Saturday 15 September 2012

இனிமேலும் இளையராஜா தான்!

'அது ஒரு கனாக்காலம்' படத்திற்கு பிறகு பாலுமகேந்திரா இயக்கி வரும் புதிய படத்திற்கு 'தலைமுறைகள்' என்று பெயரிட்டு இருக்கிறார்.

'தலைமுறைகள்' பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கும் தனது ஆஸ்தான இசையமைப்பாளரான இளையராஜாவுடன் மீண்டும் இணைகிறார் பாலு மகேந்திரா.

இப்படத்தில் முக்கிய வேடத்தில் சசிகுமார் நடிக்கிறார். அவரைத் தவிர பெரும்பாலான பாத்திரங்களுக்கு புதுமுகங்களைத் தேர்வு செய்துள்ளாராம் பாலு மகேந்திரா.

இது குறித்து பாலுமகேந்திரா தனது வலைப்பூவில் "மூடுபனியில் தொடங்கி அது ஒரு கனாக்காலம் வரை எனது எல்லாப் படங்களுக்கும் இளையராஜாதான் இசையமைப்பாளர்.

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், சசிகுமார் தயாரிப்பில் இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் 'தலைமுறைகள்' என்று (தற்காலிகமாக) பெயரிடப்பட்டிருக்கும் எனது 22-வது படத்திற்கும் இளையராஜாதான் இசை. இதை நான் இன்னும் ராஜாவிடம் சொல்லவில்லை.

படத்தை முடித்து அவருக்குப் போட்டுக் காண்பித்தபின் சொல்லலாமென்றிருக்கிறேன். 78-ல் தொடங்கிய எங்கள் உறவு இன்று வரை தொடர்கிறது... 34 இனிய வருடங்கள்! இனியும் அப்படித்தான்.

இன்னும் ஐந்தாறு படங்களாவது செய்துவிட்டுப் போகவேண்டும் என்பது என் எண்ணம். கண்டிப்பாகச் செய்வேன். அவை எல்லாவற்றிற்கும் இசை எனது ராஜா தான். அதில் மாற்றம் கிடையாது," என்று குறிப்பிட்டுள்ளார்.

அனுஷ்காவுடன் நெருக்கமாக இருந்தது நிஜம்தான். ஆர்யா





அனுஷ்காவுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்தது நிஜம்தான். அதில் ஆபாசம் இருக்காது என்றார் ஆர்யா.

செல்வராகவன் இயக்கும் ‘இரண்டாம் உலகம்’ படத்தில் நடிக்கிறார் ஆர்யா. ஜோடி அனுஷ்கா. இப்படத்தில் அனுஷ்காவுடன் நெருக்கமான காட்சிகளில் ஆர்யா நடித்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அவர் கூறியதாவது: செல்வராகவன் இயக்கும் ‘இரண்டாம் உலகம்’ படத்தில் முதன்முறையாக அனுஷ்காவுடன் நடிக்கிறேன்.

ஆக்ஷன், காமெடி மற்றும் சென்டிமென்ட் ஆகிய எல்லா அம்சங்களும் இதில் உள்ளது. படத்தின் மையக் கதை லவ்தான். இரட்டை வேடத்தில் நடிக்கிறேன். இதில் ஒருவேடம் கல்லூரி மாணவன். ஜார்ஜியாவில் இதன் ஷூட்டிங் நடந்தது. இங்கு அடிப்படை வசதிகள் கூட கிடைக்கவில்லை. ரெஸ்ட் ரூம், மின்சாரம், ஏன் படுத்து தூங்குவதற்கு பெட் கூட கிடையாது. இதற்கெல்லாம் உச்சமாக குளிர், அதிகபட்ச வெயில் என கஷ்டப்பட்டோம்.

இப்படத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ஆண்களுக்கு மத்தியில் ஒரே பெண்ணாக அனுஷ்கா சிக்கிக் கொண்டார். இவ்வளவு வசதி பற்றாக்குறை இருந்தும் அவர் ஒருமுறைகூட அதுபற்றி புகார் கூறவில்லை. வேறு யாராவது அந்த இடத்திலிருந்தால் பிரச்னை செய்திருப்பார்கள்.

காதல் கதை என்பதால் இதில் நெருக்கமான காட்சிகள் இருக்கிறது. அனுஷ்காவுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்தது நிஜம்தான். ஆனால் அது ஆபாசமாக இருக்காது. கவித்துவமாக படமாக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு ஆர்யா கூறினார்.

