Saturday 21 July 2012

தடுமாறும் தன்ஷிகா!


Tansika stumble!


             "அரவான் படத்தின் தோல்வி, தன்ஷிகாவின் மார்க்கெட்டை சரித்துவிட்டது. அதனால், கதாநாயகி வாய்ப்பு கிடைக்காமல், "பரதேசி, எதிர்நீச்சல் ஆகிய படங்களில், இரண்டாவது நாயகியாக நடித்து வருகிறார். தொடர்ந்து வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்கவும் தயாராகி விட்டதாக சொல்லும் தன்ஷிகா, "நடித்து வரும் படங்கள் ஒருவேளை வெற்றி பெற்றால், மீண்டும் கதாநாயகியாக தான் நடிப்பேன் என, "ரூட்டை மாற்ற மாட்டேன். கதாநாயகி, இரண்டாம் கதாநாயகி என, எல்லா விதமான வேடங்களும் கலந்து நடிப்பேன் என்கிறார் தன்ஷிகா.

மகத் யாருன்னே எனக்கு தெரியாது : டாப்சி!

I didnt know mahat says tapseeடாப்சிக்காக மனோஜ் மற்றும் மகத் இருவரும் சண்டை போட்டு வரும் நிலையில், மகத் யாரென்றே எனக்கு தெரியாது என டாப்சி கூறியுள்ளார். ஆடுகளம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை டாப்சி. தொடர்ந்து வந்தான் வென்றான் படத்தில் நடித்தார். தெலுங்கில் முன்னணி நடிகையாகவும் இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகனும், நடிகருமான மனோஜூம், மங்காத்தா படத்தில் நடித்த மகத்தும் இரவு விருந்து ஒன்றில் கடுமையான மோதிக் கொண்டனர். இவர்கள் மோதிய சம்பவம் கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இவர்கள் சண்டை போட்டதே டாப்சிக்காகத்தான் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் படங்களுக்காக டாப்ஸி சென்னை வரும்போதெல்லாம், அவரை மகத் தான் காரில் அழைத்து கொண்டு செல்வதும், ஊர் சுற்றுவதுமாய் இருந்துள்ளார். ஆனால் இந்த சம்பவத்திற்கு பிறகு மிகவும் அப்செட்டான டாப்சி, இப்போது மகத் யாருன்னே எனக்குத் தெரியாது என்று அந்தர்பல்டி அடித்துள்ளார். மேலும் சம்பந்தமே இல்லாம இப்படி என்னை ரெண்டு பேரோட சேர்த்துப் பேசுறது ரொம்ப வருத்தமா இருக்கு. மகத் என்னை காதலிப்பதாக சொல்வதும் உண்மையில்லை. இதுவரை நான் அவரை சந்தித்ததே கிடையாது என்று டாப்சி கூறியுள்ளார்.

மகத் யாருன்னே எனக்கு தெரியாது : டாப்சி!

I didnt know mahat says tapseeடாப்சிக்காக மனோஜ் மற்றும் மகத் இருவரும் சண்டை போட்டு வரும் நிலையில், மகத் யாரென்றே எனக்கு தெரியாது என டாப்சி கூறியுள்ளார். ஆடுகளம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை டாப்சி. தொடர்ந்து வந்தான் வென்றான் படத்தில் நடித்தார். தெலுங்கில் முன்னணி நடிகையாகவும் இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகனும், நடிகருமான மனோஜூம், மங்காத்தா படத்தில் நடித்த மகத்தும் இரவு விருந்து ஒன்றில் கடுமையான மோதிக் கொண்டனர். இவர்கள் மோதிய சம்பவம் கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இவர்கள் சண்டை போட்டதே டாப்சிக்காகத்தான் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் படங்களுக்காக டாப்ஸி சென்னை வரும்போதெல்லாம், அவரை மகத் தான் காரில் அழைத்து கொண்டு செல்வதும், ஊர் சுற்றுவதுமாய் இருந்துள்ளார். ஆனால் இந்த சம்பவத்திற்கு பிறகு மிகவும் அப்செட்டான டாப்சி, இப்போது மகத் யாருன்னே எனக்குத் தெரியாது என்று அந்தர்பல்டி அடித்துள்ளார். மேலும் சம்பந்தமே இல்லாம இப்படி என்னை ரெண்டு பேரோட சேர்த்துப் பேசுறது ரொம்ப வருத்தமா இருக்கு. மகத் என்னை காதலிப்பதாக சொல்வதும் உண்மையில்லை. இதுவரை நான் அவரை சந்தித்ததே கிடையாது என்று டாப்சி கூறியுள்ளார்.

கமலுக்கு தோள் கொடுக்கும் விஜய்


புதுப்படங்கள் எல்லாவற்றையும் போட்டி போட்டு வாங்கிக் கொண்டிருக்கிறது ஜெயாதொலைக்காட்சி. கோச்சடையான், துப்பாக்கி, மாற்றான் என்று வேகம் காட்டும் ஜெயா தொலைக்காட்சிக்கு விஸ்வரூபம் மட்டும் சிக்கவில்லை.

காரணம் கமல். ஆரம்பத்திலிருந்தே விஜய் தொலைக்காட்சி மீதுதான் அவருக்கு ஈடுபாடு அதிகம். அதிலும் தற்போதைய அவரது முயற்சிக்கு முழு மூச்சாக தோள் கொடுத்திருக்கிறதாம் விஜய்.

கமலின் விஸ்வரூபத்தை பெரிய விலை கொடுத்து வாங்கியிருக்கிறார்களாம் அவர்கள். சுமார் பத்து கோடி என்று காதை கடிக்கிறார்கள். இந்த அடங்காத விலையை கேட்டு வாயடைத்துப் போயிருக்கிறது பிற சேனல் வட்டாரங்கள். இதுல பாதி கேஷ் ரொக்கம். மீதி கேஷ் விளம்பரத்துக்கு என்று பிரித்துக் கொண்டார்களாம்.

நிகழ்ச்சியிலும் சரி, மகிழ்ச்சியிலும் சரி, ஒண்ணுக்குள்ளே ஒண்ணு என்கிற அளவுக்கு சேனலோடு சினேகம் வளர்க்கிறார் கலைஞானி.

தமிழ் படத்தில் ஜான் ஸீனா, ஸ்டீவ் ஆஸ்டின்!


      தமிழ் படங்களில் மற்ற மொழி நடிகர்களை நடிக்க வைப்பது சமீபத்திய தமிழ் சினிமாவில் புது டிரெண்டாக மாறிவிட்டது. பிரபலமான ஹாலிவுட், பாலிவுட் ஹீரோக்களுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்ததே அதற்கு காரணம். 


ஜனநாதன் இயக்கிய பேராண்மையில் நடித்த ’ரொனால்ட் கிக்னிகர்’, முருகதாஸ் இயக்கிய ஏழாம் அறிவு படத்தில் நடித்த ’ஜானி ட்ரை ங்யூயன்’ ஆகியோருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. இயக்குனர் ஹரி சிங்கம்-2 படத்திற்கு தென்னாப்பிரிக்க வில்லனை தேடிக்கொண்டிருக்கிறார். கௌதம் மேனன் இயக்கவிருக்கும் யோஹான் படத்திற்கு ஹீரோவைத் தவிர மற்ற அனைவரும் வெளிநாட்டு நடிகர்களாம்.



ஹாலிவுட் வில்லன் வேட்டையில் முன்னணி இயக்குனர்களைத் தொடர்ந்து களம் இறங்குபவர் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன். கல்யாண கிருஷ்ணன் இயக்கும் பூலோகம் படத்தில் தான் ரெஸ்லிங்(wwe) எனப்படும் குத்துச்சண்டை நட்சத்திரங்களான ஜான் ஸீனா அல்லது ஸ்டீவ் ஆஸ்டின் ஆகியோரில் ஒருவரை வில்லனாக நடிக்கவைக்கப்போகிறாராம்.


ஜெயம் ரவி குத்துச்சண்டை வீரராக நடிப்பதும் இந்த குத்துச்சண்டை நட்சத்திரங்களின் வருகைக்கு காரணம். இதற்கு முன் M.குமரன் S/o மஹாலட்சுமி படத்தில் ஜெயம் ரவி நடித்த குத்துச்சண்டை காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.


ஹாலிவுட் நட்சத்திரங்களுடன் சண்டை என்பது ரசிகர்களுக்கும் நல்ல விருந்தாகவே அமையும். பூலோகம் படத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா ஜோடியாக நடிக்கின்றனர். பிரகாஷ்ராஜ், சந்தானம், கஞ்சா கருப்பு ஆகியோரும் நடிக்கின்றனர்.

பெயரைக் கட் செய்த டைமண்ட் கவிஞரின் மகன்.





கோலிவுட் படங்களில் ஹீரோவா நடிச்ச ரமேஷான அரவிந்த நடிகரு பெரிசா எடுபடாததால திடீர்னு சான்டல்வுட்டுக்கு என்டராகி அங்கேயே செட்டிலாயிட்டாராம்.. ஆயிட்டாராம்... அங்கேயும் இப்போ போட்டி அதிகமாயிட்டதால தாக்குபிடிக்க முடியலையாம். இதால மறுபடியும் கோலிவுட் மீது காதல் வந்துருச்சாம்... வந்துருச்சாம்... அப்படி இப்படின்னு தூதுவிட்டு கோலிவுட்ல படமொண்ணு பிடிச்சிட்டாராம். இதைவச்சே இங்கே ஸ்டடியாயிடுவேன்னு நட்புங்ககிட்ட சொல்றாராம்... சொல்றாராம்...

திலக நடிகரோட பேரன் அறிமுகமாகுற படத்தோட பாட்டு பங்ஷன்ல சூப்பரான ஆக்டரையும் உலக ஹீரோவையும் பங்கேற்க கூப்பிட்டாங்களாம்... கூப்பிட்டாங்களாம்... உலகம் உடனே ஓகே சொல்லிட்டாராம்... சொல்லிட்டாராம்... சூப்பர் எதுவும் சொல்லாம அமைதியா இருக்காராம்... இருக்காராம்... விழால அவர் திடீர்னு சர்ப்பிரைஸ் விசிட் அடிப்பாருன்னு விழாக்குழு நம்பிக்கையா இருக்காம்... இருக்காம்...

டைமண்ட் கவிஞரோட வாரிசு, டாடியைபோல பாப்புலர் ஆகலையாம்... ஆகலையாம்.... அதனால நியூமராலஜிப்படி அவர் தன்னோட பேரை குறைச்சி வச்சிகிட்டாராம். ராசி பார்த்து கார்க்கியான பேருக்கு முன்னால இருந்த மதனான இன்னொரு பேரை நீக்கிட்டாராம். தான் பாட்டு எழுதுற படங்கள்ல இந்த பேரைத்தான் யூஸ் பண்ணனும்னு சொல்றாராம்... சொல்றாராம்...

முதன்முறையாக அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்தும் இசைஞானி இளையராஜா.





முதல் முறையாக அமெரிக்காவில் இசைக் கச்சேரி நடத்தப் போகிறார் இசைஞானி இளையராஜா.

கலிபோர்னிய நகரங்கள் மற்றும் நியூயார்க்கில் இந்த இசை நிகழ்ச்சிகள் நடக்கவிருப்பதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இளையராஜா வெளிநாடுகளில் இரண்டு நிகழ்ச்சிகள்தான் நடத்தியிருக்கிறார். ஒன்று இத்தாலியில், மற்றொன்று துபாயில்.

ஆனால் உலகின் பல நாடுகளிலிருந்தும் இசை ஆர்வலர்கள் அவரை கச்சேரி செய்து தரச் சொல்லி கேட்டு வருகிறார்கள். அவரோ அரிதாகவே அத்தகைய நிகழ்ச்சிகளை ஒப்புக் கொள்கிறார்.

இந்த நிலையில், அமெரிக்காவில் முதல் முறையாக இசை நிகழ்ச்சி நடத்த ஒப்புக் கொண்டுள்ளார் ராஜா.

இந்த கச்சேரியில் ராஜாவின் மகன்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, மகள் பவதாரிணி ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். முன்னணி பாடகர்கள், பாடகிகளுடன் இளையராஜாவின் குழு அமெரிக்கா புறப்படுகிறது, நவம்பர் இறுதியில்!

டிசம்பர் முதல் வாரத்தில் இந்த நிகழ்ச்சிகள் நடக்கும் எனத் தெரிகிறது.

தமிழ் சினிமாவின் ஓப்பனிங் வசூல் முறை சிவாஜி படத்திலிருந்து தொடங்கியதா?


      

இன்று ஒரு படத்தை, கதையும் திரைக்கதையும் தீர்மானிக்கிறதோ இல்லையோ "ஓப்பனிங் எனப்படும் வெளியீட்டு முறைதான் தீர்மானிக்கிறது. ஒரு படத்துக்கு ஓப்பனிங் இருக்கு..' அல்லது "ஓப்பனிங் இல்லை..' என்று கூறுகிறார்களே அப்படியென்றால் என்ன? ஒரு திரைப்படம் எந்த நாளில் ரிலீஸ் ஆகிறதோ, அன்றிலிருந்து முதலாவதாக வரும் ஞாயிற்றுக்கிழமை வரையான ஆரம்ப நாட்களின் வசூல்தான் ஓப்பனிங் வசூல் என்பதாகும்.

ஒரு திரைப்படம் திங்கட்கிழமை ரிலீஸ் ஆனாலும், சனிக்கிழமை ரிலீஸ் ஆனாலும் ஞாயிறு வரையான வசூல் அந்த முதல் வார ஓப்பனிங் வசூலாக எடுத்துக் கொள்ளப்படும்.

