Saturday 7 July 2012

ஓவியாவை ஒப்பந்த செய்ய விமல் சிபாரிசு. இயக்குனர் எழில் மறுப்பு.



விமல், ஓவியா கூட்டணியில் உருவான களவாணி, கலகலப்பு ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. இந்த வெற்றியை தொடர்ந்து விமல் சென்டிமெண்டாக தான் நடிக்கும் படங்களில் ஓவியாவை கதாநாயகி ஆக்குமாறு இயக்குநர்களையும் தயாரிப்பாளர்களையும் கேட்டு வருகிறார்.
இந்நிலையில் விமல் அடுத்ததாக எழில் இயக்கும் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்திலும் ஓவியாவை ஒப்பந்தம் செய்யும்படி இயக்குனரை கேட்டிருக்கிறார். ஆனால் இதற்கு எழில் தரப்போ மறுப்பு தெரிவித்து வருகிறது.

ஐ' காதல் திரில்லர் திரைப்படம்-சங்கர்



    விக்ரம்-சங்கர் கூட்டணியில் பிரமாண்டமாக உருவாக இருக்கும் படம் ஐ. அந்நியன் படத்தை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி இணைவதால் படம் பற்றிய எதிர்பார்ப்பு தற்போதே காணப்படுகிறது.

ஐ திரைப்படம் அரசியல் தொடர்பான கதை என்ற ஊகங்களும் எழுந்தன. இந்நிலையில் அந்த ஊகங்களுக்கு இயக்குனர் சங்கர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைப்பின்னல் தளத்தில் கூறுகையில், ஐ திரைப்படம் காதல் திரில்லர் படம் என விளக்கம் அளித்துள்ளார்.

படத்தில் விக்ரமுடன் இணைந்து மலையாள சூப்பர் ஸ்டார் சுரேஷ் கோபி நடிக்கிறார். மேலும் இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக பி.சி.ஸ்ரீராம், எழுத்தாளர் சுபா ஆகியோருடன் பணியாற்றுகிறேன். மேலும் ஏ.ஆர். ரகுமான் இசையில் அண்மையில் படத்தின் பாடல் ஒன்று பதிவானது. கபிலன் வரிகளுக்கு விஜய் பிரகாஷ் குரல் கொடுத்திருக்கிறார்.

80 நாள்களில் நிறைவடைந்த பாலாவின் பரதேசி படப்பிடிப்பு.



  பாலா இயக்கத்தில் உருவாகி வரும் படம் பரதேசி. இந்தப் படத்தில் அதர்வா முரளி, வேதிகா ஆகியோர் நடித்து வருகின்றனர். அண்மையில் குற்றாலத்தில் நடந்த படப்பிடிப்புடன் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

பரதேசி திரைப்படத்தை மிக குறுகிய காலத்தில் பாலா எடுத்து முடித்துள்ளார். 80 நாள்கள் மட்டுமே இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தியுள்ளார். எரியும் தணல் என்ற நாவலை மையமாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

படத்துக்கு ஜி.பி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இயக்குனர் பாலா, ஜி.வி.பிரகாஷ் கூட்டணி இணையும் முதல் படம் என்பதால் இசை குறித்த எதிர்பார்ப்பும் காணப்படுகிறது. படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதால் படத்தின் ரிலீஸ தேதியை விரைவில் எதிர்பார்க்கலாம்.

பரதேசி திரைப்படம் பாலா இயக்கத்தில் உருவாகும் ஆறாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயம் ரவியின் நிமிர்ந்து நில் படத்தின் கதை!


Jayam ravis Nimirnthu nil story  ஜெயம்ரவி - அமலாபால் இணைந்து நடிக்கும் புதிய படம் நிமிர்ந்து நில். போராளி படத்துக்குப் பிறகு சமுத்திரக்கனி இயக்கும் இந்த படத்தில் மற்றொரு நாயகியாக மேக்னா ராஜ் நடிக்கிறார். வாசன் விஷூவல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தபடத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்னர் தொடங்கியது.

படத்தின் கதை குறித்து இயக்குனர் சமுத்திரகனி கூறுகையில் "ஒழுக்கம்தான் தனக்கு கற்பு மாதிரி என்று சொல்லி தலை நிமிர்ந்து வாழும் ஒரு சாதாரண குடும்பத்து இளைஞனின் கதை இது. தினமும் வீட்டை விட்டு கிளம்பும்போது, எதிர் கொள்ளும் பிரச்சினைகள்தான் இந்தப் படம். உன்னை நீ சரி செய்து கொள்... உலகம் தானாக சரியாகிவிடும் என்பது ஒன்லைன்," என்றார்.

ஜீ.வி.பிரகாஷ் இசையமைப்பில் உருவாகி வரும் இந்தப் படம் ஒரேநேரத்தில் தெலுங்கிலும் தயாராகிறது. தெலுங்கில் ஹீரோ நானி. ஹீரோயின்கள் மாற்றமில்லை என்பது கூடுதல் தகவலாகும்.

Filmfare Awards South 2012 Winners Complete List (Tamil)



Filmfare Awards South 2012 Winners
Complete List (Tamil) :
Best Actor Female - Anjali ( Engeyum
Eppothum )
Filmfare Critics Award for Best Actor - Vikram
( Deiva Thirumagal )
Best Tamil Film - Aadukalam
Best Director - Vetrimaran ( Aadukalam )
Best Supporting actor - Ajmal ( Ko )
Best Supporting actress - Ananya ( Engeyum
Eppodhum )
Best Cinematographer - Velraj ( Aadukalam )
Best Singer (Male) : Aalap Raju - Ennamo
Edho (Ko)
Best Singer (Female) : Chinmayee - Sara Sara
(Vaagai Sooda Vaa)
Best Lyricist : Vairamuthu - Sara Sara (Vaagai
Sooda Vaa)

பில்லா 2 படத்திற்காக வாலு படப்பிடிப்பை நிறுத்தினார் STR….

  பில்லா 2 படம் பார்ப்பதற்காக வாலு படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருக்கிறார் சிம்பு.
   நடிகர் சிம்பு அஜித்தின் தீவிர ரசிகர் என்பது அனைவருக்கும் தெரியும். சிம்பு தனது காதலி ஹன்சிகாவுடன் சேர்ந்து பில்லா 2 படத்தின் முதல் காட்சியை பார்ப்பது போன்று ஒரு காட்சி, அவரது வாலு படத்திற்காக சில நாட்களுக்கு முன் படமாக்கப்பட்டது. அதற்காக நிஜமாகவே அஜித்தின் கட்- அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தார் சிம்பு. சிம்பு எப்போதுமே அஜித் படத்தை முதல் ஆளாகப் பார்த்து விடுவது வழக்கம்.

தற்போது சிம்பு வாலு படத்தில் நடித்து வருகிறார். வாலு படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. வாலு படத்தின் சில காட்சிகள் சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் வைத்து படமாக்கப்பட்டது. இறுதி கட்ட படப்பிடிப்புக்காக ஹைதராபாத் செல்ல திட்டமிட்டுள்ளனர் வாலு குழுவினர்.

ஆனால் சிம்புவோ ஜூலை 13 ஆம் தேதிக்கு அப்புறம் தான் சென்னையை விட்டு வருவேன் என்று கூறியுள்ளார். அஜித் நடித்த பில்லா 2 படமும் ஜூலை 13 ஆம் தேதி தான் வருகிறது. எனவே பில்லா 2 முதல் காட்சியை பார்ப்பதற்காகவே, சிம்பு வாலு படத்திற்காக ஹைதராபாத் செல்ல மாட்டேன் என்று கூறியிருக்கிறார் என்று தெரிகிறது.

1 கோடி ரூபாய் கொடுத்தாலும் புது முக நடிகருடன் ஜோடி சேரமாட்டார்களாம்!


    கோப்பெருந்தேவி என்ற பெயரில் புதுப்படம் தயாரிகிறது, இதில் புதுமுக நடிகர் அச்சுதன் சங்கர் நாயகனாக நடிக்கிறார். அவரே இப்படத்தை இயக்கவும் செய்கிறார். இப்படத்தில் கதாநாயகிகளாக முன்னணி நடிகைகளை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக பெரிய நாயகிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.

திரிஷாவை இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க அணுகினர். ரூ.1 கோடி சம்பளம் தருவதாக பேசப்பட்டது. அவரும் முதலில் சம்மதித்தாராம். பிறகு கதாநாயகன் புதுமுகம் அச்சுதன் சங்கர் என தெரியவந்ததும் மறுத்து விட்டாராம்.

அதன்பிறகு ஸ்ரேயாவை அணுகி ரூ.1 கோடி சம்பளம் தருவதாக சொல்லி அழைத்தனர். அவரும் புதுமுக கதாநாயகனுடன் நடிக்க முடியாது என மறுத்து விட்டாராம்.

2012இன் இறுதி பாகத்தை ஆள போகும் படம் எது???



2012 இன் முதல் 6 மாதங்கள் நிறைவுற்ற நிலையில், ஓரிரு மிக பெரிய படங்களை தான் பார்க்க முடிந்தது.


இப்போது இந்த வருடத்தின் சுவாரஸ்யமான பகுதிக்கு வந்திருக்கிறோம். நிறைய பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாக இருக்கின்றன. எந்த படமும் தனியே வந்தால் வசூல் வெற்றி தான் என்ற நிலை இக்கால கட்டத்தில் நிலவி வருகிறது. அதுக்கு சகுனியே ஒரு மிக சிறந்த எடுத்து காட்டு. இவற்றில் எந்த படம் எல்லாவற்றையும் விட சிறந்து நிற்க போகின்றது.

அது தான் இப்போது எல்லோருடைய எதிர் பார்ப்பும். சென்ற வருடம் இறுதி பகுதியில் விஜய், அஜித், சூர்யா படம் என களை கட்டியது. இந்த வருடம் அதற்கு ஒரு படி மேலே போய் ரஜினி, கமலின் படங்களும் வெளி வர இருக்கின்றன. ரசிகர்கள் ஆகிய எங்களுக்கு எந்த திரைப்படம் எல்லாவற்றையும் விட விஞ்சி நிற்க போகின்றது என்ற கருத்து இருக்கும்.

ஆகவே, எந்த திரைப்படம் வர போகின்ற 6 மாதங்களை ஆள போகின்றது என்று தெரிவு செய்து, எதற்காக என்ற காரணத்தையும் பதிவு செய்யுங்கள்.

இந்த வாக்களிப்பு வருகின்ற 21 ஆம் திகதியுடன் நிறைவடையும் என்பது குறிபிடத்தக்கது.

