு, ஒரே ஒரு அக்கா. ஆனால் அவருக்கு இவரது போக்கு பிடிக்கவில்லை. ஒரு சர்ச்சில் மகளுடன் வசிக்கிறார். அகதி முகாமில் அஜீத்துக்கு தொடர்ந்து தொல்லை தருகிறார் ஒரு இன்ஸ்பெக்டர். நாயகனில் வரும் போலீஸ்காரர் ரேஞ்சுக்கு அவர் இம்சை தொடர்கிறது. ஒரு வைரக் கடத்தலில் அஜீத்தை சிக்க வைத்து போட்டுத் தள்ளப் பார்க்கிறார். ஆனால் சுதாரித்துக் கொள்ளும் அஜீத்தும் அவர் நண்பரும் போலீஸ்காரர்களை போட்டுத் தள்ளிவிட்டு, வைரத்தை உரிய நபரிடம் (இளவரசு) ஒப்படைக்க, இவர்களின் தொழில் நேர்மையைப் பாராட்டி தொடர்ந்து வேலை தருகிறார். ஆனால் அடுத்த கட்டத்துக்குப் போக முயலும் அஜீத், போதை மருந்து கடத்தல், சட்ட விரோத ஆயுத பிஸினஸ் என்று போகிறார். மும்பை தாதா சுதன்ஷாவுடன் சேருகிறார். அடுத்த சீனிலேயே மும்பையிலிருந்து ஜார்ஜியாவுக்கு பயணமாகிறார்... (கடத்தல் பிஸினஸை (?) அடுத்த லெவலுக்கு கொண்டு போறாங்களாம்!) அங்கே அட்டகாசமான வில்லன் வித்யூத் ஜம்வாலுடன் முதலில் நட்பாகி பின்னர் விரோதியாகிறார். விரோதிகள் அனைவரும் இவரை போட்டுத் தள்ள முயல்கிறார்கள். ஆனால் இவர் மட்டும் எங்கும் சிக்கிக் கொள்ளாமல், மற்றவர்களை டப் டப்பென்னு சுட்டுக் கொண்டே இருக்கிறார். அதிலும் ஒரு இந்திக்கார எதிரி தானே முன்வந்து என்னை சுட்டுக் கொல்லு என்கிறார், நல்ல தமிழில்! இனி சுட எதிரிகளே இல்லை என ரசிகர்களே முடிவு கட்டிக் கொண்டு எழ தயாராகும்போது, நல்ல வேளை படமும் முடிந்து போகிறது! இந்தப் படத்தின் தவறுகளுக்கு பெரும்பான்மைப் பொறுப்பாளி இயக்குநர் சக்ரி டோலெட்டிதான். படம் முழுக்க அத்தனை ஓட்டைகள். லாஜிக் என்றால் வீசை என்ன விலை என்று கேட்கிறது திரைக்கதை. அதிலும் அஜீத் ஒரு ஆயுத அசைன்மென்டை போலீசாரிடமிருந்து மீட்கும் காட்சி அபத்தத்தின் உச்சம். பார்வதி ஓமணக்குட்டனை எதிரிகள் தூரமாய் நிற்கவைத்துவிட்டு, புல்வெளியில் துப்பாக்கியை நீட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள். அப்போது விர்விர்ரென்று வருகின்றன பத்து கார்கள். பார்வதியை சுற்றிச் சுற்றி வர, அஜீத் சர்வ சாதாரணமாக கதவைத் திறந்து பார்வதியை உள்ளே உட்கார வைத்துக் கொண்டு போய்விடுகிறார். நீட்டிய துப்பாக்கி நீட்டியபடி, அடியாட்கள் தேமே என்று நிற்கிறார்கள். படத்தில் காமெடியே இல்லை என்று யாரும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக இந்தக் காட்சி போலிருக்கிறது! இரண்டு காட்சிகளை உருப்படியாக எடுத்திருக்கிறார்கள். ஒன்று மராட்டிய முதல்வரும் அஜீத்தும் பேசிக் கொள்ளும் இடம். அடுத்து, அந்த பாட்டில் ஃபைட்! அஜீத் நடந்து வந்தாலே போதும்... தலையை அப்படியும் இப்படியும் திருப்பி, நிதா....னமாக வசனம் சொன்னால் போதும்... சூப்பர் டான் என்று யாரோ தப்புத் தப்பாக சொல்லிக் கொடுத்துவிட்டார்கள். டான்களின் உலகம் என்ற உட்டாலக்கிடி கற்பனையை மறந்துவிட்டு, நிஜத்தில் அவர்களின் உலகத்தைப் பாருங்கப்பா. கோட் சூட், ஏறி மிதிக்க பிகினி பெண்கள் என்த பந்தா இல்லாமல் குடிசையில் கூட ஒரு கொடிய டான் குடியிருப்பான். சொந்த அக்கா செத்துப் போய்விட்டதாக போனில் செய்தி வர, ஏதோ சன்நியூஸில் செய்தி கேட்டமாதிரி அவர் பாட்டுக்கு தேமே என்று போகிறார் அஜீத்! ஆனால், அந்த ஹெலிகாப்டர் சேஸிங் சான்ஸே இல்லை. அஜீத்துக்கு மகா தைரியம்! பார்வதி ஓமணக்குட்டன் ஹீரோயினாம். எண்ணி நாலே முக்கால் சீன்கள் எட்டிப் பார்த்துவிட்டு இடைவேளையில் செத்துப் போகிறார். அந்த வகையில் இன்னொரு ஹீரோயின் புருனா அப்துல்லா பரவாயில்லை. க்ளைமாக்ஸ் வரை தம்மாத்துண்டு ட்ரஸ்ஸில் வத்தலாக வந்து கடைசியில் சாகிறார். அஜீத்துடன் நண்பராக வரும் நடிகர் அம்சமாக நடித்திருக்கிறார். அதேபோல சுதன்ஷு, வித்யூத் ஜம்வால் இரண்டு வில்லன்களுமே பின்னி எடுத்திருக்கிறார்கள். குறிப்பாக சுதன்ஷுவின் பாடி லாங்குவேஜ், நடிப்பு அனைத்துமே அபாரம்! தொழில்நுட்ப ரீதியாக, ஒளிப்பதிவாளர் ஆர்டி ராஜசேகரின் உழைப்பு அபாரம். குறிப்பாக ஜார்ஜியா காட்சிகள் கண்களுக்கு வேறு உலகைக் காட்டுகின்றன. மகா நிதானமாக நகரும் காட்சிகளை வேகப்படுத்த யுவனும் பகீரதப் பிரயத்தனம் எடுத்திருக்கிறார். அந்த பின்னணி தீம் மியூசிக் உண்மையிலேயே நன்றாக உள்ளது. ஆனால் பாடல்கள் ஒன்றுகூட நினைவில் இல்லை. எடிட்டரும் இயக்குநரும் போட்டி போட்டுக் கொண்டு சொதப்பியிருக்கிறார்கள். அடுத்தமுறை அஜீத்திடம் கதை சொல்பவர்கள் தயவு செய்து அந்த 'கோட்'டை சலவைக்கும், துப்பாக்கிகளை பழைய காயலான் கடைக்கும் போடுவது போல ஒரு சீன் வைத்தால் சூப்பராக இருக்கும்!

மாற்றான் எம்.ஜி.ஆர் படம் மாதிரி இருக்கும் - சூர்யா பேட்டி!


கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா ஒருவர்களாக(ஒட்டிப் பிறந்த இருவர்) நடித்திருக்கும் படம் ‘மாற்றான்’. நேற்று(11.07.12) மாற்றான் படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டு பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு மாற்றான் படக்குழு பதில் கூறியது. மாற்றான் படம் பற்றி பேசிய கே.வி ஆனந்த் “ எந்திரன் படத்தின் அவுட்டோர் ஷூட்டிங் முடித்துவிட்டு ஷங்கர் சாருடன் விமானத்தில் வந்துகொண்டிருந்த போது, அங்கிருந்த ஜாகிரஃபி புத்தகத்தை எடுத்து படித்தேன். அதில் தான் லிங், சாங் என்ற ஒட்டிப் பிறந்த இரட்டையர்களை பற்றிய கவர் ஸ்டோரியை படித்தேன். 2009-ஆம் ஆண்டிலேயே சூர்யாவிடம் இந்த கான்செப்டை கூறினேன். அதன் பிறகு நானும் சூர்யாவும் தனியாக பல படங்களை செய்துவிட்டோம். ஒருநாள் சூர்யாவே வலுக்கட்டாயமாக ஃபோன் செய்து “ஆன்ந்த் சார் அந்த இரட்டையர்கள் கதை நம்ம பண்ணலாம் சார்” என்று கூறி மாட்டிக்கொண்டார். அந்த இரட்டையர்களின் கதைக்கும் இந்த படத்திற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. இந்த படத்தில் ஆக்‌ஷன், காமெடி, ரொமான்ஸ், வில்லத்தனம் எல்லாம் சூர்யா தான்.சூர்யா நடித்திருக்கும் இரட்டையர்கள் கதாப்பாத்திரமும் கதையின் கரு கிடையாது. அவர்கள் கதையை தாங்கிச் செல்லும் வித்தியாசமான கதாபாத்திரம். அவர்களுக்குப் பின்னால் ஓரு சமூகப் பிரச்சனை, பிரச்சனை வராத விதத்தில் அலசப்பட்டிருக்கிறது” என்று நக்கலாகவே பதிலளித்தார். சூர்யா பேசிய போது “ நான் சினிமாவிற்கு வந்து கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாகி விட்டாலும் இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு நாளும் எனக்கு புதிய அனுபவத்தை தந்தது. ஒரே காட்சியை இரண்டு முறை ஒரே மாதிரியாக செய்ய வேண்டும். அந்த காட்சிகளில் நான் கஷ்டப்பட்டதைவிட பீட்டர் ஹெயின் தான் கஷ்டப்பட்டார். இப்போது கிராஃபிக்ஸ் செய்துகொண்டிருப்பவர்கள் கஷ்டப்படுகிறார்கள். அந்த காலத்தில் எம்.ஜி.ஆர் படத்தில் எப்படி ஒரு புதுமையும் பிரம்மாண்டமும் இருக்குமோ அதே போல் மாற்றானிலும் புதுமையும் பிரம்மாண்டமும் இருக்கிறது படத்தை நன்றாக அனுபவித்து பார்ப்பீர்கள். ஏனென்றால் கே.வி.ஆனந்தின் நக்கல்களும் படத்தில் அதிகமாக இருக்கிறது” என்று கூறினார்.

நடிகர்கள் சண்டை! சிம்பு சமரசம்!







சமீபத்தில் சென்னையில் நடந்த ஃபிலிம்ஃபேர் விருதுகள் விழாவிற்கான பார்ட்டியில் நடந்த சண்டை தான் கோடம்பாக்கத்தில் பரபரப்பாக அலசப்பட்டுக்கொண்டிருக்கிறது. நடிகர் மகத்தும், மனோஜும் டாப்ஸிக்காக அடித்துக்கொண்டனர் என்பதே டைட்டில் கார்ட்.


