Friday 7 September 2012

வந்தார்யா ஆர்யா!

'இரண்டாம் உலகம்' படத்திற்காக ஜார்ஜியா நாட்டிற்கு சென்றிருந்த ஆர்யா சென்னை திரும்பி இருப்பது பல்வேறு தயாரிப்பாளர்களையும் சந்தோஷத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

அஜீத் - விஷ்ணுவர்தன் இணையும் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்ற போது ஆர்யா சம்பந்தப்பட்ட சில காட்சிகளை படமாக்கினார்கள். அதற்கு பிறகு ஆர்யா 'இரண்டாம் உலகம்' படத்திற்காக ஜார்ஜியா நாட்டிற்கு சென்று விட்டார்.

தற்போது ஆர்யா திரும்பி இருப்பதால், சென்னையில் அஜீத் - ஆர்யா சம்பந்தப்பட்ட இதர காட்சிகளை காட்சிப்படுத்த திட்டமிட்டு இருக்கிறார் விஷ்ணுவர்தன். அதுமட்டுமன்றி ஆர்யா - டாப்ஸி சம்பந்தப்பட்ட காட்சிகளையும் எடுக்க திட்டமிட்டு இருக்கிறார்.

சென்னையில் தொடங்க இருக்கும் படப்பிடிப்பில் அஜீத், நயன், ஆர்யா, டாப்ஸி இவர்களது மொத்த காட்சிகளையும் முடித்து விடலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார் விஷ்ணுவர்தன். இப்படத்தின் பெயர் 'ஜெய்தேவ்', 'சுராங்கனி' என்ற தலைப்பில் வெளியாகி இருக்கும் போஸ்டர்கள் எதுவுமே அதிகாரபூர்வமானது இல்லையாம்.

விரைவில் படத்தின் FIRST LOOK போஸ்டர் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார் விஷ்ணுவர்தன். இதற்கான போட்டோ ஷுட் விரைவில் நடைபெற இருக்கிறது.

இப்படத்தின் ஹைலைட் அஜீத் - ஆர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் தான் என்கிறது படக்குழு.

மொதல்ல விஜய்.. இப்ப சூர்யா!

சல்மான்கான் - பிரபுதேவா இணைந்த WANTED திரைப்படத்திற்கு பிறகு வெளியான அனைத்து சல்மான்கான் படங்களுமே 100 கோடியை தாண்டி வசூல் செய்து இருக்கிறது.

WANTED திரைப்படம் தெலுங்கில் வெளியான 'போக்கிரி' படத்தின் ரீமேக். தமிழ் ரீமேக்கில் விஜய் நடித்து பிரபுதேவா இயக்கி இருந்தார். அப்படமும் பெரும் வெற்றி பெற்றது.

தற்போது மீண்டும் சல்மான்கான் - பிரபுதேவா இணைந்து படம் பண்ண இருக்கிறார்கள். இப்படத்தினை TIPS நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

TIPS நிறுவனம் ஏற்கனவே சூர்யா நடிக்க கே.வி.ஆனந்த் இயக்கிய 'அயன்' படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி இருக்கிறது. ஆகவே இருவரும் இணையும் படம் 'அயன்' ரீமேக் தான் என்கிறார்கள்.

விஜய் படத்தின் ரீமேக்கால், இந்தியில் காலூன்றிய பிரபுதேவா, சூர்யா பட ரீமேக்கால் அடுத்த கட்டத்துக்கு செல்வார் என நம்பப்படுகிறது.

'அயன்' ரீமேக்கை 2013-ம் ஆண்டு தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். 'அயன்' ஏற்கனவே தமிழில் வசூலை அள்ளியது. இந்தி ரீமேக்கில் சல்மான்கான் நடிக்க இருப்பதால் கண்டிப்பாக வெற்றிப்படம் தான் என்று நம்புகிறது பாலிவுட் வட்டாரம்.

தற்போது க்ரிஷ் குமார், ஸ்ருதிஹாசன் ஆகியோரை வைத்து 'உனக்கும் எனக்கும்' படத்தின் இந்தி ரீமேக்கை இயக்கி வரும் பிரபுதேவா, அப்படத்தினை தொடர்ந்து 'அயன்' ரீமேக்கில் பணியாற்ற இருக்கிறார்.

'கொசுறு' கபாலி : " இந்திக்கு ஒரு 'ஜெயம்' ராஜா கிடைச்சுட்டாரு டோய்! "

செப்டம்பர் 10.. 'துப்பாக்கி'யான்னு தெரியும்!

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'துப்பாக்கி' தீபாவளி வெளிவரும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது டிவிட்டர் இணையத்தில் இதனை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

விஜய் நீண்ட நாட்கள் கழித்து இப்படத்தில் ஒரு பாடலை பாடி இருக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

பிரமாண்டமாக தயாராகும் இப்படத்தினை வாங்கி வெளியிட இருக்கிறது ஜெமினி நிறுவனம். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி இருக்கும் பாடல்களை விரைவில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இப்படத்தின் தலைப்பு மீதான வழக்கு செப்டம்பர் 10 நீதிமன்றத்தில் வர இருக்கிறது. அன்று வழக்கு முடிவு பெறவில்லை என்றால் ஏ.ஆர்.முருகதாஸ் படத்திற்கு வேறு தலைப்பு வைத்து விடலாம் என்று முடிவு செய்து இருக்கிறாராம்.

'தீபாவளி முதல் சரவெடி' என்று டிவிட்டர் இணையத்தில் தெரிவித்து இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். 'துப்பாக்கி' தலைப்பு இல்லையென்றால் படத்தலைப்பு 'சரவெடி'யா?

'கொசுறு' கபாலி : "படத்துக்கு கதை முடிவு பண்றதை விட, டைட்டில் முடிவு பண்ணறதே பெரிய வேலையா இருக்கும் போல! "

போடா போடியின் ஒரு பாட்டு ரிலீஸ்

Single song released in poda podiசிம்புவும், சரத்குமார் மகள் வரலட்சுமியும் இணைந்து நடிக்கும் படம் போடா போடி. கன்னியமான இந்த தலைப்புள்ள படம் கடந்த சில வருடங்களாகவே கிடப்பில் கிடந்தது. சிம்பு இந்தப் படத்தை விட்டுவிட்டு வேறு படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். பாவம் சரத்குமார் மகள் சிம்புவுக்காக வெயிட் பண்ணியே நொந்து போனார். வெறுத்துப்போன வரலட்சுமி தந்தையிடம் சொல்லி வருத்தப்பட. சரத்குமார் சிம்புவிடம் கொஞ்சம் இன்னொரு முகம் காட்ட இப்போதுதான் போடா போடி பக்கம் வந்திருக்கிறார் சிம்பு.

படத்தின் பெரும்பகுதி வெளிநாடுகளில்தான் படமாக்கப்பட்டுள்ளது. விக்னேஷ்சிவன் என்ற புதுமுகம் இயக்குகிறார். தரண்குமார் என்ற புதுமுகம் இசை அமைக்கிறார். ஒருவழியாக படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்திருக்கிறார்கள். அதுவும் ஒரு பாடல்தான் இப்போது வெளியிட்டிருக்கிறார்கள். படத்தில் "லவ் பண்ணலாமா? வேண்டாமா" என்ற தத்துவ பாடல் ஒன்று இடம் பெறுகிறது. இந்தப் பாடலை இப்போது வெளியிட்டிருக்கிறார்கள். இன்னும் சிறிது நாட்கள் சென்ற பின் மொத்த பாடலையும் வெளியிடுவார்களாம்.

ஷேர் ஆட்டோ டிரைவர் ஆனார் முருகதாஸ் தம்பி


Murugadosss brother turn as share auto driverசினிமாவில் நடிக்க வேண்டும் என்று வந்தவர்தான் ஏ.ஆர்.முருகதாஸ். சந்தர்ப்பவசத்தால் இயக்குனராகிவிட்டார். அதனால் தன் தம்பி திலீபனை நடிகராக்குவது என்று முடிவு செய்தார். தன் உதவியாளர் சரவணன் இயக்கிய எங்கேயும் எப்போதும் படத்திலேயே தம்பியை அறிமுகப்படுத்த நினைத்தார். அப்போது சரியாக அமையவில்லை. இப்போது இன்னொரு உதவியாளர் பி.கின்ஸ்லின் என்பவரை இயக்குனராக்கி தம்பியை ஹீரோவாக்கி விட்டார். படத்தின் பெயர் வத்திக்குச்சி. ஹீரோயின் அஞ்சலி.