வாக்களிப்பு இங்கே

       click here


டோக்கியோவில் கோச்சடையான் பாடல் வெளியீடு



     ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கோச்சடையான்’ படத்தின் பாடல்களை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஈராஸ் இன்டர்நேஷனல் மற்றும் மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம், ‘கோச்சடையான்’. ரஜினிகாந்த், தீபிகா படுகோன், சரத்குமார், நாசர் உட்பட பலர் நடிக்கின்றனர். ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா இயக்குகிறார். பெர்பாமன்ஸ் கேப்சரிங் என்ற தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ள இதன் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்துவருகின்றன. தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலத்தில் வெளியாகும் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் சிறப்புக் காட்சிகளை லாஸ் ஏஞ்சல்ஸ், லண்டன், இந்தியாவில் நடத்த உள்ளனர்.
இதற்கிடையில் படத்துக்காக 5 லட்சம் கோச்சடையான் மொபைல் போன்களை வினியோகிக்க உள்ளனர். இந்த போனில், படத்தின் மேக்கிங், டிரைலர், பாடல்கள், பஞ்ச் டயலாக்குகள், போஸ்டர்கள் மற்றும் ரஜினியின் டிஜிட்டல் கையெழுத்து ஆகியவை இருக்கும். இதற்காக செல்போன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

குடிபோதையில் கோர்ட்டுக்கு வந்த ஊர்வசியுடன் செல்ல மகள் மறுப்பு.






நீதிமன்றத்துக்கு குடிபோதையில் வந்த நடிகை ஊர்வசியுடன் செல்ல அவருடைய மகள் குஞ்ஞாச்சா மறுத்து விட்டார். பிரபல நடிகை ஊர்வசிக்கும் நடிகர் மனோஜ் கே. ஜெயனுக்கும் 14 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு குஞ்ஞாச்சா (12) என்ற மகள் இருக்கிறாள். ஊர்வசிக்கும் ஜெயனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், சென்னை நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றனர். ஜெயனிடம் குஞ்ஞாச்சா ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில், மகளை தன்னிடம் ஒப்படைக்கக்கோரி கேரளாவில் எர்ணாகுளம் குடும்ப நல நீதிமன்றத்தில் ஊர்வசி வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த நீதிமன்றம் ஓணம், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை நாட்களிலும், கோடை விடுமுறையில் 15 நாட்களும், 2வது சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில் குஞ்ஞாச்சாவை ஊர்வசியுடன் அனுப்ப உத்தர விட்டது. இதை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் ஜெயன் வழக்கு தொடர்ந் தார். அதில், தனது மகளை ஊர்வசியுடன் அதிக நாட்கள் அனுப்ப முடியாது என கூறினார்.

சில தினங்களுக்கு முன் இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜூலை 6ம் தேதி முதல் குஞ்ஞாச்சாவை ஒரு வாரம் ஊர்வசியுடன் அனுப்ப உத்தரவிட்டது. மகளை எர்ணாகுளம் குடும்ப நல நீதிமன்றத்துக்கு ஜெயன் அழைத்து வர வேண்டும் என்றும், அங்கிருந்து ஊர்வசி அவரை அழைத்து செல்லலாம் என்றும் நீதிமன்றம் கூறியது. இதன்படி, ஜெயன் தனது மகளை எர்ணாகுளம் நீதிமன்றத்துக்கு நேற்று அழைத்து வந்தார். சிறிது நேரத்தில் ஊர்வசியும் அங்கு வந்தார்.

ஆனால், அவர் குடிபோதையில் வந்ததாக கூறப்படுகிறது. பின்னர், விசாரணை நடந்தது. அப்போது, ஊர்வசியுடன் செல்ல விரும்பவில்லை என்று குஞ்ஞாச்சா கூறினார். இதையடுத்து, அவரை ஜெயனுடன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜெயன் அளித்த பேட்டியில், ‘‘ஊர்வசி குடிபோதையில் வந்துள்ளார். அவர் பல ஆண்டுகளாக போதைக்கு அடிமையாகி கிடக்கிறார். இந்த உண்மையை மறைத்தேன். இப்போது, வேறு வழியின்றி சொல்ல வேண்டியதாகி விட்டது. அவர் போதை யில் வந்தது நீதிபதிக்கே தெரிந்ததால்தான், குஞ்ஞாச்சாவை என்னுடன் அனுப்ப உத்தரவிட்டார்’’ என்றார்.

சேரன் தயாரிப்பில் நடிகை ரோஹினி இயக்கும் அப்பாவின் மீசை.



பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகை ரோகிணி. மறைந்த ரகுவரனின் மனைவியாவார். கமலின் 'வேட்டையாடு விளையாடு' படத்தின் மூலம் தன்னை பாடலாசிரியராக திரையுலகில் அறிமுகமானார்.

விரைவில் வெளிவர இருக்கும் 'மாலைப் பொழுதின் மயக்கத்திலே' படத்தில் அனைத்து பாடல்களையும் இவரே எழுதி இருக்கிறார். இப்படத்தின் பாடல்களுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்று இருக்கிறது.

விளம்பரங்கள், குறும்படங்கள் என திரையுலகில் பல பரிமாணங்களில் தன்னை முன்னிலைப்படுத்தி கொண்டவர் ரோகிணி. தற்போது வெள்ளித்திரையில் இயக்குனராக அடியெடுத்து வைக்கிறார்.

ரோகிணி இயக்குனராக அறிமுகமாகும் படத்தினை இயக்குனர் சேரன் தனது நிறுவனம் மூலம் தயாரிக்க முன்வந்து இருக்கிறார்.

படத்தின் தலைப்பு 'அப்பாவின் மீசை!'

வெங்கட்பிரபுவின் பிரியாணியில் கார்த்தியுடன் ஜோடி போடும் ரிச்சா.





 மங்காத்தா' படத்தினை அடுத்து வெங்கட்பிரபு 'ஸ்டூடியோ க்ரீன்' நிறுவனத்திற்காக படம் இயக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளியானது. அதனை வெங்கட்பிரபுவும் உறுதிப்படுத்தினார்.

சூர்யா தான் நாயகன் என்ற நிலைமாறி தற்போது கார்த்தி நாயகனாக நடிக்க இருக்கிறார். படத்திற்கு 'பிரியாணி' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள். படத்தின் caption வரிகளாக 'A VENKAT PRABHU DIET' என வைத்திருக்கிறார்கள்.

'அலெக்ஸ் பாண்டியன்' படத்தில் நடித்து வரும் கார்த்தி, அதனைத் தொடர்ந்து இப்படத்தில் நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

'பிரியாணி' படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின.
தற்போது இயக்குனர் வெங்கட்பிரபு தனது டிவிட்டர் இணையத்தில் " பிரியாணி படத்தில் எனது முந்தைய படங்களில் பணியாற்றிய அதே குழுவான யுவன், ப்ரிவீன், ஸ்ரீகாந்த், சக்தி சரவணன், வாசுகி பாஸ்கர் ஆகியோர் பணியாற்றுகிறார்கள்.
அவர்கள் அனைவரையும் அழைத்து இன்று எனது 'பிரியாணி' படத்தின் கதையினை கூறினேன்.
'பிரியாணி' படம் வெஜ் மற்றும் நான் - வெஜ் பிரியர்கள் இருவருக்குமே பிடிக்கும் " என்று தெரிவித்து இருக்கிறார்.
இந்நிலையில் படத்தின் நாயகியாக சமந்தா பேசப்பட்டு வந்தார். அதனை தொடர்ந்து இலியானா, ப்ரணீதா சோப்ரா என்று பேச்சு வார்த்தை நடத்தி, தற்போது ரிச்சாவை நாயகியாக ஒபப்ந்தம் செய்து இருக்கிறார்களாம்.
படத்தில் வேறு யார் எல்லாம் நடிக்க இருக்கிறார்கள் என்பது வரும் வாரம் வெளியிடப்படும் என்று தெரிவித்து இருக்கிறார் வெங்கட்பிரபு.

புதுமுகங்களிடம் பணம் வாங்கும் இயக்குனர்கள் : பிரேம்ஜி புகார்



புதுமுக நடிகர், டெக்னீஷியன்களிடம் இயக்குனர்கள் பணம் வாங்கிக்கொண்டு வாய்ப்பு தருகிறார்கள் என்றார் பிரேம்ஜி. சிவாஜிதேவ், ரமேஷ் யாதவ், விஷ்ணு பிரியா, பானு நடிக்கும் படம் ‘புதுமுகங்கள் தேவைÕ. மனீஷ்பாபு இயக்குகிறார். ட்வின்ஸ் டியூன் இசை. இப்படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.
இயக்குனர் பாலு மகேந்திரா பாடல்களை வெளியிட்டார். விழாவில் காமெடி நடிகர் பிரேம்ஜி பேசியதாவது: இப்படத்தின் டிரைலர் பார்த்ததில் சினிமா பற்றிய கதை என்பது தெரிந்தது. புதுமுகங்களாக வருபவர்களிடம் இயக்குனர்கள் காசு வாங்கிக்கொண்டு நடிக்க வாய்ப்பு தருவதாக சீன்கள் இடம் பெற்றிருக்கிறது. இதைபார்த்தபோது எனக்கு ஏற்பட்ட அனுபவம் ஞாபகம் வருகிறது.
கொஞ்ச நாட்களுக்கு முன் ஒரு இயக்குனர் எனக்கு போன் செய்து, ‘என் படத்துக்கு நீங்கள்தான் இசை அமைக்கிறீர்கள். ஆனால் பாடகர்கள், ரெக்கார்டிங், சக இசை கலைஞர்கள் என எல்லோருக்கும் நீங்கள்தான் சம்பளம் கொடுக்க வேண்டும். உங்களுக்கு சம்பளம் தரமாட்டோம். பாடல் கேசட் விற்பனையில் வரும் தொகையை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்Õ என்றார்.
புதுமுகங்களிடம் காசு வாங்கி வாய்ப்பு தருவது சினிமாவில் நடக்கிறது. இசை அமைப்பாளரோ, நடிகரோ யாருக்கும் தயாரிப்பாளர்தான் சம்பளம் தருவார். அப்படி இல்லாமல் மற்றவர்களிடம் பணம் பெறுவது தவறு என்று கூறி மறுத்துவிட்டேன். எங்காவது ஒரு விழாவில் இதை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். இன்று வாய்ப்பு கிடைத்தது.

விஜய்க்கு ஜோடி ஸ்ருதிஹாசனா? கவுதம் மேனன் பேட்டி



   விஜய் ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கவில்லை என்றார் கவுதம் மேனன். கவுதம் மேனன் இயக்கவுள்ள படம் ‘யோவான் அத்தியாயம் ஒன்றுÕ. விஜய் ஹீரோ. அவருக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.


இது குறித்து இயக்குனர் கவுதம் மேனனிடம் கேட்டபோது, ‘ஸ்ருதி ஹாசனிடம் இதுபற்றி எதுவும் பேசவில்லை. இன்னும் சொல்லப்போனால் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப்போகும் ஹீரோயின் யார் என்பதுபற்றி யோசிக்ககூட இல்லை. இப்படத்துக்காக இன்னும் பல நடிகர்களை தேர்வு செய்ய வேண்டிய பொறுப்பில் இருக்கிறேன்.