பொதுவாக, மிகப்பெரும்பாலான திரைப்படங்கள் வார இறுதிநாளான வெள்ளிக்கிழமைகளில்தான் வெளியிடப்படுகின்றன. பண்டிகை நாளாக இருந்தால் சனிக்கிழமைகளிலும் வெளியிடப்படும்.

ஒரு திரைப்படத்தின் வெற்றியை இன்று ஓப்பனிங்கை வைத்து கணிக்கின்ற அளவுக்கு சினிமா உலகம் மாறியிருக்கிறது. இந்த மாதிரியான ஒரு நடவடிக்கை ரஜினிகாந்த் நடித்த "சிவாஜி' படத்தில்தான் தொடங்கியது.

அதற்கு முன் வரை ஒரு திரைப்படத்தின் வெற்றியானது எவ்வளவு நாள் அந்தப் படம் ஓடியது என்பதை வைத்துதான் தீர்மானிக்கப்பட்டு வந்ததது. "சிவாஜி' படத்துக்குப் பிறகு ஒரு படத்தின் வெற்றியைத் தீர்மானப்பதற்கு நாட்கள் தேவைப்படவில்லை. எத்தனை காட்சிகள், எத்தனை தியேட்டர்களில் ஓடியது என்பதும், அதன் மூலம் எவ்வளவு வருமானம் கொட்டியது என்பதும்தான் படத்தின் வெற்றியாக உருவானது.

ஆனால் சில படங்கள் இதற்கு நேர்மாறாக, வெளிவந்த போது சரியாக போகாமல் தோல்விப்படம் என முத்திரை குத்தப்பட்டு, நாட்கள் போகப்போக கூட்டம் அதிகமாகி வசூலை வாரிக்குவித்த வரலாறுகளும் உண்டு. மகேந்திரனின் "முள்ளும் மலரும்', பாலாவின் "சேது', மிஷ்கினின் "சித்திரம் பேசுதடி' என பட்டியல் நீளும்.

மக்களுக்குப் பிடித்துப்போனால் மாத்திரமே வாய்வழியாக சொல்லப்பட்டு, இரண்டாம் வாரம் கூட்டம் வரும் என்பது அன்றைய நிலை. இப்படி மக்களுக்குப் பிடித்த திரைப்படங்கள் 175 நாள், 200 நாள் என ஓடி ரசிகனையும், திரைப்படத் தொழில் சார்ந்தவர்களையும் மகிழ்வித்தது. சினிமா கலையாகவும், அதே நேரம் கலை சார்ந்த தொழிலாகவும் இருந்தது.

ஆனால், இன்று ரசிகனின் விருப்பம் முக்கியமில்லை. "இதுதான் படம் இதைப்பார்' என்ற நிலையில், இருக்கும் மொத்த திரையரங்கிலும் ஒரு குறிப்பிட்ட நாயகனின் படத்தைப் போட்டு, சில நேரம் சிறு படங்கள் நன்றாக இருந்தாலும் அதை தியேட்டரைவிட்டே எடுக்கும் நிலைக்கு ஆளாக்கி, தங்கள் படத்தை வெளியிட்டு முழுக்க முழுக்க லாபம் மட்டுமே குறிக்கோளான நிலைக்கு ஓப்பனிங் முறை வழிவகுக்கிறது.

இது திடீரென்று உருவாகிவிடவில்லை. 1990களின் இறுதியில் தமிழ் சினிமா ஒரு மிகப்பெரும் சவாலை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது, அதுதான் திருட்டு வீசிடி என்னும் திரையுலக நோய்.

திரைப்படம் வெளிவந்த அடுத்த நாளே திருட்டு வீசிடி அற்புதமான பிரிண்டுகளாக வெளிவரத் தொடங்கியதும் மக்கள் திரையரங்கிற்குச் செல்வது குறைய ஆரம்பித்தது. 100லிருந்து 500 ரூபாய் வரையில் செலவு செய்து ஒருவர் திரையரங்கில் பார்ப்பதைவிட, 30 ரூபாயில் குடும்பமாக வீசிடியில் பார்த்து முடித்தார்கள்.

மேலும் படித்தவர்கள் மத்தியில் "இவர்களே வெளிநாட்டு படங்களை காப்பியடித்துதான் எடுக்கிறார்கள்... இவர்கள் படத்தை திருட்டுத்தனமாக பார்த்தால் என்ன?' என்கிற மனோநிலையும் உருவானது.

இதனால் திரையரங்கிற்கு வரும் மக்கள் தொகை திடீரென வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. முதல் பத்து, பதினைந்து நாட்களுக்கு படம் ஓடுவதே குதிரைக் கொம்பானது. திரையரங்குகள் காற்று வாங்க ஆரம்பித்தன. பெரிய வெற்றி பெற வேண்டிய படங்கள் சாராசரி வெற்றியைப் பெற்றன. சராசரி வெற்றி வெற்றிருக்க வேண்டிய படங்கள் தோல்வியடைந்தன. இதனால் தயாரிப்பாளர், விநியோகிஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் பலர் லாபம் பார்க்க சிரமப்பட்டார்கள். சிலர் நஷ்டமடைந்தார்கள்.

இந்த நிலையில் 2007ஆம் ஆண்டு தாங்கள் தயாரித்த "சிவாஜி" திரைப்படத்தின் உரிமையை ஏவிஎம் நிறுவனம் விற்க முடிவு செய்தது. சென்னை நகருக்கான உரிமையை "அபிராமி' ராமநாதன் கிட்டத்தட்ட 6.2 கோடிக்கு வாங்கினர். அதுவரை எந்த திரைப்படமும் இப்படி வாங்கப்படவில்லை. இப்படத்துக்கு முன் சென்னையில் அதிக வசூலை குவித்திருந்த "சந்திரமுகி' கூட தொடாத தொகை அது. ஆனால் ராமநாதன் பயப்படவில்லை. தான் போட்ட காசை எடுப்பதற்கு அவர் ஒரு புதிய திட்டத்தைக் கையாண்டார், அதுதான் அதிக திரையரங்குகளில் திரைப்படத்தை வெளியிடும் திட்டம்.

சென்னையில் ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் அதிகபட்சம் 10 அல்லது 15 திரையங்குகளில்தான் அதுவரை வெளியப்பட்டு வந்தது. ஆனால், ராமநாதன் "சிவாஜி' படத்தைக் கிட்டத்தட்ட 30 திரையரங்குகளில் ரிலீஸ் செய்தார், அத்துடன் இணையம் மூலமாகவும், நேரடியாகவும் முன்பதிவுகளை மேற்கொள்ளும் வசதியும் துணையிருக்க, முதல் 10 நாட்களுக்கான டிக்கட்டுகள் படம் வெளிவருவதற்கு முன்பே முன்பதிவு செய்யப்பட்டன. அதற்கு விளம்பரங்கள் பேருதவி செய்தன.

"சிவாஜி' முதல் நான்கு நாட்களில் ஓப்பனிங் வசூலாக மிகப்பெரும் தொகையான 1 கோடியே 34 இலட்சத்தை வசூலித்தது. மூன்றாம் வாரத்தில் போட்ட பணமான 6.2 கோடியை மீட்டெடுத்தது. கிட்டத்தட்ட மொத்தமாக சென்னையில் 12 கோடியை வசூலித்தது "சிவாஜி' படம்.

அதுபோல் ஐங்கரன் நிறுவனம் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் அதிக திரையரங்குகளில் ரிலீஸ் செய்து புதிய வர்த்தகப் பாதையை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது. இப்படியாக தமிழ் சினிமாவின் வர்த்தகம் "சிவாஜி'க்கு பின்னர் புதிய வடிவில் எழுச்சி பெற ஆரம்பித்தது.

சிவாஜிக்கு அடுத்து அதே ஆண்டு மிகப்பெரும் வசூலை குவித்த திரைப்படம் "பில்லா'. சென்னையில் அதன் ஆரம்ப வசூல் மூன்று நாட்களில் 59 இலட்சம். மொத்தமாக "பில்லா' சென்னையில் கிட்டத்தட்ட 4.5 கோடி வரை வசூலித்தது. அன்றைய தேதியில் இது மிகச்சிறந்த வசூலாக கருதப்பட்டது.

"சிவாஜி'க்கு பின்னர் கமலின் "தசாவதாரம்' திரைப்படம் அதிக திரையரங்குகளில் வெளியிடப்பட்டு சிறப்பான வசூலை குவித்தது. சென்னையில் ஓப்பனிங்காக மூன்று நாட்களில் 95 இலட்சம் வசூலித்த "தசாவதாரம்', மொத்தமாக கிட்டத்தட்ட 11 கோடியை வசூலித்தது. வெளிநாடுகளிலும் அதிக திரைகளில் வெளியிடப்பட்டு கணிசமான வசூலை பெற்றது. இது போன்ற சூழலில்தான் ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன், "தமிழ் சினிமாவில் "தசாவதாரம்' திரைப்படம் உலகாளவிய சந்தையைத் தொடங்கியிருக்கிறது. நல்ல மார்க்கெட் இருக்கிறது' என்று பேசினார்.

இதனைத் தொடர்ந்து, முன்னணி நடிகர்களது திரைப்படங்கள் தொடர்ந்து அதிகமான திரையரங்குகளில் வெளியாக ஆரம்பித்தது. ஓப்பனிங் என்பது புதிய பரிமாணம் பெற்றது.

அஜித்தின் "மங்காத்தா' ஐந்து நாட்களில் 1 கோடி 80 இலட்சம் வரை வசூலித்தது. மொத்தமாக 8 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. ரஜினி, கமலுக்கு அடுத்து சென்னையில் 8 கோடியை தொட்ட நடிகர் என்கின்ற பெருமையை அஜித் பெற்றார்.

சூர்யாவின் "7 ஆம் அறிவு' திரைப்படம் ஓப்பனிங்காக ஐந்து நாட்களில் 2 கோடி 20 இலட்சத்தையும், விஜய்யின் "வேலாயுதம்' ஐந்து நாட்களில் 1 கோடி 95 இலட்சத்தையும் வசூலித்தன. "வேலாயுதம்' சென்னையில் 8 கோடி கடந்த முதல் விஜய் படமாகவும் "7 ஆம் அறிவு' ரஜினி, கமலுக்கு அடுத்து 9 கோடியைக் கடந்த நடிகராக சூர்யாவிற்கும் பெருமையைத் தேடிக் கொடுத்தன.

ஒரு திரைப்படம் நன்றாக இருந்தால் மூன்று வாரங்களுக்குள் லாபம் பார்த்துவிடுகின்றார்கள், ஐந்து வாரம் சிறப்பாக ஓடினால் அப்படம் மிகப்பெரும் வெற்றியை பெறுகின்றதாக் கருதப்படுகிறது. முன்னர் 200 நாட்கள் ஓடி பெறப்பட்ட வசூலை இப்போது 20 நாட்களுக்குள் பெற்று விடுகின்றார்கள். அன்று பத்து தியேட்டர்களில் நூறு நாள்.. இன்று நூறு தியேட்டரில் பத்து நாள்.. இதுதான் ஓப்பனிங்கின் மாபெரும் சூட்சுமம்.

2007ம் ஆண்டு ஹிட்டான "பில்லா'வின் முதல் நான்கு நாள் வசூலை, இன்று "ஒரு கல் ஒரு கண்ணாடி' ஒரே நாளில் பெறுகின்றதென்றால், இந்த மாற்றம் ஓப்பனிங் என்னும் குறுக்குவழி மாற்றத்தால் நிகழ்ந்தது என்பதைப் புரிந்துகொள்ள வெகு நேரம் ஆகாது. அதுமட்டுமல்ல, குறிப்பிட்ட நாளில் வேறு எந்தப்படமும் வராமல் பார்த்துக்கொண்டு வெளியிடுவது இதிலிருக்கும் மிகப்பெரிய விஷயம். அதாவது ஒரே ஒருவர் மட்டும் தேர்வு எழுதி, மிகப்பெரும் வெற்றி!

இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் சிறந்த ஓப்பனிங் யாருக்கு? ஒரு திரைப்படத்தின் ஓப்பனிங்கில் நடிகர்கள் ஆதிக்கம் செலுத்தினாலும், நடிகர்களால் மட்டும் மிகச்சிறந்த ஒப்பனிங்கை கொடுக்க முடியாது. நடிகர்களையும் தாண்டி ஒரு திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புத்தான் ஓப்பனிங்கை தீர்மானிக்கிறது. அதோடு எதிர்பார்ப்பு என்பது பெரும்பாலும் குறிப்பிட்ட ஒரு நடிகரும், குறிப்பிட்ட ஒரு இயக்குநரும் சேரும்போது அதிகமாக ஏற்படுகிறது,

இயக்குநரும் இசையமைப்பாளரும் இணையும்போது கூட எதிர்பார்ப்புகள் அதிகரித்த சந்தர்ப்பங்கள் தமிழ் சினிமாவில் இருக்கின்றன. வெற்றிபெற்ற கூட்டணி என்பது ஒரு காரணம். இதையெல்லாம் தாண்டி படத்தை எடுக்க ஆன செலவை விட, விளம்பரச் செலவு அதிகம் செய்யவேண்டும். அப்போதுதான் ஓப்பனிங் என்பதே முழு அர்த்தம் பெறும்.