சென்னை புறநகரிலிருந்து சென்னைக்கு வரும் மக்களின் கதை. அட்டக்கத்தி சாயலில் இன்னொரு படம். இதில் திலீபன் ஷேர் ஆட்டோ டிரைவர். அதில் தினசரி பயணம் செய்பவர் அஞ்சலி, இருவருக்கும் காதல் அரும்புகிறது. அதில் பயணம் செய்கிற இன்னொருவருக்கும் அஞ்சலி மீது காதல். வழக்கம்போல திமிரான பொண்ணு அஞ்சலி. அவர் யாருடன் லவ்ஸ் பண்ணுகிறார் என்பது கதை. அண்ணன் ஜெயிச்ச மாதிரி தம்புயும் ஜெயிப்பாரான்னு பொருத்திருந்து பார்க்கலாம்.

சூட்டிங்கில் விபத்து! விஷால் தலையில் காயம்!!


Vishal injured at shooting spotமத கஜ ராஜா படத்திற்காக சண்டைக்காட்சி படமாக்கப்பட்டபோது நடிகர் விஷாலுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. டைரக்டர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் மதகஜ ராஜா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் சூட்டிங் சென்னையில் நடந்து வருகிறது. ஹீரோ விஷால், வில்லன் ஆட்களுடன் சண்டை போடுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டபோது, விஷால் தடுமாறி தலை குப்புற விழுந்தார். இதனால் படப்பிடிப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதில் விஷாலுக்கு தலையில் பலத்த அடி ஏற்பட்டது. உடனடியாக அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விஷாலுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், பயப்படும்படி எதுவும் இல்லை; தலையில் காயம் ஏற்பட்டிருக்கிறது. நன்றாக ஓய்வெடுத்தால் எல்லாம் சரியாகி விடும், என்று தெரிவித்தனர். இதையடுத்து மதகஜ ராஜா படத்தின் சூட்டிங் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது விஷால் ஓய்வு எடுத்து வருகிறார்.

ஸ்டார்ட் - கட் சொல்ல ரெடியாகும் விஷால்


Vishals to turn soon as directorவிழுந்து கிடக்கும், தன் மார்க்கெட்டை தூக்கி நிறுத்துவதற்காக, சொந்த தயாரிப்பில், "சமர் படத்தை எடுத்து வருகிறார் விஷால். இதற்கு, "சமரன் என்று தான் பெயர் வைத்திருந்தனர். "சமரன் என்றால், போர் வீரன் எனப் பொருள். கதை, தமிழக வனப் பகுதிகளில் துவங்கி, தாய்லாந்து வரை செல்கிறது. இதில், விஷாலுக்கு ஜோடிகளாக திரிஷாவும், சுனைனாவும் நடிக்கின்றனர். "தீராத விளையாட்டுப் பிள்ளை யில் விஷாலை இயக்கிய, திரு தான், இப்படத்தையும் இயக்குகிறார். "சமர் படத்தை முடித்த பிறகு, இயக்குனர் அவதாரம் எடுத்து, "ஸ்டார்ட்-கட் சொல்ல ரெடியாகி கொண்டிருக்கிறார் விஷால். நடிக்க வருவதற்கு முன், இயக்குனராகும் கனவோடு, நடிகர் அர்ஜுன் இயக்கிய படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்து செய்த விஷாலுக்கு, படம் இயக்க வேண்டுமென்பது, வெகுநாள் கனவு. அதற்காக, சரியான தருணத்தை எதிர்பாத்து காத்திருக்கிறார்.

முதல் மூன்று நாளில் ரூ.1.60 கோடி வசூலித்த முகமூடி!

Mugamoodi collected Rs.1.60 crore in first 3 daysநடிகர் ஜீவாவின் முகமூடி படம் திரைக்கு வந்த முதல் மூன்று நாட்களில் ரூ.1.60 கோடி வசூலித்துள்ளது. டைரக்டர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் ஜீவா நடித்திருக்கும் படம் முகமூடி. இந்த படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்மறை விமர்சனங்கள்தான் வந்தன. ஆனாலும் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. படம் குறித்து நல்ல எதிர்ப்பார்ப்பு இருந்ததால், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் கிட்டத்தட்ட ஹவுஸ்புல்லாக ஓடியிருக்கிறது. சென்னையில் மட்டும் 25 அரங்குகளில் இந்தப்படம் வெளியாகியுள்ளது. புறநகர்களிலும் கணிசமான அரங்குகளில் வெளியாகியுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை முதல் மூன்று நாளில் விநியோகஸ்தர்களின் பங்காக ரூ 90 லட்சம் கிடைத்துள்ளது. இரண்டாம் கட்ட நகரங்கள் மற்றும் கிராமம் சார்ந்த ஒற்றைத் திரையரங்குகளில் நான்காம் நாளிலிருந்து கூட்டம் குறையத் தொடங்கினாலும், பாதி அரங்காவது நிறைவது வெளியீட்டாளர்களுக்கு ஆறுதல் தந்துள்ளது. போட்டிக்கு வேறு படம் இல்லாததால், இன்னும் ஒரு வாரத்துக்கு இந்தப் படத்துக்கு வசூல் ஓரளவு நன்றாகவே இருக்கும் என தியேட்டர் அதிபர்களும், படக்குழுவினரும் நம்புகிறார்கள்.

ராணாவுடன் நிச்சயதார்த்தமா? த்ரிஷா மறுப்பு!


Trisha denies engagement with Ranaராணாவுடன் நிச்சயதார்த்தம் நடந்ததாக வெளியான செய்தியை நடிகை த்ரிஷா மறுத்துள்ளார். திரிஷாவுக்கும், தெலுங்கு நடிகர் ராணாவுக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்ததாக செய்திகள் பரவின. இருவரும் காதலிப்பதாக ஏற்கனவே கிசு கிசுக்கள் வந்தன. பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக பங்கேற்றார்கள். திரிஷா ஐதராபாத் செல்லும் போதெல்லாம் ராணாவை சந்தித்தார். இருவரும் விருந்துகளில் கலந்து கொண்டு சேர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.

சமீபத்தில் மும்பை பத்திரிகையொன்றுக்கு கட்டிப்பிடித்தபடி போஸ் கொடுத்தார்கள். இதுபற்றி திரிஷாவிடம் கேட்டபோது இருவரும் நண்பர்களாக பழகுவதாக சொன்னார். எங்களுக்குள் காதல் இல்லை என்றும் மறுத்தார். ஆனால் இரு தினங்களுக்கு முன் திரிஷாவுக்கும், ராணாவுக்கும் ஐதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்பட்டது. அப்போது திரிஷாவுக்கு ராணா பிளாட்டினம் மோதிரத்தை விரலில் அணிவித்தார் என்றும் நகை பெட்டி ஒன்றையும் திரிஷா கையில் கொடுத்தார் என்றும், இதில் இரு வீட்டு பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதனை த்ரிஷா மறுத்துள்ளார்.

இதுகுறித்து திரிஷா அளித்துள்ள பேட்டியில், வழக்கம்போலவே மறுத்துள்ளார். எனக்கும், ராணாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாக சொல்லப்படுவது வதந்தி. ராணா எனக்கு நல்ல நண்பர். அவரை திருமணம் செய்து கொள்ளமாட்டேன், என்று கூறியிருக்கிறார் த்ரிஷா.

மலையாளத்தில் டப் ஆகிறது அலெக்ஸ் பாண்டியன்!