இப்படத்துக்கு ஒல்லியாக வேண்டும் என்று விஜய்யிடம் கூறி இருக்கிறேன். யோவான் தமிழுக்கு முற்றிலும் புதிய ஆக்ஷன் த்ரில்லர் படமாக இருக்கும். இதன் ஷூட்டிங் பெரும்பாலும் பெர்லினில் நடக்க உள்ளது. இதுதவிர பல்வேறு நாடுகளில் படமாக உள்ளது. ஹாலிவுட் நடிகர்கள் சிலரும் நடிக்க உள்ளனர். இவ்வாறு கவுதம் மேனன் கூறினார்.

விஜய்யுடன் நடிக்கிறீர்களா என்று ஸ்ருதியிடம் கேட்டபோது, ‘அது உண்மை இல்லை. யோவான் படத்தில் நடிப்பதுபற்றி இதுவரை யாரும் என்னிடம் பேசவில்லை. இப்போதுள்ள நிலையில் நான் கைநிறைய படங்களுடன் நடித்துக்கொண்டிருக்கிறேன் என்றார்.

விக்ரமின் ஐ பட சூட்டிங்கை சீனாவில் நடத்த ஷங்கர் திட்டம்!



Shankar plans to hold I picture of us shooting in China!
      பிரமாண்ட இயக்குனர் ஷங்கருடன், விக்ரம் மீண்டும் இணையும் புதிய படம் ஐ. இரட்டை வேடத்தில் விக்ரம் நடிக்கும் இந்த படத்தில் எமி ஜாக்சன், பூஜா குமார் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க உளளனர்..இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பின் பெரும்பாலா காட்சிகளை சீனாவில் எடுக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளாராம்.

மேலும் இரு வேடங்களில் நடிக்கும் விக்ரம் முதல் பாதியில் ஒல்லி தோற்றத்துடனும் பிற்பாதியில் உடல் எடையை ஏற்றிய படியும் நடிக்கிறார். எனவே முதலில் விக்ரம் ஒல்லியாக தோன்றும் காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றன. அதன் பிறகு விக்ரமிற்கு உடல் எடையை அதிகரிக்க மூன்று மாதம் கால அவகாசம் கொடுக்கப்படுகிறது. இந்த குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு விக்ரம் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமெடுக்க முடிவு செய்துள்ளனராம் படக்குழுவினர்.

சினேகாவை சிரமப் படுத்திய செல் போன் நிறுவனம்!



Sneha trouble by cell phone company!
விளம்பரங்கள் மக்களை உடனடியாக எந்த அளவிற்கு போய் சேர்கிறது என்பதனை, நேற்று முதல் வெளி வரும் சினேகா, பிரசன்னா பிரிவிற்கு என்ன காரணம் என்ற விளம்பரமே சாட்சி. தனியார் செல்போன் விளம்பர நிறுவனம் தனது ஆடி மாத விற்பனையை அதிகரிக்க புது யுக்தியை கொண்டு விளம்பரப்படுத்தி வருகிறது, இந்த விளம்பரம் சினேகா பிரசன்னா பிரிவிற்கு என்ன காரணம் என்ற விவரத்தை தெரிஞ்சுக்க குறிப்பிட்ட எண்ணிற்கு எஸ் எம் எஸ் பண்ணுங்க என்று வருகிறது. இதனை பார்த்து என்ன ஏதோ பிரச்னை போல என்று எல்லாரும் சினேகா, பிரசன்னாவிடம் தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர், நாமும் நம் பங்கிற்கு அவர்களிடம் கேட்டோம், அதற்கு அமைதியாக பதில் சொன்ன சினேகா- பிரசன்னா, தொலை பேசி நிறுவனம் ஒன்று எங்களை அணுகி விளம்பரம் குறித்து தான் கேட்டனர் , நாங்களும் ஒத்துகொண்டோம். ஆனால் இவ்வாறு விளம்பரம் பார்த்ததும் கொஞ்சம் நாங்களும் அதிர்ச்சி ஆகி விட்டோம். வழக்கமா புது மண தம்பதிகளை ஆடிமாதம் பிரித்து வைப்பது வழக்கம் , அது போல சினேகா இந்த ஆடி மாதத்திற்கு அவர் அம்மா வீட்டுக்கு போனாராம். இந்த ஆடி மாத பிரிவை செல் போன் நிறுவனம் புது வியாபாரத்தை துவக்க திட்ட மிட்டுள்ளனர். இதை பார்த்ததும் சினேகா கொஞ்சம் டென்சன் ஆகி அந்த நிறுவனத்திடம் பேசி கொஞ்சம் மாற்றி விளம்பரத்தை அமைக்க கேட்டு கொண்டாராம், எனவே ரசிகர்களே செல் போன் நிறுவன விளமபரத்தை வைத்து யாரும் வருத்தம் அடைய வேணாம் என்று இணை பிரியா நட்சத்திரங்கள் நம்மிடம் கேட்டு கொண்டனர்.

கவுதம் மேனன் படத்தில் ப்ரணிதா!

Gautham Menon film pranita!"சகுனி படத்திற்கு பிறகு ப்ரணிதாவை தேடி, சுந்தர்.சியின், "எம்.ஜி.ஆர்., கவுதம்மேனனின், "துப்பறியும் ஆனந்தன் ஆகிய இரண்டு படங்கள் சென்றன. இரண்டில் எது மிகச் சிறந்தது என, சில நாட்களாக யோசித்த ப்ரணிதா, கவுதம் மேனன் படத்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். இதில், அவரது படக்கூலியும், "கிடு கிடுவென்று எகிறி நிற்கிறது. அதனால் தமிழில் மூன்றாவது படத்திலேயே, மேல்தட்டு கதாநாயகி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார் ப்ரணிதா.

Friday 6 July 2012

சினேகா - பிரசன்னா பிரிவுக்குக் காரணம் என்ன?






கொஞ்சம் ஷாக்காதான் இருக்கும். ஆனால் மேட்டர் நீங்க நினைப்பதல்ல. இன்று காலை நாளேடுகளை புரட்டியதும் பலரும் அக்கறையோடு 'இப்போதானே கல்யாணம் ஆச்சு... அதுக்குள்ள ஏன் இப்படியொரு செய்தி அபசகுனமா?' என்று கேட்டுக் கொண்டனர்.
 
ஆனால் இது நிஜமான பிரிவல்ல... 'விளம்பரம்'!
பிரசன்னாவும் சினேகாவும் சேர்ந்து ஒரு செல்போன் கம்பனிக்கான விளம்பரப் படத்தில் நடித்தனர். அதில் வரும் டயாலாக் இது. புதுசா திருமணமானவர்களைப் பிரித்து ஆடி மாசம் பெண் வீட்டுக்கு அனுப்பி வைப்பது வழக்கம். அதே போல் இப்போ புதுசா கல்யாணமான சினேகா - பிரசன்னாவை பிரிக்கிறதாம் இந்த ஆடிமாசம்.


அந்த பிரிவே தெரியாம இருக்க 'எங்ககிட்ட போன் வாங்கி சேர்ந்து இருங்க' என்று சொல்கிறது அந்த விளம்பரம். திருமண வீடியோவை விற்று காசு பார்த்தாச்சு... அடுத்து பிரிவு என்ற விஷயத்தையும் விளம்பரமாக்கி பணம் பார்த்திருக்கிறது இந்த புது ஜோடி.. பலே ஜோடிதான்!

தமிழ் சினிமா கெட்டுப் போனதுக்கு யூடிவி தனஞ்செயன் தான் காரணம். கரு.பழனியப்பன் தாக்கு.




அமரா என்றொரு படம். புதியவர்கள் அமரன், சோனு நடித்துள்ளனர். ஜீவன் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை சத்யம் அரங்கில் நடந்தது. இயக்குநர் கே.பாக்யராஜ், வெற்றிமாறன், தனஞ்செயன், பிரபுசாலமன், கரு.பழனியப்பன், கலைப்புலி எஸ் சேகரன் ஆகியோர் பங்கேற்ற இந்த விழாவில், இயக்குநர் கரு பழனியப்பனின் பேச்சு பெரும் பரபரப்பைக் கிளப்பிவிட்டது.
இவரது பேச்சின் வீடியோ இன்றைக்கு ஊடகங்களிலும் பரபரப்பார உலா வர ஆரம்பித்துள்ளது.
அப்படி என்ன பேசினார் பழனியப்பன்?
இதோ: மேடையில் இருக்கும் இயக்குனர் கே.பாக்யராஜ் மற்றும் சபையில் இருப்பவர்களுக்கும் எனது வணக்கம். அமரா படத்தின் இயக்குனர் ஜீவனை, எனக்கு அவரது தம்பி சுகுமார் மூலமாகத் தான் தெரியும். ஏனென்றால் சுகுமார் ஒரு சுறுசுறுப்பான மனிதர்.
ஸ்டில் ஃபோட்டோகிராஃபராக நான் பார்த்த சுகுமார் இன்று கேமராமேனாக வளர்ந்திருக்கிறார் என்றால் அதற்கு காரணம் அவரது அண்ணன் ஜீவன் தான். ஜீவன் ஒளிப்பதிவு செய்திருந்த ‘சாட்டை' படத்தை சமீபத்தில் பார்த்தேன். அவ்வளவு அற்புதமாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஒளிப்பதிவாளராக கிடைத்த வாய்ப்பையே விடாமல் பயன்படுத்திக் கொண்ட ஜீவன் அவர் இயக்கிய படத்தை பிரம்மாதமாக எடுத்திருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.
சினிமாவில் போட்டி என வந்துவிட்டால் ‘பாக்க பாக்க பிடிக்கும்;பாத்த உடனே பிடிக்கும்' என்று வரும். ஆனால் இமானை பொருத்த வரையில் அவர் பெயரை கேட்டாலே பிடிக்கும்.
அந்த மனிதன் எப்படி 24 மணி நேரமும் சிரித்துக் கொண்டே இருக்கிறான் என நான் பலமுறை வியந்துள்ளேன். நிகழ்ச்சி ஆரம்பித்ததிலிருந்து எல்லோரும் பூடகமாகவே பேசிக்கொண்டிருக்கின்றனர். சேகரன் சார் ரொம்பவே கோவமா பேசினார். தமிழ் சினிமா கெட்டுப் போனதுக்கு யார் காரணம் யார் காரணம்னு கேட்கிறார். நான் சொல்கிறேன் அதற்கு தனஞ்செயன்தான் காரணம்.
யுடிவி தயாரிக்கும் ‘முகமூடி' என்ற படத்திற்கு ஒரு முழு பக்கம் செய்தித்தாள் விளம்பரம் கொடுத்துள்ளார். ஏனென்று கேட்டால் இந்திப் படங்களில் அப்படித்தான் கொடுக்கிறார்கள் என்று சொல்கிறார். இந்தி படங்களில் கொடுத்தால் நீங்களும் வடநாட்டு பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்துக் கொள்ளுங்கள். ஏன் தமிழ் பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுக்கிறீர்கள்.
பல தயாரிப்பாளர்கள் கஷ்டப்பட்டு ‘குவாட்டர்' பாட்டில் அளவில் தான் விளம்பரம் கொடுக்க வேண்டும் என கொண்டு வந்த முடிவை நீங்கள் மீறினால் மற்றவர்களும் உங்களை காரணம் காட்டி இரண்டு பக்க விளம்பரம் கொடுக்க மாட்டார்களா? நான் கண்டிப்பாக என் படத்திற்கு இரண்டு பக்க விளம்பரம்தான் கொடுப்பேன். என்ன செய்கிறார்கள் பார்க்கலாம்.
உங்களை கண்டிக்க ஆள் இல்லை. அவர்கள் படத்தை நீங்கள் வாங்காவிட்டால் என்ன செய்வது என்ற பயத்திலே எதையும் கேட்காமல் அமைதியாக இருந்துவிடுகின்றனர். நான் சொல்கிறேன் என கோபித்துக்கொள்ளாதீர்கள்.
தனஞ்செயன் சார் நீங்கள் அனைவருமே நன்றாக வியாபாரம் ஆகும் படத்தை வாங்கி நல்ல தயாரிப்பாளர் என்ற பெயர் பெறுகிறீர்கள்.
நாங்கள் நல்ல படங்களை எடுத்து அதை விற்க போராடுகிறோம். அது தான் சிக்கல். தனஞ்செயன் விளம்பரம் கொடுத்து ரசிகர்களை இழுத்து படம் பார்க்க யாரும் இல்லை எனக் கூறுகிறார். ஜீவன் நல்ல படத்தை எடுத்து ரசிகர்களை இழுத்து தனஞ்செயனை தோற்கடிக்க வேண்டும் என வாழ்த்துகிறேன் வரவேற்கிறேன்," என்றார்.