பாடும்போது தவறு செய்ஹ்டால், காதலி சைந்தவியாக இருந்தாலும் திட்டுவேன். ஜி.வி.பிரகாஷ்





காதலியாக இருந்தாலும் சைந்தவி பாடும் போது தவறு செய்தால் கண்டிப்பாக திட்டுவேன் என்று அவரது காதலரும், இசை அமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.

கிரீடம் தொடங்கி தாண்டவம் வரை 25 படங்களுக்கு இசை அமைத்த அனுபவங்கள். சைந்தவியுடனான காதல், பிடித்த இசை அமைப்பாளர் என தன்னுடைய ஆசைகளை பகிர்ந்து கொண்டார் ஜி.வி.பிரகாஷ்குமார்.

சைந்தவியை காதலித்தாலும் வேலை என்று வந்தால் தான் இசைஅமைப்பாளராகத்தான் நடந்து கொள்வேன் என்றார் பிரகாஷ். பாடும்போது தவறு செய்தால் கண்டிப்பாக திட்டுவேன் என்றும் அவர் கூறினார். தான் இசை அமைப்பாளராக இருந்தாலும் தனக்கு பிடித்தது ‘வாகை சூடாவா' படத்தின் இசை அமைப்பாளர் ஜிப்ரானின் இசை பிடிக்கும் என்று கூறினார். பின்னர் தனது 25 படமான தாண்டவம் பற்றி பேச்சு எழுந்தது. அந்த படத்தில் இருந்து அழகான ஒரு பாடலை உருகும் குரலில் ஜி.வி. பிரகாஷ் பாடினார்.

விறுவிறுப்பான, சுவையான கேள்விகளுக்கு புன்னகை மாறாமல் பதிலளித்த ஜி.வி.பிரகாஷ்குமார். தனக்குப் பிடித்த உணவு பிரியாணி என்று கூறினார். இதுவரை அனைத்து வகையான பிரியாணியையும் ருசித்திருப்பதாக சொன்னார் பிரகாஷ்

பிடித்த நடிகர் கார்த்தி, விக்ரம், தனுஷ், என்று கூறிய அவர் பிடித்த இயக்குநர் வசந்தபாலன், ஏ.எல்.விஜய், வெற்றிமாறன் என்றும் கூறினார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சிறந்தவர்கள்தான் என்று சரியாக சமாளித்தார். நான் ஹீரோவாக நடித்தால் எனக்கு பாலிவுட் நடிகைகள்தான் ஜோடியாக நடிக்கவேண்டும் என்று எஸ்கேப் பதிலை கூறிவிட்டு விடை பெற்றார் ஜி.வி. பிரகாஷ்குமார்.

'தாண்டவம்' படத்தில் பார்வையற்றவராக நடித்தது எப்படி?: விக்ரம் பேட்டி





விக்ரம் நடித்த ‘தாண்டவம்’ படம் ரிலீசுக்கு தயாராகிறது இதில் உளவுத்துறை அதிகாரியாகவும், பார்வையற்றவராகவும் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். நாயகிகளாக அனுஷ்கா, எமி நடித்துள்ளனர். விஜய் இயக்கியுள்ளார்.




அமெரிக்காவைச் சேர்ந்த டேனியல்கிஷ் என்ற பார்வையற்றவரின் மேனரிசங்களை கற்று விக்ரம் இதில் நடித்துள்ளார். விக்ரமும் பார்வையற்ற டேனியல்கிஷ்சும் சென்னையில் நிருபர்களை சந்தித்தனர். அப்போது விக்ரம் கூறியதாவது:-

டேனியல் கிஷ் எக்கோ லொகேஷன் முறைப்படி பொருட்களை காதால் அறியும் வித்தை கற்றுள்ளார். ‘தாண்டவம்’ படத்தில் பார்வையற்றவராக நான் நடிப்பதற்கு டேனியல் கிஷ்தான் தூண்டுதலாக இருந்தார். பார்வையற்றவர்களால் தன்னிச்சையாக செயல்பட முடியும் என்பதற்கு அவர் உதாரணம். படத்தில் அதை சொல்லி உள்ளோம்.
பார்வையில்லாத நிலையிலும் ஒவ்வொரு பொருளையும் டேனியல்கிஷ் துல்லியமாக அறிகிறார். எதிரில் போட்டோகிராபர் நிற்பதும் அவருக்கு தெரிகிறது. ‘தாண்டவம்’ படத்திலும் நடித்துள்ளார். டேனியல் மூலம் இந்தியாவில் பார்வையற்றோருக்கு புது வழி பிறந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