திரைப்படத்தின் எதிர்பார்ப்பு தவிர்த்து திரைப்படம் வெளியாகும் காலப்பகுதி, திரையரங்குகளின் எண்ணிக்கை போன்றவையும் ஒரு திரைப்படத்தின் ஓப்பனிங்கில் முக்கியத்துவம் செலுத்தும் முக்கிய காரணிகள். பெரிய திரைப்படங்களைப் பொறுத்தவரை எத்தனை திரையரங்குகளில் வெளியிடப்படுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதிக ஒப்பனிங்கை பெறமுடியும். இது தயாரிப்பாளர், வினியோகிஸ்தர் கைகளில்தான் இருக்கிறது. படத்தின் எதிர்பார்ப்பை பொறுத்தே திரையரங்கங்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்டாலும், பண்டிகை காலங்களில் பல திரைப்படங்கள் வருவதால் அதிகமான திரையரங்குகள் கிடைப்பதில்லை. அதிகமான மற்றும் சிறந்த திரையரங்கை பெற்றுக்கொள்ளும் புத்திசாலி விநியோகிஸ்தர் அதிக ஓப்பனிங்கை பெறுகிறார்கள்.

தற்போதைய தமிழ் சினிமா நிலவரப்படி ரஜினி, கமல், அஜித், விக்ரம், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, கார்த்தி, இவர்களும் அடுத்து விஷால், ஜீவா, ஆர்யா போன்றோரும் கணிசமான ஓப்பனிங்கை பெறும் நடிகர்களாக இருக்கிறார்கள். நடிகர்களைத் தாண்டியும் ஒரு சில திரைப்படங்களுக்கு ஓப்பனிங் கிடைத்திருக்கிறது. வடிவேலுவின் "இந்திரலோகத்தில் நா.அழகப்பன்', ராஜேஷ், சந்தானம் எதிர்பார்ப்பில் வெளிவந்த "ஒரு கல் ஒரு கண்ணாடி" இப்படி அமைந்தவை. "இந்திரலோகத்தில் நா.அழகப்பன்' முதல் மூன்று நாட்களில் சென்னையில் 40 இலட்சங்கள் வரை வசூலித்தது. இது அன்றைய தேதியில் விஜய், சூர்யா திரைப்படங்களும் வசூலிக்காத ஓப்பனிங் தொகை. அதற்குக் காரணம் "இம்சை அரசன் 23ம் புலிகேசி' திரைப்படத்தின் வெற்றியால் வடிவேலுவுக்கு ஏற்பட்ட எதிர்பார்ப்புதான்.

இன்று "ஒரு கல் ஒரு கண்ணாடி' யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு முதல் மூன்று நாட்களில் சென்னையில் 1 கோடி 73 இலட்சம் வரை வசூலித்திருக்கின்றது. இது ஒரு மிகபெரும் தொகை. அஜித், விஜய், சூர்யா போன்ற மிக அதிகமான ரசிகர்களை கொண்ட நடிகர்களது திரைப்படங்களின் வசூலை அறிமுக நாயகன் உதயநிதியின் திரைப்படம் எப்படி கடந்து சென்றது? இதற்கு உதயநிதி மட்டும் காரணமல்ல என்பது உதயநிதிக்கும் தெரியும். அப்படியென்றால் இந்த ஓப்பனிங் யாருக்கு? சந்தானத்திற்கா? இல்லை இயக்குநர் ராஜேஷுக்கா? இருவரும் ஒன்றாக சேர்ந்த கூட்டணிக்குத்தான் இந்த ஓப்பனிங் கிடைத்தது.

சந்தானம் இல்லாமல் ராஜேஷ் ஒரு படத்தை இயக்கினாலோ, ராஜேஷ் இல்லாமல் சந்தானம் வேறு திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தாலோ இந்த ஓப்பனிங் நிச்சயமாக கிடைக்க வாய்ப்பே இல்லை. அதுமட்டுமல்ல அந்த நேரத்தில் ரசிகனுக்கு வேறு எந்தப் படத்தையும் கண்ணில் காட்டாதது விநியோகஸ்தர்களின் தனித்திறமை.

ஒரு நாயகன்தான் ஓப்பனிங்கின் காரணகர்த்தா என்றுகூற முடியாது. ரஜினிக்கு அடுத்து தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஓப்பனிங் உதயநிதிக்குத்தான் என்றால், இதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியுமா? ஆனால் ஓப்பனிங் அதை செய்திருக்கிறது. ஓப்பனிங் என்பது ஹீரோவைவிட அந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பில்தான் எப்போதும் இருக்கிறது. ஓப்பனிங் என்பது ஒரு மாய மான்... யாருக்கும் பிடிபடாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஓப்பனிங்: யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்?

ஓரு தயாரிப்பாளருக்கோ, திரையரங்க உரிமையாளருக்கோ ஓப்பனிங் லாபமாக இருக்க முடியும்.

என்னதான் பிரபல நடிகராக இருந்தாலும், அதிகமாக விளம்பரம் தேவைப்படும். பல நேரங்களில் ஒரு படத்தின் செலவை விட, அப்படத்தின் ஓப்பனிங்கை கூட்ட விளம்பரச் செலவு அதிகமாக ஆகும்.

சிறு மற்றும் நல்ல படங்களுக்கு திரையரங்கம் கிடைக்க வாய்ப்புகள் மறுக்கப்படலாம். இதனால் ஒரு தரமான படம் ஓடாமலும் போக வாய்ப்புண்டு. அல்லது ஓடும் படமும் திரையில் இருந்து மிரட்டி எடுக்கப்படவும் வாய்ப்புண்டு.

சினிமா என்பது கலையில் இருந்து, அல்லது யதார்த்த வாழ்க்கையில் இருந்து விலகி வியாபாரம், லாபம் என்று ஆகும். நல்ல கதையோ, சிறப்பம்சமோ இல்லாமல்கூட படம் பண்ணலாம் என்ற நிலை உருவாகும். ரசிகன் "இதுதான் படம்... இதைத்தான் நீ பார்த்ததாக வேண்டும்' என்று மறைமுகமாக நிர்பந்திக்கப்படுகிறான்.

கலை நசுக்கப்பட்டு, அந்த இடத்தில் வியாபாரம் வேர்விட்டு விரிந்து வியாபிக்கிறது.

ஜீவா நடிக்கும் யான்!


jeevas next movie titled as yaan  விண்ணைத்தாண்டி வருவாயா, கோ, முப்பொழுதும் உன் கற்பனைகள், இப்போது தயாரிப்பில் இருக்கும் "நீதானே என் பொன் வசந்தம்" ஆகிய படங்களை தயாரித்த நிறுவனம், ஆர்.எஸ்.இன்போடைன்மெண்ட். இதே நிறுவனம் அடுத்து, பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்கத்தில் ஒரு படம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கு, யான் என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. கதாநாயகனாக ஜீவா நடிக்கிறார். கதாநாயகியாக நடிக்க இந்தி நடிகை ஒருவரிடம் பேசி வருகிறார்கள். நாசர், ஜெயப்பிரகாஷ் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

மும்பையை சேர்ந்த ஒருவர் வில்லனாக நடிக்கிறார். இவர் தவிர, பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத், ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இந்த படத்தை எல்ரெட் குமார், ஜெயராமன் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். படப்பிடிப்பு மும்பையிலும், வெளிநாடுகளிலும் நடைபெற இருக்கிறது.

சம்பளத்தை ரூ.75 லட்சமாக உயர்த்திய எமி ஜாக்சன்..!

Amy Jackson hike her salary ஒரு படம் ஓடி ஹிட்டாகிவிட்டாலே தங்களது சம்பளத்தை உயர்த்திவிடும் நம்மூர் நடிகர், நடிகையர்களுக்கு மத்தியில் வெளிநாட்டில் இருந்து வந்த எமி ஜாக்சன் மட்டும் என்ன விதிவிலக்கா...?, அவரும் தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தியுள்ளார். விஜய் இயக்கிய மதராஸபட்டினம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா இந்தி ரீ-மேக்கில் நடித்தார். இப்போது மீண்டும் விஜய் இயக்கத்தில் தாண்டவம் படத்திலும், ஷங்கர் இயக்கும் ஐ படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் மதராஸபட்டினம் படத்தில் ரூ.5 லட்சம் சம்பளம் வாங்கிய எமி, அடுத்து தாண்டவம் படத்தில் ரூ.30-40 லட்சம் சம்பளம் வாங்கினார். இப்போது அதையும் தாண்டி, ஷங்கரின் ஐ படத்தில் தனது சம்பளத்தை ரூ.75 லட்சமாக உயர்த்தியுள்ளார்.

Friday 20 July 2012

'முகமூடி' இசை வெளியீட்டு விழா!

         யு.டிவி நிறுவனத்தின் முதல் நேரடி பிரம்மாண்ட தயாரிப்பு 'முகமூடி'. ஜீவா, நரேன், பூஜா ஹெக்டே, நாசர் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தினை மிஷ்கின் இயக்கி இருக்கிறார். கே இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விஜய் 'முகமூடி' இசையை வெளியிட, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் பெற்றுக் கொண்டார்.

படத்தின் FIRST LOOKல் வெளியீட்டு விழாவில் திரையிடப்பட்ட TEASER மட்டுமன்றி படத்தின் புதிய டிரெய்லரும், 'நாட்டுல நம்ம வீட்டுல' பாடலை திரையிட்டார்கள்.

இசையமைப்பாளர் கே, முகமூடி படத்தின் 'வாய மூடி சும்மா இருடா', 'தீம் மியூசிக்', 'நாட்டுல நம்ம வீட்டுல' ஆகிய பாடல்களை விழா மேடையில் நேரடியாக பாடினார்கள். 'நாட்டுல நம்ம வீட்டுல' பாடலை எழுதி பாடி இருக்கிறார் இயக்குனர் மிஷ்கின்.



இசையை வெளியிட்டு பேசிய விஜய் " நடிகர் ஜீவாவிற்கு எனது மகன் சஞ்சய் தீவிர ரசிகன். இந்த இசை வெளியீட்டு விழாவில் அவனால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆகையால் என்னுடைய வாழ்த்தை கூறும்படி சொன்னான். அனைத்து இயக்குனர்களுக்கும் ஜீவாவை பிடித்து இருக்கிறது." என்று கூறிவிட்டு ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

"இவ்விசை வெளியீட்டு விழாவிற்கு ஒரே ஒரு செல்போன் மெசேஜ் மூலம் வருவேன்" என்று விஜய் தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார் ஜீவா.

இயக்குனர் மிஷ்கின் " நான் எதோ இதுவரை எடுக்காத கதையை எடுத்து இருக்கிறேன் என்று எல்லாம் கூற மாட்டேன். பெரிய எதிர்ப்பார்ப்போடு எல்லாம் இப்படத்திற்கு வராதீர்கள். இது ஒரு சாதாரண கதை.

பிறகு படம் பார்த்துவிட்டு எதிர்ப்பார்ப்போடு போனோம். ஆனால் படத்தில் ஒன்றுமே இல்லை என்று ப்ளாக்கில் திட்டி எழுதுகிறார்கள்.

என்னுடைய சூப்பர் ஹீரோ ஒரு ப்ளாட்பார்ம்மில் இருந்து தான் உருவாகிறான் என்பது மாதிரி தான் காட்சி வைத்து இருக்கிறேன். இதில் இருந்தே தெரிந்து இருக்கும் முகமூடி ஒரு சாதாரண கதை என்பது" என்று கூறினார்.

இப்படம் ஆகஸ்ட் 31ம் தேதி ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் வெளியாகிறது

ராணா - நயன் : 'ஓங்காரம்'!


தெலுங்கில் 'VEDAM' என்ற படத்தின் மூலம் அனைத்து தென்னந்திய திரையுலகின் கவனத்தையும் ஈர்த்தவர் க்ரிஷ்.

அதே படத்தினை தமிழில் வானம் என்னும் பெயரில் சிம்பு, அனுஷ்கா, பரத் அனைவரும் நடித்தார்கள். அப்படம் தமிழிலும் வரவேற்பு பெற்றது.

க்ரிஷ் தனது படத்தின் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். ராணா, நயன்தாரா இருவரும் இப்படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். தெலுங்கில் 'KRISHNAM VANDAE JAGADHGURUM' என்று தலைப்பிட்டு இருக்கிறார்.

தெலுங்கு, தமிழ் என இரு திரையுலகிலும் தனது படத்திற்கு ஏற்கன்வே வரவேற்பு கிடைத்து இருப்பதால், இப்படத்தினை ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயார் செய்கிறார்.

தமிழில் 'ஓங்காரம்' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள். தமிழில் ராணா நடிக்கும் முதல் படம் இது. இப்படத்தின் படப்பிடிப்பு பாலக்காடு, பொள்ளாச்சியில் நடைபெற்றது.

தற்போது சென்னையில் உள்ள பின்னி மில்ஸில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

விஜய்-ன் Rolls Royce கார்


   இளையதளபதி விஜய் கார் பிரியர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அவர் தற்போது புதிதாக "Rolls Royce -Ghost " கார் வாங்கியுள்ளார். இதன் விலை சுமார் மூன்றரை கோடிக்கும்   அதிகமாம். இன்று நடைப்பெற்ற முகமுடி படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அந்த காரில் வந்திருந்தார். அந்த காரின் படம் இதோ....            

ரஜினியின் தில்லுமுல்லு ரீமேக்கில் சிவா?



   

ரஜினிகாந்த் நடித்துள்ள படங்கள் மறுபடியும் ரீமேக்காவது ஒன்றும் புதிதல்ல. ரஜினி நடித்த 'பில்லா' படத்தினை அஜீத்தும், 'முரட்டுக்காளை' படத்தின் ரீமேக்கில் சுந்தர்.சி நடித்து வெளிவந்தது.
அடுத்த ரஜினி படங்களின் ரீமேக் வரிசையில் 'தில்லு முல்லு', 'மன்மதலீலை' ஆகிய படங்கள் தான் தற்போதைய ஹாட் டாக்.