நான் ஈ. விமர்சனம்



     சயின்ஸ் ஃபிக்‌ஷன் படங்கள் தமிழில் ரொம்ப குறைவுதான்.. ஷங்கரின் எந்திரன் ரஜினி நடிச்சதால அந்த சயின்ஸ் ஃபிக்‌ஷன் பிரமிப்பு ரஜினியின் ஸ்டார் வேல்யூ முன்னால பெரிசா பேசப்படலை.. எஸ் ஜே சூர்யா நடிச்சு டைரக்ட் செஞ்ச நியூ படம் சயின்ஸ் ஃபிக்சன்ல இருந்து கொஞ்சம் விலகி கில்மா பட ரேஞ்சுக்கு போயிடுச்சு.. அதனால தெலுங்குல Eega என்ற பெயரில் ரிலீஸ் ஆகும் ஃபேண்டசி வகைப்படமான நான் ஈ ரொம்ப பெரிய எதிர்பார்ப்பு..







படத்தோட ஒன்லைன் ரொம்ப சிம்ப்பிள்.. ஹீரோ ஹீரோயின் 2 பேரும் லவ் பண்றாங்க.. வில்லன் ஹீரோவை கொலை பண்ணிடறார்.. ஹீரோ ஈ ஆக மறு ஜென்மம் எடுக்கறார்.. எப்படி வில்லனை பழி வாங்கறார் என்பதுதான் கதை..




இனி திரைக்கதை.. ஓப்பனிங்க்லயே வில்லன் தான் அறிமுகம்.. அதுல இருந்தே படத்தோட முக்கியத்துவம் வில்லனுக்கு தெரிஞ்சுடுது.. வில்லன் எந்த மாதிரி ஆள்னா சிம்புவுக்கு அண்ணன், அர்ஜூனுக்கு பாஸ், கார்த்திக்கிற்கு தாதா, எஸ் ஜே சூர்யாவுக்கு குரு , கமலுக்கே வழி காட்டி சுருக்கமா சொல்லனும்னா பொண்ணுங்களை கரெட்க் பண்றதுல மன்னன்.. அதுதான் அண்ணனுக்கு மெயின் ஜாப்பே.. அது போக நேரம் இல்லாதப்போ ஏதொ தொழில் பண்ணிட்டு தானும் ஒரு தொழில் அதிபர்னு ஊர்ல சொல்லிட்டு திரியறார்..



ஹீரோயின் அம்மா, அப்பா இல்லை, அண்ணி கூட தங்கி இருக்கா.. எதிர் வீட்ல ஹீரோ.. எப்போ பாரு அவ பின்னாலயே ரவுண்டிங்க்.. பாப்பாவுக்கு அது தெரியும்.. பிடிச்சிருக்கு.. ஆனாலும் பிகு பண்ணிட்டு அவனை அலைய விட்டு ரசிக்குது..



எல்லா சங்கடங்கள், ஈகோவை விட்டு ஹீரோ கிட்டே ஹீரோயின் லவ்வை சொல்ற டைம் அந்த அசம்பாவிதம் நடக்குது.. அதாவது வில்லன் ஹீரோயினை கணக்கு பண்ண பார்க்கறான்.. ஏதோ சமூக சேவை நிறுவனத்துக்கு டொனேஷன் கேட்க வந்த ஹீரோயினுக்கே 15 லட்சம் தர்றான்.. பாப்பா சம்பளமே ஒரு படத்துக்கு 40 லட்சம் தான்.. வில்லனுக்கு ஹீரோயின் லவ் தெரிஞ்சுடுது.. தனக்கு இடஞ்சலா வந்த ஹீரோவை டக்க்குன்னு போட்டுத்தள்ளிடறான்..



ஹீரோ ஒரு ஈயா மறு ஜென்மம் எடுத்து வர்றார்.. இந்த ஐடியா எப்படி வந்திருக்கும்னா ஹீரோ பேரு நிஜ வாழ்விலும் நானி = நான் + இ . ஒரு சாதாரண ஈ எப்படி வில்லனை பழி வாங்க முடியும்? அவனை டார்ச்சர் பண்ண முடியும்? கொலை பண்ண முடியும்? அதுக்குத்தான் திரைக்கதை, கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் அட்டகாசமா பண்ண ஒரு டீம் இருக்கே.. எப்படி பழி வாங்குது என்பதே மீதிக்கதை..



படத்தோட முதல் ஹீரோ சி ஜி ஒர்க் தான்.. சமீப காலமா பலர் சொதப்பி வந்த கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸை இவங்க முறையா, ரசிக்கும்படி, ஓவர் பில்டப் எல்லாம் பண்ணாம செஞ்சிருக்கறதால ரசிக்க முடியுது.. குறிப்பா அந்த ஈ டிசைன் அட்ட்டகாசம்.. அது டான்ஸ் ஆடுவது, சைகை காண்பிப்பது எல்லாம் அருமை..



வில்லன் தான் அடுத்த ஹீரோ..KITCHA SUDEEP . வில்லன் சுதீப் கன்னடத்தில் ஏறக்குறைய சுப்ரீம் ஸ்டார் . படம் முழுக்க இவர் ராஜ்யம் தான்.. ஒரு ரகுவரனோ, பிரகாஷ் ராஜோ செய்ய வேண்டிய கலக்கலான கேரக்டர்.. நல்லா பண்ணி இருக்கார்.. நல்ல எதிர்காலம் உண்டு..



ஹீரோ நானி சித்தார்த்தின் முகச்சாயல், ஜீவாவின் நடிப்புச்சாயல் என கலந்து கட்டி அடிக்கறார்.. படம் போட்ட 30 வது நிமிடமே அவர் கொலை செய்யப்படுவதால் சான்ஸ் கம்மி./. வந்தவரை ஓக்கே..




ஹீரோயின் சமந்தா அழகு.. கண்ணியமான உடைகளில் கவுரமாக வந்து போறார்.. ஆல்ரெடி கலரா இருக்கும் அவர் எதுக்கு ரோஸ் பவுடர் அள்ளி பூசிட்டு வர்றார்? தெரியலை.. சோகமான காட்சிகளில் கூட அதே மேக்கப்.. முப்பத்து நான்கு தேவர்கள் வந்தாலும் அவர்களை கட்டிப்போடும் அழகு..



பேண்டசி வகையில் ரசிக்கத்தக்க படம், ஆல் கிளாஸ் ஆடியன்ஸையும் கவரும்.. குழந்தைகள், பெண்கள் ரசிக்கும்படிதான் படம் இருக்கு.. காஞ்சனாவை தூக்கி சாப்பிடும்னு சொன்னாங்களே அந்த அளவு இல்லை.. ஆனாலும் படம் ஹிட் தான்.. சந்தானம் ஒரே ஒரு சீனில் 2 நிமிடம் மட்டுமே வர்றார்

எமி ஜாக்சனை ஈர்த்த இந்திய கலாசாரம்!



EMI Jackson attracted the Indian culture!
"மதராசப் பட்டினம், விண்ணைத் தாண்டி வருவாயா இந்தி "ரீமேக், தற்போது, "தாண்டவம் ஆகிய படங்களில் நடித்துள்ள ஹாலிவுட் நடிகை எமி ஜாக்சனை, இந்திய கலாசாரம் ரொம்பவே ஈர்த்து விட்டது. குறிப்பாக, "மதராசப் பட்டினம் படத்தில், தாலியின் மகிமையை தெரிந்து கொண்ட எனக்கு, அடுத்து இல்லத்தரசியாக நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது எனக் கூறும் எமிக்கு, இந்திய படங்களில் நடிக்க அதிக வாய்ப்புகள் கிடைத்தால், ஹாலிவுட் படங்களில் நடிப்பதை கூட குறைத்து, இங்கு வந்து முழுநேர நடிகையாகி விடுவாராம்

எனக்கு அந்த மாதிரியான கதைகள் கிடைக்கவில்லை - இனியா!



Anushka, Tamanna will be iniya!
"வாகை சூடவா இனியா, அதன் பிறகு, "மவுன குரு படத்திலும் போர்த்திக் கொண்டே நடித்தார். இதனால், அவரை கிளாமர் கதைகளுக்கு உகந்த நடிகை அல்ல என, சிலர் முடிவே செய்து விட்டனர். ஆனால் இனியாவோ, "எனக்கு அந்த மாதிரியான கதைகள் கிடைக்கவில்லை. அப்படி கிடைத்திருந்தால் நானும், அனுஷ்கா, தமன்னா மாதிரி சிறந்த கிளாமர் கதாநாயகியாக ஜொலித்திருப்பேன் என்கிறார். தற்போது, "அம்மாவின் கைபேசி படத்தில் நடித்து முடித்துள்ள இனியா, அடுத்து சில கமர்ஷியல் டைரக்டர்களின் படங்களில் நடிக்க இருப்பதாகவும் சொல்கிறார்.