ஆனால் உண்மை அது இல்லையாம். நடிகர் மனோஜ் ஆரம்ப முதலே டாப்ஸியை தங்கையின் நிலையில் பாவித்து சில உதவிகளை செய்து வந்தாராம். அது ஆந்திராவில் இருக்கும் வரை. டாப்ஸி சென்னை வரும் போதெல்லாம் மகத் டாப்ஸியை பிக்-அப் செய்வது டிராப் செய்வது என்று இருந்திருக்கிறார்.


இந்த செய்தி மனோஜின் டுவிட்டர் பக்கத்தில் தெரியவர, நேரம் பார்த்துக் காத்துக்கொண்டிருந்த மனோஜுக்கு கிடைத்தது தான் அந்த ரகளை பார்ட்டி. தனது ஜிம் நண்பர்களுடன் மகத்தை உதைத்த மனோஜை பார்ட்டியில் இருந்த யாரும் தடுகாத போதிலும் இவர்கள் இருவருக்குள்ளும் சமரசம் செய்துகொண்டிருப்பவர் சிலம்பரசன். மகத்தும் மனோஜும் சிம்புவின் நண்பர்கள். மனோஜ் பல நாட்களாகவே நண்பர் என்றால், மகத் மங்காத்தா படத்தில் அஜீத்துடன் நடித்ததிலிருந்து நண்பர். இருவரையும் விட்டுக்கொடுக்க முடியாமல் “இரு மச்சான் பேசி தீத்துக்கலாம்” என்ற தோணியில் சமரசப் பேச்சுவார்த்தையில் இறங்கியிருக்கிறாராம் சிம்பு.


”ஒரு பொண்ணுக்காக இப்படி சண்டை போடலாமா” என சிம்பு கூறியது தான் ஹைலைட் என்கின்றனர் கோடம்பாக்கத்தினர். மனோஜின் தங்கை லக்‌ஷ்மி மஞ்சு டாப்ஸியை டுவிட்டரில் பூடகமாக சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

சூப்பர் என்றார் சூப்பர்ஸ்டார்!




       சமீபத்தில் திரைக்குவந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, படம் பார்க்கும் அனைத்து ரசிகர்களின் மனதையும் கவர்ந்துகொண்டிருக்கும் படம் ‘நான் ஈ’. ராஜமௌலி இயக்கத்தில் நானி, சமந்தா, சுதீப், சந்தானம் நடித்துள்ள இந்த படத்தின் வில்லன் சுதீப் தான் படம் ரசிகர்களின் ஹீரோவாக இருக்கிறார்.


ரசிகர்களின் ஆதரவை பெற்றுவிட்ட சுதீப்பிற்கு மற்றொரு மகிழ்ச்சியாய் இருப்பது ரஜினிகாந்த், நாகார்ஜூனா, இயக்குனர் ஷங்கர் ஆகியோரின் பாராட்டு தான். ரஜினி படம் பார்த்துவிட்டு சுதீப்பிற்கு ஃபோன் செய்து “ நல்லா நடிச்சிருக்கீங்க தம்பி. வில்லன் கேரக்டர் என்ன மாதிரியே பன்னிருக்கீங்க” என்று கூறினாராம்.


சென்னையில் படம் பார்த்த ஷங்கரும் படம் சூப்பராக இருக்கிறது என்று அங்குள்ள விசிட்டர் நோட்டில் எழுதிவிட்டு சென்றாராம். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரையே பிரம்மிக்க வைத்திருக்கிறது அந்த சின்ன ’ஈ’.

கியூபாவில் அல்பச்சுனோ! ஈழத்தில் அஜீத்!






பில்லா-ll இன்னும் சில தினங்களில் திரைக்கு வரவிருக்கிறது சக்ரி டொலட்டி இயக்கத்தில் அஜீத்குமார் நடித்துள்ள பில்லா-ll படத்தில் அஜீத் இலங்கை அகதியாக நடித்திருக்கும் காட்சிகள் டிரெய்லரில் வெளியிடப்பட்டதிலிருந்தே பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.


1980-களில், உச்சத்தில் இருந்த ஹாலிவுட் ஹீரோ அல்பச்சுனோவின் தீவிர ரசிகர் அஜீத். அஜித்தின் ஆஸ்தான ஹீரோ அல்பச்சுனோ நடித்து 1983ம் வருடத்தில் ஹாலிவுட்டில் வெளிவந்த ஸகார்பேஸ் படத்தின் கதையை தழுவிதான் எடுக்கப்பட்டிருக்கிறதாம்.


அதில் ஹீரோ அல்பச்சுனோ கியூபா நாட்டிலிருந்து அமெரிக்காவில் அகதியாக தஞ்சம் புகுந்து, அங்கே மியாமி பீச் பகுதிகளில் போதை பொருள் கடத்தல் மன்னனாக வளர்ந்து ஆளாகி, அதில் கிடைக்கும் பணத்தில் கியூபா புரட்சிப் போருக்கு உத‌விடும் கேரக்டரில் நடித்திருப்பார்.


அதேபோல் பில்லா-ll வில் ’தல’ அஜித் இலங்கை அகதியாக இந்தியாவில் தஞ்சம் புகுந்து, போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு இண்டர்நேஷனல் அள வில் ஈழப்புரட்சிக்கு உதவுவதாக கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறதாம்!

துப்பாக்கி மேலும் ஓரு சிக்கல்!






        ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தின் ரிலீஸுக்கு தடைவிதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் மற்றொரு பிரச்சினையில் இருக்கிறது துப்பாக்கி யூனிட். கலைப்புலி தானு தயாரித்துக்கொண்டிருக்கும் துப்பாக்கி படத்திற்கு பிரபல தயாரிப்பு நிறுவனமான ஜெமினி சர்கியூட்ஸ் சொந்தம் கொண்டாடுவது தான் அந்த பிரச்சினையாம்.
துப்பாக்கி படப்பிடிப்பு துவங்கிய போது ஜெமினி நிறுவனம் கொடுத்த காசோலைக்கான பணம் அவர்களது கணக்கில் இல்லாததால் கலைப்புலி தானு தான் பணம் கொடுத்து படப்பிடிப்பை துவங்கினாராம். இப்போது ஜெமினி நிறுவனம் தயாரிப்பு பொறுப்பை கேட்பதால் கலைப்புலி தானு “இதுவரை துப்பாக்கி படத்திற்காக செலவு செய்யப்பட்ட பணத்தை கொடுத்துவிட்டு படத்தின் உரிமையை பெற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டாராம்.
ஆனால் துப்பாக்கி படத்திற்கு இதுவரை செய்யப்பட்ட செலவு ஜெமினி நிறுவனம் போட்ட கணக்கை தாண்டி போய் நிற்கிறதாம். ஏற்கனவே டைட்டில் பிரச்சினையில் இருக்கும் துப்பாக்கி படத்திற்கு பிரச்சினை இரண்டாவது ரவுண்டு வருகிறது.
இயக்குனர் முருகதாஸ் டுவிட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் இருக்கிறார். சூர்யாவின் ரசிகர்களில் ஒருவர் ”சூர்யா தான் மாஸ். இந்த வருடம் சினிமாவின் ஆட்சியில் ‘மாற்றான்’ ஆட்சி தான் என்று சொல்ல. அதற்கு முருகதாஸ் “பாப்பா கொஞ்சம் தள்ளிப் போய் விளையாடு” என்று கூறியுள்ளார்.

'பிரியாணி'யில் சினேகா, பிரசன்னா!


வெங்கட்பிரபு சமைக்க இருக்கும் 'பிரியாணி' படத்திலும் வழக்கம்போல் ஒரு நட்சத்திர பட்டாளமே இருக்கிறது.

கார்த்தி நாயகனாக நடிக்க இருக்கும் இப்படத்தினை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

நாயகியாக ரிச்சா நடிக்க இருக்கிறார். 'சென்னை 28', 'கோவா', 'சரோஜா', 'மங்காத்தா' உள்ளிட்ட முந்தைய வெங்கட்பிரபு படங்களில் பணியாற்றியவர்கள் இப்படத்திலும் பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

பிரசன்னா - சினேகா இருவருமே 'பிரியாணி' படத்தில் நடிக்க இருக்கிறார்கள். இவர்களது திருமண வரவேற்பில் இயக்குனர் வெங்கட்பிரபு பாடல்கள் எல்லாம் பாடி அனைவரையும் பரவசப்படுத்தினார்.

'பிரியாணி' படத்தில் சினேகா ஒரு முக்கிய பாத்திரத்திலும், பிரசன்னா சிறு வேடத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.

ரிச்சாவைத் தவிர வேறு ஒரு நாயகியும் படத்தில் இருக்கிறாராம்.

கார்த்தி, ரிச்சா, பிரசன்னா, சினேகா, பிரேம்ஜி என காரசாரமான பிரியாணியை சுடச்சுட சமைக்க ஆரம்பித்து விட்டார் வெங்கட்பிரபு.
இந்த பிரியாணியில் மசாலா சேர்க்க இன்னும் யார் எல்லாம் ஒப்பந்தமாவார்கள் என்பது வரும் வாரத்தில் தெரிந்துவிடும்.

லிங்குசாமியின் அடுத்த அதிரடி ஆக்ஷன் படத்தில் சூர்யா-சமந்தா.



    சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மாற்றான்’ படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்துள்ளன. ஒட்டிப் பிறந்த இரட்டையர் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ‘அயன்’, ‘கோ’ படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். விரைவில் இப்படத்தை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இந்நிலையில் லிங்குசாமி இயக்கும் புதிய படத்தில் சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார். முழு நீள ஆக்ஷம் படமாக உருவாக இருக்கும் அப்படத்தில் சூர்யா நடிப்பதற்கு ஒத்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் முக்கிய கேரக்டரில் பிரகாஷ் ராஜ் நடிக்கிறார். மேலும் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க சமந்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது சூர்யா, ஹரி இயக்கும் ‘சிங்கம்-2’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்துவிட்டு லிங்குசாமியுடன் கைகோர்ப்பார் என தெரிகிறது.

சமந்தா ஏற்கனவே மணிரத்னம் இயக்கும் ‘கடல்’ படத்திலிருந்தும், ஷங்கர் இயக்கும் ‘ஐ’ படத்திலிருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலிவுட்டில் பாலிவுட் நடிகர்கள்!


Bollywood actors in Kollywood!
ரஜினியின், "கோச்சடையான் படத்தில், பிரபல இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். அதேபோல், "பில்லா-2வில் சுதன்சி பாண்டே என்ற பிரபல பாலிவுட் வில்லன், அஜீத்துடன் மோதுகிறார். இவர்களை அடுத்து, இந்தி சினிமாவின் இன்னொரு பிரபல நடிகரான சஞ்சய்தத், ஜீவாவைக் கொண்டு ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். வில்லனாக நடிக்காமல், முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்கிறார்.