டேனியல்கிஷ் கூறும்போது, நான் பிறந்த சில மாதங்களிலேயே இரு கண்களையும் இழந்தேன். எதிரொலியை பயன்படுத்தி காதால் பார்க்கும் வித்தையை கற்றுக்கொண்டேன். உலகம் முழுவதும் அதை பிரபலபடுத்தி வருகிறேன். ‘தாண்டவம்’ படத்திலும் நடித்துள்ளேன் என்றார். இயக்குனர் விஜய், யுடிவி தனஞ்செயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சுந்தரபாண்டியன்-விமர்சனம்



நடிப்பு: எம் சசிகுமார், லட்சுமிமேனன், நரேன், சூரி, தென்னவன், அப்புக்குட்டி, இனிகோ பிரபாகரன், விஜய் சேதுபதி, சவுந்தரராஜா

இசை: என் ஆர் ரகுநந்தன்

ஒளிப்பதிவு: ச பிரேம்குமார்

மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

தயாரிப்பு: எம் சசிகுமார்

எழுத்து-இயக்கம்: எஸ் ஆர் பிரபாகரன்



தன் பலம், தனக்கேற்ற கதையை சரியாக தேர்வு செய்வதில் மீண்டும் ஒரு முறை ஜெயித்திருக்கிறார் சசிகுமார். அந்த வகையில் சுந்தரபாண்டியன் அவருக்கு இன்னொரு சுப்பிரமணியபுரம்.

நண்பர்களுக்குள் நெருக்கமும் சரி, பெரும்பகையும் சரி... அதன் பின்னணி காதல்தான் என்பது அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

கண்டமனூர் பெரிய வீட்டுப் பையன் சசிகுமார். அவரது நண்பர்கள் பரோட்டா சூரி, இனிகோ பிரபாகரன். சசிகுமார் ஒரு பெண்ணைக் காதலிக்க, அந்தப் பெண்ணை அவர் நண்பனும் ரூட் விட, அதே பெண்ணை நண்பனின் நண்பனும் டார்கெட் பண்ண, அதில் சசிகுமார் ஜெயிக்கிறார்.

தோல்வியை ஒரு நண்பன் சகித்துக் கொள்ள, மற்றொருவனோ லட்சுமியிடம் வம்பு செய்கிறான். தொடரும் கைகலப்பில் பஸ்ஸிலிருந்து தள்ளப்பட்டு செத்துப் போகிறான். கொலைப் பழியை சசிகுமார் ஏற்று சிறை சென்று, 15 நாள் காவலுக்குப் பிறகு வெளியில் வர, காதலி கண்டு கொள்ளாமல் போகிறாள்.

இருவரும் இணைந்தார்களா என்பது மறுபாதி. இந்தப் படத்தைப் பொறுத்தவரை அந்த மறுபாதிக் கதைதான் செம த்ரில்லிங் என்பதால், திரையில் பார்த்து சசிகுமார் அண்ட் நண்பர்களுக்கு மரியாதை செய்யுங்கள்!

காதல் அரும்பும் பருவத்தில் இனி இளைஞர்கள் ரொம்ப சூதானமா நடந்துக்கணுமப்பா... என்று சொல்லவைக்கும் ஷார்ப்பான திரைக்கதை. புதிய இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரனை வாழ்த்தி வரவேற்கலாம்.

சசிகுமாரின் முகத்தில் முன்பெல்லாம் எப்போதாவது எட்டிப் பார்க்கும் செயற்கைத்தனம் கூட இதில் இல்லை. ஒரு நடிகராக இந்தப் படத்தில் நூறு சதவீதம் ஜெயித்திருக்கிறார். ஒவ்வொரு கிராமத்திலும் இப்படி ஒரு ரஜினி ரசிகன் நிச்சயம் இருந்தே தீருவான். அதை அழகாக நம்முன் நிறுத்தியிருக்கிறார்.

ரஜினி ரசிகராக அமர்க்களமாக அறிமுகமாவதில் தொடங்கி, நம்மைக் கொலை பண்ண வந்தது நம்ம நண்பனா இருந்தா அவனைக் காட்டிக் கொடுக்கக் கூடாதுடா என முத்திரை வசனம் சொல்வது வரை... சசிகுமார் கொடி பறக்குது!