Karthis Alex Pandiyan to be dubbed in Malayalamகார்த்தி, அனுஷ்கா ஜோடியாக நடிக்கும் படம் அலெக்ஸ் பாண்டியன் படத்தை மலையாளத்தில் டப்பிங் செய்து வெளியிட முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் மலையாளத்திலும் கால்பதிக்கிறார் கார்த்தி. ஏற்கனவே தமிழ் படங்கள் கேரளாவில் நேரடியாகவே ரிலீஸ் செய்யப்பட்டு வந்தன. தெலுங்கில் பல படங்கள் நேரடியாகவும், டப்பிங் செய்தும் வெளியிடப்பட்டு வந்தன.

கார்த்தியின் ‘ஆயிரத்தில் ஒருவன், சகுனி படங்கள் ஆந்திராவில் ரிலீஸ் செய்யப்பட்டன. கேரள ரசிகர்கள் அவர்கள் மொழியிலேயே முதல் தடவையாக கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன் படத்தை பார்க்க உள்ளனர். அலெக்ஸ் பாண்டியன் படத்தை டைரக்டர் சுராஜ் இயக்கி வருகிறார். மலையாள டப்பிங் குறித்து படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறும்போது, அலெக்ஸ் பாண்டியன் படத்தை மலையாளத்தில் டப்பிங் செய்து வெளியிட திட்டமிட்டு இருப்பது உண்மைதான். தெலுங்கிலும் பேட் பாய் பெயரில் வெளியாகிறது. மலையாள படத்துக்கு இன்னும் தலைப்பு முடிவு செய்யவில்லை, என்றார்.

முத்தம் கொடுப்பது தப்பில்லை காஜல் அகர்வால்


Ok to kiss Kajal Agarwal!
"துப்பாக்கி மற்றும் "மாற்றான் படங்களில் நடித்துள்ள காஜல் அகர்வால், இந்தி படம் ஒன்றில், உதட்டு முத்தக் காட்சியில் நடித்து, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்தி சினிமாவைப் பொறுத்தவரை, முத்தக் காட்சி எல்லாம் சாதாரண விஷயம். முத்தம் கொடுப்பது, தப்பான விஷயம் ஒன்றும் இல்லையே! காட்சிக்கு அவசியம் என, டைரக்டர் சொன்னதால், நடித்துக் கொடுத்தேன் என, சொல்லும் காஜல், "கவர்ச்சி என்றபெயரில், ஆபாசமாக நடிக்கச் சொன்னால், அது எந்த மொழிப்படமாக இருந்தாலும், ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிறார்.

கும்கி படத்தை வாங்கியது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்


Kumki film acquired by Studio Green
பிரபு சாலமன் இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற மைனா படத்தை அடுத்து விக்ரம் பிரபு, லக்ஷ்மி மேனன் நடித்து உள்ள கும்கி படத்தை திருப்தி பிரதர்ஸ் சார்பில் லிங்குசாமி தயாரித்து இருந்தார். இப்போது இந்த படம் முடிவடைந்து மற்ற பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தை அதிக விலை கொடுத்து வாங்கி உள்ளது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம். இந்த நிறுவனம் கடைசியாக வெளியிட்ட படம் புது முகங்கள் நடித்த அட்ட கத்தி படமாகும். இதை அடுத்து கும்கி ரிலீஸ் எப்போது செய்யலாம் என்று பேச்சு வார்தையில் உள்ளனர். மேலும் அடுத்த மாதம் இறுதியில் மிக பிரமாண்ட முறையில் ரிலீஸ் செய்ய ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

தமிழில் "டப்பிங் பேசும் சமந்தா!


Tamil
"உடம்பில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்ததால், சில மாதங்களாக சிகிச்சை பெற்றேன். அதனால் தான், மணிரத்னம், ஷங்கர் படங்களில் இருந்து கூட வெளியேறினேன், என, சொல்லும் சமந்தா, தற்போது, ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். மேலும், கவுதம்மேனன் இயக்கத்தில், ஜீவாவுக்கு ஜோடியாக நடித்துள்ள, "நீ தானே என் பொன் வசந்தம் படத்தில், தனக்குத் தானே "டப்பிங் பேசி வருகிறார் சமந்தா.
தமிழில், அவர் "டப்பிங் பேசும் முதல் படம் இது.

விஜய் படத்தில் அமலா பால்!


Amala Paul in Vijay film
நடிகர் விஜய்யும், டைரக்டர் ஏ.எல்.விஜய்யும், அடுத்து படம் பண்ணப் போவது உறுதியாகி விட்டது. இதனால், அடுத்தகட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளார் டைரக்டர் விஜய். இந்த நிலையில், அந்தப் படத்தில் விஜய்யுடன், டூயட் பாடப் போவது யார் என்பது, பரிசீலிக்கப்பட்டு வருவதால், அமலாபால் உள்ளிட்ட சில முன்வரிசை நடிகைகள், போட்டா போட்டியில் குதித்துள்ளனர். இதில், "தெய்வத் திருமகள் படத்தில், விஜய் இயக்கத்தில் நடித்த அமலாபால், "தாண்டவம் படத்தைப் போன்று, இந்த முறையும் கோட்டை விட்டு விடக் கூடாது என, வாய்ப்பை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறார்.

மம்முட்டியின் மனமும்...! ஹீரோக்களின் குணமும்...!!


Mammootty is Real hero: he helps to sivakasi fire accidentகும்பகோணத்தில் ஒரு தனியார் பள்ளியில் தீவிபத்து ஏற்பட்டு 90க்கும் அதிகமான குழந்தைகள் பலியானார்கள். விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட ஹீரோக்கள் ஓடிப்போய் அஞ்சலி செலுத்தி மாலை மாலையாய் கண்ணீர் விட்டார்கள். ஆளாளுக்கு லட்சக் கணக்கில் நிதி உதவி அளிப்பதாக அறிக்கை விட்டார்கள். ஆனால் எல்லாமே வெறும் வேஷமாகிப்போனது ஒரு சில நடிகர்கள் தவிர மற்ற யாருமே பணம் அனுப்பவில்லை. சிலர் கொடுத்த காசோலைகள் திரும்பி வந்தது. திரைக்கு வெளியேயும் தங்களை சிறந்த நடிகர்களாக நிரூபித்தார்கள் ஹீரோக்கள்.

இப்போது சிவாகாசி பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 38 பேர் இறந்துள்ளனர். நிதி உதவி அளிக்க வேண்டாம். அல்லது அளிப்பதாக வெட்டி பந்தா அறிக்கை விட வேண்டாம். குறைந்த பட்சம் அனுதாப செய்தியாவது வெளியிட்டார்களா என்றால் இல்லை. எங்கே பணம் கொடுக்க வேண்டியது வருமோ என்று யாரும் வாய் திறக்கவில்லை. "என்னை வளர்த்து ஆளாக்கிய மக்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன்" என்று புலம்பிய சூப்பர் ஸ்டார்கூட இப்படி ஒரு சம்பவம் நடந்ததை கண்டுகொள்ள வில்லை. சிவகாசி என்ற படத்தில் நடித்த விஜய்க்கு, காஜல் அகர்வாலோடு டூயட் பாடுவதற்குதான் நேரம் இருக்கிறது. அவரது கவலை இப்போது அவரது துப்பாக்கி தீபாவளிக்கு வெடிக்குமா வெடிக்காதா என்பது பற்றித்தானே தவிர சிவாகாசி பட்டாசை பற்றியும், அங்கே வெடித்து சிதறிய அப்பாவி தொழிலாளர்களையும் பற்றி அல்ல.

ஆனால் இந்த ஹீரோக்களின் முகத்தில் அடித்த மாதிரி ஒரு காரியத்தைச் செய்திருக்கிறார் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி. யாரும் கேட்காமல், யாரும் கோரிக்கை வைக்காமல் தனது மருந்து கம்பெனியில் இருந்து சுமார் 35 லட்சம் மதிப்புள்ள தீக்காய மருந்துகளை சிவகாசிக்கு அனுப்பி வைத்திருக்கிறார் மம்முட்டி.