ஹாலிவுட் வில்லனுடன் மோதும் ஜெயம் ரவி!



Hollywood villain in Jayam Ravis next film
"பேராண்மை படத்திற்கு பிறகு, "பூலோகம் படத்திற்காக, மீண்டும் ஒரு ஹாலிவுட் வில்லனுடன் மோதுகிறார் ஜெயம்ரவி. இதற்கான ஹாலிவுட் நடிகர் தேர்வு நடந்து வருகிறது. இந்த படத்தில், வடசென்னையைச் சேர்ந்த குத்துச் சண்டை வீரர் வேடத்தில் நடிக்கும் ஜெயம் ரவி, பிரபல குத்துச் சண்டை வீரர் ஒருவரிடம் பயிற்சி பெற்றே நடிக்கிறார். குத்துச்சண்டை வீரராக அவர் ஏற்கனவே ஒரு படத்தில் நடித்திருந்த போதும், இது முற்றிலும் மாறுபட்ட கதைக்களம் என்கிறார் அவர்.
 

ஸ்ருதிஹாசனுக்கு மவுசு!



Shruti is very busy in Telugu!
இந்தியில் ஸ்ருதிஹாசன் நடித்த முதல் படம், "லக்! ஆனால், அந்த படம் தோல்வி அடைந்ததால், அவருக்கு, "லக் இல்லாமல் போனது. அதன்பிறகு தமிழில் அவர் நடித்த, "ஏழாம் அறிவு, 3 ஆகிய படங்களும், பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில், தெலுங்கில், ஸ்ருதிஹாசன் நடித்த, "கப்பார்சிங் சூப்பர் ஹிட்டாகவே, அங்கு அவரது மவுசு கூடி உள்ளது. ரவிதேஜா உட்பட, சில பிரபல ஹீரோக்களின் படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வரும் ஸ்ருதி, தமிழ், இந்தி டைரக்டர்கள் கதை சொல்ல வந்தால், "கதை கேட்க கூட நேரமில்லை; தெலுங்கில் ரொம்ப பிசி, என்கிறார்.

Thursday 12 July 2012

சந்தாணம் ஹீரோவாகும் படத்தில் சிம்பு!





         கோடம்பாக்கத்தின் நம்பர் ஒன் காமெடியன் என்ற அந்தஸ்தில் இருந்து வருகிறார் சந்தாணம்.

கவுண்டமனிக்குப் பிறகு ஹீரோ, ஹீரோயின், வில்லன் என்று படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பவர்களையே கிண்டல் அடித்து காமெடி செய்யும் அளவுக்கு தமிழ்சினிமாவில் இவரது ஆதிக்கம் உயர்ந்து இருக்கிறது! தற்போது சந்தாணம் புகழின் உச்சியில் இருப்பதால், வடிவேலு முயற்சித்ததைப் போல, முதல் முறையாக ஹீரோவாக நடிக்கிறார்.

முழு நீள நகைச்சுவை படமாக உருவாகும் இந்தப் படத்துக்கு 'கண்ணா லட்டு தின்ன ஆசையா?!' என்று தலைப்பு வைத்திருகிறார்கள். அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு காஞ்சனா படத்தை வெளியிட்டதன் மூலம் 15 கோடி ரூபாய் அள்ளினார் ராம.நாராயணன். தற்போது தனது ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் மூலம் இந்தப் படத்தின் முதன்மை தயாரிப்பாளராக படத்தை தயாரிக்கிறார். இவருடன் படத்தின் ஹீரோவான சந்தாணம் ‘ஹேண்ட் பேட் ஃபிலிம்ஸ்’ என்ற புதிய பட நிறுவத்தை தொடங்கி படத்தை இணைந்து தயாரிக்கிறார்.


இந்தப்படத்தில் சந்தாணத்துக்கு ஜோடி விஷாகா. சந்தாணத்தை மன்மதன் படம் மூலம் அறிமுகப்படுத்திய சிம்பு, இந்தப் படத்தில் நட்புக்காக ஒரு காட்சியில் நடித்துக் கொடுக்க இருக்கிறார். சந்தாணத்துடன் முழுநீள காமெடியன்களாக விடிவி கணேஷ், பவர் ஸ்டார் சினிவாசன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

உண்மையில் இந்தப் படத்தின் மறைமுக தயாரிப்பாளர் பவர் ஸ்டார் சினீவாசன் என்று தெரியவருகிறது. சீனிவாசனே படத்தை தயாரித்தால் படத்தை வாங்க யாரும் முன் வருவதில்லை என்பதால், இராமநாராயணன் தனது பேனரை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கியிருக்கிறார் என்கிறார்கள்! இந்தப் படத்தில் ஒரு காட்சியில் நடித்து தர சிம்புவுக்கு சம்பளமாக 25 லட்சம் பேசப்பட்டுள்ளதாகத் தெரிகிறது!

சோனாவுடன் ராசி ஆகிவிட்டேனா? 'அப்படி யார் சொன்னது. நமீதா



டங்களில் நடிக்கிறாரோ இல்லையோ... பரபரப்பாகவே இருக்கிறார் நமீதா. குட்டிப் பாப்பா ஆடைகளில் பயம் காட்டுகிறார். பப்ளிகுட்டிக்காக சாலையோரக் கல்யாணத்தில் 'வான்டட்’ ஆகத் தலை காட்டுகிறார்... 'சோனா மீது வழக்குப் போடுவேன்’ என்று கொந்தளித்துவிட்டு, அவரோடு பார்ட்டியில் கொஞ்சுகிறார். ஈமு கோழிக் கடைகளில் நமீதா ஏறி 'மச்சான்ஸ்’ என்றாலே அப்ளாஸ் அள்ளுகிறது!  
 '' 'தி டர்ட்டி பிக்சர்’ தமிழ்ல யார்தான் நடிக்கப்போறீங்க... நீங்க, அனுஷ்கா, நயன்தாரானு வதந்தி றெக்கை கட்டுதே?''
''யார் நடிக்கிறாங்க எனக்குத் தெரியாது. ஆனா, நான் இப்போ அது தமிழ் ரீ-மேக்ல நடிக்க பிராக்டீஸ் பண்ணுது. பெர்சனல் ட்ரெய்னர் வெச்சு வொர்க் பண்றேன். டயட்ல இருக்கேன். டெய்லி எக்சர்சைஸ் பண்றேன். வெஜிடபிள்ஸ் மட்டும் சாப்பிட றேன். ஐ லவ் சிக்கன். பட் அதுக்குக்கூட ஸ்ட்ரிக்ட் நோ சொல்லிட்டேன். 'நான் எப்படி ஸ்லிம் ஆக முடியும். நான் எப்படி சில்க்கா நடிக்க முடியும்’னு நிறைய கேட்கி றாங்க. ஆனா, சில்க் கேரக்டர்ல நடிக்க நான்தான் பெஸ்ட். வெயிட் அண்ட் சீ!''
''சோனாவோட ராசி ஆகிட்டீங்களா?''  
''அப்படி யார் சொன்னது? நான் சொல்லலையே. சோனா பர்த் டேவுக்கு இன்வைட் பண்ணுது. நான் போனேன். விஷ் பண்ணேன். தட்ஸ் ஆல்!''
''ஆனா, ரெண்டு பேரும் அந்த பார்ட்டியில அவ்வளவு க்ளோஸா இருந்தீங்களாமே?''
''பார்ட்டிக்கு இன்வைட் பண்ணவங்ககிட்ட நாம எனிமிட்டி காட்ட முடியுமா? சோனாவும் என்னை மாதிரி ஒரு ஆக்டர்தானே? நாங்களே ஃப்ரெண்ட்ஸா இல்லைன்னா, அப்புறம் யார்தான் இருப்பா? சினிமால குஷ்பு என் வெரி க்ளோஸ் ஃப்ரெண்ட். அதுக்கப்புறம் எல்லாரும் எனக்கு ஃப்ரெண்ட்தான். அதுல சோனாவும் உண்டு!''
''எதுக்குத் திடீர்னு டாட்டூ குத்தி இருக்கீங்க?''
''எனக்கு ரொம்ப வருஷ ஆசை. ஆனா, ஒரு டாட்டூ குத்தி, 'அது ஏன் குத்துனோம்’னு அப்புறம் திங்க் பண்ணக் கூடாது. அதான் எனக்குப்  பிடிச்ச டாட்டூ தேடிக்கிட்டே இருந்தேன். 27 ஸ்டார் இருக்குற டாட்டூ பார்த்ததும் பிடிச்சது. ஹேப்பி ஹேப்பியா முதுகுல குத்திக்கிட்டேன். அறுபது வயசான பிறகும்கூட இந்த டாட்டூ எனக்குப் பிடிக்கும்!''
''ஈமு கோழி வளர்ப்பு லாபம் தராதுனு சொல்றாங்க. ஆனா, நீங்க அதுக்கு பிராண்ட் அம்பாஸடரா இருக்கீங்களே?''
''ஈமு சிக்கன் நல்லா இருக்கும்னு சொன்னாங்க. எல்லா விளம்பரங்கள்லேயும் நடிக்கிற மாதிரிதான் அதுல நான் நடிச்சுது. மத்தபடி எனக்கு எதுவும் தெரியாது. இப்போ கோலா ட்ரிங்ல பெஸ்டிசைட் இருக்குது சொல்றாங்க. ஆனா, ஸ்டார்ஸ் நடிக்கிதே. ஓ.கே... ஈமு சிக்கன் நான் சாப்பிட்டது இல்லை. இனி கரெக்ட் பண்ணிக் குது. ஆனா, ஈமு பக்கத்துல போனாலே கொத்துது. நான் டிஸ்டன்ஸ்ல இருந்தே பார்த்தது!''
''திடீர்னு ஒரு கல்யாணத்துல அழைப்பே இல்லாமக் கலந்துக்கிட்டீங்களே... ஏன்?''
''எனக்கு எப்பவும் தமிழ் கல்ச்சர் பிடிக்கும். கரூருக்குப் போய்ட்டு இருக்கும்போது, ஒரு கல்யாண ஃபங்ஷன் பார்த்தேன். கோயில்ல ரொம்ப சிம்பிள் கல்யாணம். என்னால நம்பவே முடியலை. மெஹந்தி, சாட் அயிட்டம்ஸ், கேம்ஸ், பாப்கார்ன், சோன்பப்டி, பெர்ஃப்யூம் ஸ்பிரே... இது எதுவுமே இல்லாமக் கல்யாணம்... லவ் அண்ட் லவ் ஒன்லி. வாவ்! அந்த இடத்துல கல்யாணப் பொண்ணு, பையனுக்கு விஷ் பண்ணணும்னு தோணுச்சு. அதான் பண்ணேன். அந்தக் கோயில்ல இருந்த 15 நிமிஷம்... வாழ்க்கையில மறக்க முடியாது!''
''வேற எதெல்லாம் தமிழ்நாட்ல மறக்க மாட்டீங்க?''
''மதுரைக்குப் போனப்போ ஒரு பாட்டி ரொம்ப ஸ்டைலா தம் அடிச்சுட்டு இருந்தாங்க. அவங்க ஏஜ் கேட்டேன்... எய்ட்டியாம். 'இதுக்குப் பேரு சுருட்டு’னு பாட்டி சொல்லுச்சு. அப்படியே ஸ்ட்ராங்கா ஒரு பஃப் இழுத்துவிட்டாங்க. நான் ஷாக் ஆகிட்டேன். அதுதான் என்னால மறக்கவே முடியலை. இப்போ எனக்கே சுருட்டு பிடிக்கணும்னு ஆசை வந்திடுச்சு!''