'தில்லு முல்லு' படத்தினை பல்வேறு தயாரிப்பாளர்களும் உரிமை கோரினார்கள். 'தில்லு முல்லு' படம் ரஜினி நடிப்பில் பெரும் வரவேற்பை பெற்ற படமாகும். கே.பாலசந்தர் இயக்கிய இப்படத்தில் மீசையோடு ஒரு கெட்டப், மீசை இல்லாமல் ஒரு கெட்டப் என ரஜினி காமெடியில் கலக்கிய படம் 'தில்லு முல்லு'.


இப்படத்தின் ரீமேக் போட்டியில் வெற்றி பெற்று இருக்கிறது வேந்தர் பிலிம்ஸ். இப்படத்தில் ரஜினி வேடத்தில் நடிக்க 'சென்னை 28', 'தமிழ் படம்', 'கலகலப்பு' என காமெடியில் கலக்கி வரும் சிவாவை கேட்டு இருக்கிறார்கள்.

நடிகர் ஜீவா படங்களை புறக்கணிக்க தமிழ்நாடு தியேட்டர்கள் சங்கம் அதிரடி முடிவு.






ஜீவா-ஸ்ரேயா ஜோடியாக நடித்த ரௌத்திரம் படம் கடந்த வருடம் ரிலீசானது. தெலுங்கிலும் இப்படத்தை ராச்சா என்ற பெயரில் வெளியிட்டனர். ஆர்.பி. சவுத்ரி இப்படத்தை தயாரித்து இருந்தார்.
தமிழ், தெலுங்கில் 'ரௌத்திரம்' படம் தோல்வி அடைந்ததால் தியேட்டர் அதிபர்கள் நடிகர் ஜீவா நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். ரூ.65 லட்சம் நஷ்டஈடு கேட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தியேட்டர் அதிபர்கள் கூறும் போது, ரௌத்திரம் படத்துக்கு நஷ்ட ஈடு தர சம்மதித்தனர். ஆனால் இதுவரை பணம் கொடுக்கவில்லை. எனவே ஜீவா படங்களை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என்றனர்.
ஜீவா தற்போது 'முகமூடி', நீதானே என் பொன் வசந்தம் படங்களில்  நடிக்கிறார். இதுகுறித்து தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்க செயலாளர் ரோகிணி பன்னீர் செல்வம் கூறும் போது தியேட்டர் உரிமையாளர்களுக்கு தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி ரூ.65 லட்சம் நஷ்டஈடு தர ஒப்புக் கொண்டது உண்மைதான். இந்த பிரச்சினையில் விரைவில் அடுத்த கட்ட முடிவை எடுப்போம் என்றார். ஆனால் ஆர்.பி.சவுத்ரி இதனை மறுத்தார். யாருக்கும் பணம் தருவதாக உறுதி அளிக்கவில்லை என்றார்.

கோச்சடையானுக்கு முன் ரஜினியின் சிவாஜி. 3Dயில் ரிலீஸாகிறது.



       ரஜினியின் 'சிவாஜி' படம் '3டி' தொழில் நுட்பத்தில் உருவாகிறது. வடபழனியில் உள்ள ஸ்டூடியோக்களில் தொழில்நுட்ப நிபுணர்களை வைத்து இதற்கான பணிகள் நடக்கின்றன.
ஹாலிவுட் படங்கள் 3டியில் ரிலீசாகி வருகின்றன. தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான தியேட்டர்களில் 3டி படங்களை ரிலீஸ் செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இது மாதிரி படங்களுக்கு அமோக வரவேற்பு உள்ளது. குறிப்பாக குழந்தைகள் விரும்பி பார்க்கிறார்கள்.
   எனவே தான் சிவாஜி படத்தை 3டி தொழில் நுட்பத்தில் மீண்டும் எடுக்கின்றனர். ஓரிரு மாதங்களில் இப்படம் ரிலீசாக உள்ளது.




கோச்சடையான் படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என தெரிகிறது. அதற்கு முன்பு 3டி சிவாஜி படத்தை திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடக்கின்றன. சிவாஜி படத்தில் ரஜினி, ஸ்ரேயா ஜோடியாக நடித்தனர். ஷங்கர் இயக்கினார். ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்தது. கடந்த 2007 ஜூன் 15-ல் இப்படம் வெளியானது.ரூ. 60 கோடி பட்ஜெட்டில் தயாரித்தனர். ரூ. 128 கோடி வசூல் ஈட்டியதாக கூறப்பட்டது.
      பணக்காரர்கள் பதுக்கிய கறுப்பு பணத்தை மீட்பதே இப்படத்தின் கதை. 'சஹானா', 'வாஜி வாஜி', பெல்லே லக்கா போன்ற இனிமையான பாடல்கள் இதில் உள்ளன.

தீபாவளி ரேசில் முக்கிய படங்களுடன் போட்டியிடும் பவர்ஸ்டாரின் ஆனந்த தொல்லை.


Power Star in Anandha Thollai released in Deepavali.

எப்படிப்பட்ட விமர்சனம் வந்தாலும் அதை அசால்ட்டாக கையாளும் திறமை கொண்ட பவர் ஸ்டார் நடிகர் சந்தன வாசனை நடிகருடன் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்நிலையில் பிரம்மாண்ட இயக்குனர் இயக்கும் ஒரு எழுத்தை தலைப்பாக கொண்ட படத்தில் நடிக்கும் சந்தானத்துடன் ஒரு முக்கிய ரோலில் பவர் ஸ்டார் நடிக்கிறாராம்.


இவரை வைத்து 3 நாள் படப்பிடிப்பை முடித்து விட்டார்களாம். இன்னும் 2 நாள் படப்பிடிப்பு மிச்சமுள்ளதாம். இந்நிலையில் இவர் நடித்துள்ள தொல்லை படத்தை இந்த தீபாவளி ரேசில் விடவும் முடிவு செய்துள்ளாராம் பவர் ஸ்டார்.
 எது எப்படியோ, பவர் ஸ்டார் தமிழ் ரசிகர்களுக்கு இன்னும் நிறைய அதிர்ச்சிகளை கொடுக்கப் போகிறார் என்பது மட்டும் நிச்சயம்.

ரூ.15 சம்பளம் கேட்கும் ஈ இயக்குனர்.




தற்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் `ஈ' படத்தின் மூலம் அப்படத்தின் இயக்குனர் மிகவும் பிரபலமாகிவிட்டார். இதனால் தனது சம்பளத்தையும் உயர்த்திவிட்டாராம். இப்போது ஒரு படத்தை இயக்க ரூ.15 கோடி வரை வாங்குவதாக கூறப்படுகிறது. அப்படியும் சில தயாரிப்பாளர்கள், அந்த டைரக்டரின் கருணைப் பார்வைக்காக, கியூவில் காத்துக் கொண்டு இருக்கிறார்களாம்.

துப்பாக்கி படத்திற்காக ஆண்டிரியாவுடன் டூயட் பாடலைப் பாடிய விஜய்.




விஜய் நடிகர் மட்டுமல்லாது பாடகர் என்பதும் அனைவருக்கும் தெரியும். இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகியுள்ளன.

இந்நிலையில் இவர் முருகதாஸ் இயக்கத்தில் தற்போது நடித்துவரும் ‘துப்பாக்கி’ படத்தில் ஒரு பாடலை பாடியிருக்கிறார். இவருடன் ஆண்ட்ரியாவும் இணைந்து பாடியிருக்கிறார். இந்த பாடலுக்கான வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இந்த பாடல் மிகவும் பிரமாதமாக வந்துள்ளதாம்.

விஜய் இதுவரை பாடிய பாடல்களுக்கு இருந்த வரவேற்பு இந்த பாடலுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்ப்பு இல்லாமல் முகமூடி படத்திற்கு வாருங்கள். இசை வெளியீட்டுவிழாவில் மிஷ்கின்




யு.டிவி நிறுவனத்தின் முதல் நேரடி பிரம்மாண்ட தயாரிப்பு 'முகமூடி'. ஜீவா, நரேன், பூஜா ஹெக்டே, நாசர் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தினை மிஷ்கின் இயக்கி இருக்கிறார். கே இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விஜய் 'முகமூடி' இசையை வெளியிட, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் பெற்றுக் கொண்டார்.

படத்தின் FIRST LOOKல் வெளியீட்டு விழாவில் திரையிடப்பட்ட TEASER மட்டுமன்றி படத்தின் புதிய டிரெய்லரும், 'நாட்டுல நம்ம வீட்டுல' பாடலை திரையிட்டார்கள்.

இசையமைப்பாளர் கே, முகமூடி படத்தின் 'வாய மூடி சும்மா இருடா', 'தீம் மியூசிக்', 'நாட்டுல நம்ம வீட்டுல' ஆகிய பாடல்களை விழா மேடையில் நேரடியாக பாடினார்கள். 'நாட்டுல நம்ம வீட்டுல' பாடலை எழுதி பாடி இருக்கிறார் இயக்குனர் மிஷ்கின்.


இசையை வெளியிட்டு பேசிய விஜய் " நடிகர் ஜீவாவிற்கு எனது மகன் சஞ்சய் தீவிர ரசிகன். இந்த இசை வெளியீட்டு விழாவில் அவனால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆகையால் என்னுடைய வாழ்த்தை கூறும்படி சொன்னான். அனைத்து இயக்குனர்களுக்கும் ஜீவாவை பிடித்து இருக்கிறது." என்று கூறிவிட்டு ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

"இவ்விசை வெளியீட்டு விழாவிற்கு ஒரே ஒரு செல்போன் மெசேஜ் மூலம் வருவேன்" என்று விஜய் தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார் ஜீவா.

இயக்குனர் மிஷ்கின் " நான் எதோ இதுவரை எடுக்காத கதையை எடுத்து இருக்கிறேன் என்று எல்லாம் கூற மாட்டேன். பெரிய எதிர்ப்பார்ப்போடு எல்லாம் இப்படத்திற்கு வராதீர்கள். இது ஒரு சாதாரண கதை.

பிறகு படம் பார்த்துவிட்டு எதிர்ப்பார்ப்போடு போனோம். ஆனால் படத்தில் ஒன்றுமே இல்லை என்று ப்ளாக்கில் திட்டி எழுதுகிறார்கள்.

என்னுடைய சூப்பர் ஹீரோ ஒரு ப்ளாட்பார்ம்மில் இருந்து தான் உருவாகிறான் என்பது மாதிரி தான் காட்சி வைத்து இருக்கிறேன். இதில் இருந்தே தெரிந்து இருக்கும் முகமூடி ஒரு சாதாரண கதை என்பது" என்று கூறினார்.

இப்படம் ஆகஸ்ட் 31ம் தேதி ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் வெளியாகிறது.

விஷாலும் எனக்கு பொருத்தமான ஜோடி தான்! - த்ரிஷா !

vishal with  my  pair -Trisha


       உங்கள் மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோது, விஷாலுடன் நடிக்க நீங்கள் மறுத்ததாக கூறப்படுகிறதே என, த்ரிஷாவிடம் கேட்டால், "அப்படியெல்லாம் இல்லவே இல்லை என, சத்தியம் செய்கிறார். விஷாலும், நானும் நீண்ட கால நண்பர்கள். அதனால், நாங்கள் சேர்ந்து நடிக்க ஆசைப் பட்டது உண்டு. ஆனால், அப்போது அமையாத சந்தர்ப்பம், இப்போது, "சமர் படத்தில் கிடைத்திருக்கிறது எனக் கூறும் த்ரிஷா, விஜய், அஜீத், விக்ரம் மாதிரி, விஷாலும் எனக்கு பொருத்தமான ஜோடி தான் என்கிறார்.

ஜெயம் ரவிக்கு மனைவியான மேக்னாராஜ்!



Jayam Ravi meknaraj wife!
       சினிமாவில் அறிமுகமான நேரத்தில், அடுத்த நயன்தாரா என, பரபரப்பாக பேசப்பட்டவர், மேக்னாராஜ். ஆனால், இவர் நடித்த படங்கள் வெற்றி பெறாததால், பின்தங்கியே இருக்கிறார். இந்நிலையில், தற்போது, சமுத்திரகனி இயக்கும், "நிமிர்ந்து நில் படத்தில், 48 வயது வேடத்தில் நடிக்கும் ஜெயம் ரவிக்கு, மனைவியாக நடிக்கிறார் மேக்னாராஜ். "கதைப்படி, இது ரொம்ப வலுவான வேடம். அதனால், இந்த படம், தமிழில் எனக்கு பெரிய திருப்புமுனையாக அமையும் என்கிறார் அவர்.