லட்சுமி மேனனுக்கு இது முதல் படம். ஒப்பனையில்லாத அழகி. பிரகாசமான எதிர்காலம்.

இந்தப் படத்தின் Show stealer என்றால் அது சசிகுமாரின் தந்தை ரகுபதி தேவராக வரும் நரேன். லட்சுமியை பெண் கேட்கும் காட்சியில் அப்படி ஒரு கம்பீரம்.. காட்சிப்படுத்திய விதம், இடம்பெற்ற நடிகர்களின் பங்களிப்பு என எல்லா வகையிலும் அந்த 4 நிமிடக் காட்சி.. .A pure manly show!

தென்னவன் இன்னொரு மிகச் சிறந்த நடிகர். ஒரு பெண்ணைப் பெற்றவனின் ஆத்திரம், அக்கறை, வேதனை, பாசம் அனைத்தையும் நிஜமாகக் காட்டியிருக்கிறார்.

பரோட்டா சூரியின் ராஜ்ஜியம்தான் முதல் பாதியில். அவரது ஒன்லைனர்கள் நிச்சயம் நண்பர்களின் உதடுகளில் இன்னும் கொஞ்ச காலத்துக்கு இருக்கும்.

இனிகோ பிரபாரகரன், விஜய் சேதுபதி, சவுந்தரராஜன், அந்த பாட்டிகள், சித்தி, அத்தைப் பெண் என அத்தனை பேரும் நடிகர்களாகத் தெரியாமல், கிராமத்திலேயே பிறந்து வளர்ந்தவர்களாகத் தெரிகிறார்கள்.

அப்புக்குட்டி கிட்டத்தட்ட வில்லன். கொஞ்சம் வெறுப்பைச் சம்பாதிக்கும் ரோல்தான். நன்றாகவே செய்திருக்கிறார்.




ஒளிப்பதிவு இந்தப் படத்துக்கு பெரிய ப்ளஸ். பாடல் காட்சிகளில் பாலுமகேந்திரா சொன்னதைத்தான் திரும்ப சொல்ல வேண்டும்! அந்த முள்காட்டு பயங்கரத்தை முதுகு தண்டு சில்லிடும் அளவுக்கு சொன்னதில் இயக்குநருக்கு இணையான பங்கு, காமிராக்காரருக்கும்!

படத்தின் ஆகப் பெரிய மைனஸ் இசை. இசையமைப்பாளர் ராஜாவின் ரசிகரோ அல்லது ராஜா இசையால் பெரிதாக பாதிக்கப்பட்டவரோ தெரியவில்லை. காதல் வந்து பொய்யாக, ரெக்கை முளைத்தேன், நெஞ்சுக்குள்ளே... என அவர் போட்ட பாடல்கள் திரையில் வரும்போது, நமக்கு ராஜாவின் ஏதோ மோகம், ஒருகிளி உருகுது, அம்மம்மா (தாலாட்டுப் பாடவா...), பாடல்கள்தான் காதுகளில் கேட்கின்றன!!

இன்ஸ்பிரேஷனுக்கும் இமிடேஷனுக்கும் வித்தியாசம் தெரியாமல் இரண்டாவது படத்திலேயே காணாமல் போகும் இசையமைப்பாளராக ரகுநந்தன் மாறாமலிருக்கக் கடவது!

சசிகுமாரின் பலம், பலவீனம் புரிந்து திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் எஸ் ஆர் பிரபாகரனின், முதல் முயற்சியே சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. வெற்றி தொடர வாழ்த்துகள்!

விஜயுடன் இணையும் சமந்தா-அதிரடி தகவல்கள்


ஷங்கர், மணிரத்னம் என பெரிய இயக்குநர்களின் படங்களில் நடிக்க வந்த வாய்ப்பைக் கூட உதறிவிட்டு, சிகிச்சையிலிருந்த சமந்தாவுக்கு இப்போது மீண்டும் பெரிய வாய்ப்புகள் தேடி வருகின்றன.

அதில் முக்கியமான ஒன்று, இயக்குநர் விஜய் – நடிகர் விஜய் இணையும் புதிய படம்.இந்தப் படத்துக்கான பூர்வாங்க வேலைகளில் இயக்குநர் விஜய் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளார்.