Exclusive : Billa 2 Review First on net....



 BILLA 2 - Out Of Service ???


A Review From Dubai :
With all high level anticipations , i booked a First show ticket in El Dorado(abu dhabi) for billa 2 cost AED 25.
The show was full-packed , as advance booking for first show was sold out...coming to the film..
The reason why ajithkumar accepted to act or to even think of a prequel is evident. It has strong-hitting script. And the film starts with a voice from behind re-visiting an ordinary coastal men's life. Ajith as an ordinary coastal man starting to live his life pretty simple with his region people..He gets introduced to a drug and weapon dealers by his coastal head , he agrees to work for them considering the poor livelihood of his family, as predicted he was being cheated by the dealers and whole kundos captured him and his coastal people and made them to Agathigal for money which they gonna get later !
Thereby, heroeines enter and fall for ajith's pity situation and bad lights he undergo , how ajith learns all the arts from them and transform as an Underworld don who gets control of entire network after the death of Sudhanshu Pandey form a rest of the Story.
You would have known this is a simple story and coming to the performance by lead artists,
Ajith (david) when reforms as don shown with his slick and style appearance and dialogues, but failed to justify the character when being Agathi. He looked unselected for the refugee role no offence meant, he still has not come out of Mankatha hangover. He could have reduced his weight though. And he excels in
transforming show and in some places he over acted and emoted in poor sense. Bruna Abdullah & Parvathy appeared too much sexy and too much show off and nothing more for their role. Some scenes should've been deleted for adult content .
Vidhyut as side-villain rocked in looks. But his voice dubbing was not matched.
Music was good in parts. Madhurai Ponnu and Unakule Mirugam were poorly picturised. Other three was good. BGM had no new compositions, Yuvan just re-used the old_billa part 1 themes here.
Cinematography was Awesome. Red Epic worked to some extent but in some places it looked so contrast and dull grey which harms some audience..
There were lots of violence scenes present and some sexually explicit content could have been avoided although it rated Adultery film.
climax was not convincing and they've missed the point what makes Ajith as David Billa and less was said on it. The film is noway near to entertaining mankatha in terms of content and scenes. I did not enjoy the film as i enjoyed Mankatha.
Positives :-
-Ajith's performance as Transforming a Don(david billa)
-Songs
-2nd half locations
Negatives :-
- Ajith as coastalman(David) was miscast
-1st half was so dragging
- Dialogues given to other non tamil artists except Ajith were pretty rubbish.
-mindless violenc scenes and back sound
-Adultery scenes in some parts were used extreme
-Climax so illogical and not convincing.
-Predictable Scenes towards the end.
My Rating :- 3.5* for 10*
My Verdict :- They should have taken sequel for BILLA rather a prepuel. Not a engaging watch , but definately can't enjoy it more than 30mins.
Box office predictions :-
Poor reports from my place and there wont be a 2nd time audience here.
my advice :-
Kids, Female, And Family Folks *must* give a miss for <xxx> contents !!

1854ல் நடந்த உண்மை சம்பவம் : ஒட்டி பிறந்த சகோதரர்கள் கதையில் சூர்யாவின் மாற்றான்.



1854ம் ஆண்டில் தாய்லாந்தில் ஒட்டிப் பிறந்த சகோதரர்களின் நிஜ கதையில் சூர்யா நடித்திருக்கிறார் என்றார் கே.வி.ஆனந்த். ‘அயன் படத்துக்கு பிறகு சூர்யா நடிக்கும் ‘மாற்றான் படத்தை இயக்குகிறார் கே.வி.ஆனந்த்.

இதுபற்றி அவர் நேற்று கூறியதாவது: கனா கண்டேன் படத்தை முடித்துவிட்டு விமானத்தில் வந்தேன். அதே விமானத்தில் ‘சிவாஜி படத்தை முடித்துவிட்டு ஷங்கர் வந்தார். அப்போது வெளிநாட்டில் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் பற்றி அவருடன் பேசிக்கொண்டிருந்தேன்.

தாய்லாந்தை சேர்ந்த ஈஞ்ச்,சாங் இரட்டையர்கள் ஒட்டிப்பிறந்தவர்கள். பின்னர் அமெரிக்காவில் வாழ்ந்தனர். இவர்கள் இரட்டை சகோதரி களை கல்யாணம் செய்துகொண்டனர். தனித்தனி வீடு எடுத்து வாழ்ந்தனர். ஒருவருக்கு 7 குழந்தை பிறந்தது, இன்னொருவருக்கு 8 குழந்தை பிறந்தது. சகோதரர்களில் ஒருவர் 58 வயதில் இறந்தார். இன்னொருவர் 60 வயதில் இறந்துவிடுகிறார்.

இது 1854ம் ஆண்டு நடந்த கதை. ஆனால் ஒட்டிபிறந்த சகோதரர்கள் என்ற கருவை மட்டும் எடுத்துக்கொண்டு ‘மாற்றான் ஸ்கிரிப்ட் அமைத்திருக்கிறேன். நிஜகதை அடிப்படை என்றாலும் சம்பவங்கள் மாற்றப்பட்டிருக்கிறது.

இப்படத்தில் ஒவ்வொரு காட்சிக்கும் சூர்யா இரண்டுமுறை நடித்தார். சண்டை காட்சிகள் எடுப்பதில் மிகுந்த சிரமம் இருந்தது. எல்லாமே இப்போதுள்ள நவீன தொழில்நுட்ப கிராபிக்ஸால் சாத்திய மாகி இருக்கிறது.

'ஒரு ஈ ஒரு மனிதனைத் தோற்கடித்தால் எப்படி இருக்கும்? ராஜமெளலி




இந்த ஒற்றை ஈயின் ரீங்காரம் தெலுங்குப் பட உலகில் பலத்த அதிர்வுகளை உண்டாக்கி இருக்கிறது. கோடிகளைக் குவித்து, புதிய வசூல் சாதனையை நோக்கி முன்னேறிக்கொண்டு இருக்கும் தெலுங்கு 'ஈகா’ படத்தை அப்படியே தமிழிலும் 'ஈ’ அடிச்சான் காப்பியாக்கி, சில காட்சிகளைத் தமிழுக்கு எனப் படம் பிடித்து சேர்த்து 'நான் ஈ’ என்று வெளியிட்டு இருக்கிறார்கள். அனிமேஷன் சினிமாவைப் பொறுத்தவரை நம் ஊருக்கு இந்தப் படம் ஒரு டிரெண்ட் செட்டர்!

அம்புலி மாமா காலத்துக் கதைதான். நாயகி மேல் ஆசைகொண்டு நாயகனைக் கொல்கிறான் வில்லன். ஹீரோவின் ஆவி(!) அருகில் இருக்கும் 'ஈ’ முட்டை ஒன்றில் புகுந்துகொள்கிறது. அது பிறந்ததும் பூர்வஜென்ம நினைவு வந்து வில்லனைப் பழிவாங்குவதே கதை. இதில் 'ஈ’ அனிமேஷன் மட்டும் புதுசு. வயது வித்தியாசம் இல்லாமல், வகை தொகை இல்லாமல் பட்டையைக் கிளப்புகிறது படம். கிட்டத்தட்ட இரண்டே கால் மணி நேரம் ஓடும் படத்தில் 2,234 காட்சிகள் 'லைவ் ஆக்ஷன் அனிமேஷன்’ எனப்படும் தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்டு இருக்கின்றன.



முட்டையில் இருந்து ஈ வெளிவரும் ஆரம்பக் காட்சிகள் மட்டுமே கார்ட்டூன் தொனி. ஆனால், வில்லனைப் பழிவாங்கத் தொடங்கும் காட்சிகளில் லாஜிக் மறந்து ஈர்த்துவிடுகிறது இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் திரைக்கதை. அதிலும் க்ளைமாக்ஸில் சிறகு இழந்து, ஒற்றைக் கால் உடைந்தபோதும் மிச்சம் இருக்கும் உயிரைத் திரட்டி(!) வில்லனைச் சாய்த்து தானும் பலியாகும் காட்சியில்... கண்களில் நீருடன் கைதட்டுகிறது ஒட்டுமொத்த அரங்கமும்.

நம்மவர்களுக்குப் பழிவாங்கும் கதையும் புதிது அல்ல... அனிமேஷன் படமும் புதிது அல்ல. ஆனால், அதில் காமெடி, காதல், ஃபேன்டஸி, சென்ட்டிமென்ட் சேர்த்து ஜோரான காக்டெய்ல் ஆக்கிய மிக்ஸிங்தான் சுவாரஸ்யம். அதன் முழுப் பெருமையும் இயக்குநர் ராஜமௌலிக்கே!

இப்போதைய டிரெண்டில் தென்னிந்தியாவின் நம்பர் ஒன் இயக்குநர் இவர்தான். இவர் இயக்கிய எட்டுப் படங்களும் ஆந்திரத்தில் பெரும் வசூல் சாதனை படைத்தவை. 'ஸ்டூடன்ட் நம்பர்-1’, 'எமடொங்கா’, 'சிறுத்தை’, 'மஹதீரா’, 'மரியாதை ராமண்ணா’ எனக் கோடிகளைக் குவித்த ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ரகம். வெறுமனே கமர்ஷியல் கலக்கல் மட்டும் இல்லாமல், காமெடியன் சுனிலுக்கு சிக்ஸ்பேக் வைத்து ஹீரோ ஆக்குவது, ரக்ஃபி விளையாட்டை மையமாக வைத்து முழு நீள சினிமா எடுப்பது, பூர்வஜென்மக் கதையில் வரலாற்று ஃபேன்டஸி சேர்ப்பது, 'ஈ’ சினிமா என இவருடைய ஒவ்வொரு படமும் பலே விருந்துவைக்கும் பரிசோதனை முயற்சியாகவே இருக்கும்.