கார் பிரியர் விஜய்!



vijay likes car!
புதிய ரக கார்களை ஓட்டி மகிழ்வதென்றால், விஜய்க்கு அலாதி பிரியம். அதனால், தன் நட்புவட்டார நடிகர்கள் யாராவது, புதிதாக கார் வாங்கி இருப்பதாக சொன்னால், படப்பிடிப்பு இல்லாமல் ஓய்வாக இருக்கும் நாளில், அந்த காரை தனது வீட்டுக்கு கொண்டு வரச்சொல்லி ஓட்டி மகிழ்கிறார். சமீபத்தில் கூட காமெடி நடிகர், "புரோட்டா சூரி, தான் புதிதாக கார் வாங்கி இருக்கும் சந்தோஷத்தை விஜய்யிடம் பகிர்ந்தார். காரை கொண்டு வரச் சொல்லி, தன் வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் சிறிது நேரம் ஓட்டிப் பார்த்து விட்டு, சூரிக்கு கொஞ்சம் பணமும் கொடுத்து, கார் வாங்கியதற்காக வாழ்த்து சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார் விஜய்.

நீச்சல் உடைக்கு “நோ“ ஹன்சிகா!



Swimsuit for the
"ஒரு கல் ஒரு கண்ணாடிக்கு முன்பு வரை, "கதைக்கு தேவைப்பட்டால், எந்த மாதிரி உடை அணிந்தும் நடிப்பேன் எனக் கூறி வந்த ஹன்சிகா, அந்த படத்துக்கு பிறகு, தன் கொள்கையில் திருத்தம் செய்துள்ளார். குறிப்பாக, அதிகமாக உடம்பை காட்டும் உடைகளை அணிந்து நடிக்க மாட்டேன் என, தடாலடியாக நிபந்தனை போட்டு வருகிறார். "சேட்டை படத்தின் ஒரு பாடல் காட்சியில் நீச்சல் உடையில் நடிக்க வேண்டும் என, டைரக்டர் சொன்னதற்கு, மறுப்பு தெரிவித்து விட்டார் ஹன்சிகா. கிளாமர் காட்சிகளில் பல கட்டுப்பாடுகளை விதித்து நடித்து வருவதால், சில டைரக்டர்களுக்கு ஹன்சிகா மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

Thursday 5 July 2012

சூர்யாவை சீண்டும் விக்ரம் ஒரு கோடீஸ்வர குழப்பம்


டிவியில தினமும் நம்ம முகம் வரும் அதனால் மக்கள் நாளைக்கு பாத்துக்கலாம்னுVikram - Suryaபோயிடுவாங்க. ஆனா சினிமா 6 மாசத்துக்கு அப்புறம்தான் வரும் அதனால் மக்கள் ஆர்வமா நான் நடிச்ச படத்தை பார்க்க வருவாங்க. (அப்படி வந்திருந்தா ராஜபாட்டை ஏங்ணா பட்டைய போட்டுகிச்சு?) என் நண்பர்களும் டிவி எனக்கு வேண்டாம்னு சொன்னாங்க அதான் அவங்க சொன்னதை கேட்டுக்கிட்டேன் என்று அரிய பெரிய விஷயம் ஒன்றை சொல்லி அனல் மூட்டியிருக்கிறார் விக்ரம்.
கோடீஸ்வரன் நிகழ்ச்சிக்கு முதலில் இவரைதான் அழைத்தார்களாம். அதை ஏன் இவர் வேண்டாம் என்றாராம்? அது பற்றிதான் இப்போது விரிவாக பேட்டியளித்து சூர்யாவின் ஏரியாவில் சூரைத் தேங்காய் உடைத்திருக்கிறார் விக்ரம். இந்த பேட்டி வந்த நாளில் இருந்தே செவாலியே சாலையின் குறுக்கு சந்து கொதி கொதிப்போடு காணப்படுகிறதாம்.
இருக்காதா பின்னே? சூர்யாவின் கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மினிஸ்டர் ரெகமன்டேஷன், மேயர் ரெகமன்டேஷன் என்று போட்டி நிலவிக் கொண்டிருக்கும் போது, இப்படி ஒரு வியாக்கியாயனம் விக்ரம் வாயிலிருந்து வந்தால் யாருக்குதான் எரிச்சல் வராது?

மீண்டும் வி.சேகர் : விவேக், கருணாஸ் கூட்டணியில் சரவண பொய்கை


எப்போதும் குடும்பத் திரைப்படங்கள் என்றாலே இயக்குனர் வி.சேகர்தான் நினைவுக்கு வருவார்.
நான் புடிச்ச மாப்பிள்ளை திரைப்படம் மூலம் திரையுலகில் காலடி பதித்தவர் வி.சேகர். அதற்குப் பின், காலம் மாறிபோச்சு, வரவு எட்டணா செலவு பத்தணா, பொங்கலோபொங்கல், விரலுக்கேற்ற வீக்கம் என்று இவர் குவித்த குடும்பப்பாங்கான வெற்றிப் படங்கள் அதிகம். இப்போது சரவணப் பொய்கை என்று ஒருகாதல் படத்தை இயக்கி வருகிறார்.
     இந்த படம் பற்றி அவரே சொல்கிறார்."முதலில் என் மனைவி என்னைத் திட்டாமல் படம் பார்க்கவேண்டும் என்கிற கோணத்தில்தான் நான் குடும்பப் பட இயக்குனர் ஆனேன். அதன்பிறகு அப்படியே முத்திரை குத்தப்பட்ட நான் குடும்பப் பட இயக்குனராகவே மாறிவிட்டேன். எனக்கு மார்க்சிசிட் கம்யுனிஸ்ட் கட்சி சார்பில் குடும்ப இயக்குனர் பட்டமும் கிடைத்தது.
     இப்போது சரவணப் பொய்கை எனும் ஒரு காதல் திரைப் படத்தை இயக்கி வருகிறேன். இந்த படத்திற்கு நானே தயாரிப்பாளர். இதில்  என் மகன் கார்ல்மார்க்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். என் படத்தில் எப்போதுமே நகைச்சுவைக்குப் பஞ்சம் இருக்காது. இதில் விவேக், கருணாஸ் கூட ஹீரோவுக்கு நிகராகவே நடிக்கிறார்கள். அருந்ததி என்கிற பெண் கதாநாயகியாக நடிக்கிறார்,
      இந்த படத்திற்கு 'சரவணப் பொய்கை' என்று பெயர் வைத்தற்கு காரணம் ஏன் என்றால் படத்தின் கதை பழனியில் நடப்பதுபோல வருகிறது. காதலர்கள் இருவரும் பழனியில்தான்  சந்திக்கிறார்கள். படத்திற்கு விஜய் இசை அமைத்திருக்கிறார். 60 % படம் முடிந்து விட்டது. விரைவில் இசை வெளியீடு செய்ய உள்ளோம்" என்கிறார்.
       வி.சேகரின் மகனும் படத்தின் கதாநாயகனுமான கார்ல்மார்க்ஸ் பேசுகையில், "படத்தில் நான் ஹீரோ என்றெல்லாம் சொல்ல முடியாது. இந்த படத்தின் முதல் ஹீரோ, என் அப்பா. இரண்டாவது ஹீரோ, கதை. மூன்றாவது ஹீரோ விவேக் சார், நான்காவது ஹீரோ கருணாஸ் சார். இப்போது ஐந்தாவது இடத்தில்தான்  நான் வருகி வருடமாக டான்ஸ், சண்டை கற்றுக் கொண்டேன். படம் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் அருமையான படமாக வந்திருக்கிறது என்கிறார்.

நயன்தாராவின் 6 வது விரல் பலி கொடுக்கப்பட்டதா ..? புதிய பரபரப்புத் தகவல் ..


பெண்களுக்கு இடது கையில் ஆறு விரல் இருந்தால் அவர்கள்தான் இந்த உலகத்தின்மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி என்கிறது ஜோதிடம். அப்படி கோடியில் ஒருவருக்குதான் அமையும் என்று மேலும் பீலா விடுகிறது அந்த ஆராய்ச்சி. அப்படி ஒரு அதிர்ஷ்டக்காரியாக பிறந்தவர்தான் நயன்தாராவும்.

நடிக்க வருவதற்கு முந்தைய வாரம் வரைக்கும் இந்த விரலை பொத்தி பொத்தி பொக்கிஷமாக கருதி வந்த நயன்தாரா, தனது புகழ் வெளிச்சத்துக்கு முதல் நரபலி கொடுத்தது அந்த அழகான அதிர்ஷ்ட விரலைதான்.

ஒரு வேளை அது இன்னும் அவரது கையில் ஒட்டிக் கொண்டு இருந்திருந்தால் சிம்புவுடனும், பிரபுதேவாவுடனும் பழகுவதற்கு முன்பே அவர்களை நன்றாக பிராண்டி வைத்து இரண்டு காதல் தோல்விகளிருந்து காப்பாற்றியிருக்குமோ என்னவோ?

அதுபோகட்டும்… இப்போது நயன்தாரா தனது பேச்சை அடக்கிக் கொண்டார். அல்லது சுருக்கிக் கொண்டார். ஆனால் பிரபுதேவா இப்போதுதான் மெல்ல பேச ஆரம்பித்திருக்கிறார். ‘எனது பிள்ளைகளுக்கு முன் காதல் எம்மாத்திரம்? அதனால்தான் அந்த காதலை கைகழுவ துணிந்தேன்’ என்று அவர் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

பிரபுதேவாவின் இந்த பதில் குறித்து நயன்தாராவை தொடர்பு கொண்ட மூத்த நிருபர் ஒருவருக்கு செம ரெஸ்பான்ஸ் அங்கிருந்து.
‘எதையாவது கேட்டு வாயப் புடுங்காதீங்க. நோ கருத்து’ என்று கூறிவிட்டார் நயன்.

மித்ராவின் கனவைக் கலைத்த விக்ரம்!


சின்னச்சின்ன கதாபாத்திரங்களில் நடித்து நடித்து ஹீரோயின் இடத்துக்கு முன்னேறி தன்னம்பிக்கை அழகி மித்ரா குரியன்.

காவலன் படத்தில் விஜயின் இரண்டாவது கதாநாயகியக நடித்தார். அதற்கு முன் பாத்திரிகையாளர் பாபு.கே.காமராஜ் இயக்கியிருக்கும் கந்தா படத்தில் கரண் ஜோடியாக நடித்திருந்தாலும், ரிலீஸில் காவலன் முந்திக்கொண்டது.

படத்தில் அசின் தோழியாக நடித்த மித்ரா, அசின் காதலித்துக் கொண்டிருக்கும் விஜய்யை க்ளைமாக்ஸில் தட்டிக் கொண்டு போய் விடுவார். படத்தின் திருப்புமுனை காட்சியில் நடித்திருப்பதால், அசினைவிட எனக்குத்தான் இந்த படத்தில் முக்கியத்துவம் என்று பேட்டி கொடுக்கும் அளவுக்கு விஜயின் காவலன் அவரை தூக்கி நிறுத்தியது!