படத்தின் நாயகியாக சமந்தா நடித்தால் நன்றாக இருக்கும் என்று நடிகர் விஜய் விரும்பியதால், அவரது கால்ஷீட்டுக்காக அணுகியுள்ளனர்.சமந்தா இப்போது புதிதாக இரு தெலுங்குப் படங்களை ஒப்புக் கொண்டுள்ளதால், அதற்கேற்ப தேதியை அட்ஜஸ்ட் செய்துவிட்டு சொல்வதாகக் கூறியுள்ளாராம்.

இதுகுறித்து சமீபத்தில் அவர் கூறுகையில், “பெரிய இயக்குநர்களின் வாய்ப்பை இழந்துவிட்டது வருத்தம்தான் என்றாலும், தவிர்க்க முடியாத சூழலில் அந்த முடிவு மேற்கொள்ள வேண்டியிருந்தது. இப்போது மீண்டும் அதற்கு இணையான வாய்ப்புகள் வந்துள்ளன,” என்றார்.

துப்பாக்கியில் இருந்து வந்து புதிய புள்ளட்!!!

விஜய் நடிக்க, கலைப்புலி தாணுவின் பிரமாண்ட தயாரிப்பாய் வளர்ந்து வரும் `துப்பாக்கி’ படம், இதுவரை வந்த ஆக்ஷன் படங்களையெல்லாம் சாதாரணமாக்கி விடும் என்கிறார்கள்.

அதை நிரூபிக்கும் விதத்தில் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியை மட்டும் சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவில் 7 கேமராக்களை கொண்டு படம் பிடித்திருக்கிறார்கள். இந்த பரபரப்பான காட்சியில் விஜய்யுடன் 60 ஸ்டண்ட் கலைஞர்கள் பங்கேற்றிருக்கிறார்கள்.

படம் பற்றி விஜய்யின் ஸ்டேட்மென்ட் இதோ:

“துப்பாக்கி படம் புதிய விஜய்யாக என்னை ரசிகர்களிடம் அறிமுகம் செய்யும். ஏ.ஆர்.முருகதாசின் கதை தான் துப்பாக்கி. எனது கேரக்டர்அந்த துப்பாக்கியில் இருந்து கிளம்பும் தோட்டா. மொத்தத்தில் என் ரசிகர்களுக்கு பிரமாண்ட விருந்து நிச்சயம்” என்கிறார்.

அஜித்துடன் மீண்டும் ஜோடி சேரும் நயன்தாரா!


நயன்தாரா மீண்டும் நடிக்க வந்துள்ளார். விஷ்ணுவர்த்தன் இயக்கும் படத்தில் அஜீத் ஜோடியாக நடிக்கிறார். நாகார்ஜுனாவுடனும் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கிறார்.

பிரபுதேவாவுக்கும், நயன்தாராவுக்கும் திருமணம் முடிவாகி பிறகு ரத்தானது. இருவரும் பிரிந்து விட்டனர். சொந்த வாழ்க்கை அனுபவங்கள் பற்றி நயன்தாரா அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

திரையுலகம் என்மேல் அன்பாக உள்ளது. ரஜினியுடன் ‘சந்திரமுகி’யில் நடித்தேன். அதன்மூலம் நல்ல வரவேற்பு கிடைத்தது. என்னை பற்றி தவறான வதந்திகள் பரப்பப்படுகின்றன. அது என்னை பாதிக்கவில்லை.

நான் சினிமாவில் கடினமாக உழைக்கிறேன். அதிர்ஷ்டமும் என் பக்கம் இருக்கிறது. நான் பாதுகாப்பாகவே இருக்கிறேன். சினிமாவில் தினமும் நிறைய புதுப்புது விஷயங்களை சந்திக்கிறேன். தோல்விகளால் துவண்டு போக மாட்டேன். அனுபவங்கள் மூலம் நிறைய கற்றுக் கொண்டேன்.

கஷ்டகாலங்களில் நண்பர்கள் என்னோடு இருந்தனர். சினிமாவில் நல்ல நடிகை என்ற பெயர் எடுப்பதே எனது நோக்கமாக உள்ளது. அதற்காக உழைக்கிறேன். பத்திரிகைகளில் செய்திகளையும் உலக விஷயங்களையும் விரும்பி படிக்கிறேன். அவதூறுகளையும், கிசுகிசுக்களையும் விரும்புவது இல்லை.