''இந்த 'ஈ’ படம் இயக்கும் எண்ணமே எனக்குக் கிடையாது. பிரபாஸை வைத்து ஒரு மெகா பட்ஜெட் படம் எடுப்பதற்கு முன்னால், நாலைந்து மாதங்களில் முடிக்கும் அளவுக்கு ஒரு படம் எடுக்கத்தான் எண்ணம். 'ஒரு ஈ ஒரு மனிதனைத் தோற்கடித்தால் எப்படி இருக்கும்?’ என்று பல வருடங்களுக்கு முன் என் அப்பா விஜயேந்திர பிரசாத் சொன்ன ஒரு வரி திடீர் என ஃப்ளாஷ் அடித்தது. அதைப் பிடித்துக்கொண்டு 'ஈ’யை ஹீரோவாகவைத்து திரைக்கதை எழுதினேன். எழுதி முடித்துப் பார்த்தால், அந்தப் படத்தைப் போகிறபோக்கில் எடுக்க முடியாது என்று தோன்றியது. 'மஹதீரா’ படத்தில் கிராஃபிக்ஸ் என்பது பின்னணியாக அமைந்துஇருக்கும். ஆனால், இந்தப் படத்தில் கிராஃபிக்ஸும் அனிமேஷனும் தான் முன்னணியில் இருக்கும். நடிகர்கள் பின்னணியில்தான் இயங்குவார்கள். அதிலும் ஒரு 'ஈ’ முகத்தில் 80 சதவிகிதம் அதன் கண்கள்தான். ஈயின் கண்களை வைத்து காதல், கோபம், சந்தோஷம் என்று எந்த உணர்ச்சிகளையும் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அப்போது பிக்சர் அனிமேஷன் ஸ்டுடியோஸின் டைட்டில் கார்டில் தத்தித் தாவும் ஒரு டேபிள் லேம்ப் என் நினைவுக்கு வந்தது. அந்த விளக்குக்கு முகமே கிடையாது. ஆனால், அது சந்தோஷமாக இருப்பதை அதன் அசைவுகளிலேயே உணர்த்திவிடுவார்கள். அப்படி இந்த ஈக்கும் உடல்மொழி ஏற்றுங்கள் என்று சொன்னேன்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு ஒரு அனிமேஷன் ஈயை உருவாக்கினார்கள். என் 10 வருட சினிமா அனுபவத்தில் நான் அப்போதுதான் மிகவும் பயந்துபோனேன். மிகவும் அசிங்கமாக எந்த எமோஷனும் இல்லாமல் இருந்தது அந்த ஈ. ஆனால், அதற்கே கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் செலவு. ஒருவேளை ஒரு கோடி மட்டுமே செலவாகி இருந்தால், இந்த புராஜெக்டை அப்போதே நான் கைவிட்டு இருப்பேன். ஆனால், விட்ட இடத்தில்தானே பிடிக்க வேண்டும் என்று வேறு வேறு யூனிட்களில் வேலை செய்து இந்த ஈயை உருவாக்கிவிட்டோம். குழந்தைகள் நிச்சயம் ரசிப்பார்கள் என்பது தெரியும். ஆனால், பெரியவர்களை யும் குழந்தைகளாக்கி ரசிக்கவைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை'' என்று அடக்கமாகப் பேசுகிறார் ராஜமௌலி.

ஸ்பைடர் மேன், சூப்பர் மேன், பேட்மேன்களுக்குச் சவால்விட்டு இருக்கிறது இந்த இந்திய ஈ. முன்பெல்லாம் தியேட்டரில் ஈ ஓட்டுகிறோம் என்பார்கள் பரிதாபமாக... இப்போது ஈ ஓட்டுகிறோம் என்கிறார்கள் பரவசமாக!

கார் வாங்கும் நடிகர் சூரிக்கு விஜய்யின் அன்புக்கட்டளை.







சுசீந்திரன் இயக்கிய 'வெண்ணிலா கபடி குழு' படத்தில் வரும் பரோட்டா காமெடியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.

அந்த காமெடியின் மூலம் பிரபலமாகி, பல்வேறு படங்களில் நடித்து வருகிறார் 'பரோட்டா' சூரி. 'வேலாயுதம்' படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தார்.

அப்போது விஜய் - சூரி இருவருமே நண்பர்களாகிவிட்டனர். சூரி சமீபத்தில் கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

கார் வாங்கப்போகும் செய்தியை விஜய்யிடம் சொல்லி இருக்கிறார். உடனே விஜய் காரை பார்க்க நேரில் சென்று, காரை ஒட்டிப் பார்த்து "எல்லாம் சரியாக இருக்கிறது.. நன்றாக இருக்கிறது வாங்கி கொள்" என்று தெரிவித்து இருக்கிறார்.

இது போக அக்காரை வாங்க பண உதவியும் செய்து இருக்கிறார். இதை வெளியில் சொல்லக்கூடாது என்று அன்புக்கட்டளை போட்டு இருக்கிறார்

ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சம். எகிறும் அங்காடி நடிகையின் சம்பளம்.





ஒரு படத்திற்கு ரூ. 7 லட்சத்தில் இருந்து ரூ. 9 லட்சம் வரை வாங்கிக் கொண்டிருந்த அங்காடி நகை, ஒரேயடியாக தனது சம்பளத்தை உயர்த்தி விட்டார். இப்போது அவருடைய சம்பளம் ரூ.25 லட்சமாம். கடைசியாக அவர் நடித்து வெளிவந்த ‘கலகல’ படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றதையே சம்பள உயர்வுக்கு காரணம் காட்டுகிறாராம் அம்மணி. இனி அடுத்து வரும் படமும் வெற்றி பெற்றால் அம்மணியின் சம்பளம் ரூ.50 லட்சம் ஆகிவிடுமோ என சினிமா தயாரிப்பாளர்கள் பயந்துபோய் இருக்கிறார்களாம்.







பிரபல கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்தவர் அந்த ‘ரண்’ நடிகை. மார்க்கெட் இழந்ததால் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தன. வில்லனுக்கு ஆசை நாயகியாக நடிக்கிற அளவுக்கு இறங்கிவிட்ட அவர், தன்னை கவர்ச்சியாக படம் எடுத்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பு வருகிறார். ஒரு பாடலுக்குக்கூட ஆடத் தயார் எனவும் பின்குறிப்பில் எழுதி அனுப்பி வருகிறாராம்.

போதைப்பொருள் கடத்தும் ஈழத்தமிழரா அஜீத்? பில்லா 2 படத்தின் கதை.



      தல அஜித் 1980-களில், பீக்கில் இருந்த ஹாலிவுட் ஹீரோ அல்பச்சுனோவின் தீவிர ரசிகர் ஆவார். தல நடித்து இன்னும் இரு தினங்களில் ரிலீஸ் ஆக இருக்கும் பில்லா-2வின் கதையும், அஜித்தின் ஆஸ்தான ஹீரோ அல்பச்சுனோ நடித்து 1983ம் வருடத்தில் ஹாலிவுட்டில் வெளிவந்த ஸகார்பேஸ் படத்தின் கதையை தழுவிதான் எடுக்கப்பட்டிருக்கிறதாம்.

அதில் ஹீரோ அல்பச்சுனோ கியூபா நாட்டிலிருந்து அமெரிக்காவில் அகதியாக தஞ்சம் புகுந்து, அங்கே மியாமி பீச் பகுதிகளில் போதை பொருள் கடத்தல் மன்னனாக வளர்ந்து ஆளாக, அதில் கிடைக்கும் பணத்தில் கியூபா புரட்சி போருக்கு உத‌விடும் கேரக்டரில் நடித்திருப்பார். அதேப்போல் பில்லா-2வில் தல அஜித் இலங்கை அகதியாக இந்தியாவில் தஞ்சம் புகுந்து, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு இண்டர்நேஷனல் அளவில் ஈழப்புரட்சிக்கு உதவுவதாக கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறதாம்! நெசந்தானா தல...?

இதனிடையே ஜூலை 13ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் பில்லா-2விற்கான ரிசர்வேஷன் தொடங்கி இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி இன்னும் ஒருவார காலத்திற்கு செ‌ன்னை உள்ளிட்ட மாநிலத்தின் பிற மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில் பில்லா-2-க்கு ரிசர்வ் செய்யப்பட்டுள்ளதாம். மேலும் சென்னையில் மட்டும் ஒரு டிக்கெட்டின் விலை சுமார் ரூ.500 முதல் ரூ.600 வரை விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இரட்டை வேடத்தில் நடிக்க விஷேச பயிற்சி எடுத்து நடித்தேன். ப்ரியாமணி



      நடிகை பிரியாமணி 'சாருலதா' என்ற படத்தில் இரட்டையர் வேடத்தில் நடிக்கிறார். இந்திய சினிமாக்களில் இதற்கு முன் இது போன்ற கேரக்டர் வந்ததில்லை என்கின்றனர். ஒட்டிப் பிறந்த இரட்டையர் வேடத்தில் நடித்தது மறக்க முடியாதது என்றார் பிரியாமணி. இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-
இரட்டையர் வேடம் அமைவது அபூர்வமானது. தாய்லாந்து படத்தின் பாதிப்பில் இருந்து தான் இந்த படத்தின் கதை உருவானது. நான் ஒவ்வொரு நாளும் இதில் நடிப்பதற்காக படப்பிடிப்புக்கு செல்லும் முன் விசேஷ பயிற்சி எடுத்தேன்.
இரட்டையர்களில் ஒவ்வொருவர் தோற்றமும் வெவ்வேறு மாதிரி இருக்கும். குண நலன்களும் வித்தியாசமாக இருக்கும். அதையெல்லாம் புரிந்து நடித்தேன். வழக்கமாக நான் நடிக்கும் படங்களை விட இது வித்தியாசமானது. இது போன்ற வாய்ப்பு அமைவதை எந்த நடிகையும் இழக்க மாட்டார்.

ரஜினி கொடுத்த 20 நிமிஷ ரீ-சார்ஜ்!