தீகாயங்களுக்கான மருந்து தயாரிப்பதில் மம்முட்டிக்கு சொந்தமான பதஞ்சலி ஆயுர்வேத மருந்து தொழிற்சாலை புகழ்பெற்றது. அக்னிஜித் என்ற மருந்து ரொம்பவே பிரபலம். இந்த மருத்துவமனைக்கு சிவகாசி மருத்துவமனையிலிருந்து அக்ஜினித் மருந்து கேட்டு 35 லட்சம் ரூபாய்கு ஆர்டர் கொடுத்தது. இதைக் கேள்விப்பட்ட மம்முட்டி சிவாகாசிக்கு தேவையான அனைத்து தீக்காய மருந்துகளையும் இலவசமா அனுப்பி வைக்கும்படியும். இன்னும் மருந்துகள் எவ்வளவு தேவைப்படுகிறதோ அவை அனைத்தையும் அனுப்பி வைக்கும்படியும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழ் ஹீரோக்களே சினிமாவில் மட்டுமல்ல... நிஜத்திலும் ஹீரோவாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

Monday 3 September 2012

கோச்சடையான்.. அப்டேட்ஸ் !

      'கோச்சடையான் ' படம் எப்போதும் வரும், இசை வெளியீடு எப்போது நடைபெற இருக்கிறது, பணிகள் எங்கு நடைபெற்று வருகிறது என்பது குறித்து நாம் விசாரித்த போது நமக்கு கிடைத்த தகவல்களின் சில அப்டேட்ஸ் இதோ :

சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து 'டைட்டானிக்' படத்துக்கு பணியாற்றிய 3டி தொழில்நுட்ப கலைஞர்கள் மூன்றுபேர் சென்னை வந்துள்ளனர். இப்போது ' கோச்சடையான் ' படத்துக்கான கிராஃபிக்ஸ் வேலையில் இரவு, பகலாக பணியாற்றி வருகின்றனர்.



' கோச்சடையான் ' படப்பிடிப்பு நடந்த லண்டன் டெஸ்ட்ராய்டு ஸ்டுடியோவின் ஒருநாள் வாடகை 20 லட்சம். 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டம். ஏனோ திடீரென்று நான்கே நாளில் சென்னைக்கு பேக்கப்!

கேரளா திருவனந்தபுரத்தில் இருக்கும் அக்ஸல் ஸ்டுடியோவில் ரஜினி, தீபிகா படுகோன் தொடர்பான காட்சிகளை படம் பிடித்தனர். பட்டுப்புடவை கட்டிய பரதநாட்டிய தாரகை ஷோபனாவுக்கு நீல கலர் பேன்ட், ஷ்ர்ட், ஃப்ளோரோசென்ட் பச்சை காஸ்ட்யூம் மாட்டி நடிக்க வைத்தனர்!

பழைய ரஜினியின் பாடி லாங்வேஜ் காட்ட 'லொள்ளு சபா' ஜீவாவை முதலில் ஒப்பந்தம் செய்தனர். நண்பர்களிடம் எல்லாம் 'ரஜினியே என்னை செலக்ட் செய்தார்..' என்று பெருமைகொண்டார் ஜீவா. இருப்பினும், ஜீவா கடுமையாக முயற்சி செய்தும் லண்டனுக்கு விசா கிடைக்காததால் ஜீவா பயங்கர அப்செட்!

நான்கு நாள் ஷூட்டிங் என்று சொல்லி சரத்குமாரை அழைத்து சென்றனர்.. இரண்டே நாளில் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி முடித்தனர். ராதிகாவின் அம்மா லண்டன்வாசி என்பதால் அவரிடம் லண்டனில் வீடு வாங்குவது குறித்து விவாதித்து விட்டு வந்தாராம், ரஜினி!

‘ கோச்சடையான் ' படத்தில் நாசருக்கு முக்கியமான ரோல். அதனால் லண்டனில் காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை தொடர்ந்து இடைவேளையே இல்லாமல் டப்பிங் பேசினார். ஒருகட்டத்தில் தொண்டை வழியே ரத்தமே வந்து விட்டதாம்.

தீபிகா படுகோன், ஆதி வருகைக்காக லண்டனில் ' கோச்சடையான் ' மொத்த யூனிட்டும் காத்துக் கிடந்தது. கடைசிவரை ஏனோ இருவரும் வரவில்லை. இத்தனைக்கும் முன்கூட்டியே இருவருக்கும் லண்டனுக்கு விசா எடுத்து ரெடியாக வைத்து இருந்தார்களாம். அதன்பின் கேரளாவில் நடந்த ஷூட்டிங்கில் இருவரும் கலந்து கொண்டு யூனிட்டின் கோபத்தீயை பிஸ்லெரி வாட்டரால் அணைத்தனர்!

' கோச்சடையான் ' வெற்றிபெற வேண்டும் என்று ரஜினியைவிட அதிகமாக பிரார்த்தனை செய்து கொண்டு இருப்பது 'விருமாண்டி' சண்முகராஜன்! " கனமான காரெக்டர்.. பெரிசா பேசப்படும்.." என்று நம்பிக்கையோடு சொல்லிக் கொண்டு இருக்கிறார்!

' எந்திரன் ' ஆடியோ விழாவை சிங்கப்பூரில் நடத்தியது போல ' கோச்சடையான் ' ஆடியோ ஃபங்ஷனை அக்டோபரில் ஜப்பானில் நடத்துகிறார்கள். தனது சொந்தப்பட ஆடியோ விழாவிலேயே கலந்து கொள்ளாத அஜித், ரஜினிபட விழாவில் ஆஜராகப் போகிறாராம்!

கனடாவில் 'ஆதி பகவன்' இசை !





அமீர் - யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் வரும் படம் என்றாலே பாடல்களுக்கு தனி வரவேற்பு இருக்கும்.

அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி, நீது சந்திரா நடிக்கும் 'ஆதிபகவன்' படத்திற்கு யுவன் தான் இசையமைத்து இருக்கிறார். அன்பு பிக்சர்ஸ் ஜெ.அன்பழகன் இப்படத்தினை தயாரித்து வருகிறார்.

'ஆதிபகவன்' படம் 2010ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடர்ச்சியாக பல்வேறு சிக்கல்கள், பெப்சி பிரச்னை என படப்பிடிப்பு தடைப்பட்டது. ஒரு வழியாக மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டது.

தமிழ் திரையுலகில் தற்போது அனைத்து முக்கிய படங்களின் இசை வெளியீட்டு விழாக்களுமே வெளிநாட்டில் தான் நடிக்கின்றன். வெளிநாட்டில் நடத்தில் அதன் டிவி உரிமையை நல்ல விலைக்கு விற்று விடுகிறார்கள்.

அதைப் போலவே 'ஆதிபகவன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் செப்டம்பர் 29ம் தேதி கனடாவில் நடத்த தீர்மானித்து இருக்கிறார்கள். லண்டன், சிங்கப்பூர், கோலாலம்பூர் உள்ளிட்ட இடங்களிலும் இசை வெளியீட்டு விழா நடைபெற்று இருக்கின்றன.

கனடாவில் இதுவரை எந்த ஒரு தமிழ்ப் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற்றது இல்லை. அங்கு நடைபெறும் முதல் இசை வெளியீட்டு விழா 'ஆதிபகவன்' படத்துக்குத் தான்!

கதை மேல நம்பிக்கை இருக்கு!

    'கும்கி' படத்தினைத் தொடர்ந்து 'எங்கேயும் எப்போதும்' சரவணன் இயக்க இருக்கும் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் விக்ரம் பிரபு.

இப்படத்திற்கும், 'கும்கி' படத்திற்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. 'கும்கி' படத்தினைத் தயாரித்த திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமே இப்படத்தினையும் தயாரிக்க முன்வந்து இருக்கிறது.

விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிக்கும் கும்கி படத்தினை பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கிறது திருப்பதி பிரதர்ஸ். இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிக்காக இரண்டு யானைகள் மோதும் காட்சியினை கிராபிக்ஸ் உருவாக்கி வருகிறார்கள். படத்தினை தீபாவளிக்கு வெளியிடலாம் என்று முடிவு செய்து இருக்கிறார்களாம்.

தீபாவளிக்கு 'துப்பாக்கி', 'வாலு' என பெரிய பட்ஜெட் படங்கள் வெளிவருகிற கவலை எல்லாம் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு இல்லையாம், காரணம் " எனக்கு 'கும்கி' கதையின் மீதும், மக்கள் மீதும் நம்பிக்கை இருக்கிறது " என்று தெரிவித்து விட்டாராம் லிங்குசாமி.