Thursday 19 July 2012

பில்லா 2 - விகடன் விமர்சனம்


''எங்கேர்ந்து வர்ற?''
 ''கடல்லேர்ந்து!''
நிமிர்ந்து உட்கார்ந்தது தப்பு. கிராஸ் ஃபயரில் பலியாகும் அப்பாவிப் பொதுமக்களின் கதிதான் ஆடியன்ஸுக்கும்!
இது டேவிட், 'டான்’ பில்லா ஆகும் கதை.
இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதியாக வந்து இறங்குகிறார் அஜீத். (இனப் போரை இப்படி இன்ட்ரோ ஊறுகாய் ஆக்குவது காலக் கொடுமையடா!) அகதிகள் முகாமுக்குள் நடக்கும் தீப்பொறி உரசலில் வெடித்துக் கிளம்பி, 'உலகையே கட்டுப்படுத்தும்’ டான் ஆக உருமாறுகிறார். கோட் சூட், கூலிங் கிளாஸ், ஒரு கத்தி மற்றும் பல துப்பாக்கிகளைக்கொண்டு அதைச் சாதிப்பதுதான் 'அஜீத்’ ஸ்பெஷல். டைட்டிலில் கதை என்று மூவரின் பெயர் இடம் பெறுகிறது. மூன்று பேர் சேர்ந்து செய்த அந்தக் கதை படத்துல எங்கே சார்? அஜீத் ரசிகர்கள் மட்டும்தான் படம் பார்க்க வருவார்கள் என்ற அதீத தன்னம்பிக்கையோ இயக்குநர் சக்ரிக்கு?
டான் தோற்றத்துக்கு அஜீத்தின் தோற்றம், லுக், நடை... எல்லாம் பக்கா. 'என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளையும்... ஒவ்வொரு நிமிஷத்தையும்...’ - என்று துப்பாக்கி முனையில் பஞ்ச் டயலாக்கோடு முதல் காட்சியிலேயே 'தலை’ காட்டும் அஜீத், அதற்குப் பின் சிலபல இடங்களில் பேசும் அத்தனையும் பஞ்ச்தான். அப்படிப் பேசாத சமயம், ஒன்று சுடுகிறார்... அல்லது கழுத்தை அறுக்கிறார் (எதிரிகளைத்தான்!). அஜீத் நடந்தாலே படம் ஓடிவிடும் என்ற நம்பிக்கை இனியேனும் கலையுமா?
'அப்பாஸி’ சுதன்ஷ§ பாண்டேவும் 'டிமிட்ரி’ வித்யுத் ஜம்வாலும் 'பில்லா’வுக்குச் சவாலான கம்பீரத்தோடும் கெத்தோடும் இருக்கிறார்கள். 'மாமா... மாமா’ என்று சிணுங்கிக்கொண்டே காமாசோமாவாக வந்துபோகிறார் பார்வதி. எப்போதும் நீச்சல் குளத்திலேயே பழியாகக்கிடக்கும் 'பிகினி மோகினி’ புரூனே, அதிலேயே உயிர்விடுவது... அடடடா!
ஒரு போலீஸுடனான தகராறு சென்னை, கோவா, ரஷ்யா என்று அஜீத்தை உயர்த்திச் செல்லும் 'செயின் ரியாக்ஷன்’ எத்தனை சுவாரஸ்யமானதாக அமைந்திருக்க வேண்டும்? சர்வதேச நிழலுலக தாதாக்கள் ஒவ்வொரு சவாலையும் எவ்வளவு மதியூகத்துடன் கடக்க வேண்டியிருக்கும்? ஆனால், அஜீத்  அரசாங்கப் பாதுகாப்பில் இருக்கும் ஆயுத வேனைக் கடத்தும் சாகசம்... அடப் போங்க சார்... போங்கு!
இந்தி, தெலுங்கு, ரஷ்ய மொழிகளுக்கு எல்லாம் தப்புத் தப்பு தமிழில் சப்-டைட்டில் போடத் தெரிந்தவர்களுக்கு (படத்தின் நாளிதழ் விளம்பரங்களில்கூடத் தப்பு!), ஈழ அகதிகளை ஈழத் தமிழ் பேசவைக்கத் தெரியாதா? இத்தனைக்கும் கோவா முதல்வர்கூட சுத்தத் தமிழ் பேசுகிறார்!    
யுவன் ஷங்கரின் அதிரடிக்கும் பின்னணி இசையும் ஆர்.டி.ராஜசேகரின் அசரடிக்கும் ஒளிப்பதிவும் மட்டுமே 'டான் சினிமா கோட்டிங்’ கொடுக்கின்றன. 'நல்லவங்களைக் கண்டுபிடிக்குறதுதான் கஷ்டம்’, 'எனக்கு நண்பனா இருக்கத் தகுதி தேவையில்லை. ஆனா, எதிரியா இருக்கத் தகுதி தேவை’, 'தோத்துட்டா அவன் தீவிரவாதி, ஜெயிச்சுட்டா அவன் போராளி’ போன்ற இடங்களில் இரா.முருகன், முகமது ஜாபரின் வசனங்கள் ஷார்ப்.
அப்பாஸியோ, டிமிட்ரியோ அல்ல... லாஜிக், மேஜிக் என எந்த விதத்திலும் ஈர்க்காத கதையே 'பில்லா’வுக்கு வில்லன்.
பில்லா... 'தல’ ரசிகர்களுக்கு மட்டுமான குல்லா!

ஆந்திராவில் வளரும் வாலு!

     சிம்புவின் 'வாலு' ஹைதராபாத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. தெலுங்கு பட நாயகன் மனோஜின் ஊர் என்பதால், இரவு நேரங்களில் பார்ட்டி கொண்டாட்டம் தானாம்.

சிம்பு, ஹன்சிகா, சந்தானம் உட்பட பலர் நடித்து வரும் 'வாலு' படத்தினை விஜய் சந்தர் இயக்கி வருகிறார். நிக் ஆர்ட்ஸ் தயாரித்து வருகிறது.

தமிழகத்தில் மட்டுமே படப்பிடிப்பு, பாடல்கள் வெளிநாட்டில் என்று திட்டமிட்டது படக்குழு. ஆனால் நடந்ததே வேறு.

ரெயில்வே காலனி, ரெயில்வே ஸ்டேஷன் ஆகியவற்றில் 60% காட்சிகள் எடுக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். ஆகையால் தென்னிந்திய ரயில்வே நிர்வாகத்தினரிடம் ஒரு ரெயில்வே ஸ்டேஷனை வாடகைக்கு கேட்டு இருக்கிறர்கள். அதற்கு ரயில்வே நிர்வாகம் செவி சாய்க்கவில்லை.

படம் தீபாவளிக்கு ரிலீஸ் என்று விளம்பரம் செய்துவிட்டோமே என்று ஆலோசித்தவர்கள் நேரடியாக South Central Railway நிர்வாகத்திடம் கேட்டிருக்கிறார்கள். அவர்கள் உடனே ஹைதராபாத் பக்கத்தில் உள்ள ஸ்டேஷன் ஒன்றை கொடுத்து இருக்கிறார்கள்.

ஹைதராபாத் தனது நண்பன் மனோஜ் ஊர் என்பதால் சிம்பு உடனே ஒ.கே சொல்ல, 'வாலு'வை வளர்க்க அங்கு சென்று விட்டார்கள். படத்தின் கதைப்படி சிம்புவின் அப்பா ரெயில்வே ஸ்டேஷன் மாஸ்டர். அதனால் தான் இந்த ரெயில்வே ஸ்டேஷன் போராட்டமாம்.

'வாலு' படத்தில் வில்லனின் பெயர் ஆதித்யா. இவர் கன்னட படங்களில் நாயகனாக நடித்து இருக்கிறார். 'வாலு' படத்தின் கதைப்படி ஹன்சிகா, ஆதித்யா பின்னால் சுற்றுவாராம்.... சிம்பு, ஹன்சிகா பின்னால் சுற்றுவாராம்.

படப்பிடிப்புக்காக செலுத்தப்படும் டெபாசிட் தொகையும் அதிகம், வாடகையும் அதிகம் என்பதால், பரபரப்பாக படப்பிடிப்பை நடத்தி வருகிறாரகள்.

ஆர்யா.. அனுஷ்கா.. ஆற்றுப்படை!



'மயக்கம் என்ன' படத்தினைத் தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் 'இரண்டாம் உலகம்' படத்தினை ஜார்ஜியா நாட்டில் படம்பிடித்து வருகிறார்.
ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.

செல்வராகவன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் இந்த பெரிய பட்ஜெட் படத்திற்காக ஆர்யா, அனுஷ்கா இருவருமே martial arts கற்று வருகிறார்கள். இருவருக்கும் என தனித்தனியாக martial arts கற்பிக்க ஸ்பெஷலிஸ்ட்களை நியமித்து இருக்கிறாராம் செல்வராகவன்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஒரு காட்சிக்காக அங்குள்ள ஆற்றில் ஆர்யா மற்றும் அனுஷ்கா இருவரும் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினார்களாம்.

ஆர்யா - அனுஷ்கா இருவருமே ஒன்றிணைந்து " அது எப்படி நாம ரெண்டு பேர் மட்டும் தண்ணில இருக்கலாம்? " என்று ஒட்டு மொத்த படக்குழுவையும் தண்ணீருக்குள் இழுத்து விட்டார்களாம்.

பிறகு அனைவருமே சந்தோஷமாக பொழுதை போக்கி இருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீடு எப்போது என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இசை வெளியீடு முடிந்து, அதற்குப் பிறகு 1 மாதம் கழித்து தான் படம் வெளியாகும் என்கிறது கோலிவுட்.

சின்னத்திரையிலும் கலக்க வருது காஞ்சனா பேய்!


     

நடன இயக்குனர், ஹீரோ, இயக்குனர், ஆன்மிகவாதி, சமுகசேவகர் என ராகவா லாரன்ஸுக்கு பல முகங்கள் இருந்தாலும், அவருக்கு சூப்பர் ஹிட் இயக்குனர் என்ற அடையாளத்தைக் கொடுத்து விட்டது அவர் இயக்கிய காஞ்சனா திரைப்படம்!

வெறும் இரண்டு கோடி ரூபாயில் எடுக்கபட்ட இந்தப்படம், 25 கோடி ரூபாயை வசூலாக அள்ளியது. மேலும் இந்தப் படத்தின் ரீமேக் உரிமை இந்தியாவின் எல்லா முக்கிய மொழிகளிலும் கனிசமான விலைக்கு விற்பனையாகி இருக்கிறது. இந்நிலையில் காஞ்சனாவின் மூன்றாம் பாகத்தை இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் லாரண்ஸ், அதற்கு தமன்னாவின் கால்ஷீட்டை எதிர்பார்த்து காத்திருகிறார்.

காஞ்சானா மூன்றாம் பாகத்துக்காக தமிழ் ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். ஆனால் முன்றாம் பகம் வெளிவரும் முன்பே விஜய் டிவி புத்திசாலித்தனாமாக முந்திக்கொண்டிருகிறது. காஞ்சனா என்ற தலைப்பிலேயே புதிய அமானுஷ்யத் தொடரை தொடங்குகிறது! வரும் ஜூலை 23-ஆம் தேதி முதல் 'இந்த புத்தம் புதிய தொடரை ஒளிபரப்பு செய்ய ஆரம்பிக்கிறது. பூஜா இத்தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். இந்த தொடருக்கான கதாநாயகி தேர்வுக்காக நூற்றுக்கணக்கான பேருக்கு தேர்வு நடத்தில் இறுதியில் பூஜாவை தேர்வு செய்திருக்கிறார்கள்.

அழகர் இயக்க இந்தத் தொடர் ஒரு அழகான கிராமத்திற்கு நேயர்களை அழைத்துச் செல்கிறது. கல்வி மேற்படிப்பிற்காக வெளிநாட்டில் வாழும் காஞ்சனா தன் கிராமத்தையும், தன் தாத்தா பாட்டியையும் பார்க்கும் ஆவலில் அவளது கிராமத்திற்கு வருகை தருகிறாள்.

காஞ்சனாவை பார்க்கும் அவளது சொந்தங்கள் மகிழ்ச்சியடைந்தாலும் அவர்களுக்குள் அவளை பார்த்த மாத்திரத்தில் இருந்து கவலை தொற்றிக்கொள்கிறது. அதற்கான காரணம் என்ன. அவள் எதிர் நோக்கும் சம்பவங்கள் பல அவளை பல உண்மைகளை அறியத்தூண்டுகிறது. அவள் ஆசையாக விரும்பி வாங்கும் ஒரு பட்டுப்புடவையில் நைதிருக்கும் படங்கள் அவள் வாழ்க்கையில் நடந்த, நடக்கவிருக்கும் சம்பவங்களை குறிக்கின்றன.

ஒரு புதிராக செல்லும் அவளது வாழ்க்கையில் அவளுக்கு அதிர்ச்சியளிக்கக் கூடிய சம்பவங்கள் நடக்கின்றன. அதில் மறைந்திருக்கும் மர்மங்கள் என்ன? அவள் யார்? எதற்காக அவள் அந்த ஊருக்கு வரவேண்டும்? காஞ்சனா என்பவள் ஒரு தனி நபர் அல்ல, அவளைப்போன்று ஏழு சக்தி உள்ளன என்ற உண்மையை அவள் அறியும் நேரம் வருகிறது. அந்த சக்திகளை அவள் தேடிச்செல்வாளா? காஞ்சனா தொடரை விருவிருப்பாகவும், மர்மங்கள் நிறைந்த தொடராகவும் வழங்கவிருக்கிறார் அழகர். வரும் ஜூலை 23-ஆம் தேதி முதல் திங்கள் - வெள்ளி இரவு 8 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் காஞ்சனாவுக்கு ஆதரவு பெருகினால் வாரத்தில் ஐந்து நாட்கள் என்று மாற்ற இருக்கிறார்களாம்!

பில்லா 2 உருவான விதம் Video Attached..



ரசிகர்களின் வரவேற்பில் இருக்கும் பில்லா 2 உருவான விதம் உங்களுக்காக


  

பில்லா 2 தற்போதைய டாக்..! லாபமா, நஷ்டமா..!