பிருத்விராஜ்... மல்லுவுட்டின் 'மோஸ்ட் வான்டட் ஹீரோ’... மலையாளத்தில் இவர் நடித்து வெளியான 'ஹீரோ’ சூப்பர் டூப்பர் ஹிட். தமிழ், மலையாளம், இந்தி என சகல மொழிகளிலும் ரகளை பண்ணுகிறார்...
 ''இந்தியில் 'அய்யா’னு ராணி முகர்ஜியுடன் ஒரு படம் நடிக்கிறீங்களாமே... அதென்ன 'அய்யா’?''
''அது மராட்டிப் பொண்ணுக்கும் தமிழ்ப் பையனுக்குமான ஒரு காதல் கதை. ராணி முகர்ஜிக்கு என்னைப் பார்த்ததும் பிடிக்காது. ஆனா, நான் பக்கத்துல வரும்போது, என்னோட பிரத்யேக மணம்அவங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். அதனாலயே ஊர் பேர் தெரியாத என்னைக் காதலிப்பாங்க. இந்தி சினிமாவின் இன்டெலிஜென்ட் இயக்குநர்களில் ஒருவரான அனுராக் காஷ்யப் கதை. ரொம்ப சந்தோஷமா நடிச்சுட்டு இருக்கேன். 'அய்யா’ங்கிறது ஒரு பெயர். ஆனா, அதில்தான் இருக்குது கதையே!''
''தமிழ்ப் படங்களில் உங்களை இப்போ பார்க்கவே முடியலையே... ஏன்?''
''தமிழ்ல நான் கடைசியா நடிச்ச படம் 'ராவணன்’. டெஸ்ட் ஷூட்கூடப் பண்ணாம மணி சார் என்னை அவர் படத்தில் நடிக்கவெச்சது நான் சினிமா வுக்கு வந்ததுக்கான அர்த்தத்தை முழுமையாக்குச்சு. அதுக்கு முன்னாடி தமிழ்ல நான் நடிச்ச 'மொழி’, 'கனாக் கண்டேன்’, 'பாரிஜாதம்’ படங்கள் இப்பவும் சினிமா ரசிகர்களுக்கு பளிச்னு ஞாபகம் இருக்கும். அப்படியான படங்களில்தான் நடிக்க ஆசை. நல்ல படங்களில் நடிக்க முடியலைன்னாலும், மோசமான படங்கள்ல நடிக்கக் கூடாதுனு உறுதியா இருக்கேன் அப்புறம், என் அண்ணன் இந்திரஜித் தமிழ்ல நடிச்சிருக்கார் தெரியுமா? 'சர்வம்’, 'என் மன வானில்...’ படங்கள்ல என் சாயல்ல ஒருத்தர் நடிச்சிருப்பாரே... அவர் சாட்சாத் என் அண்ணன்தான்!''  
''சினிமாவில் உங்களால் மறக்க முடியாத பாராட்டு எது?''
''நான் சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி ஆராதிச்சதைவிட இப்ப அதிகமா வியக்கும் ரஜினி சாரோட பாராட்டு! 'தளபதி’ படத்தில் ஒரு சீன் வரும்... அரவிந்த்சாமிகிட்ட 'தம்பி நீ போயிடு’னு ரஜினி சொல்வாரு. 'தம்பியா? என் அம்மா மட்டும் உன்னைப் பெத்திருந்தா அப்பவே குப்பைத்தொட்டியில வீசியிருப்பா’னு அரவிந்த்சாமி சொல்வார்... அப்போ ரஜினி சார் ஒரு ரியாக்ஷன் காட்டுவார் பாருங்க... சான்ஸே இல்லை! அப்படிப்பட்ட ரஜினி சார் 'மொழி’ படம் பார்த்துட்டு, அவரே என்னை போன்ல கூப்பிட்டு, இருபது நிமிஷம் பாராட்டிப் பேசிட்டே இருந்தார். நான் சினிமாவில் இருக்கிற வரைக்கும் அந்த ரீ-சார்ஜ் எனக்குப் போதும்.''  
''பாவனா, பிரியாமணினு கிசுகிசு கிளம்பினாலும் யாருமே எதிர்பார்க்காம சுப்ரியாவைக் காதல் திருமணம் பண்ணிட்டீங்க... அந்த ரகசியத்தை இப்பவாவது சொல்லலாமே?''
''என்.டி.டி.வி. ரிப்போர்ட்டரா இருந்த சுப்ரியா, 'நான் தென்னிந்திய நடிகர்களைப் பேட்டி எடுத்துட்டு இருக்கேன். உங்க அப்பாயின்மென்ட் வேணும்’னு போன்ல பேசினாங்க. அப்ப ஆரம்பிச்ச நட்பு. அவங்க பி.பி.சி. நிருபரான பிறகும் நல்ல டச்ல இருந்தோம். திடீர்னு ஒரு நாள் இவங்களை மிஸ் பண்ணவே கூடாதுனு தோணுச்சு. ராஜஸ்தான் ரத்தன்போர் காட்டுல வெச்சு சின்னதா ஒரு வைர மோதிரம் பிரெசன்ட் பண்ணி என் காதலைச் சொன்னேன். அவங்களும் காத்திருந்த மாதிரி ஓ.கே. சொல்லிட்டாங்க. ஒரு வருஷ கல்யாண வாழ்க்கை இப்போ அன்பும் காதலுமாப் போய்ட்டு இருக்கு. ஐ லவ் மை லைஃப்!''

துப்பாக்கிக்கு மாற்றான் எந்த விதத்திலும் குறைந்தவன் அல்ல..கே.வி.ஆனந்த்





.கே... இப்ப கொஞ்சம் பேசி டலாம். எனக்கே யார்கிட்டயாவது சொல்லி டணும்னு தவிக்குது. 'மாற்றான்’ல சூர்யா ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள். 'கான்ஜாயிண்ட் ட்வின்ஸ்’னு (Conjoined twins) சொல்வாங்க. ஒரே உடம்பு... ரெண்டு மனசு. குணாதிசயங்களும் எதிரெதிர் துருவங்களா இருக்கும். டெக்னிக்கலா ரொம்ப சேலஞ்ஜிங்கான கதை. கிராஃபிக்ஸ் பெர்ஃபெக்ட்டா இருக்கணும். கொஞ்சம் அசந்தாலும் ஏமாத்திரும். சூர்யாவின் இன்னொரு தலையை கம்ப்யூட்டர்ல ஜெனரேட் பண்ணணும். அதில் உயிர் இருக்கணும். எல்லாத்துக்கும் மேலே நீங்க நம்பணும். சூர்யாவுக்கு நாலு கை, நாலு கால், இரண்டு தலை... நல்லா இருக்குல்ல!'' - கண்களின் ரியாக்ஷன் பார்க்கிறார் கே.வி.ஆனந்த். 'மாற்றான்’ படத்துக்காக பிரமாண்ட உழைப்பு கொட்டிய அயர்ச்சி யைத் தாண்டியும் வார்த்தைகளில் கொப்பளிக்கிறது குதூகலம்.
 ''எங்கே பிடிச்சீங்க இந்த ஐடியாவை?''
'' 'சிவாஜி’க்காக 'ஒரு கோடி சன்லைட்’ பாட்டு ஷூட் பண்ணிட்டு நானும் ஷங்கர் சாரும் ஃப்ளைட்டில் வந்துட்டு இருந்தோம். அப்போ நேஷனல் ஜியாக்ரஃபி பத்திரிகை யைச் சும்மா புரட்டிட்டு இருந்தேன். அதுல பத்து பக்கத்துக்குத் தாய்லாந்தில் ஒட்டிப் பிறந்த குழந்தைகளைப் பத்தின ஸ்டோரி இருந்தது. மனசுக்குள் மின்னல். இந்தியா வந்து இறங்கினதும் அப்படியான குழந்தைகளைத் தேடினால், ஆச்சர்யத் தகவல்களா கொட்டுது. அப்படியே அதை நூல் பிடிச்சுட்டே போனா, செம சினிமாவுக்கான கதை. ரொம்ப பாசிட்டிவ் எண்ணங்கள் உள்ளவனா ஒருத்தனும் வசதி தந்த திமிரால் தடம் மாறியவனா ஒருத்தனும் இருக்காங்க. நிஜத்திலும் அப்படிப் பல ட்வின்ஸ் இருக்காங்க. ஒரே உடம்புல ரெண்டு மனசு!''
''சூர்யாவையே மலைக்கவைக்கிற உழைப்பு தேவைப்படுமே... சமாளிச்சாரா?''
''பின்னிட்டார்! மூணு படங்கள்ல கொட்ட வேண்டிய வேலையை இதில் கொடுத்திருக்கார். 'அயன்’ சமயமே இந்தக் கதையை அவர்கிட்ட சொன்னேன். கேட்டுக்கிட்டார். நான் 'கோ’ முடிச்சதும் 'என்ன ட்வின்ஸ் கதையை இப்போ கையில் எடுக்கலாமா’னு கேட்டார். நிறைய ஹோம் வொர்க் பண்ணிட்டுக் கிளம்பிட்டோம்.
ட்வின்ஸ் சூர்யாவுக்கு அகிலன், விமலன்னு பேர். இதுல விமலன் ரொம்ப நல்ல பையன். கவிதை எழுதுவான், எல்லாருக்கும் உதவி பண்ணுவான், வடைதான் பிடிக்கும், பொய் சொல்ல மாட்டான். அகிலன் அப்படியே ஆப்போசிட். பீட்டர் இங்கிலீஷ், பீட்ஸா பார்ட்டி, டேட்டிங் இளைஞன். விமலன் குட்பாய்னா, அகிலன் ப்ளேபாய். ரெண்டு பேருக்குமான வித்தியாசத்தை நல்லா உள்வாங்கிட்டு, பிரமாதமா பெர்ஃபார்ம் பண்ணார். ஒரே சமயத்துல ரெண்டு அவதாரம் எடுத்த மாதிரி நடிச்சிருக்கார். காமெடிக்குனு யாருமே இல்லை. அதுக்கும் சூர்யாதான் பொறுப்பு!''
'' 'மாற்றான்’, 'துப்பாக்கி’... ரெண்டும்தான் களத்தில் நேருக்கு நேர் மோதுது. இதில் சூர்யா-விஜயைத் தாண்டி, கே.வி.ஆனந்த்-ஏ.ஆர்.முருகதாஸ் போட்டியும் இருக்கே?''
''விஜய் மாஸ் நடிகர். முருகதாஸ் கிளாஸ் இயக்குநர். 'மாற்றான்’, 'துப்பாக்கி’... ரெண்டுமே நல்ல விஷயம்தான். ஒரு ரசிகனா நான் 'துப்பாக்கி’யை எதிர்பார்க்கிறேன். ஆனா, என் 'மாற்றான்’ அவங்களுக்கு எந்தவிதத்திலும் குறையாமல் ரொம்பவே நல்லா இருக்கும்!''
''சட்டுனு பார்த்தா தமிழ் சினிமாவின் 'கமர்ஷியல் கில்லி’ இயக்குநர்களில் உங்களுக்குப் பிரதான இடம்... என்ன மேஜிக் பண்ணீங்க?''
''அதுக்கெல்லாம் சின்ன வயசுல நான் படிச்சு வளர்ந்த புத்தகங்கள்தான் காரணம். கற்பனை யைத் தூண்டும் 'இரும்புக் கை மாயாவி’, 'துப்பறியும் சாம்பு’வோட ரசனையை உயர்த்திய தமிழ்வாணன், சுஜாதா இவங்களுக்கும் அதில் பங்கு இருக்கு. நான் வேலை பார்த்த ப்ரியதர்ஷன், ராஜ்குமார் சந்தோஷி, ஷங்கர், வஸந்த், கதிர் இவங்க எல்லோரும் ஸ்கிரிப்ட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பாங்க. நான் இவங்க எல்லாருக்கும் முதல் அசிஸ்டென்டா நின்னேன். அவங்க பிரச்னையை என்கிட்ட பகிர்ந்துக்கிட் டாங்க. நான் விளம்பரத்தைப் பாடமா படிச்சிருக்கேன். இப்பெல்லாம் முதல் நாள் தியேட்டருக்கு வந்து பார்க்கிறவங்க வயசு 25-க்கு உள்ளேதான் இருக்கு. மத்தவங்க சீரியல், டி.வி.டி-னு செட்டில் ஆகிடுறாங்க. எந்தப் பொருளை யாருக்கு விக்கிறேங்கிறதுல தெளிவா இருக்கேன். அதேசமயம் இலக்கியம், இலக்கணம் எல்லாம் தாண்டி சினிமா பணம் பண்ணுற விஷயம். அதிலும் நான் தெளிவா இருக்கேன். என்னோட ஸ்பெஷாலிட்டியா நான் நினைக்கிறது... எதிலும் கொஞ்சம் லாஜிக் சேர்த்துடுறது!''
''ரஜினிக்குக் கதை சொன்னீங்கன்னு சொன்னாங்களே?''
''கதை சொல்றதுக்காக நான் ரஜினியைச் சந்திக்கவே இல்லை. ரஜினி தங்கமானவர். நான் பயப்படுறது அவரோட ரசிகர்களுக்காக. நான் ரஜினி சாரைச் சமாளிச்சுருவேன். ஷூட்டிங்ல தன் குடையைத் தானே பிடிச்சுக்குவார். ஆனா, அவர் ரசிகர்கள் எதிர்பார்ப்பைச் சமாளிக்க... எனக்கு இன்னும் பயிற்சி வேணும்!''