நான் அதிக சம்பளம் வாங்குவதாக பேசப்படுகிறது. அதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை. இளம்பெண்கள் பணத்தை நல்லவிதமாக முதலீடு செய்ய வேண்டும். என்னை பொறுத்தவரை நான் எளிமையாக இருக்கவே விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

விஜயோடு நேருக்கு நேர் மோதும் கார்த்தி


பெரிய முயற்சி இல்லாமலேயே பெரிய ஆளாய் ஆகிவிடும் ராசி கார்த்தியுடையது. பொதுவாக தீபாவளி போன்ற பெரிய விசேஷ நாட்களில் பெரிய நடிகர்களின் படங்கள் மோதும் அல்லது சோலோவாக விளையாடும்.

ஆனால் இந்த தீபாவளிக்கு விஜய்யின் துப்பாக்கி (தலைப்பு உறுதியில்லை!!) யோடு மோதுவது கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன்.

விஜய் - அஜீத், விஜய் - சூர்யா என்பது போய், இப்போது விஜய் - கார்த்தி என்றாகிவிட்டதில் கார்த்தியின் ரசிகர்களுக்கு குஷியோ குஷி.

இந்த தீபாவளிக்கு உறுதியாக வெளியாகும் படங்கள் இந்த இரண்டும்தான். நவம்பர் 13-ம் திகதிக்கு பெருமளவு திரையரங்குகளை இந்தப் படங்களுக்குப் பெறுவதில் கடும்போட்டியே நடந்து வருகிறது.

இதனால் தீபாவளியைக் குறிவைத்துள்ள நீதானே என் பொன்வசந்தம் உள்ளிட்ட பிற படங்களின் ரிலீஸ் தேதி மாறக்கூடும் என்கிறார்கள்.

துப்பாக்கியை கலைப்புலி தாணு தயாரிக்க, ஜெமினி பிலிம்ஸ் விநியோகிக்கிறது. அலெக்ஸ் பாண்டியனை ஸ்டுடியோ கிரீன் தயாரித்து வெளியிடுகிறது.

விருதுக்காக காத்திருக்கும் வேதிகா...!

Vedika waiting for awardதெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்திருந்தாலும், வேதிகா அதிகம் விரும்புவதெல்லாம், தமிழ் திரைப்படங்களைத் தான். தற்போது பாலாவின், "பரதேசி படத்தில் நடிப்பதன் மூலம், திரையுலகின் ஒட்டு மொத்த கவனத்தையும், தன் பக்கம் ஈர்த்துள்ளார், தெலுங்கில், "பாவை என்ற படத்தில்,வேதிகாவின் நடிப்பை பார்த்து வியந்து, தன் படத்தில், அவருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார், பாலா. படத்தில், தனக்கு கனமான கதாபாத்திரம் என்பதால், படப்பிடிப்பின்போது, யாருடனும் அதிகம் பேசாமல், நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினாராம். "பரதேசி படம், தனக்கு தேசிய விருதை பெற்றுத் தரும் என்பது; வேதிகாவின் நம்பிக்கை. அந்த நல்ல நாளுக்காக, அவர் காத்திருக்கிறார்.

சார்மியால் அதிர்ந்த அனுஷ்கா!


Charmi convulsed by Anushka!
தெலுங்கில், நாகார்ஜுனாவுடன், அனுஷ்கா நடித்து வரும் படம், "தமருகம்! ஏற்கனவே, "கிங், ரகடா ஆகிய படங்களில், நாகார்ஜுனாவுடன் இணைந்து நடித்துள்ள சார்மி, இந்தப் படத்திலும், ஒரு பாடலுக்கு அவருடன் ஆடுகிறார். சார்மியுடன் ஆடிய முந்தைய பாடல்கள் சூப்பர் ஹிட் என்பதால், அனுஷ்காவுடன் தான் இணையும் பாடல்களை விட, சார்மியுடன் இணையும் பாடலில் அதிக கவனம் செலுத்தும் நாகார்ஜுனா, அவரை தன்னுடன் இணைத்தே, படத்துக்கான விளம்பரங்களை செய்யவும் திட்டமிட்டுள்ளார். இந்த சேதி அறிந்து அதிர்ந்து போயிருக்கிறார் அனுஷ்கா.