தமிழ் சினிமா ஆர்வலர்களின் தற்போதைய டாக் எதுவென்றால் ‘பில்லா 2′ லாபம் தருமா அல்லது நஷ்டம் ஏற்படுத்துமா என்பது தான்.
அஜீத் நடிப்பில் வெளியான ‘பில்லா 2′ படம் முதல் நாள் வரி நீங்கலாக 7.61 கோடி கல்லா கட்டியது.

லாபமா, நஷ்டமா என்று பார்த்தால் படத்தினை வெளியிட்டு இருக்கும் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு நஷ்டம் ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.
எப்போதுமே ஒரு படத்தினை தயாரித்தாலோ, விநியோகித்தாலோ லாபமும் எனக்குத் தான், நஷ்டம் வந்தாலும் எனக்குத் தான் என்கிற பாணியில் படங்களை வெளியிடுவது ஆஸ்கர் ரவிச்சந்திரன் வழக்கம்.

‘அந்நியன்’, ‘தசாவதாரம்’ போன்ற மெகா பட்ஜெட் படங்களை இவ்வாறு வெளியிட்டு லாபமும் அடைந்தார். ஆனால் தற்போது பில்லா 2 இவருக்கு 1 முதல் 5 கோடி வரை நஷ்டம் ஏற்படுத்தும் என்கிறது கோலிவுட்.

காரணம், ‘பில்லா 2′ படத்தின் முதல் நாள் 7.61 கோடி, இரண்டாம் நாள் 5.23 கோடி, மூன்றாம் நாள் 4.92 கோடி என்று சரிவதாலும், படத்தினைப் பற்றி இருவேறு விமர்சனங்கள் உலா வருவதாலும் படம் நஷ்டம் ஏற்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறதாம்.
மேலும், படத்தின் வசூல் வரும் வாரங்களில் கடுமையாக சரியும் என்ற பேச்சு நிலவி வருகிறது.

துவண்ட பில்லா 2 – தூக்கி நிறுத்தும் முயற்சிகள் ஆரம்பம்!!



நல்லவங்களை கண்டு பிடிக்கிறதுதான் கஷ்டம். அ‌ஜீத் பில்லா 2-வில் சொல்லும் இந்த வசனத்துக்கு அவரது படமே உதாரணமாகிப் போனதை என்னவென்று சொல்ல. படம் வெளியான முதல்நாளே படம் ரொம்ப சுமார் என்று விமர்சனங்கள் வரத் தொடங்கின. மூன்றே நாள்… தியேட்டர்கள் காலி. படம் மோசம் என்றால் இரண்டே நாளில் உஷாராகிவிடுகிறார்கள்.
விமர்சனத்தைப் பார்த்து மூலையில் சுருண்டால் போட்ட பணத்தை எப்படி எடுப்பது. அதனால் ரசிகர்களை மீண்டும் தியேட்டருக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியிருக்கிறது பில்லா 2 டீம். முதல்கட்டமாக படத்தில் இடம்பெறாத இதயம் என்ற பாடலை சே‌ர்க்கப் போகிறார்களாம். அதையடுத்து மேக்கிங் ஆஃப் பில்லா 2.

படத்தின் மைனஸில் ஒன்று பாடல்கள். அதேபோல் படத்தைப் பார்த்து கடுப்பாகி வெளியேறும் ரசிகனை மேக்கிங் ஆஃப் பில்லா 2 இன்னும் கடுப்பேற்றாது என்று என்ன உத்தரவாதம். முயற்சிகள் ‌ரிவர்ஸ் கிய‌ரில் திருப்பியடிக்காமல் இருந்தால் ச‌ரிதான்.

காஜல் அகர்வால் மீது தாணு புகார்...!




காஜல் அகர்வால் கால்ஷீட் பிரச்னை செய்வதால் விஜய் பட ஷூட்டிங் தாமதமாவதாக தயாரிப்பாளர் புகார் கூறுகிறார். தமிழில் சூர்யாவுடன் மாற்றான், விஜய்யுடன் துப்பாக்கி படங்களில் நடிக்கிறார் காஜல் அகர்வால். இந்தியில் ஒரு படத்திலும் தெலுங்கில் 2 படங்களிலும் நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு படங¢களில் நடித்துக்கொண்டிருந்தபோது, திடீரென வந்த இந்தி வாய்ப்பை ஏற்றுக்கொண்டார் காஜல். இதனால் அவரது கால்ஷீட் தேதிகளில் குளறுபடி ஏற்பட்டது. மாற்றான், துப்பாக்கி என 2 படங்களிலும் காஜல் நடிக்க வேண்டிய பாடல் காட்சிகள் பாக்கி உள்ளது.

ஆனால் குறிப்பிட்ட தேதிகளில் ஷூட்டிங்கிற்கு காஜல் போகாததால் அந்த பாடல் காட்சிகளை படமாக்க முடியாமல் படக்குழு தவித்ததாம். சூர்யாவுடன் காஜல் டூயட் பாடும் பாடலை மாற்றான் படத்துக்காக வெளிநாட்டில் படமாக்க கே.வி.ஆனந்த் திட்டமிட்டார். இதற்காக கடந்த 2 வாரங்களுக்கு முன் காஜலின் கால்ஷீட் வாங்கியிருந்தார்.

ஆனால் சொன்ன தேதியில் அவர் வரவில்லை.
இந்தி பட ஷூட்டிங்கிற்கு சென்றுவிட்டார். ஸாரி, கொஞ்சம் அட்ஜெட் பண்ணிக்குங்க என்று மட்டும் காஜலிடமிருந்து பதில் வந்ததாம். இதனால் அந்த பாடல் காட்சியை சென்னை ஸ்டுடியோவிலேயே படமாக்க யோசித்திருககிறார் ஆனந்த். இதேபோல் துப்பாக்கி படத்தில் 2 பாடல்கள் பாக்கி உள்ளது.

இதில் பங்கேற்க தனது கால்ஷீட் தேதியை மாற்றி கொடுத்துள்ளாராம் காஜல். இது குறித்து பட தயாரிப்பாளர் தாணு கூறும்போது, துப்பாக்கி படம் தாமதம் ஆவது உண்மைதான். காஜல் கொடுத்துள்ள தேதிகளில் பாடல் காட்சிகளை படமாக்க முடியாத நிலை உள்ளது. இதனால் ஆகஸ்டில்தான் ஷூட்டிங் நடத்த முடியும் என்றார்.

அஞ்சலியிடம் இருந்து விஷால் ஒதுங்கிப் போவது ஏன்?




ஏ.சி ரிமோட் கையில் இருந்தும் எக்கச்சக்க அனலில் வாடிக் கொண்டிருக்கிறார்விஷால். 'கலகலப்பு' படத்தை தொடர்ந்து சுந்தர்சி எடுத்துக் கொண்டிருக்கும் 'மதகஜராஜா' படத்தில் விஷால்தான் ஹீரோ. இவருக்கு ஜோடி அஞ்சலி.

படப்பிடிப்பில் அஞ்சலி பக்கம் திரும்புவதே இல்லையாம் விஷால். ஷாட் ரெடி என்றால் மட்டும் கொஞ்சிக் கொள்ளும் இருவரும் 'கட்' என்றதும் காட்டுத்தனமாக விலகி நிற்கிறார்களாம்.

விரல்கள் உரசிக் கொண்டாலே கெமிஸ்ட்ரி, பயாலஜி என்று பீலா விடும் ஜிகினா ஏரியாவில் இப்படி ஒரு அடக்க ஒடுக்கம் எதற்காக? இந்த படத்தின் இன்னொரு ஹீரோயின் விஷாலின் 'வருங்கால வைப்பு நிதி' என்பதால்தான் இத்தனை அலர்ட்டாம்!

"பாலா, அமீர், சசி... இந்திக்கு வந்தால் மிரட்டுவார்கள்! அனுராக் காஷ்யப்


கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர்... ரத்தம், வன்முறை, ஆபாச வசனங்கள், நம்பிக்கைத் துரோகம்... இந்தியில் ஒரு யதார்த்த சினிமா. பீகார் - ஜார்கண்ட் மாநிலங்களின் நிலவிய லையும் அங்கு வாழும் இரு பிரிவினரின் தலைமுறை தாண்டிய கோபத்தையும் சுரங் கத் தொழிலாளர்களின் வாழ்வியல் பின்னணி யோடு ரொம்பவே காரமாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார் அனுராக் காஷ்யப். 'தேவ் டி’, 'குலால்’ படங்களை மறைத்து 'கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர்’ அனுராக் காஷ்யப் மீது புது நம்பிக்கை விதைத்திருக்கிறது.
ஜார்கண்ட் மாநில தன்பாத் மாவட்டத்தில் இருக்கும் சிறு நகரம் வாஸிப்பூர். இங்கு இஸ்லாமியர்களுள் இரு பிரிவினரான குரேசிகளுக்கும் கான்களுக்கும் இடையிலான பிரச்னை மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது படம். காலையில் சைக்கிளில் வந்து வீட்டு வாசலில், 'அம்மா பால்’ என்று கூவிக் குண்டு வீசுவது, ரயிலையே மடக்கிக் கொள்ளையடிப்பது, எதிரிகளை ஈவு இரக்கம் இல்லாமல் கூறுபோட்டு மாட்டுக் கறியோடு கறியாகக் கசாப்பு ஆக்குவது, சல்லிசு விலையில் கிடைக்கும் நாட்டுத் துப்பாக்கிகள், ஊரை மிரட்டும் தாதா... வீட்டில் மனைவியிடம் விளக்குமாறால் அடிவாங்குவது, கணவன்-மனைவிக்கு இடையிலான ஆபாச அந்தரங்கம் என அப்படியே அச்சு அசல் இந்திய பின்தங்கிய மாநில நிலவரத்தைப் படம் பிடித்திருக்கிறார் அனுராக். ('கண்டிப்பாகக் குழந்தைகளை அழைத்து வராதீர்கள்!’ என்பது அனுராக் காஷ்யபின் வேண்டுகோள்!)
 மொத்தம் ஐந்து மணி நேரம் ஓடும் படத்தில் சரிபாதியை மட்டும் முதல் பாகமாக வெளியிட்டு இருக்கிறார் அனுராக். இரண்டாவது பாகம் ஆகஸ்ட்டில் ரிலீஸ். படத்துக்குப் பின்னணி இசை ஜி.வி.பிரகாஷ்; படத் துவக்கத்தில் நன்றி அறிவிப்புப் பட்டியலில்... 'மதுரை நண்பர்கள் பாலா, அமீர், சசிகுமார் மூவருக்கும் நன்றி!’ என்ற வரிகள் எனத் தமிழர்களுக்கு இன்னும் நெருக்கமான படம் இது. ஜெர்மனி யில் மனைவியோடு ஓய்வில் இருந்த அனுராக் காஷ்யபைப் பிடித்தேன். 'சென்னை அழைப்பு’ என்றதும் உற்சாகமாகிவிட்டார் காஷ்யப்!
''சென்னை எப்பவும் என் மனசுக்கு நெருக்கமான ஊர். மண்ணும் அதன் மக்களின் வாழ்க்கையும் அதிகம் பதிவாவது தமிழில்தான். பாலாவின் 'நான் கடவுள்’, அமீரின் 'பருத்தி வீரன்’, சசிகுமாரின் 'சுப்ரமணியபுரம்’... இந்த மூன்று படங்களும் என் தூக்கத்தைக் கலைத் தவை. பீகாரின் வாஸிப்பூர் - தான்பாத் பகுதி களில் ஒருகாலத்தில் மாஃபியாக்கள் ஆதிக் கம் அதிகம் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால், என்னிடம் இந்தக் கதையை முதலில் செய்யது காத்ரி சொன்னபோது நான் நம்பவில்லை. 'சிட்டி ஆஃப் காட்’ கதையை உல்டா பண்ணிச் சொல்கிறாரோ என்று தவறாக நினைத்து, 'பார்க்கலாம்’ என்று அனுப்பிவைத்தேன். செய்யது காத்ரிக்கு என் மீது கோபம் வந்திருக்க வேண்டும். உடனே, தன் ஊரான வாஸிப்பூருக்குத் திரும்பி, பல ஆண்டுகள் தான் சேகரித்துவைத்திருந்த பேப்பர் கட்டிங்குகளைக் கொண்டுவந்து என்னிடம் காட்டினார். அவர் சொன்னது உண்மைதான் என்பதை உணர்ந்தேன். அந்தப் பகுதிகளில் என் அடையாளத்தை மறைத்து மாதக் கணக்கில் சுற்றி அங்கு இருக்கும் இன்னோர் உலகத்தை உணர்ந்துகொண்டேன். உடனே, காத்ரியை வரவழைத்து ஸ்க்ரிப்ட்டைத் தயாரிக்கத் தொடங்கினேன். எதையும் நீக்க முடியாத அளவுக்கு ஐந்து மணி நேரப் படத்துக்கான ஸ்க்ரிப்ட் அமைந்தது. அதனால், படத்தை இரண்டு பாகங்களாக்கிவிட்டோம்.''  
''இருந்தாலும் இவ்வளவு ரத்தமும் கெட்ட வார்த்தைகளும் தேவையா?''
''விமர்சனங்களை நான் வரவேற்கிறேன். என் படங்கள் உலக சினிமாக்களின் தழுவல்கள் என்றுகூடத்தான் விமர்சிக்கிறார்கள். நான் நிஜத்தைப் பதிவுசெய்ய விரும்புகிறேன். டாக்குமென்டரிக்கும் வெகுஜன சினிமாவுக்கும் உள்ள நுட்பமான இடைவெளியை என் படங்கள் நிரப்புவதால் அவை இவ்வாறு விமர்சிக்கப்படுகின்றன. வன்முறையையோ கெட்ட வார்த்தைகளையோ நான் வலிந்து திணிப்பது இல்லை. என் படத்தின் ரசிகர்கள் அனைவரும் குடும்பம் குடும்பமாக தியேட்டரில் அமர்ந்து படம் பார்ப்பவர்கள்தான். அந்தப் பொறுப்பு உணர்வோடு படங்களைத் தருவதில்தான் எனக்கும் உடன்பாடு. ஆனால், அதற்காக உண்மையை மழுங்கச் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.''
''தமிழ்ப் படங்கள் இயக்கும் எண்ணம் உண்டா?''
''மணிரத்னம் சாருடன் 'யுவா’ (ஆய்த எழுத்து) படத்திலும் ராம்கோபால் வர்மாவுடன் 'சத்யா’ உள்ளிட்ட பல படங்களிலும் கதாசிரியராகவும் வசனகர்த்தாவாகவும் வேலை பார்த்திருக்கிறேன். இருவரின் 'ஸ்கூல் ஆஃப் ஃபிலிம் மேக்கிங்’ என்னை சினிமாவின்பால் அதிகம் ஈர்த்தது. தமிழின் அனைத்து முக்கிய இயக்குநர்களின் படங்களையும் பார்த்துவிடுவேன். இப்போது பாலா, அமீர், சசிகுமார் ஆகிய மூவரும் தமிழில் பார்க்க வேண்டிய படங்களை எனக்குப் பரிந்துரைப்பார்கள். நான் தமிழ்ப் படங்கள் இயக்குவது இருக்கட்டும்... அவர்கள் இந்திக்கு வந்தால் மிரட்டி எடுப்பார்கள். பார்க்கலாம்... எதிர்காலத்தில் நான் அங்கு வருவதும் அவர்கள் இங்கு வருவதும்கூடச் சாத்தியம்தான்!''