திருமணத்திற்கு பிறகு நடிப்பேன் - ராதிகா ஆப்தே!



I will act after marriage also says radhika apteதிருமணம் ஆனாலும் அதன்பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார். தமிழில் தோனி, ரத்தசரித்திரம் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் இப்போது அஜ்மலுடன் வெற்றிச்செல்வன் என்ற படத்தில் நடித்து வருகிறார். ருத்ரன் இயக்கி வரும் இப்படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ராதிகா ஆப்தே, தமிழில் நான் நடிக்கும் 3வது படம் வெற்றிசெல்வன். இப்படத்தில் வித்தியாசமாக வக்கீல் கேரக்டரில் நடித்து வருகிறேன். இப்படத்தில் சமுதாயத்திற்கு தேவையான ஒரு நல்ல செய்தி இருக்கிறது. நல்ல கதையம்சம் உள்ள படம் இது. விரைவில் எனக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. லண்டனை சேர்ந்த இசையமைப்பாளர் ஒருவருடன் எனக்கு நிச்சயமாகியுள்ளது. திருமணம் ஆனாலும் தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன். தமிழில் நல்ல நல்ல கேரக்டர்கள் தேர்வு செய்து நடிக்க ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

இந்தி பட ஆசையை தள்ளி வைத்த அமலாபால்


Amalapaul temporary avoids hindi film"வேட்டை படத்தில் நடித்து வந்த சமயம், நானும் அசின் மாதிரி இந்தி சினிமாவிலும் கொடி நாட்டப் போகிறேன் என, முயற்சி எடுத்தார் அமலா பால். ஆனால், அதன் பிறகு தமிழ் சினிமாவில் அவரது மார்க்கெட் தள்ளாட்டம் கண்டது. இதனால் தடுமாறிப் போன அமலா, தற்போது இந்தி ஆசையை ஓரங்கட்டிவிட்டு, தென் மாநில சினிமாவில் தன் மார்க்கெட்டை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து அமலாபாலைக் கேட்ட போது, "தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக, "நிமிர்ந்து நில் படத்தில் ஒப்பந்தமாகி உள்ளேன். இதுதவிர, தெலுங்கில் ராம் சரணுடன் ஒரு படமும்; மலையாளத்தில் மோகன்லாலுடன் ஒரு படத்திலும் நடிக்கிறேன். தற்காலிகமாக இந்திப்பட முயற்சியை தள்ளி வைத்துள்ளேன் என்கிறார்.

பெரிய நடிகர் என்ற பந்தா இல்லாதவர் அஜித்! ஒளிப்பதிவாளர் ராஜசேகர்


billa-2 cameraman rajasekar praises ajithசினிமாவில் அஜித் நுழைந்தபோது எப்படி இருந்தாரோ, அதேப்போல இப்போதும் மாறாமல், பெரிய நடிகர் என்ற பந்தாவும் இல்லாமல் இருக்கிறார் என்று பில்லா-2 ஒளிப்பதிவாளர் ராஜசேகர் கூறியுள்ளார். அஜித், பார்வதி ஓமனக்குட்டன், ப்ரூனா அப்துல்லா உள்ளிட்ட பலரது நடிப்பில், சக்ரி டோல்டி இயக்கத்தில், ஒய்டு ஆங்கிள் மற்றும் ஐ.என்.இ இணைந்து தயாரித்து பிரமாண்டமாய் உருவாகி இருக்கும் படம் பில்லா-2. இப்படம் ஜூலை 13ம் தேதி முதல் உலகம் முழுக்க ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. அதன்பின்னர் தினமலருக்கு பேட்டியளித்த இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ராஜசேகர் கூறியதாவது, பில்லா-2 படத்தில் ஒளிப்பதிவு செய்தது ரொம்ப சவாலாக இருந்தது. எல்லா மனிதனும் கொள்ளைக்காரனாக பிறப்பதில்லை. அதுபோலத்தான் பில்லா-2விலும் அஜித் சாதாரண மனிதனாக இருந்தவர் எப்படி பில்லாவாக மாற்றப்பட்டார். அதற்கான சூழ்நிலை அமைந்தது எப்படி என்பதே இப்படத்தின் மையக்கரு. அதை ரொம்ப அழகாகவும், அருமையாகவும் படமாக்கியுள்ளோம். ஆசியாவிலேயே முதன்முறையாக இந்தபடத்தில் தான் எபிக் எனும் 5கே ‌ரெசல்யூசன் காமிராவை பயன்படுத்தியுள்ளோம். இதற்காக தென் ஆப்ரிக்காவில் இருந்த பிரத்‌யேகமான லென்ஸ் வரவழைக்கப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட்டன. பில்லா-2வின் பெரும்பகுதியை ஐதரபாத், கோவா, ‌மும்பை மற்றும் ஜார்ஜியாவில் படமாக்கினோம். அதிலும் ஜார்ஜியாவில் மைனஸ் 10 டிகிரி குளிரில் படம் பிடித்தது ரொம்ப சவாலாக அமைந்தது. பில்லா-2வில் அஜித்துடன் பணியாற்றிய அனுபவம் ஒரு நல்ல அனுபவம். சினிமாவிற்கு வந்தபோது அவர் எப்படி இருந்தாரோ அதுபோல இப்பவும் இருக்கிறார். கதைக்கு எது தேவை, எப்படி நடிக்க வேண்டும், எந்தமாதிரி டிரஸ் போடவேண்டும் என்று படக்குழுவில் யார் சொன்னாலும் அதை ஏற்றுக்கொண்டு நடிப்பவர். ஒரு பெரிய ஹீரோ என்ற பந்தாவே அவரிடம் கிடையாது என்று கூறியுள்ளார்.

Wednesday 11 July 2012

"மாற்றான்" -டிரைலர் ....


ஸ்ருதியை குறிவைக்கும் பிரபுதேவா..!!

   ரவுடி ரத்தோர் வெற்றியை தொடர்ந்து பிரபு தேவா மீண்டும் இந்தி படம் ஒன்றை இயக்க ஆயத்தமாகி வருகிறார்.

இந்த முறை அவர் காதல் கதையை கையில் எடுத்துள்ளார்.
கிரிஷ் தவ்ரானி கதாநாயகனாக நடிக்க இருக்கும் இந்தப் படத்தை அவருடைய தந்தை குமார் தவ்ரானி தயாரிக்கிறார்.


படத்துக்கு புதுமுக நடிகையை தேடி வந்த பிரபு தேவா இறுதியில் ஸ்ருதி ஹாசனை தேர்வு செய்துள்ளார்.படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. பிரபு தேவா இந்தியில் தொடர்ந்து மூன்று படங்களை இயக்க முடிவு செய்துள்ளார்.

இதற்காக அவர் மும்பையில் குடியேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இளைய தளபதியின் துப்பாக்கி சுதந்திர தினத்தில் வெடிக்காது?


தற்போது தல, தளபதி படங்களுக்கு காலம் சரியில்லை போல… எதை தொட்டாலும் பிரச்சினையில் முடிகிறது.

அந்த வகையில் வரும் ஆகஸ்ட் 15 இல் விஜய் இன் துப்பாக்கி வெளியாக போகிறது என்று செய்தி வெளியானது. எனினும் துப்பாக்கி திரைப்படத்தின் 20 சதமான படப்பிடிப்பு வேலைகள் இன்னும் பூர்த்தியாகவில்லையாம், இரண்டு பாடல்கள் உட்பட சில காட்சிகளுக்கான படப்பிடிப்பு இன்னமும் மீதமிருக்கிறதாம். என புதிய செய்தி வெளியகியுள்ளது.

அது மட்டுமல்லாது கள்ளத்துப்பாக்கி படக்குழுவால் எழுப்பப்பட்ட பிரச்சினையும் வரிசையில் காத்திருக்கிறது.

எனவே வரும் ஆகஸ்ட் 15 இல் துப்பாக்கி திரைப்படம் வெளியாவதற்கு சாத்தியமற்ற நிலமையே காணப்படுகிறது.

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி(NVOK) -முடிவை எட்டியது ஏன் ?




ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி 27,2012 அன்று ஆரம்பித்த விஜய் டிவியின் “நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி”நிகழ்ச்சி இந்த வாரத்தோடு முடிவடைகிறது .





சுமார் 4 மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்க பட்ட இந்த நிகழ்ச்சி தொடக்கத்தில் நல்ல வரவேற்பை பெற்றாலும் தொடர்ந்து ஒரே மாதிரியான கேள்விகளால் மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியது


டி.ஆர் .பி ரேட்டிங் சரிய தொடங்கியதும் நடிகர்கள் ,விஜய் டிவி நட்சத்திரங்கள் என நிகழ்ச்சியை வேறு பாதைக்கு கொண்டு சென்றனர்


அதிக பட்சம் 12,50,000 பரிசுத்தொகை பெற பட்டு இருக்கிறது


குறைந்த பட்சம் 0 பெற்றார் +2 இல் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவி ஒருவர்


நட்சத்திரங்கள் பங்கு பெற்ற தொண்டு நிறுவனங்களுக்கு வெற்றி பெற தொகையை வழங்கும் நிகழ்ச்சிகளில் அதிக பட்சம் 6,40,000 பெற்றவுடன் நிகழ்ச்சிக்கான நேரம் முடிந்தது என சூர்யா சொல்லியதை காண முடிந்தது (ஏனோ?)