சாருலதா என்ன சொல்கிறது? காத்திருககும் மாற்றான் யூனிட்


Maatran team waiting for charulathaசொந்த கதையில் படமெடுத்தால் பிரச்னையில்லை. இப்படி ஊரான் கதையில் படமாக்கினால் இதுதான் பிரச்னை என்கிற வகையில் சாருலதா, மாற்றான் ஆகிய இரண்டு படங்களுமே ஒட்டிப்பிறந்த இரட்டையர் கதைகளில் தயாராகி, தற்போது ஒரே நேரத்தில் திரைக்கு வரவும் துடித்துக்கொண்டு நிற்கின்றனர். இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே சாயல் கதை என்பதால் யார் முன்கூட்டி படத்தை வெளியிடுவது என்பதில் போட்டி ஏற்பட்டது. ஆனால் அதில் இப்போது முந்திக்கொண்டு திரைக்கு வர தயார் நிலையில் இருக்கிறது ப்ரியாமணி நடித்த சாருலதா.

இந்த படம் ஜப்பானிய மொழியில் வெளியான ஒரு படத்தை தழுவிதான் எடுக்கப்பட்டது என்று சம்பந்தப்பட்டவர்களே ஒப்புக்கொண்டு விட்டனர். அதோடு மாற்றானை முந்திக்கொள்ள வேண்டும் என்று வேகவேகமாக படமாக்கி இப்போது ரிலீஸ் தேதியும் குறித்து விட்டனர். இந்த நேரத்தில், மாற்றான் யூனிட் அமைதி காத்து வருகிறது. சாருலதா போன்றே தங்களது மாற்றான் கதைக்களமும் இருந்தால், சில திருத்தங்களை செய்து படத்தை வெளியிடலாம் என்பதே இந்த அமைதியான காத்திருப்புக்கு காரணமாம்.

சிம்புவின் காதல் வசியம்

Simbus love Mesmerismவாலு பையனுக்கும், வாலு பொண்ணுக்கும் இடையே ஏற்படும் காதல் தான், "வாலு படத்தின் கதை. இந்தப் படத்தில், சிம்பு-ஹன்சிகாவின் காதலுக்கு தூது செல்லும் வேடத்தில், சந்தானம் நடித்துள்ளார். படம் குறித்து, இயக்குனர் விஜய் சந்தரிடம் கேட்டபோது, "சிம்பு இதுவரை நடித்த படங்களிலேயே, "வாலு வித்தியாசமான படம். குறிப்பாக, பெண்களை காதல் வசியம் செய்வது எப்படி என்பதை, இந்தப் படம் பார்த்த பின், ரசிகர்கள் தெரிந்து கொள்ளலாம் எனச் சொல்லும் விஜய்சந்தர், "இந்தப் படத்தில், பெற்றோருக்கும் மெசேஜ் உள்ளது என்கிறார்.

பிந்து மாதவியை வாழ்த்திய விஜய்


vijay congrates bindu madhavi"கழுகு படம், கோலிவுட்டில், பிந்துமாதவியின் மவுசை அதிகப்படுத்தி உள்ளது. தற்போது, "சட்டம் ஒரு இருட்டறை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, இருவர் உள்ளம் போன்ற பல படங்களை கைப்பற்றி, வேகமாக வளர்ந்து வருகிறார் பிந்து. "சட்டம் ஒரு இருட்டறை படத்தில், பிந்து மாதவியின் நடிப்பு, நடனம் சம்பந்தப்பட்ட சில காட்சிகளைப் பார்த்த விஜய், சிறப்பாக நடித்திருப்பதாக பாராட்டியதோடு, இந்தப் படத்திற்கு பிறகு, முன்னணி நடிகையாகி விடுவாய் என, வாழ்த்தி உள்ளார். இதனால், மிகவும் உற்சாகத்தில் இருக்கிறார் பிந்துமாதவி.

நானும் ரஜினி ரசிகன்தான்- சிவகார்த்திகேயன்


I am also rajini fan says sivakarthikeyanரஜினி ரசிகர்கள் என்று சொல்லிக்கொண்டு சினிமாவிற்குள் வந்த சில நடிகர்கள் அவரை மாதிரியே நடிக்க முயற்சித்து எடுபடாமல் ரூட்டை மாற்றிக்கொண்டார்கள். இன்னும் சிலர், அவரது படங்களை ரீமேக் செய்து நடிப்பது. அவரது படத்தலைப்புகளை தனது படங்களுக்கு வைத்துக்கொள்வதுமாக கோலிவுட்டில் வண்டியோட்டி வருகிறார்கள்.