பில்லா 2 தியேட்டரிக்கல் ட்ரெயிலர் 2 வீடியோ இங்கே
சிம்பு மற்றும் இயக்குனர் விஜய் சந்தார் வாலு சூட்டிங்க் ஸ்பாட்ட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம்
சிம்பு நிகழ்வொன்றில் புகைப்படங்கள்
அஞ்சா கூட்டம் திரைப்பட செவ்வி புகைப்படங்கள்
சேலத்துப் பொண்ணு திரைப்பட படங்கள்
மறு விசாரணை திரைப்பட படங்கள்
சோழ நாடு திரைப்பட படங்கள்
முதலாவது எஸ்.எம்.எஸ் சினிமா விளம்பரம் லாஞ்ச் படங்கள்
நெடுஞ்சாலை திரைப்படத்தின் படங்கள்

ஆனால் விக்ரமின் ‘கரிகாலன்’ மித்ராவை டாமல் என்று படுபாதாளத்தில் போட்டு விட்டது! காவலன் படத்தில் மித்ராவின் நடிப்பைப் பார்த்த விக்ரம், அவர் நடித்து வந்த ப்ரியட் படமான ‘கரிகாலன்’ படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக மித்ராவை ஒப்பந்தம் செய்யும்படி இயக்குனர் கண்ணணுக்கு உத்தரவிட்டார். அவரும் உடனே மித்ராவை 25 லட்சம் சம்பளம் பேசி ஒப்பந்தம் செய்தார்கள். விக்ரம்-மித்ரா தொடர்பான காட்சிகளில் சிலவற்றை கேரளாவில் எடுத்த்தார் கண்ணன். சியானுடன் நடித்த சந்தோஷத்தில் துள்ளிக் குதித்த்தார் மித்ரா! ஆனால் இரக்கமே இல்லாமல் கரிகாலணை டிராஃப் செய்து விட்டார்கள். இதனால் தமிழ்சினிமாவில் மிகப்பெரிய உயரத்தை அடையலாம் என்று எண்ணியிருந்த மித்ராவின் கனவுக்கு கண்ணக்கோல் வைத்து காலி செய்து விட்டார் விக்ரம்!

கிராமத்துப்பையனாக நடிக்க ஆசை - அஜித்




கிராமியக் கதைகளில் நடிக்க ஆசைப்படுவதாகக் கூறுகிறார் அஜித்குமார்.

நடிகர் அஜித்தின் படங்கள் பெரும்பாலும் நகரங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டவையாகத் தான் இருக்கும். மேலும் அவரது படம் முழுக்க சண்டைக்காட்சிகள், நகர நெரிசல் என்று காட்சிப்படுத்தியிருப்பார்கள்.

இப்படி நடிப்பதற்கு அலுத்து விட்டதோ என்னவோ, கிராமியக்கதைகளில் நடிக்க ஆசைப்படுவதாக தனது நண்பர்களிடம் கூறியிருக்கிறார் அஜித். அதாவது குத்துப்பாட்டு, திருவிழா என்று கிராமங்களுக்கு உரித்தான ஒரு கதையில் நடிக்க தயாராக இருக்கிறார் அஜித்.

என்ன தான் பெரிய புட்கேட் படங்களாக இருந்தாலும், ரசிகர்கள் அதைப்பார்த்த உடன் மறந்து விடுவார்கள். ஆனால் கிராமியக் கதைகள் தான் காலம் கடந்தும் நினைவில் இருக்கும் என்பதை நன்றாகவே உணர்ந்திருக்கிறார் அஜித்.

அஜித்தை விரைவில் இந்த மாதிரியான ஒரு கதையில் எதிர்பார்க்கலாம் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்கள் கூறுகிறார்கள்.

விஜய் – விஜயகாந்த் ரசிகர்கள் இடையே ஏற்பட்ட கைகலப்பு….


சென்னை அருகே விஜய் ரசிகர்களை தேமுதிகவைச் சேர்ந்தவர்கள் சரமாரியாகத் தாக்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பரங்கிமலை ஒன்றிய விஜய் ரசிகர் மன்றம் சார்பில் மக்கள் மன்றம் என்ற பெயர் பலகை திறப்பு விழா சென்னை அருகே பெருங்களத்தூர் குண்டுமேட்டில் நேற்று நடைபெற்றது. பரங்கிமலை விஜய் ரசிகர் மன்ற ஒன்றிய செயலாளர் செந்தில் தலைமை வகித்தார். விழா நடந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த அப்பகுதியை சேர்ந்த தேமுதிகவினர் விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதில் இரு தரப்பினருக்கும் கடுமையான வாக்குவாதம் மற்றும் கைகலப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரும் மாறி மாறித் தாக்கிக் கொண்டனர். இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்தனர். அதைப் பார்த்த தேமுதிகவினர் ஓட்டம் பிடித்தனர்.

தேமுதிகவினர் நடத்திய தாக்குதலில் விஜய் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த 3 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

விஜய் ரசிகர்கள் கொடுத்த புகாரின் பேரில் தேமுதிகவைச் சேர்ந்த 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து வலை வீசி தேடி வருகின்றனர்.

ஒவ்வொரு படத்திலும் கற்றுக்கொள்கிறேன்! - எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்




பதிமூன்று மொழிகளில் இருநூறுக்கும் மேற்பட்ட படங்களில் எடிட்டராகப் பணியாற்றியிருப்பவர். சாதாரண விருதுகள் முதல் சர்வதேச விருதுகள் வரை இவரைத்தேடி தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கின்றன. சிறந்த எடிட்டருக்கான தேசிய விருதினை எட்டு முறை பெற்றிருப்பதன் மூலம், இந்திய அளவில் அதிக தேசிய விருதுகள் பெற்ற ஒரே திரைக்கலைஞர் என்ற பெருமைக்குரியவர். அவரைச் சந்தித்தபோது...

உங்களைப் பற்றி ஒரு சிறுகுறிப்பு...

எனக்கு ஆந்திரா பூர்விகம் என்றாலும் படித்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். சென்னை பல்கலைக்கழகத்தில் பி.ஏ., இலக்கியம் படித்தேன். அப்பா சஞ்சீவி சினிமா எடிட்டர் என்பதால் விடுமுறை நாட்களில் அப்பாவோடு எடிட்டிங் ரூமுக்கு போவேன். அப்போது எடிட்டிங் மேல் ஆர்வம் எற்பட்டது. அங்கிருந்து நான் வேற எங்கேயும் திரும்பிக்கூட பார்க்கவில்லை. மெதுமெதுவாக எடிட்டிங் கற்றுக்கொண்டு அத்துறையிலேயே பணியாற்றத் தொடங்கினேன்.

நீங்கள் எடிட்டராக பணியாற்றிய முதல் படம் எது? உங்களுக்கு சிறந்த எடிட்டருக்கான முதல் தேசிய விருது எந்தப் படத்துக்குக் கிடைத்தது?
இரண்டும் ஒரே படம்தான். "ராக்' என்கிற ஹிந்திப் படம். 1988ல் வெளிவந்தது.

ல்வேறு மொழிகள், பல்வேறு ஆளுமைகளுடன் பணியாற்றியுள்ளீர்கள் நிறைய சமரசம் செய்து கொண்டிருப்பீர்களே?

இந்தியா முழுக்க சினிமாவின் மொழியோ அல்லது கலாசாரமோ பொதுவானதாகத்தான் இருக்கிறது. மற்றபடி நாம் பேசுகிற மொழிதான் பிரச்னை. எனக்கு தாய்மொழி தெலுங்கு, தமிழ்நாட்டில் வளர்ந்ததால் தமிழ் தெரியும். ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் தெரியும் என்பதால் பிரச்னை ஏற்படவில்லை.

இந்திய சினிமாவில் உடை, விழா, உணவு இப்படி சில வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் சென்டிமெண்ட் பொது. அப்பா - மகன், அண்ணன் - தங்கை இப்படி உறவுகளுக்குள்ளான சென்டிமெண்ட் எல்லா மொழியிலும், எந்த ஆளுமை எடுத்தாலும் பொதுவாகத்தான் இருக்கும். எனவே இதில் நான் என்ன கற்றுக்கொள்ள முடியும் என்று பார்ப்பேன். என்னுடைய அதிர்ஷ்டம் கற்றுக்கொள்வது சமரசமாக அமையவில்லை.

பொதுவாக படத்தொகுப்பை பொறுத்தவரையில், சில விஷயங்கள் இருக்கின்றன. கதையை எப்படி கோர்வையாகச் சொல்வது, பார்வையாளனை எப்படிக் கவர்வது என்பது மிக முக்கியம். பல காட்சிகள், பல விதமாக எடுக்கப்படுகின்றன. அதை எப்படி வைத்தால் நன்றாக இருக்கும், இதற்கு எப்படி இன்னும் மெருகூட்டலாம் என்றெல்லாம் முடிவு செய்கிற அளவுகோலாக ஒரு படத்தொகுப்பாளர் இருக்கவேண்டும். இதில் சமரசத்திற்கு இடமே கிடையாது.

தொழில் நுட்பம் மாறிக்கொண்டே இருக்கிறது. ஒரு எடிட்டர் கற்றுக்கொண்டே இருக்கவேண்டுமா?

கண்டிப்பாக. ஒரு ஆசிரியர் எப்படி மாணவன் போல் கற்றுக்கொண்டிருக்க வேண்டுமோ அதுபோல்தான் இதுவும். எத்தனை படத்தை வெட்டி ஒட்டியிருந்தாலும், ஒரு புதிய படம் எடிட்டருக்கு நிறைய கற்றுக்கொடுக்க காத்துக்கொண்டிருக்கும். ஒரே மாதிரி எந்தக் கதையும் இருக்காது. எனவே அதற்கு ஏற்றாற் போல் நாம் புதுமையாகச் செய்ய வேண்டும்.

அதே போல தொழில் நுட்பம் என்பது புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கிறது. தற்போது டிஜிட்டல் சினிமா வந்திருக்கிறது. புதிதாக வரும் தொழில் நுட்பத்தை நாம் தடுத்து நிறுத்த முடியாது. அதை ஏற்றுக்கொண்டு, கற்றுக்கொண்டு சிறப்பாக செய்யவேண்டும். "இது எனக்கு கஷ்டமாக இருக்கிறது.. இது தேவையில்லையே..' என்று சொன்னால் நாம் இருக்கிற இடத்திலேயே இருக்கவேண்டியதுதான்.

டிஜிட்டல் சினிமா சரியானதல்ல என்று பல முன்னணி ஒளிப்பதிவாளர்களே சொல்கிறார்களே?