'எங்கேயும் எப்போதும்' படத்தினை இயக்கிய சரவணன் அடுத்து தான் இயக்க இருக்கும் படத்திற்கு விஷால், ஆர்யா என்று பேச்சுவார்த்தை நடத்தியவர் தற்போது விக்ரம் பிரபுவை ஒப்பந்தம் செய்திருக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார்.

முதல் படம், இரண்டாவது படம் இரண்டையும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமே தயாரிக்க இருப்பதால் பெரும் சந்தோஷத்தில் இருக்கிறார் விக்ரம் பிரபு.

மனைவியுடன் தனுஷ் காசி யாத்திரை!

 ' 3 ' படம் வெளியான பிறகு தனுஷ் அவரது டிவிட்டர் இணைய பக்கம் கூட வருவதில்லை. ' 3 ' படத்திற்குப் பிறகு ஒரு முறை " வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறேன்" என்றும், பிறகு " 'மரியான்', 'RAANJHAA' அதைத் தொடர்ந்து வெற்றிமாறன் படம் " என்று டிவிட்டியவர் அதற்கு பிறகு ஆளைக் காணோம்.

இது குறித்து அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்த போது " பரத் பாலா இயக்கி வரும் 'மரியான்' படத்தில் மும்முரமாக ஈடுபட்டு இருந்தார் தனுஷ். அப்படத்தில் கிட்டதட்ட அனைத்து பணிகளையும் முடித்து விட்டார்.

தற்போது RAANJHNAA படத்திற்காக மனைவி ஐஸ்வர்யாவுடன் உத்தர பிரதேஷ் சென்று இருக்கிறார். அங்கு இருக்கும் BENARAS UNIVERSITYல் படிக்கும் மாணவனாக அப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

RAANJHNAA படத்திற்காக 40 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. காசி பல்வேறு கோயில்கள் நிறைந்த பகுதி என்பதால் அங்குள்ள அனைத்து கோயில்களுக்கும் மனைவியை அனைத்து செல்ல திட்டமிட்டு இருக்கிறார் தனுஷ் " என்று தெரிவித்தார்கள்.

ஈ ஆள் சம்சாரிக்குன்னு!


கார்த்தி, அனுஷ்கா, மிலிந்த் சோமன் நடிப்பில் சுராஜ் இயக்கி வரும் படம் 'அலெக்ஸ் பாண்டியன்'. அனுஷ்கா நடிப்பில் வெளிவர இருக்கும் 'அலெக்ஸ் பாண்டியன்' படத்தினை மலையாளத்திலும் டப்பிங் செய்து வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள்.

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் எப்போதுமே தங்களது படங்களை விளம்பரப்படுத்தும் வகையில் மிகவும் கவனம் செலுத்தும். தற்போது அந்நிறுவனம் வாங்கி வெளியிட்ட 'அட்டகத்தி' படம் இதற்கு ஒரு சான்று.

கார்த்தி நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தினை தெலுங்கில் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தான் வெளியிட்டது. விளம்பரப்படுத்தும் வகையில் வித்தியாசப்படுத்தியதில் தெலுங்கில் அப்படம் வரவேற்பை பெற்றது. கார்த்திக்கு அங்கு பெரிய ஓப்பனிங்கும் கிடைத்தது.

தற்போது 'அலெக்ஸ் பாண்டியன்' படத்தினை தயாரித்து வரும் இந்நிறுவனம் படத்தினை மலையாளத்தில் டப்பிங் செய்து வெளியிட தீர்மானித்து இருக்கிறது. எப்போதுமே தமிழ்ப் படங்கள் அங்கு நேரடியாக தமிழில் வெளியாகும். இப்போது, தமிழ் தெரியாத மலையாள மக்களுக்காக 'அலெக்ஸ் பாண்டிய'னை டப்பிங் செய்து வெளியிட தீர்மானித்து இருக்கிறது.

மலையாள டிவி சேனல்கள் மூலம் படத்தினை பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்த திட்டமிட்டு இருக்கிறது. இதன் மூலம் மலையாள திரையுலகிலும் முறையாக கால் பதிக்க இருக்கிறார் கார்த்தி.

தண்ணீரையும் கொஞ்சம் தாருங்கள்! கர்நாடக எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு அமீர் கோரிக்கை!


Ameers demand to karnataka MLA and MPதமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி படவிழா ஒன்றில் கலந்து கொண்ட கர்நாடக எம்.எல்.ஏ., எம்.பி.க்களிடம், கோரிக்கை வைத்தார் அதே விழாவில் பங்கேற்ற டைரக்டர் அமீர். வி.பி.புரொடக்ஷன் தயாரிப்பில், அமீரின் உதவியாளர் அஸ்லம் இயக்கியுள்ள படம் பாகன். ஸ்ரீகாந்த், ஜனனி ஐயர், நடித்துள்ள இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு அமீர் பேசியதாவது, இயக்குனர் அஸ்லம் என்னிடம் பணியாற்றினார். இந்த கதையை அவர் பல வருடம் வைத்திருந்தார். என்னிடம் சொல்லாமல் ஒரு சாதாரண கம்பெனிக்கு அந்த கதையை எழுதிக் கொடுத்துவிட்டு அந்த தயாரிப்பாளின் மகன் நடிக்க ஏற்பாடு செய்துவிட்டு வந்துவிட்டார். இப்படி அவசரப்பட்டு விட்டானே இனி அவன் சினிமா வாழ்க்கை அவ்வளவுதான் என்று நினைத்தேன். ஆனால் அவன் வணங்கிய கடவுள் அவனை கைவிடவில்லை. படத்தை அந்த தயாரிப்பாளர் கைவிட்டார். நான் ஸ்ரீகாந்த் நடிக்க கேட்டேன். அவரும் ஒப்புக் கொண்டு நடித்தார். இப்போது படம் அழகாக உருவாகியிருக்கிறது.

சினிமாவில் ஒருவரை ஒருவர் பாராட்ட வேண்டும். அந்த கலாச்சாரம் இப்போது வளர்ந்திருக்கிறது. நடிகர்கள், இயக்குனர்கள் ஒருத்தரை ஒருத்தர் பாராட்டிக் கொள்கிறார்கள். சிலர் நாம் எழுந்து விட்டால் நம் இடத்தில் இன்னொருவர் உட்கார்ந்து விடுவாரோ என்ற நினைக்கிறார்கள். அது தவறு. சினிமா ஒன்றும் முக்கு சந்தல்ல. அது பெரிய பீச். நாம் இங்கிருந்து சென்றால், வெறொருவர் இன்னொரு திசையிலிருந்து நம்மை விட வேகமாக வந்து கொண்டிருப்பார். எல்லோரையும் அள்ளி அணைத்துக் கொள்ளும் இடம் சினிமா.

வேறு மாநிலம், வேறு மொழி கலைஞர்களைகூட அன்பாக அள்ளி அணைத்துக் கொள்கிறோம். இந்தப் படத்தை கன்னடத்தை சேர்ந்தவர்கள் தயாரித்திருக்கிறார்கள். ஆனால் எந்த வேறுபாடும் பார்க்காமல் இங்கு அனைவரும் கலந்து கொண்டிருக்கிறோம். இங்கே பேசிய கர்நாடக பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள். நாங்கள் உங்களுக்கு ரஜினியையும், அர்ஜுனையும் தந்திருக்கிறோம் என்று சொன்னார்கள். இன்னும் நிறைய நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்களை தாருங்கள் அள்ளி அணைத்துக் கொள்கிறோம். அதோடு கொஞ்சம் தண்ணீரும் தாருங்கள் என்று கேட்கிறோம். இங்கு நாங்கள் செலுத்தும் அன்பை உங்களுக்கு நாங்கள் தரும் ஆதரவை உங்கள் சட்டமன்றத்தில் காவிரி பிரச்சினை வரும்போது சொல்லுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

விழாவில் இயக்குனர்கள் அமீர், சுசீந்திரன், சமுத்ரகனி, விஜய், பிரபு சாலமன், கரு.பழனியப்பன், நடிகர் ஜெயம் ரவி, ஸ்ரீகாந்த், ராமகிருஷ்ணா, நடிகைகள் நமீதா, சுஜா வாருணீ, ஜனனி ஐயர், தயாரிப்பாளர் அம்மா கிரியேசன்ஸ் சிவா, வேந்தர் மூவீஸ் ரகு மற்றும் கர்னாடக மந்திரி அணில் லாட், சந்தோஷ் லாட் எம். எல். ஏ., நந்தீஸ் ரெட்டி எம். எல். ஏ. ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார்கள்.