இந்த பட்டியலில் மெரினா பட நாயகனான சிவகார்த்திகேயனும் சேர்ந்துள்ளார். நான் சிறுவயதில் இருந்தே ரஜினியின் தீவிர ரசிகன். ராஜா சின்ன ரோஜா படத்தில் ஒரு பாடல் காட்சியில் பல காஸ்டியூம்ஸ் அணிந்து அவர் நடனமாடியிருப்பார். அதைப்பார்த்து, நானும் அந்த பாட்டை கேட்டபடி ஒவ்வொரு டிரஸ்சாக மாற்றியடி நடமாடுவேன். அதனால் எனது வீட்டில் இருப்பவர்கள் என்னை சின்ன ரஜினி என்றே அழைப்பார்கள். ஆக நான் ரஜினி சார் படங்களைப்பார்த்துதான் நடிப்பு கற்றுக்கொண்டேன்.

அதற்காக, அவரை மாதிரி நடிக்க வேண்டும் என்று நான் முயற்சித்ததில்லை. அது முடியாது என்பதால், எனக்கென்று ஒரு பாணியை ஏற்படுத்த முயற்சித்து வருகிறேன் என்று சொல்லும் சிவகார்த்திகேயன், ரஜினி படத்தில் ஒரு சிறிய வேடத்தில் முகம் காட்ட வாய்ப்பு கிடைத்தாலும் அதை பெரும் பாக்கியமாக கருதி நடிப்பேன் என்கிறார்.

காமெடி நடிகர் லூஸ் மோகன் மரணம்!


Comedy actor loose mohan passed awayகாமெடி நடிகர் லூஸ் மோகன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 84. சென்னையை பூர்விகமாக கொண்ட லூஸ் மோகன் சினிமா மீதுள்ள ஆர்வத்தால் பி.யூ.சின்னப்பாவின் நாடக குரூப்பில் சேர்ந்து நடித்து வந்தார். பின்னர் ஹரிச்சந்திரா என்ற படம்மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கினார். ‌ஆரம்பத்தில் மோகன் என்ற பெயரிலேயே லூஸ் மோகன் நடித்து வந்தார். லூஸ் - டைட் என்ற படத்தில் பிரபலமானதைதொடர்ந்து மோகன் லூஸ் மோகன் எனும் அடைமொழியோடு நடித்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி முதல் ரஜினி, கமல் வரை முன்னணி நடிகர்கள் பலரது படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் லூஸ் மோகன். சென்னையிலேயே மோகன் பிறந்ததால், சென்னை பாஷை இவருக்கு மிகவும் சாதரணம். இந்த பாஷையை பேச இவருக்கு நிகர் வேறு யாரும் கிடையாது.

இதுவரை 1000-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள லூஸ் மோகன் மயிலாப்பூரில் உள்ள தனது சொந்த வீட்டில் மகன் கார்த்திகேயனுடன் வசித்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து அவ்வப்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இந்நிலையில் லூஸ் மோகனுக்கு இன்று காலை உடல்நிலை மிகவும் மோசமானது. இதனையடுத்து அவர் உடனடியாக ஒரு ஆட்டோவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.

மறைந்த லூஸ் மோகனுக்கு பச்சையம்மாள் என்ற மனைவி இருந்தார். அவரும் கடந்த 2004-ம் ஆண்டு இறந்துவிட்டார். இவருக்கு கார்த்திகேயன் என்ற மகனும், 3 மகளும் உள்ளனர். சமீபத்தில் லூஸ் மோகன், தனது மகன் மற்றும் மருமகள் என்னை சரியாக கவனித்து கொள்வது இல்லை. பணத்திற்கு குறைவில்லை என்றாலும், "சாப்பிட்டியா, நல்லா இருக்கியா எனக் கேட்க கூட யாரும் இல்லை. மகன் இருந்தும் அனாதையாக உள்ளேன். அவர் என்னை கவனித்துக் கொண்டால் போதும். இதற்கு, போலீசார் தான் உதவி செய்ய வேண்டும் என்று போலீஸில் புகார் கொடுத்தார். பின்னர் தனது மகன் தன்னை கவனிப்பதாக கூறியதை அடுத்து தனது புகாரை வாபஸ் பெற்று கொண்டார்.

மறைந்த லூஸ் மோகனின் உடல், அஞ்சலிக்காக மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. மாலை அவரது இறுதிசடங்கு நடைபெற இருக்கிறது.