இந்த வார இறுதியோடு முடியும் இந்த நிகழ்ச்சியில் சத்யராஜ் ,ராதா,குஷ்பூ ,சுகாசினி ஆகியோர் பங்கேற்கின்றனர்


இரட்டையர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என விளம்பரம் போடப் பட்டது .தற்போது விண்ணப்பித்தவர்கள் பங்கேற்காமல் நிகழ்ச்சியை முடிப்பது ஏன் என்று தெரிய வில்லை.


விஜய் டிவி பாணியில் சன் டிவியும் தனது சீரியல் நாயகிகளை வைத்து சன் குடும்பம் நட்சத்திரங்கள் என கையில் ஒரு கோடி நிகழ்ச்சியை ஓட்டி கொண்டிருப்பது தனிக்கதை .அந்த நிகழ்ச்சிக்கும் முடிவுரை விரைவில் வர வாய்ப்பு உண்டு

அடுத்தடுத்த பிரம்மாண்ட படைப்புகளுடனும், புதுஉற்சாகத்துடனும் பி.வி.பி.நிறுவனம்!






தமிழ் சினிமாவில் நாள்தோறும் புதுப்புது தயாரிப்பாளர்கள் வந்த வண்ணம் உள்ளனர். நல்ல படங்களை தர வேண்டும் என்று நோக்கத்தோடு, செலவினம் பற்றி கவலைப்படாமல் தரத்திற்கு முக்கியத்துவம் தரும் எத்தனையோ பெரிய நிறுவனங்கள் உள்ளன.

அந்தவகையில் அதேபாணியில் உலகத்தரத்திற்கு இணையான படங்களை கொடுத்து வருகிறது புதிய நிறுவனமான பி.வி.பி பட நிறுவனம். இந்நிறுவனம் ராஜபாட்டை படத்தை தான் தன் முதல் அறிமுகமாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ரிலீஸ் செய்தது. மேலும் இந்த நிறுவனம் பல நிறுவனங்களுக்கு பண உதவியும் செய்து வருகிறது.

ராஜபாட்டை அடுத்து தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ரிலீஸ் செய்துள்ள படம் நான் ஈ. மகதீரா டைரக்டர் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான இப்படம் இரு மொழியிலும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறது பி.வி.பி. நிறுவனம்.

இதனால் நல்ல கதைகளுக்கும், பிரம்மாண்ட படைப்புகளுக்கும் பின்னால் நாம் இருக்க வேண்டும் என்று பி.வி.பி. நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது. விரைவில் இவர்களது மற்று‌மொரு பிரம்மாண்டமான கமலின், விஸ்வரூபம் படம் வெளியாக இருக்கிறது. அதற்கு அடுத்து செல்வராகவனின் - இரண்டாம் உலகம், பாலாவின் - பரதேசி என்று அடுத்தடுத்த பெரிய படங்களை ரிலீஸ் செய்ய இருக்கிறது. நான் ஈ வெற்றிக்கு அடுத்து, இப்போது விஸ்வரூபம் வெற்றிக்காக பி.வி.பி.யின் ஒட்டுமொத்த டீமும் களத்தில் குதித்து இருக்கிறது.

படப்பிடிப்பு முடிந்தது: விக்ரமின் தாண்டவம் படக்குழுவினருக்கு விருந்து




விக்ரம், அனுஷ்கா ஜோடியாக நடித்த தாண்டவம் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இப்படத்தை விஜய் இயக்கி உள்ளார். பெரும்பகுதி படப்பிடிப்புகள் வெளிநாடுகளில் நடந்தது. 90 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்துள்ளது.




படப்பிடிப்பு முடிந்ததையொட்டி தாண்டவம் படத்தில் நடித்தவர்களுக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் விருந்து அளிக்கப்பட்டது. சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்த விருந்து நடந்தது. இதில் நடிகர் விக்ரம், நடிகை லட்சுமிராய், ஜெகபதிபாபு, எம்.எஸ்.பாஸ்கர், இயக்குனர் விஜய், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். விக்ரம் கேக்கும் வெட்டினார்.

அஜீத் படத்தின் உதவி இயக்குனராகிறார் நயன்தாரா?




விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத், நயன், ஆர்யா, டாப்ஸி நடிக்கும் படம் சத்தமில்லாமல் வளர்ந்து வருகிறது. அஜீத் ரசிகர்களுக்கு அப்படம் பற்றிய தகவல்கள் ஸ்பெஷல் நியூஸ். தமிழ்த் திரை ரசிகர்களுக்கு அப்படத்தின் உதவி இயக்குனர் யார் என்பதும் ஸ்பெஷல் நியூஸ்! 

அவர் வேறு யாரு நம்ம நயன் தான்.  இப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

அதுவும்,  நடிப்பதற்கு முக்கியத்துவம் என்பதை விட உதவி இயக்குனர் வேலைக்கே முக்கியத்துவம் அளிக்கிறாராம். 

இயக்குனர் விஷ்ணுவர்தன் வந்தால் எழுந்து நிற்பது, CLAP BOARD அடிப்பது, படப்பிடிப்பு தளத்திற்கு முதல் ஆளாக வருவது, கடைசி ஆளாக போவது என உதவி இயக்குனர் செய்யும் அனைத்து பணிகளையுமே பார்க்கிறார் நயன்.

பெண் இயக்குனர்கள் பட்டியலில் தனது பெயரையும் முன்னிறுத்த தான் இந்த ஐடியாவாம்.

இப்படத்தில் உதவி இயக்குனர் பட்டியலில் நயன்தாரா பெயர் வரப்போகிறது. இயக்குனர் நயன்தாரா படம் வெளியாகப் போவது எப்போது?

பவர் ஸ்டார் படத்தின் தயாரிப்பாளர் ஆகிறார் சந்தானம்.




நகைச்சுவையையும் நட்பின் பெருமையையும் காட்சிக்கு காட்சி ஆரவாரத்தை அள்ள கூடிய வகையில் படம் ஒன்று தயாராகிறதாம். படத்தின் பெயர் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா!'

இராம. நாராயணனின் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் உடன் இணைந்து, சந்தானத்தின் ஹேண்ட் பேட் ( Hand Pad ) பிலிம்ஸ் இணைந்து இப்படத்தினை தயாரிக்கிறது.

விவேகா பாடல்கள் எழுத, தமன் இசையமைக்கிறார். பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். சந்தானம் நாயகனாக நடிக்க, விசாகா நாயகியாக நடிக்கிறார்.

பவர் ஸ்டார் சீனிவாசன், V.T.V கணேஷ், டான்ஸ் மாஸ்டர் சிவங்கர், 'பட்டிமன்ற' ராஜா, மயில்சாமி, கோவைசரளா, தேவதர்ஷினி மற்றும் பலரை இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள்.

மேலும், இப்படத்தில் முன்னணியில் உள்ள மூன்றெழுத்து நடிகரும் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் துவங்கி காரைக்குடி, சிவகங்கை, தேவகோட்டை, ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

தமிழ்ப் படங்களில் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகும் நான் ஈ வில்லன்.


தற்போது சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாராட்டும் படம் 'நான் ஈ'. நாடு முழுவதும் இப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்து இருக்கிறது.

தெலுங்கில் 'ஈகா', தமிழில் 'நான் ஈ', மலையாளத்தில் 'ஈச்சா' என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது இப்படம். தமிழ் மற்றும் தெலுங்கு பாக்ஸ் ஆபிஸில், அனைத்து படங்களையும் பின்னுக்கு தள்ளிவிட்டு வசூலில் முந்திப் பறக்கிறது 'ஈ'.

வரும் வாரங்களில் இப்படத்தில் வசூல் கூடும் என்பதும் உறுதியாகி இருக்கிறது.

'நான் ஈ' படத்தின் இயக்குனர் ராஜமெளலி " பிரபாஸ், மகேஷ், ரவிதேஜா, வெங்கடேஷ், நாகார்ஜுனா, சித்தார்த், ராணா, விக்ரம், சூர்யா, கார்த்தி, தனுஷ், ரஜினி, இயக்குனர்கள் ராம் கோபால் வர்மா, விநாயக், பூரி ஜெகந்நாத், ஹரிஸ் சங்கர், க்ரிஷ், பிரகாஷ் ராஜ், நந்தினி, லிங்குசாமி, ஷங்கர் சார் என அனைவருமே நான் ஒரு LANDMARK படம் இயக்கி இருப்பதாக பாராட்டினார்கள். 'ஈகா' இன்னும் மேலே மேலே பறந்து கொண்டு இருக்கிறது.

எனது படக்குழுவிற்கு நன்றி. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகினர் அனைவரும் பாராட்டும் போது எனது மனநிலையை யோசித்து பாருங்கள். " என்று தெரிவித்து இருக்கிறார்.

படத்தில் வில்லனாக நடித்த சுதீப் " ரஜினி சார் மற்றும் நாகார்ஜுனா சார் இருவருமே எனக்கு போன் செய்து பாராட்டினார்கள். இந்திய சினிமா பிரபலங்கள் பலரும் எனது பெயரை குறிப்பிட்டு பாராட்டுகிறார்கள். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அனைத்திற்கு இயக்குனர் ராஜமெளலி தான் காரணம் " என்று தெரிவித்து இருக்கிறார்.

சுதீப்பின் நடிப்பை பார்த்து ரஜினி " இந்நாள் வரை நான் தான் சிறந்த வில்லன் என்று நினைத்து இருந்தேன். ஆனால் நீங்கள் என்னை மிஞ்சி விட்டீர்கள் " என்று தெரிவித்து இருக்கிறார்.

சுதீப்பை தமிழ்ப் படங்களில் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்ய பேசி வருகிறார்களாம் கோலிவுட்டில்.

ஷங்கரின் ஐ படத்தின் முக்கிய வேடத்தில் பவர்ஸ்டார் சீனிவாசன்.


டிவி, இணையம், விழாக்கள் என அனைத்திலும் பவர் ஸ்டார் சீனிவாசன் என்றால் ஒரு தனி ஹிட்.

இவர் கலந்து கொண்ட விழாக்கள் அனைத்துமே YOUTUBE இணையத்தில் இவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

சமீபத்தில் இவரது ரசிகர், விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி குறித்து, " ஓடாத படங்களுக்கு எல்லாம் விருதுகள் கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் எங்கள் பவர்ஸ்டார் சீனிவாசன் நடித்த 'லத்திகா' படம் 225 நாட்களைக் கடந்து இருக்கிறது. அவருக்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லை "என்று 'வருத்தப்பட்டு' கூறியிருந்தார்.

ஆனால், தற்போது பவர் ஸ்டார் ரசிகர்கள் அனைவருமே கடும் குஷியில் இருக்கிறார்கள். இயக்குனர் ஷங்கர் இயக்க இருக்கும் ' ஐ ' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் பவர் ஸ்டார் சீனிவாசன்.

' ஐ ' படத்தில் ஓரிரு காட்சிகளில் மட்டுமே தோன்ற இருக்கிறாராம் பவர். சந்தானம், பவர் ஸ்டார் இருவருமே அக்காட்சியில் நடிக்க இருக்கிறார்கள்.