தண்ணீரையும் கொஞ்சம் தாருங்கள்! கர்நாடக எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு அமீர் கோரிக்கை!


Ameers demand to karnataka MLA and MPதமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி படவிழா ஒன்றில் கலந்து கொண்ட கர்நாடக எம்.எல்.ஏ., எம்.பி.க்களிடம், கோரிக்கை வைத்தார் அதே விழாவில் பங்கேற்ற டைரக்டர் அமீர். வி.பி.புரொடக்ஷன் தயாரிப்பில், அமீரின் உதவியாளர் அஸ்லம் இயக்கியுள்ள படம் பாகன். ஸ்ரீகாந்த், ஜனனி ஐயர், நடித்துள்ள இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு அமீர் பேசியதாவது, இயக்குனர் அஸ்லம் என்னிடம் பணியாற்றினார். இந்த கதையை அவர் பல வருடம் வைத்திருந்தார். என்னிடம் சொல்லாமல் ஒரு சாதாரண கம்பெனிக்கு அந்த கதையை எழுதிக் கொடுத்துவிட்டு அந்த தயாரிப்பாளின் மகன் நடிக்க ஏற்பாடு செய்துவிட்டு வந்துவிட்டார். இப்படி அவசரப்பட்டு விட்டானே இனி அவன் சினிமா வாழ்க்கை அவ்வளவுதான் என்று நினைத்தேன். ஆனால் அவன் வணங்கிய கடவுள் அவனை கைவிடவில்லை. படத்தை அந்த தயாரிப்பாளர் கைவிட்டார். நான் ஸ்ரீகாந்த் நடிக்க கேட்டேன். அவரும் ஒப்புக் கொண்டு நடித்தார். இப்போது படம் அழகாக உருவாகியிருக்கிறது.

சினிமாவில் ஒருவரை ஒருவர் பாராட்ட வேண்டும். அந்த கலாச்சாரம் இப்போது வளர்ந்திருக்கிறது. நடிகர்கள், இயக்குனர்கள் ஒருத்தரை ஒருத்தர் பாராட்டிக் கொள்கிறார்கள். சிலர் நாம் எழுந்து விட்டால் நம் இடத்தில் இன்னொருவர் உட்கார்ந்து விடுவாரோ என்ற நினைக்கிறார்கள். அது தவறு. சினிமா ஒன்றும் முக்கு சந்தல்ல. அது பெரிய பீச். நாம் இங்கிருந்து சென்றால், வெறொருவர் இன்னொரு திசையிலிருந்து நம்மை விட வேகமாக வந்து கொண்டிருப்பார். எல்லோரையும் அள்ளி அணைத்துக் கொள்ளும் இடம் சினிமா.

வேறு மாநிலம், வேறு மொழி கலைஞர்களைகூட அன்பாக அள்ளி அணைத்துக் கொள்கிறோம். இந்தப் படத்தை கன்னடத்தை சேர்ந்தவர்கள் தயாரித்திருக்கிறார்கள். ஆனால் எந்த வேறுபாடும் பார்க்காமல் இங்கு அனைவரும் கலந்து கொண்டிருக்கிறோம். இங்கே பேசிய கர்நாடக பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள். நாங்கள் உங்களுக்கு ரஜினியையும், அர்ஜுனையும் தந்திருக்கிறோம் என்று சொன்னார்கள். இன்னும் நிறைய நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்களை தாருங்கள் அள்ளி அணைத்துக் கொள்கிறோம். அதோடு கொஞ்சம் தண்ணீரும் தாருங்கள் என்று கேட்கிறோம். இங்கு நாங்கள் செலுத்தும் அன்பை உங்களுக்கு நாங்கள் தரும் ஆதரவை உங்கள் சட்டமன்றத்தில் காவிரி பிரச்சினை வரும்போது சொல்லுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

விழாவில் இயக்குனர்கள் அமீர், சுசீந்திரன், சமுத்ரகனி, விஜய், பிரபு சாலமன், கரு.பழனியப்பன், நடிகர் ஜெயம் ரவி, ஸ்ரீகாந்த், ராமகிருஷ்ணா, நடிகைகள் நமீதா, சுஜா வாருணீ, ஜனனி ஐயர், தயாரிப்பாளர் அம்மா கிரியேசன்ஸ் சிவா, வேந்தர் மூவீஸ் ரகு மற்றும் கர்னாடக மந்திரி அணில் லாட், சந்தோஷ் லாட் எம். எல். ஏ., நந்தீஸ் ரெட்டி எம். எல். ஏ. ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார்கள்.

மீண்டும் ரஜினி - கமலுடன் நடிப்பேன் : ஸ்ரீதேவி


I will act again with rajini and kamal says srideviநடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருடன் மீண்டும் நடிப்பேன் என்று நடிகை ஸ்ரீதேவி கூறியுள்ளார். 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கும் ஸ்ரீதேவி, தற்போது தமிழ்-இந்தி ஆகிய 2 மொழிகளில் உருவாகும் இங்கிலீஷ்-விங்கிலீஷ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. அதில் கலந்துகொண்ட ஸ்ரீதேவி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, இத்தனை காலம் நடிக்காமல் இருந்ததற்குக் காரணம், என் மகள்கள் இருவரும் சின்ன குழந்தைகளாக இருந்தார்கள். அவர்களை வளர்க்கும் பொறுப்பு எனக்கு இருந்தது. இப்போது அவர்கள் பெரியவர்கள் ஆகிவிட்டார்கள். அதனால் மீண்டும் நடிக்க ஆரம்பித்து இருக்கிறேன், என்றார். ரஜினிகாந்த் - கமல்ஹாசன் ஆகிய இருவருடனும் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிப்பீர்களா?, என்ற கேள்விக்கு பதில் அளித்த ஸ்ரீதேவி, நிச்சயமாக நடிப்பேன். இரண்டு பேரையும் சமீபத்தில் கூட சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். ஆனால் நியாயமாக இதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும். பொருத்தமான சூழல் அமைய வேண்டும், என்றார்.

விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படம் திருடன்!


Vijay antony turn as thirudanநான் படத்துக்குப் பிறகு விஜய் ஆன்டனி நடிக்கும் புதிய படத்திற்கு திருடன் என பெயரிடப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி ஹீரோவாக அறிமுகமான முதல் படம் நான். அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்துள்ளது இந்தப் படம். படத்தை அவரே தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இப்போது அடுத்த புதுப்படத்தைத் தயாரிக்க களமிறங்கிவிட்டார் விஜய் ஆன்டனி. இந்தப் படத்துக்கு திருடன் எனத் பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்துக்கும் அவரே தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர். படத்தின் நாயகி உள்ளிட்ட விவரங்களை விரைவில் வெளியிடுவதாக அறிவித்துள்ளார்.

நான் விலகியது சேட்டை அல்ல; வேட்டை ரீ-மேக்! ஹன்சிகா

I am not out in settai; out in only vettai remake: says hansikaதமிழ் ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகைகள் பட்டியலில், இடம் பெற்றுள்ளவர்களுக்கு, சவாலாய் சமீபத்தில் இடம் பிடித்தவர், ஹன்சிகா மோத்வானி. "மொளு...மொளுன்னு... காஷ்மீர் ஆப்பிளாய், பார்ப்போரை, உறைய வைத்த, ஹன்சிகாவின் பின்னணி, எத்தனை பேருக்குத் தெரியும்? கர்நாடாக மங்களூரில் பிறந்தார். அப்பா பிசினஸ் மேன், அம்மா டாக்டர். 2003ல் குழந்தை நட்சத்திரமாக, ஹிந்தி சீரியலில், அறிமுகம் ஆனார். 2004 வரை, ஏழு ஹிந்தி சீரியலில் நடித்தார். அதே காலகட்டத்தில், ஆறு ஹிந்தி படங்களிலும், குழந்தை நட்சத்திரமாய் ஜொலித்தார்.