‘வாலு’ படத்தில் சிம்புக்கு வில்லனாக கன்னட நடிகர்



சிம்பு, ஹன்ஷிகா மொத்வானி, சந்தானம் ஆகியோர் நடிக்கும் ‘வாலு’ படத்தை விஜய் சந்தர் இயக்குகிறார். இப்படத்தில் வில்லனாக நடிக்க கன்னடத்தில் முன்னணி நடிகராக உள்ள ஆதித்யா ஒப்பந்தமாகியுள்ளார்.
இதுகுறித்து ஆதித்யா கூறும்போது,
இப்படத்தில் நான் எதிர்மறையான வேடத்தில் நடிக்கிறேன். இது வழக்கமான வில்லன் கதாபாத்திரம் கிடையாது. அதாவது வில்லன் பின்னால் சுற்றும் நாயகியை எப்படி நாயகன் ஈர்க்கிறார் என்பதை பொழுதுபோக்கு அம்சத்துடன் சொல்லப் போகிறார்கள்.
தமிழில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாளைய கனவு. அது இப்போது நிறைவேறியிருக்கிறது. ரஜினிகாந்த் சார்தான் என்னோட மானசீக குரு. அவருடைய வழியை பின்பற்றி தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளேன்.
கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்த பிரகாஷ் ராஜ், கிஷோர், சுதீப் போன்ற வில்லன்கள் வரிசையில் நானும் கலக்குவேன். இவ்வாறு அவர் கூறினார்.

ரம்ஜான் ஸ்பெஷலாக வருகிறது கமலின் விஸ்வரூபம்?


ரம்ஜான் ஸ்பெஷலாக வருகிறது கமலின் விஸ்வரூபம்?        இந்த ஆண்டு ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை எகிற வைத்துள்ள படங்களில் ஒன்றான கமல்ஹாஸனின் விஸ்வரூபம், ரம்ஜான் ஸ்பெஷலாக வரும் என்று விநியோகஸ்தர்கள் மத்தியில் பேசப்படுகிறது.



கமல்- பூஜா குமார்-ஆன்ட்ரியா உள்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ள பெரிய பட்ஜெட் படம் விஸ்வரூபம். ஒரு ஆண்டுக்கும் மேலாக கமல்ஹாஸன் இந்தப் படத்தை உருவாக்கி வருகிறார்.

பிவிபி சினிமாஸுடன் இணைந்து கமலின் ராஜ்கமல் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

இந்தப் படத்தின் சிறப்புக்காட்சி இந்த ஆண்டு ஐஃபா விழாவில் திரையிடப்பட்டது. படத்தின் முன்னோட்டக்காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் ஆர்வத்தைத் தூண்டுவதாக உள்ளன.

இந்தப் படம் இந்த மாதம் வெளியாகக் கூடும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் பாடல்களே வெளியிடப்படவில்லை.

இதற்கிடையே, ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருந்த மாற்றான், துப்பாக்கி படங்கள் தள்ளிப் போய்விட்டன. எனவே ஆகஸ்ட் மூன்றாவது வாரம் விஸ்வரூபம் படம் வெளியாகக்கூடும் என விநியோகஸ்தர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

Wednesday 18 July 2012

காத்திருந்து ஏமாந்த விஜய், முருகதாஸ்


    கள்ளத்துப்பாக்கி படத்தின் இயக்குனரும், தயா‌ரிப்பாளரும் துப்பாக்கிப் படத்தின் டைட்டிலுக்கு தடை கோ‌ரி நீதிமன்றம் சென்றதும், துப்பாக்கி டைட்டிலை பயன்படுத்த இடைக்கால‌த் தடை விதிக்கப்பட்டதும் ஐந்து முதலமைச்சர்களை சினிமாவிலிருந்து தேர்ந்தெடுத்த தமிழர்களுக்கு நன்கு தெ‌ரிந்திருக்கும். துப்பாக்கி சார்பில் எதிர்மனு கொடுக்கப்பட்டது. துப்பாக்கி வேறு கள்ளத்துப்பாக்கி வேறு என்று தயா‌ரிப்பாளர் தாணு மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு இன்று தீர்ப்பு வழங்குவதாக இருந்தது.

எப்படியும் தடை நீக்கப்படும், படத்தின் டீசரை வெளியிட்டு ரசிகர்கள் எதிர்பார்ப்பில் ஹீட்டரை பொருத்தலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தார் முருகதாஸ்.

ஆனால் தீர்ப்பை19ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார் நீதிபதி. தடை நீங்கும் தடபுடலாக விளம்பரத்தை ஆரம்பிக்கலாம் என்றிருந்த விஜய், முருகதாஸ், தாணு முக்கூட்டணிக்கு இந்த தள்ளிவைப்பு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.

தூத்துக்குடி டு தென்னாப்ரிக்கா!


'மாற்றான்' படத்தினை முடித்து விட்ட சூர்யா, ஹரி இயக்கத்தில் உருவாக இருக்கும் 'சிங்கம் 2' படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.

'சிங்கம்' படம் முடியும் காட்சியிலிருந்து 'சிங்கம் 2' துவங்குகிறது. 'சிங்கம்' படத்தின் கதைப்படி பிரகாஷ் ராஜ் இறந்து விட்டதால் 'சிங்கம் 2'வில் அவர் இடம் பெறவில்லை.

அவரைத் தவிர மற்ற அனைவரும் 'சிங்கம் 2' படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஹன்சிகா, சந்தானம், வில்லனாக முகேஷ் ரிஷியும் கூடுதலாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

படத்தில் ஒரே சூர்யா இருவேறு பரிமாணங்களில் நடிக்க இருக்கிறாராம். தொடர்ச்சியாக 105 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இதில் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டு இருக்கிறார் இயக்குனர் ஹரி.

ஹரி முதல் முறையாக இப்படத்தின் காட்சிகளுக்காக தென் ஆப்பிரிக்கா செல்ல இருக்கிறார். இதுவரை பாடல்களை மட்டுமே வெளிநாட்டில் படம்பிடித்து வந்தார்.

இப்படம் குறித்து இயக்குனர் ஹரி " சூர்யா 2 வித்தியாசமான தோற்றங்களில் நடிக்கிறார். அனுஷ்கா தொழில் அதிபரின் மகளாகவும், ஹன்சிகா கல்லூரி மாணவியாகவும் நடிக்கிறார்கள். விவேக் முக்கிய வேடத்தில் வருவார்.

'சிங்கம்' படத்தில் நடித்த மனோரமாவும் இரண்டாம் பாகத்தில் பங்கு பெறுகிறார். அவர் இப்போது பூரண குணம் அடைந்து விட்டார். உடல் நலம் தேறியபின், அவர் நடிக்கும் படம் இதுதான்.

மும்பையைச் சேர்ந்த முகேஷ் ரிஷியும், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒருவரும் வில்லன்களாக நடிக்கிறார்கள். தூத்துக்குடி பின்னணியில் கதை நடப்பதால், பெரும்பகுதி படப்பிடிப்பு அங்கு நடைபெற இருக்கிறது.

தூத்துக்குடியில் ஆரம்பிக்கும் படம் தென் ஆப்பிரிக்காவில் முடிவடையும். க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிகள் எல்லாம் தென் ஆப்பிரிக்காவில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறோம் " என்று தெரிவித்து இருக்கிறார்.

'சிங்கம் 2' படத்திற்கும் தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.

சூர்யா கொடுத்த பார்ட்டி!




சின்னத்திரையில் விளம்பரங்களில் நடித்துக்கொண்டிருந்த சூர்யா, சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவந்தார்.


ஸ்ருதிஹாஸன், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்களும் இந்த நிகழ்ச்சியில்
கலந்துகொண்டு பரிசுப்பணத்தை வென்று மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்பட்டவர்களுக்காக கொடுத்து உதவினர். சூர்யாவின் குடும்ப உறுப்பினர்களான நடிகர் கார்த்தியும், நடிகர் சிவகுமாரும் இதில் கலந்துகொண்டனர்.


இந்த நிகழ்ச்சி முடிவடைந்துவிட்ட நிலையில் நடிகர் சூர்யா, நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியின் யூனிட்டில் இருக்கும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நேரில் சென்று கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.


அதுமட்டுமில்லாமல் நேற்று(15.07.12) சவேரா ஹோட்டலில் ’நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சியில் சூர்யாவுடன் பணியாற்றிய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கும், தொழில்நுட்பக்கலைஞர்களுக்கும் நைட் பார்ட்டி கொடுத்திருக்கிறார்.

அமிதாப்பச்சனுக்கு ஜோடியாக குஷ்பு!




நடிகை குஷ்பூ தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக இருந்தவர். திருச்சிக்கு அருகில் ஒரு கோயில் கட்டும் அளவிற்கு குஷ்பூவிற்கு தீவிர ரசிகர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் சமீபமாக குஷ்பூ தனது குடும்பம், சின்னத்திரை, அரசியல் ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்திவந்தாலும் எப்போதாவது ஓரிரு படங்களில் நடித்துவருகிறார்.

ஒவ்வொரு நடிகைக்கும் இருக்கும் பொதுவான ஆசை நாம் பார்த்து ரசித்து வளர்ந்த ஹீரோவுடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பது தான். குஷ்பூ சிறிய வயதிலிருந்தே அமிதாப் பச்சனின் தீவிர ரசிகை. அவரோடு நடிக்க வாய்ப்பு கிடைக்கும் போது விட்டுவிடுவாரா குஷ்பூ.

இந்தியில் தயாராகிகொண்டிருக்கும் ‘மேட் டாட்’ என்ற படத்தில் அமிதாப் பச்சனுக்கு ஜோடியாக நடிக்கிறீர்களா என்று ரேவதி வர்மா கேட்டவுடன் நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டாராம் குஷ்பூ. அமிதாப்பின் மனைவி கேரக்டரில் நடிக்கும் குஷ்பூவைவிட, அவரது மகள்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். எப்படியும் அமிதாப் பச்சனை சந்தித்துவிடுவோம் என்று.

சந்தைக்கு வரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கைப்பேசி




கார்பன் மொபைல் தயாரிப்பு நிறுவனம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் பெயரில் புதிய மொபைல் ஃபோன்களை வெளியிடவுள்ளது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் குரல் மற்றும் அவரது பஞ்ச் வசனங்கள் என விசேட வசதிகள் கொண்ட இந்த ஃபோன்களில் கோச்சடையான் படத்தின் மேக்கிங் வீடியோக்கள், ரஜினிகாந்த்தின் கையெழுத்து என்பனவும் ஃபோனில் இடம்பெற்றிருக்கிறதாம். கோச்சடையான் திரைப்பட வெளியீட்டின் விளம்பரத்திற்காக கார்பன் மொபைல், இவ்வாறு ஐந்து இலட்சம் மொபைல் ஃபோன்களை வெளியிடவிருக்கிறார்கள்.

புதிய ஸ்மார்ட்ஃபோன்களிலும், கார்பன் மொபைல் நிறுவனத்தின் Smarttab 1 ஃபோனிலும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. படத்தின் ட்ரெய்லரையும் இந்த ஃபோன்களில் பார்க்க முடியுமாம்.

ரஜினிகாந்த் ஃபோன்களுக்கு உள்ள சிறப்பு எப்படி இருக்கலாம் என கற்பனையாக ஃபெஸ்ட்போஸ்ட் இணையத்தளம் வெளியிட்டுள்ள சில பஞ்ச். இவை

நீங்க ரஜினிகாந்த் ஃபோனுக்கு Call பண்ண தேவையில்ல.: அது உங்களுக்கு Call பண்ணும்.

உங்க சொந்த நம்பருக்கு அதுவே Miss call பண்ணும்

ரஜினிகாந்த் ஃபோன் ரூம்ல இருந்தா, மத்த எல்லா ஃபோனும் சைலெண்ட் மூட்ல மாறிடும்.