புதுசாக வரும் எதிலும் சில குறைபாடுகள் இருக்கலாம். அதற்காக அது சரியில்லை என்று சொல்லமுடியாது. இரண்டு, மூன்று வருடத்துக்கு முன்பு இருந்த டிஜிட்டலை விட இப்போது தரம் கூடியிருக்கிறது. ஒரு புது குழந்தை வளர்வதைப்போல அது வளர்ந்து வருகிறது. இன்று சினிமா டிஜிட்டலிலேயே எடுத்து, டிஜிட்டலிலேயே வெளியிடப்படுகிறது. அப்படியிருக்க அதை சரியானதல்ல என்று எப்படி ஒதுக்க முடியும்? மிகவும் சிறப்பாக வர கொஞ்சம் நாளாகலாம். ஆனால் அதுதான் கடைசியில் நிற்கும்.

ஒரு திரைக்கதைதானே படம்.. அப்படியிருக்க நீங்கள் உங்கள் எடிட்டிங் வழியே கதை சொல்ல முடியுமா?
நிச்சயமாக. நிறைய படங்களில் இதுபோல் நடந்திருக்கிறது. பேப்பரில் இருக்கும் ஒரு கதை படிக்கும் போது நன்றாக, கோர்வையாக இருக்கும். சில நேரங்களில் ஒரு விஷயத்தை அழுத்தமாக சொல்வதற்கு இயக்குநர் அந்த விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார். ஆனால் அது படமாக எடுக்கப்பட்ட பிறகு திரும்பத் திரும்ப வந்தது போல் இருக்கும். சுவாரஸ்யம் இருக்காது. அந்த மாதிரி இடங்களில் ஒரு எடிட்டர்தான் படத்தின் கோர்வைதன்மையைக் கொண்டுவர முடியும். அப்போது திரைக்கதையே மொத்தமாக மாறும்.

திரைக்கதையில் மாற்றம் செய்யப்படாத ஒரு கதை எடிட்டரால் மாற்றம் செய்யப்படும். அந்த நேரத்தில் நாம்தானே கதை சொல்கிறோம்?

எல்லாப் படங்களையுமே நேர்த்தியான படத்தொகுப்பால் மிளிரவைக்கும் ரகசியம்?

நான் எடிட்டிங் செய்ய ஒத்துக்கொள்ளும் ஒவ்வொரு படத்தையும் ஆர்வத்தோடு செய்வேன். எத்தனை படம் பண்ணினாலும் இது புது படமாச்சே என்று எண்ணிதான் பண்ணுவேன். அதே போல ஒரே மாதிரியான படங்களை நான் செய்யறதே இல்லை. வேறு வேறு மாதிரி செய்கிறேன்.

ஒரு படம் காதல் படம் என்றால் அடுத்தபடம் ஆக்ஷன். அடுத்து ஒரு சென்டிமெண்ட் என்று மாற்றிக்கொள்கிறேன். குறும்படம் செய்கிறேன். குறும்படஙகளில் நல்ல சவால் இருக்கும். அதே போல் பெரிய பேனர், பெரிய நடிகர், பெரிய இயக்குநர் படங்கள் பண்ணும் போது அது ஜாலியாக இருக்கும். எப்படி இருந்தாலும் நம்முடைய பணியில் நாம் ஆர்வத்துடன் செய்தால் அது நிச்சயம் நன்றாக இருக்கும்.

சின்ன படம்.. பெரிய படம் என்பதைப் பொறுத்து எடிட்டிங் அமையுமா?

அப்படி பண்ண முடியாது. ஒரு படத்தை எடிட்டிங் செய்யும் போது அதைப் பார்வையாளனுக்கு எப்படிச் சிறப்பாக கொடுக்க முடியும் என்றுதான் பார்ப்போம். அதோடு அந்தப் படத்தை எப்படி எடுத்திருக்கிறார்கள் அதாவது, எந்த மாதிரி தொழில்நுட்பத்தில் எடுத்திருக்கிறார்கள். அதற்கேற்றார் போல் நம்முடைய எடிட்டிங் அமையும். என்ன பெஸ்டாக கொடுக்க முடியுமோ அதைத் தருகிறோம். மற்றபடி சின்ன படம் பெரிய படம் என்று நான் பார்ப்பதில்லை.

தமிழ்ப் படங்கள் பற்றி.. அதன் இயக்குநர்கள் பற்றி?

கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதாக உணர்கிறேன். கேரளாவில் முன்பு அப்படி இருந்தது. இப்போது அவர்கள் மற்றமொழிப் படங்களைப் பார்த்து கெட்டுவிட்டார்கள். ஆனால் தமிழில் விதவிதமான கதைகள் வருகின்றன.

இயக்குநர்கள் புதிது புதிதாக செய்கிறார்கள். இந்திய சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவின் களம் வேறுபட்டிருக்கிறது. அதே நேரம் புதுமையாக வருகின்ற சினிமாக்களுக்கு மசாலா சினிமாக்கள் எப்போதும் எதிரியாகவே இருக்கிறது. நல்ல வேளையாக தமிழ் சினிமாவுக்கு அந்த ஆபத்து குறைவாக இருக்கிறது.

உங்கள் பார்வையில் இந்திய சினிமா எப்படியிருக்கிறது?
இந்திய சினிமாவுக்கு நூறு வயது என்கிறார்கள். அது தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்துள்ள அளவுக்கு கதைக் களத்தில் வளரவே இல்லை. உலக சினிமா மேதைகள் நகைக்கிற அளவில்தான் இந்திய சினிமா இருக்கிறது. சில படங்கள் இங்கே நன்றாக இருந்தாலும் (ஸ்லம்டாக் மில்லினியர்) அதுவும் ஹாலிவுட்டில் இருந்து வந்து எடுத்ததாக இருக்கிறது.

இங்கே இருப்பவர்கள் பாக்ஸ் ஆபிஸில் நல்ல கலெக்ஷன் வந்துவிட்டால் போதும் என்று சினிமாவை விலைமாது போல வைத்திருக்கிறார்கள். இங்கிருக்கும் பெரிய பெரிய இயக்குநர்கள் கூட, அவர்களால் சினிமாவை மாற்ற முடியும் என்ற நிலையிலும் கூட அதற்கு எந்த முயற்சியும் எடுக்காதது வருத்தமாக இருக்கிறது.

நாலு பாட்டு, இரண்டு சண்டை கதைகளை எடுத்துவிட்டு அதை எந்த தைரியத்தில் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பி வைக்கிறார்கள் என்றே தெரியவில்லை. சம்பந்தமே இல்லாமல் நாயகனும் நாயகியும் (பாட்டுக்கு) ஆடிக்கொண்டிருப்பார்கள். ஆஸ்கர் கமிட்டியினர் ஒரு மூலையில் சிரித்துக்கொண்டிருப்பார்கள். இதுதான் நிலைமை.

ரசிகர்கள் மாறினாலும், இயக்குநர்கள் மாறவில்லை. ஒரு படம் வெற்றி அடைந்தால் அதே போல மறுபடியும் மறுபடியும் எடுக்கிறார்கள். இப்போது கொஞ்சம் மாறியிருக்கலாம். ஆனால் இந்திய சினிமா இப்போது ஆரோக்கியமாக இருக்கிறது என்று சொல்ல முடியாது.

இப்படிப்பட்ட படங்களுக்குப் படத்தொகுப்பு செய்து உங்களுக்கு அலுப்பு ஏற்படவில்லையா?

கண்டிப்பாக அலுப்புதான் ஏற்படுகிறது. அதற்குத்தான் மாறுபட்ட கதைக்களங்கள், புதுப்புது இயக்குநர்கள் என்று போய்க்கொண்டே இருக்கிறேன். நல்ல சினிமாவுக்குத்தான் நானும் காத்திருக்கிறேன். அந்த நம்பிக்கையில்தான் பயணிக்கிறேன்.

மணிரத்னம் படங்களுக்குப் பணியாற்றும் போது, உங்களுக்கு முழு சுந்திரம் கிடைக்குமா?
மணிரத்னம் ஒரு வலுவான இயக்குநர். தொழில்நுட்பத்தில் பணிபுரிபவர்களுக்கு முழு சுந்திரம் கொடுப்பார். அப்படிப்பட்ட சுதந்திரத்தால் நமக்கு இன்னும் சவால் இருக்கும்.

அதே போல அவருக்கு என்ன வேண்டும் என்பதையும் மிக நேர்த்தியாக நம்மிடமிருத்து பெற்றுக்கொள்வார். எப்படிப்பட்ட நிலையிலும் இயக்குநருக்கும் எடிட்டருக்கும் சரியான புரிதல் இருக்கவேண்டும். அப்போதான் படத்தின் வெளிப்பாடு சிறப்பாக இருக்கும். அவருடைய "கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தின் எடிட்டிங்குக்காக எனக்கு தேசிய விருது கிடைத்தது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

டத்தொகுப்பில் உங்கள் பாணி?

என்னைப் பொறுத்த அளவில் ஒரு எடிட்டர் ஒரு வட்டத்தைப் போட்டுக்கொண்டு இப்படித்தான் செய்வேன் என்று இருக்கமுடியாது. ஒரு படத்துக்கு முதல் ரசிகன் எடிட்டர்தான். எனவே அவருக்குப் பொறுப்பு அதிகம்.

அந்தப் படத்துக்கு எது வேண்டுமோ அப்படி அந்தப் படத்தில் பயணிப்பதுதான் என் பாணி. தேவைப்படாத இடத்தில் என் திறமையைக் காட்டுவது, எனக்குப் பிடிக்காது. எனக்கு சினிமா ரியாலிட்டியாக இருக்க வேண்டும்.

சிலர் டிஜிட்டல் எபெக்ட்களை தேவையில்லாம் சேர்த்து சினிமாவை மேலும் சினிமாதனமாக மற்ற முயல்வார்கள். நான் சினிமாவை வாழ்க்கையாகப் பார்க்க விருப்புகிறேன். எளிமை மற்றும் தெளிவுதான் என் எடிட்டிங் பாணி.

படத்தொகுப்பில் புதுமையானதைச் செய்யும் போது இயக்குநர்கள் ஈகோ பார்ப்பார்களே?
ஒரு படம் நன்றாக வரவேண்டும் என்றுதான் இயக்குநருக்கும் ஆசை. எடிட்டருக்கும் ஆசை. இங்கே நான் பெரியவன் நீ பெரியவன் என்று பார்க்க முடியாது. எல்லா மனிதர்களும் ஒரே மாதிரி இருக்க முடியாது. அதுவும் சினிமாவில் அப்படி இருக்கவே முடியாது. ஆனால் நான் பெரும்பாலும் தெரிந்தவர்களுடன் பணியாற்றியதால் எனக்கு அந்த மாதிரி பிரச்னைகள் ஏற்படவில்லை.

எடிட்டருக்கும் இயக்குநருக்கும் எங்கு மோதல் உருவாகும்?

நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. காட்சிகளை ரொம்பவும் செலவு செய்து, ரிஸ்க் எடுத்து பண்ணியிருப்பார்கள். ஆனால் எடிட்டிங்கில் பார்த்தால் அவற்றுக்குத் தேவையே இருக்காது. இந்தக் காட்சி வேண்டாமே என்று நாம் சொன்னால், இயக்குநர் அதை மறுக்கக்கூடும். அது போன்ற நேரங்களில் இயக்குநர் அந்தக் காட்சி தேவைதான் என்பதற்கு நிறைய காரணம் வைத்திருப்பார்.