2007ல் "தேச முதுரு என்ற, தெலுங்கு படத்தில், அல்லி அர்ஜூனா உடன் நாயகியாக அறிமுகமானார். முதல் படமே, பெயர் சொல்லும் படி அமைந்தது. சிறந்த அறிமுக நாயகிக்கான, "பிலிம் பேர் விருதையும் பெற்றுத்தந்தது. "2008ல் கந்திரி, 2009ல் மங்கா, 2009ல் பில்லா, என, தெலுங்கில், "பிஸி ஆனார், ஹன்சி.

தெலுங்கில் உச்சத்தில் இருந்தவரை, சிகரத்தில் கொண்டு செல்ல முடிவு செய்தது, தமிழ் சினிமா. தனுஷ் படத்தில் கிடைத்த வாய்ப்பு, அதன் பின், ஜெயம் ரவி உடன், எங்கேயும் காதல், விஜய் உடன் வேலாயுதம், சமீபத்தில் வெளியாகி, வெள்ளி விழா கொண்டாடிய, "ஒரு கல், ஒரு கண்ணாடி, என, தமிழில் தனக்கென, தனிஇடம் பிடித்தார், ஹன்சிகா. ஆர்யாவுடன் சேட்டை, சிம்பு உடன் வாலு, வேட்டை மன்னன் படங்களில் "பிஸி ஆக இருக்கும் ஹன்சிகா, "சேட்டையிலிருந்து விலகியதாக.. சமீபத்தில் தகவல் பரவியது.

இது குறித்து ரசிகர்கள், "டுவிட்டரில் கேட்ட கேள்விகளுக்கு, கூலாய் பதிலளித்திருக்கிறார், ஹன்சிகா. ""தேதி காரணமாக, நான் விலகியது சேட்டை அல்ல, வேட்டை(ரீமேக்)... என, தெளிவாக கூறிவிட்டது, மங்களூர் மாம்பழம். காத்திருங்கள், விரைவில் காத்திருக்கு, பெரிய விருந்து!

தமிழ் மக்களை மறக்க முடியாது: ஸ்ரீதேவி

I will never forget tamil fans says sridevi நீண்ட இடைவெளியிக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார் ஸ்ரீதேவி. தற்போது அவர் " இங்கிலீஷ் - விங்கிலீஷ் என்கிற படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் சென்னை வந்திருந்த ஸ்ரீதேவி கூறுகையில், "நான் தமிழ் நாட்டில் பிறந்தவள். தமிழ் மக்களை மறக்கவே மாட்டேன். என்னோட குழந்தைகளுக்கு தமிழ் கத்து கொடுத்திருக்கேன். திருமணத்துக்குப் பிறகு சினிமாவ விட்டு விலகியிருந்தேன். குழந்தைகள் பிறந்ததும் அவர்களை பராமரிப்பதில், நாட்கள் ஓடி விட்டன. இப்போது, குழந்தைகள் வளர்ந்து விட்டார்கள். அதனால, மறுபடியும் சினிமால நடிக்க வந்துட்டேன். தமிழ் படங்களில் நடிச்சு 26 வருடங்களாகி விட்டது. எனக்குப் பொருத்தமான கதையும், கதாபாத்திரமும் அமைந்தால் மீண்டும் தமிழ் படங்களில் நடிக்கத் தயாராக இருக்கேன். மறுபடியும் ரஜினி, கமலுக்கு ஜோடியா நடிக்க தயாரான்னு கேட்கறாங்க. அவர்கள் தயாரென்றால், நானும் தயார் என்றார்.

மம்முட்டியை மாட்டி விட்ட டாப்ஸி


Mammootty - Tapsees puduvai managaramதமிழ் சினிமாவில் இது, "டுவின்ஸ் கதை சீசன். "மாற்றான், சாருலதா ஆகிய இரு படங்களும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் கதை. இந்த வரிசையில், மம்முட்டி நடிக்கும், "புதுவை மாநகரம் படமும் "டுவின்ஸ் கதைதான். கேரளாவில், "டுவின்ஸ் என்கிற பெயரில் வந்து,­­­­­­ ஹிட்டான படம் தான், தமிழில், "புதுவை மாநகரம் ஆக தயாராகிறது. மம்முட்டியும், நதியாவும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள். அவர்களின் பெற்றோர், விபத்தில் பலியாகிவிட, இருவருக்கும் அந்த சம்பவம் ஆழமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, சாலை விபத்தில் சிக்கி, உயிருக்குப் போராடுகிறவர்களுக்கு உதவுவதையே, தொண்டாக செய்கின்றனர். அப்படியொரு விபத்தில் சிக்கும் டாப்ஸியை காப்பாற்றுகிறார் மம்முட்டி. அதற்கு பின், பிரச்னைகள் அவரை துரத்துகிறது. மம்முட்டியை பெரிய சிக்கலில் மாட்டி விடுகிறார் டாப்ஸி. அதிலிருந்து மம்முட்டி எப்படி மீண்டு வருகிறார் என்பதை, படம் சொல்கிறது.

ஆர்மோனிய பெட்டி என் கள்ள காதலி மாதிரி...! இளையராஜா!!


Ilayaraja speech at neethane en pon vasantham audio launchகவுதம் மேனன் இயக்கும் நீ தானே என் பொன்வசந்தம் பாடல் வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடந்தது. அந்த நிகழ்ச்சியில் கவுதம் மேனன் இளையராஜாவை பேட்டி கண்டார். அதன் துளிகள் இவை

கவுதம் மேனன்: உங்கள் கையில் இருக்கும் ஆர்மோனிய பெட்டி பற்றிய உணர்வுகளை பகிர்ந்து கொள்ள முடியுமா?

இளையராஜா: இதை பெட்டின்னு சொல்லக்கூடாது. அதுக்கு உயிர் இருக்கு. என்னோட அது பேசும். நீங்க கேட்ட ஆயிரக்கணக்கான பாடல்களை எனக்கு கொடுத்ததது அதுதான். இதை எங்க அண்ணன் பாவலர் வரதராசன் 85 ரூபாய்க்கு கோயம்புத்தூர்ல ஒரு ஆசாரிகிட்ட செஞ்சு வாங்கிட்டு வந்தார். அதுலேருந்து இது எங்க குடும்ப உறுப்பினராயிடுச்சு. இதை தொட்டா எங்கண்ணன் என் புறங்கையில பிரம்பால அடிப்பாரு. ராத்திரி எல்லோரும் தூங்கின பிறகு கள்ளக் காதலன் காதலிய சந்திக்கற மாதிரி இந்த பெட்டிய வச்சுக்கிட்டு பாடுவேன். அப்புறம் அண்ணன் எங்க போனாலும் நான்தான் இதை தூக்கிட்டு போவேன். கச்சேரி முடிந்து பஸ்சில வந்தா இதுமேல படத்து தூங்குவேன். பாரதிராஜாகூட இதுமேல படுத்து தூங்கியிருக்கான். என்னை முழுசா தெரிஞ்சது அதுதான்.

கவுதம் மேனன்: உங்க வெற்றிக்கு எதை காரணமா சொல்வீங்க?

இளையராஜா: ஒரு பாட்டு மாதிரி இன்னொரு பாட்டு இருக்க கூடாதுங்றதுல தெளிவா இருப்பேன். அதனாலேயே என் பாட்டை நான் திரும்ப கேட்குறதில்ல. சில இயக்குனர்கள் வந்து அந்த பாட்டு மாதிரியே போட்டு கொடுங்கன்னு கேப்பாங்க. அந்த பாட்டு அந்த பாட்டுதான் அது மாதிரியெல்லாம் போட முடியாதுன்னு சொல்லிடுவேன். எப்பவுமே நான் இயக்குனர்கள் பேச்சை கேட்க மாட்டேன். கதையையும், சூழ்நிலையையும் சொல்லிட்டா பாட்டை கொடுத்துருவேன் அவ்வளவுதான்.