ரஜினிகாந்த் ஃபோன்களில் வேறென்ன ஸ்பெஷல் இருக்கலாம்? : உங்கள் கருத்துக்களையும் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.

தல அஜித் இதுவரை பெற்ற விருதுகள்!


ரசிகர்களால் செல்லமாக ‘தல’ என அழைக்கப்படும் அஜித், தென்னிந்திய சினிமாவில் முன்னனி நடிகர்களுள் ஒருவராக உள்ளார்.

தல கடந்துவந்த பாதிகளில் அவருக்கு மகுடம் சூட்டிய விருதுகளின் தொகுப்பு உங்களுக்காக…!

பரத்முனி ஆர்ட் அகாடமியின் சிறந்த புதுமுக நடிகருக்கான விருது - அஜித் நடித்த முதல் தெலுங்கு படத்திற்காக (பிரேம புஸ்தகம்)

சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - வாலி திரைப்படத்துக்காக

சினிமா எக்ஸ்பிரஸ் விருது - வாலி திரைப்படத்துக்காக

தினகரன் சினிமா விருது - வாலி திரைப்படத்துக்காக

சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - 2000ஆம் ஆண்டு முகவரி படத்தில் நடித்ததற்காக

சிறப்பு நடிகருக்கான மாநில விருது – 2001 ஆம் ஆண்டு பூவெல்லாம் உன் வாசம் படத்திற்காக

சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது - 2002ஆம் வருடம் வில்லன் படத்திற்காக

தினகரன் சினிமா விருது - 2002ஆம் வருடம் வில்லன் படத்திற்காக

தென் இந்திய சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை இருமுறைப் பெற்றுள்ளார்.

சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திற்காக

சிறந்த வில்லன் மற்றும் மக்கள் மனம் கவர்ந்த ஹீரோ விருது - மங்காத்தா படத்துக்காக

நான் ஈயை பாராட்டிய அஜீத். நேரடி தமிழ்ப்படம் எடுக்க ராஜமெளலி திட்டம்.


Ajith appreciate the movie Naan ee

    இப்போதெல்லாம் 'நான் ஈ' படத்தின் இயக்குனர் ராஜமெளலியை போனில் யாராவது அழைத்தால், பல நேரங்களில் அவரது எண் பிஸியாக இருக்கிறது.

காரணம் ஒட்டுமொத்த தென்னந்திய திரையுலகமும் படத்தினை பார்த்து விட்டு அவரது எண்ணை தொடர்பு கொண்டு அழைத்து புகழ்ந்து தள்ளுகிறார்களாம்.

பிரபாஸ், மகேஷ், ரவிதேஜா, வெங்கடேஷ், நாகார்ஜுனா, சித்தார்த், ராணா, விக்ரம், சூர்யா, கார்த்தி, தனுஷ், ரஜினி, இயக்குனர்கள் ராம் கோபால் வர்மா, விநாயக், பூரி ஜெகந்நாத், ஹரிஸ் சங்கர், க்ரிஷ், பிரகாஷ் ராஜ், நந்தினி, லிங்குசாமி, ஷங்கர் சார் என அனைவருமே படம் பார்த்துவிட்டு ராஜமெளலியை தொடர்பு கொண்டு பாராட்டி இருக்கிறார்கள்.

தற்போது அந்த வரிசையில் இன்னொரு ஸ்டாரும் சேர்ந்திருக்கிறார். அவர் அஜீத். தமிழ்நாட்டில் ' நான் ஈ ' படம் பட்டிதொட்டியும் எங்கும் ஹிட்டடித்து கொண்டு இருக்கும் இந்த நேரத்தில், அஜீத்தின் பாராட்டு ராஜமௌலிக்கு மேலும் தெம்பூட்டியிருக்கிறதாம்.

'நான் ஈ' படத்தினை பார்த்த அஜீத், இயக்குனர் ராஜமெளலியை தொடர்பு கொண்டு புகழ்ந்து தள்ளி விட்டாராம்.

தமிழில் இந்த கிராஃபிக்ஸ் ஈ வரவேற்பைப் பெற்றிருப்பதால், அடுத்த படம், அநேகமாக நேரடித் தமிழ் படமாக இருக்கலாம் என்கிறது கோலிவுட் தகவல். படத்தின் நாயகன்? 'நான் ஈ' இசையை வெளியிட்டாரே அவர் தானாம்.!

நண்பனில் ஏற்பட்ட நட்பு தொடர்கிறது. முகமூடி இசையை வெளியிடுகிறார் விஜய்.




      தமிழ்த் திரையுலகில், கதாநாயகர்களுக்கு என்று ஒரு ரசிகர் வட்டம் இருப்பது போல், இயக்குனர்கள் சிலருக்கும் ரசிகர் வட்டம் உள்ளது. அத்தகைய இயக்குனர்களில் மிஷ்கினும் ஒருவர்.
சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய் என இவரது படங்கள் அனைத்துமே இவருக்கு பல தரப்பில் இருந்து ரசிகர்களை சேர்த்து இருக்கிறது.
இவரது இயக்கத்தில் தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஹீரோ கதை 'முகமூடி' என்ற பெயரில் வெளிவர இருக்கிறது.
ஜீவா, பூஜா ஹெக்டே, நரேன், நாசர் என ஒரு திரைப் பட்டாளமே நடிக்க, 'யுத்தம் செய்' படத்திற்கு இசையமைத்த ' கே ' இசையமைத்து இருக்கிறார். தங்களது முதல் பிரம்மாண்ட தயாரிப்பாக 'முகமூடி' படத்தினை தயாரித்து இருக்கிறது யு.டிவி நிறுவனம்.
'முகமூடி' படத்தின் FIRST LOOK வெளியான போதே படத்திற்கு எதிர்ப்பார்ப்பு ஆரம்பித்தித்தது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா 20ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. விஜய் இசையை வெளியிட, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் பெற்றுக் கொள்கிறார்.
மிஷ்கின் படங்கள் என்றாலே படத்தில் மஞ்சள் கலர் சேலை கட்டிக் கொண்டு, ஒரு பெண் ஆடுவது போன்று ஒரு குத்துப்பாடல் இருப்பது வழக்கம். 'கத்தாழக் கண்ணாலே', 'வாள மீனுக்கும்' போன்ற பாடல்கள் இவரது படத்தில் இடம்பிடித்து, பட்டித் தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது.
ஆனால் 'முகமூடி' படத்தில் அவ்வாறு குத்துப் பாடல் எதுவுமே இல்லையாம். அதற்கு பதிலாக TASMAC பாரில் ஒரு பாடல் இடம் பெற்று இருக்கிறதாம்.

விஷ்ணுவர்த்தனுக்காக சிக்ஸ்பேக் உடல் தோற்றத்திற்கு மாறும் அஜீத்?




அஜீத்தின் 'பில்லா-2' படம் ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்துக்கு பின் அவர் விஷ்ணுவர்த்தன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இதில் நாயகியாக நயன்தாராவை ஒப்பந்தம் செய்துள்ளனர். ஆர்யாவும் முக்கிய கேரக்டரில் வருகிறார்.
படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. மும்பை, ஐதராபாத் பகுதிகளில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதில் நடிக்க உடல் எடையை குறைத்து, 'சிக்ஸ்பேக்' தோற்றுக்கு மாறும்படி அஜீத்திடம் விஷ்ணுவர்த்தன் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து அஜீத் தினமும் ஜிம் போகிறார். கடும் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்கிறார். தினமும் பலமணி நேரம் உடற்பயிற்சியில் ஈடுபடுவதாக விஷ்ணுவர்த்தன் தெரிவித்தார். தற்போது அஜீத்தின் தோற்றப் பொலிவு பிரமாதமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

Tuesday 17 July 2012

மாற்றான்… சுட்ட படமா, சுடாத படமா…?



பிரிட்டனில் உருவாகவுள்ள யோஹன் முதல் பாகம்


இளையதளபதி விஜய் நடிக்க உள்ள யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தின் முதல் பாகம் பிரிட்டனில் உருவாக உள்ளது.

கெளதம் மேனன் இயக்கத்தில், விஜய் நடிக்க இருக்கும் 'யோஹன்' படத்தில் நடிக்க ஹாலிவுட் நடிகையொருவரை படக்குழுவினர் தேடி வருகின்றார்கள்.

யோஹன் என்ற பெயர் சர்வதேச அளவில் உள்ள பெயர் என்பதாலும் படத்தின் கதைப்படி விஜய் சர்வதேச உளவாளியாக நடிக்கிறார் என்பதாலும் படம் முழுவதும் அமெரிக்கா, ஐரோப்பாவில் உருவாக உள்ளது.

கதாநாயகி தவிர, வெளிநாட்டில் நடைபெறுவது போல கதை இருப்பதால் படத்தில் நடிக்க வெளிநாட்டு நடிகர், நடிகைகளிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

மேலும் யோஹன் படம் பல்வேறு பாகங்கள் அடங்கியது என்பதால் முதல் பாகத்தின் வரவேற்பைத் தொடர்ந்து இரண்டாம், மூன்றாம் பாகங்கள் இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் யோஹன் முதல் பாகம் பிரிட்டனில் தயாராக இருக்கிறது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார்.

'துப்பாக்கி வேறு... கள்ளத்துப்பாக்கி வேறு... தடையை நீக்குங்கள்' - தாணு கோரிக்கை


Thaanu Files Petition Revoke Ban On
விஜய் நடிக்கும் 'துப்பாக்கி' படத்தின் தலைப்புக்கு விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி கோர்ட்டில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு மனு தாக்கல் செய்துள்ளார்.

நார்த் ஈஸ்ட் பிலிம் ஒர்க் நிறுவனம் என்ற நிறுவனம் கள்ளத்துப்பாக்கி என்ற பெயரில் படம் தயாரித்து வருகிறது.

2009-ம் ஆண்டே இந்தப் படத்துக்கு தலைப்பை பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் விஜய் நடிக்கும் புதிய படத்துக்கு இந்த ஆண்டு துப்பாக்கி என்று பெயர் சூட்டினர்.

இதைத் தொடர்ந்து சென்னை 2-வது உதவி சிட்டி சிவில் கள்ளத்துப்பாக்கி பட தயாரிப்பாளர்கள், 'விதிமுறைகளை மீறி, நான் பதிவு செய்த கள்ளத்துப்பாக்கி என்ற தலைப்பின் பின் பகுதியான துப்பாக்கி என்ற பெயரில் படத்தை தயாரித்து வருகிறார். இந்த தலைப்புக்கு தடை விதிக்க வேண்டும்' என்று கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி திருமகள், துப்பாக்கி என்ற தலைப்பில் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து கடந்த ஜுன் 27-ந் தேதி உத்தரவிட்டார்.

இந்தநிலையில், தடையை நீக்கக்கோரி சிட்டி சிவில் கோர்ட்டில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், "தலைப்பின் பின்பகுதி அல்லது முன்பகுதியை பிறர் பயன்படுத்தக்கூடாது என்று மனுதாரர் கூறுவதை ஏற்க முடியாது. சிங்கம், ஈ, சிறுத்தை ஆகிய படங்கள் வெளியானது. சிங்கம்புலி, சிங்கமுகம், சிங்கமகன், நான் ஈ, நெருப்பு ஈ, சிறுத்தைபுலி என்ற படங்கள் வெளியாகியுள்ளன. இதுபோல் ஏராளமான உதாரணங்களை கூறலாம்.

மனுதாரர் கள்ளத்துப்பாக்கி என்றும், நான் துப்பாக்கி என்றும் பதிவு செய்துள்ளோம். இதில் கள்ளத்துப்பாக்கி என்றால், உரிமம் பெறாத துப்பாக்கி என்று அர்த்தம். எனவே தலைப்பில்கூட அர்த்தம் வித்தியாசப்படுகிறது. மனுதாரர் விளம்பரத்துக்காக வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே துப்பாக்கி என்ற தலைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடக்கிறது.

முகமூடி ஆடியோவை வெளியிடும் விஜய் - புனித் ராஜ்குமார்!



Puneet Rajkumar Is The Chief Guest
முகமூடி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் ஜூலை 20-ம் தேதி சென்னையில் நடக்கிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார் பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார்.

ஜீவா, பூஜா ஹெக்டே, நாசர், செல்வா, கிரீஷ் கர்னாட் நடிக்க, மிஷ்கின் இயக்கியுள்ள படம் முகமூடி. சமீபத்தில் இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டு, பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஸ்பைடர்மேன், பேட்மேன் மாதிரி தமிழில் உருவாகும் முழுநீள சூப்பர் ஹீரோ கதை இது.

படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

ஜூலை 20-ம் தேதி சென்னை சத்யம் சினிமாஸில் நடக்கும் இந்த விழாவில், கன்னடத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான புனித் ராஜ்குமார் பங்கேற்கிறார். முகமூடி ஆடியோ சிடியை நடிகர் விஜய் வெளியிட, புனித் ராஜ்குமார் பெற்றுக் கொள்கிறார்.

புனித் ராஜ்குமார் குடும்பத்துக்கு சென்னையில் பங்களாவே உள்ளது. இங்கே சில காலம் தங்கியும் இருக்கிறார் புனித். ஆனால் தமிழ் சினிமா விழாவில் அவர் பங்கேற்பது, அநேகமாக இதுதான் முதல்முறையாக இருக்கும்.

சமீபத்தில் புனித் ராஜ்குமாரின் ஜாக்கி, அன்னா பாண்ட் போன்ற படங்கள் சென்னையில் வெளியானது குறிப்பிடத்தக்கது.