கவுதம் மேனன்: உங்களுக்கு பிடிச்ச இசை அமைப்பாளர் யார்?

இளையராஜா: நிறைய பேர் இருக்காங்க. யாரைன்னு குறிப்பிட்டு சொல்றது. ஒரே இசைய ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமா கையாழுவாங்க. அந்த வகையில எம்.எஸ்.விசுநாதனை பிடிக்கும்.

கவுதம் மேனன்: உங்கள் பாட்டை எல்லோருக்கும் பிடிப்பது எதனால்?

இளையராஜா: ஒரு பாட்டு எனக்கு பிடிச்சப்புறம்தான் மக்களுக்கு தர்றேன். எனக்கு பிடிச்சது அவுங்களுக்கு எப்படி பிடிக்குதுங்றது எனக்கே இன்னிக்கு வரைக்கும் தெரியாது. நல்லா சமைக்றது எல்லோரும் நல்லா சாப்பிடணுங்றதுக்குத்தான். நான் சமைச்சு தர்றேன், நீங்க சாப்பிடுறீங்க. மக்களிடம் சென்று சேராத கலை கலையே அல்ல.

கவுதம் மேனன்: நீங்க பாடினதிலேயே உங்களுக்கு பிடிச்ச பாட்டை பாடுங்களேன்?

இளையராஜா: (பாடுகிறார்) ஜெனனி... ஜெனனி.. ஜெகம் நீ... அகம் நீ... ஜெக காரணி நீ... பரி பூரணி நீ..

பாரதிராஜா படத்தில் அம்மாவுக்காக நடிக்கும் கார்த்திகா!


karthikas pressure in bharathiraja filmபாரதிராஜா இயக்கி வரும் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் ஆரம்பத்தில் ரொம்ப ஆர்வமாகத்தான் கமிட்டானார் கார்த்திகா. ஒருகட்டத்தில் அப்படத்திலிருந்த அமீர், விலகியபோது இனியாவையும் நீக்கினார் இயக்குனர். இதனால் நாம்தான் படத்தின் முதன்மை நாயகி என்று செம உற்சாகத்தில் நடித்து வந்தார். ஆனால் தொடர்ந்து பாரதிராஜா காட்டுப்பகுதிகளிலேயே வெட்ட வெயிலில் படப்பிடிப்பு நடத்தி வருவதால், கோ படத்தில் அலுங்காமல் குலுங்காமல் நடித்த நான் இந்த படத்தில் இப்படி வந்து சிக்கிக்கொண்டேனே என்று புலம்புகிறாராம். அதோடு, இன்னும் அரைகிணறைத்தான் தாண்டியிருக்கிறாராம் இயக்குனர். அதனால் இவர் எப்போது என்னை விடுவிடுப்பது நான் வேறு படத்தில் நடிப்பது என்றும் அம்மா ராதாவிடம் தொடர்ந்து நச்சரித்துக்கொண்டிருக்கிறாராம் கார்த்திகா.

ஆனால் அவரோ, பாரதிராஜா படத்தில் நடிக்க சான்ஸ் கிடைக்காதா? என்று பல நடிகைககள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள் என்று மகளுக்கு அட்வைஸ் செய்தபடி சாந்தப்படுத்தி வைத்திருக்கிறாராம் ராதா.ஆக, அம்மாவின் வார்த்தைக்கு கட்டுப்பாட்டு தப்பிக்க வழியில்லாமல் அப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறாராம் அன்னக்கொடி கார்த்திகா.

பிரபுதேவாவை பார்த்து முகத்தை திருப்பிக்கொண்ட நயன்தாரா!


Prabhudeva - Nayanthara Face to Faceநயன்தாராவுக்காக மனைவியையே பிரபுதேவா விவாகரத்து செய்தது, பிரபுதேவாவுக்காக கிறிஸ்தவ மதத்திலிருந்தே நயன்தாரா இந்துவுக்கு மாறியது என்று எல்லாமே குறுகிய காலத்திற்குள் ஒரு கனவு போல் நடந்தது. ஆனால் இத்தனையும் நடந்தேறிய பிறகு அவர்களுக்கிடையே பிரச்னை என்றொரு கல் விழுந்து அவர்களது காதல், கண்ணாடியாய் நொறுங்கிக்கிடக்கிறது.

இந்த நிலையில், பிரபுதேவா இந்தி படங்களை இயக்கிக்கொண்டிருக்க, நயன்தாராவோ தென்னிந்திய மொழிப்படங்களில் பரவலாக நடிக்கத் தொடங்கியிருக்கிறார். ஒருவர் பற்றி ஒருவர் தங்களது அபிமானிகளிடம் காரசாரமாக புகார்களை அள்ளி இறைத்து வந்தபோதிலும், நேரில் சந்தித்துக்கொள்வதில்லை. ஆனால் சமீபத்தில் ஒரு தெலுங்கு படப்பிடிப்புக்கு செல்ல சென்னை விமான நிலையத்துக்கு நயன்தாரா சென்றபோது, மும்பையிலிருந்து சென்னை வந்திறங்கிய பிரபுதேவாவும், அவரும் எதிரும் புதிருமாக சந்தித்துக்கொண்டனர். ஆனால் பிரபுதேவாவைவிட கடும் கோபத்தை முகத்தில் காண்பித்த நயன்தாரா, முகத்தை வேறு பக்கமாக திருப்பி வைத்தபடி அவரை கடந்து சென்று விமானத்தில் ஏறினாராம். சற்று தூரம் கடந்து வந்தபடி அவரை திரும்பி பார்த்தபடியே பிரபுதேவாவும் விமான நிலையத்தில் இருந்து வெளியேறியிருக்கிறார்.

36 ஆண்டுக்கு பிறகு டப் ஆகும் ரஜினியின் தெலுங்கு படம்

Rajinis telugu movie to be dubbed after 36 years in tamilதமிழ் சினிமாவில் சுவாரஸ்யம் இருக்கிறதோ இல்லையோ, சினிமாவுக்கு வெளியே சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் இல்லை. அதில் ஒன்றுதான் இது. 1974ம் ஆண்டு வெளிவந்த படம் அவள் ஒரு தொடர்கதை. கே.பாலச்சந்தர் இயக்கிய படம், சுஜாதா, கமல், ஜெய் கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தெய்வம் தந்த வீடு வீதி இருக்க... கடவுள் அமைத்து வைத்த மேடை... போன்ற சாகாவரம் பெற்ற பாடல்கள் இடம்பெற்ற படம். அப்போது மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதே படத்தை 1976ம் ஆண்டு அந்துலேனி கதா என்ற பெயரில் தெலுங்கில் இயக்கினார் பாலச்சந்தர். இதில் கமல் தமிழில் நடித்த கேரக்டரில் நடிததார். சுஜாதா நடித்த கேரக்டரில் ஜெயபிரதா நடித்தார். ஜெய்கணேஷ் நடித்த கேரக்டரில் ரஜினி நடித்தார். அங்கும் இந்தப் படம் பெரிய வெற்றி பெற்றது.

இப்போது பழைய படங்களை தூசி தட்டி எடுத்து வெளியிடும் சீசன். அதனால் சிம்பொனி மூவீஸ் என்ற நிறுவனத்தார். அந்துலேனி கதாவை தூசி தட்டி எடுத்துள்ளனர். அவள் ஒரு தொடர்கதை தமிழில் நாம் பார்த்த படம்தான் என்றாலும் தெலுங்கில் ரஜினி நடித்திருப்பதால் ஒரு கணக்குபோட்டு இந்தப் படத்தை இப்போது டப்பிங் செய்து வருகிறார்கள். கடவுள் அமைத்து வைத்த மேடை என்று படத்துக்கு பெயர் வைத்திருக்கிறார்கள். ரஜினிக்கு அவரது குரலில் பேசும் மிமிக்ரி கலைஞர் ஒருவர் வாய்ஸ் கொடுத்து வருகிறார். இது எப்படி இருக்கு?