நாம் அந்த நேரத்தில் எடிட்டிங்கில் இருக்கிற சூட்சுமத்தையும், பார்வையாளனுக்கு ஏற்படும் ஏமாற்றத்தையும் எடுத்துச் சொல்வோம். இயக்குநர் அதை வைத்தேயாக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தால், கடைசியில் அவர் பக்கம்தான் நாம் போக வேண்டும்.

இயக்குநர்தானே ஒரு படத்துக்கு கேப்டன்?

இருந்தாலும் ஒரு எடிட்டர் இயக்குநருக்காகவோ, பெரிய நடிகர் என்றோ எடிட்டிங்கில் சமரசம் செய்துகொள்ள முடியாது. எடிட்டருக்கு அவர்களுடைய உழைப்பும் அவர்கள் செய்துள்ள செலவும் பிரமிப்பாகத் தெரிந்தால் படத்தில் மாபெரும் தொய்வு ஏற்படும். எடிட்டரைப் பொறுத்தவரை அவருக்கு அது ஒரு தொழில். அதில் கவர்ச்சியும் கலை நேர்ந்தியும் முக்கியமாக இருக்கவேண்டும். எனவே இதில் வரும் சிறுசிறு மோதல்களைத் தவிர்க்க முடியாது.

சிறப்பாக இருந்தும் நீங்கள் வெட்டிவிட நேர்ந்த காட்சி எந்தப் படத்தில்? வெட்டியே தீரவேண்டும் என்று நினைத்தும் வெட்டமுடியாமல் போன காட்சி எந்தப் படத்தில்?

"கமிலே' என்றொரு ஹிந்தி படம். அந்த படத்தில் தொடக்கத்தில் வரும் ஐந்து நிமிட ஆக்ஷன் காட்சி மொத்தப் படத்தையும் தொல்லை பண்ணிக்கொண்டிருந்தது. ஆனால் ரொம்ப அழகான சண்டைக் காட்சி அது. கோடிக் கோடியாக செலவு செய்து எடுத்திருந்தார்கள். எனக்கு அந்தக் காட்சி உறுத்தியது. படத்தைப் பார்த்தவர்களுக்கு அந்தக் காட்சிக்குப்பிறகான படத்தை பார்ப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் அந்தக் காட்சியை எடுத்துவைத்துவிட்டு ஏற்கெனவே பார்க்காதவர்களுக்கு போட்டுக் காண்பித்தோம். அவர்கள் படத்தை வெகுவாகப் பாராட்டினார்கள். அந்த தூக்கப்பட்ட காட்சியைப் பற்றி அவர்கள் பேசவே இல்லை. அந்தக் காட்சி இல்லாமல் படம் வெளிவந்தது. வெற்றி பெற்றது.

இரண்டாவது விஷயத்துக்கு ஒரு குறிப்பிட்ட படத்தை சொல்ல விரும்பவல்லை. நிறைய படத்தில் அப்படி நடந்திருக்கிறது. நாம் சொல்லுவோம். ஆனால் இயக்குநர் அதற்கு ஒரு காரணம் வைத்திருப்பார். தியேட்டருக்குப் படம் வந்துவிட்டு, அதன்பிறகு ஆடியனஸýக்குப் பிடிக்காமல் இரண்டு, மூன்று நாள் கழித்து வெட்டி ஒட்டி மறுபடியும் போடுவார்கள். இதை பாஸிட்டிவாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

வசனக் காட்சிகள், பாடல், நடனம், சண்டைக் காட்சி - இதில் உங்கள் பங்கு எங்கு அதிகம்?

அப்படி எதுவும் குறிப்பிட்டுப் பார்க்கமுடியாது. குறிப்பாக, ஒரு பெரிய ஹீரோவின் நடனத்தை ரசிகர்கள் விரும்பிப் பார்க்க வருவார்கள். அங்கு போய் நம் திறமையைக் காட்டுகிறோம் என்று இஷ்டத்துக்கும் எடிட்டிங் செய்தால் ரசிகர்களுக்கு அதில் ஈடுபாடு இருக்காது.

அதே போல ஒரு புதுமுக ஹீரோவுக்கு நடனம் சரியாக வராது. அந்த நேரத்தில் அங்கு யாருடைய நடனம் சிறப்பாக இருக்கிறதோ அதை வைத்து அந்த நடிகரின் நடனத்தை சரி பண்ணவேண்டும். எந்தக் காட்சியையும் சிறப்பாக கொடுப்பதுதான் முக்கியம். அதற்குத்தான் நாம் அதிகம் உழைக்கவேண்டும்.

இத்தனை படங்கள் செய்திருக்கிறீர்கள், இதிலிருந்து நீங்கள் கற்றுக் கொண்டது?

இதைத்தான் கற்றுக்கொண்டேன் என்று குறிப்பாக சொல்ல முடியாது. ஒவ்வொரு இயக்குநரிடம் பணிபுரியும் போதும் அவர்களிடம் உள்ள புதுமையான விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். மணிரத்னத்துடன், ஷாஜியுடன், மஞ்சு போராவுடன், விஷால் ராஜுவுடன் பணிபுரியும் போதெல்லாம் எனக்கு புதுப்புது அனுபவங்கள், பார்வைகள் கிடைக்கின்றன. "ஓ.. ஒரு விஷயத்தை இப்படிக்கூட பார்க்கலாமோ, அடடா.. இந்த விஷயத்தை இதுநாள் வரை தெரிந்து கொள்ளாமல் விட்டுவிட்டோமே' என்றெல்லாம் தோன்றும்.

உங்கள் சினிமா வாழ்க்கையில் சவாலான படமாக இருந்தது எது?
"வானப்ரஸ்தம்' என்கிற மலையாளப் படம். இந்தப்படம், கதகளியை அடிப்படையாகக் கொண்ட தத்துவார்த்தமான படம். ஒரு குறிப்பிட்ட காட்சியில் கதகளி போய்க்கொண்டே இருக்கும்.

எந்த ஒரு இடத்தில் வெட்டவேண்டும் என்றாலும், மிக கவனமாக செய்யணும். ஏன் என்றால் படத்தின் உயிர்ப்பு சிதைந்துவிடும், ஐந்து படங்களுக்கு நான் செய்த வேலையை இந்த ஒரே படத்துக்குச் செய்தேன். இந்தப்படம் என்னுடைய எடிட்டிங் வாழ்க்கையில் மிகச் சவாலான படம்.

உங்களுக்குப் பிடித்த படத்தொகுப்பாளர்கள்?

எப்போதும் பி.லெனினை பிடிக்கும். இப்போது நிறைய இளைஞர்கள் சிறப்பாகச் செய்கிறார்கள். குறிப்பாக, "ஆடுகளம்' கிஷோர் கவனத்தை ஈர்க்கிறார்.

ற்போது செய்து கொண்டிருக்கும் புதிய படங்கள்?

"கடல்', "துப்பாக்கி', "தங்கமீன்கள்', அப்புறம் ஹிந்தியில் ஒரு படம்.

Wednesday 4 July 2012

தமிழ் படத்தில் சஞ்சய் தத்!


       ஒளிப்பதிவாளர்கள் இயக்குனர்கள் ஆகும் வரிசையில் ரவி.கே.சந்திரன் தன்னையும் இணைத்துள்ளார்.

தனது முதல் படத்தின் நாயகனாக ஜீவாவை தேர்வு செய்து இருக்கிறார். ஆஸ்கர் விருது பெற்ற ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி, படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் இப்படத்திற்காக ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.

இப்படத்தினை 'கோ', 'விண்ணைத்தாண்டி வருவாயா' உள்ளிட்ட படங்களைத் தயாரித்த R.S.Infotainment நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிகக் இருக்கிறார் சஞ்சய் தத். ஏதோ இரண்டு அல்லது மூன்று காட்சிக்கு வருவார் என்றில்லாமல், படம் முழுக்க வருவது போன்ற ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க சம்மதித்து இருக்கிறார்.

இந்திய திரையுலகின் முக்கிய ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கும் படம் என்பதால் உடனே ஒ.கே கூறி விட்டாராம் சஞ்சய் தத்.

நாயகி தேடும் படலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

' கோச்சடையான் ' ஸ்பெஷல் செல்போன்!


ரஜினியின் முழுக்கவனமும் இப்போது 'கோச்சடையான்' படத்தின் மீது தான் இருக்கிறது.

'கோச்சடையான்' படத்தினை தீபாவளிக்கு திரையிட அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது படக்குழு. ஆனால் கிராபிக்ஸ் பணிகள் அதிகமாக இருப்பதால், படம் தீபாவளிக்கு வருவது சாத்தியமில்லை என்று செய்திகள் வெளிவந்தன.

'கோச்சடையான்' படத்தினை தயாரித்து வரும் ஈராஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

அந்த அறிக்கையில் " கோச்சடையான் படத்தின் டிவி உரிமையை ஜெயா டிவி வாங்கி இருக்கிறது. தெலுங்கு உரிமை லட்சுமி கணபதி பிலிம்ஸிடம் இருக்கிறது.

'கோச்சடையான்' படத்தில் ரஜினியுடன் தீபிகா படுகோன், ஜாக்கி ஷெராப், சரத்குமார், நாசர், ஷோபனா, ஆதி, ருக்மணி மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா டோக்கியோவில் நடைபெறும். லாஸ் ஏஞ்சல்ஸ், லண்டன் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் படத்தின் பிரிமியர் காட்சி நடத்த தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.

படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் KARBON மொபைல்ஸ் உடன் ஒப்பந்தம் போடப்பட்டு இருக்கிறது. KARBON இப்பட வெளியீட்டை கொண்டாடும் வகையில் 5 லட்சம் 'கோச்சடையான்' மொபைல் போன்களை வெளியிட உள்ளது. அத்துடன் மேலும் பல சிறப்புப் பரிசுகளையும் வழங்க இருக்கிறது.

படம் இவ்வருட இறுதியில் வெளிவரும் " என்று தெரிவித்து இருக்கிறார்கள்.

'கோச்சடையான்' 12-12-12 ரஜினியின் பிறந்த நாள் அன்று வெளிவருமோ?

ஐந்து நிமிட பாடலுக்கு ஆட 15 கோடி சம்பளம் வாங்கிய சூப்பர் ஸ்டார்!


    பிரபல இந்தி நடிகர் அமீர்கானின் தலாஷ் இந்திப்படத்தில் ரஜினி ஒரு பாடலுக்கு ஆடப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஜினி இதில் ஆடினால் படத்துக்கு உலகம் முழுவதும் கூடுதல் வரவேற்பு கிடைக்கும் என்றும், இதனால் படத்தை பெரும்தொகைக்கு விற்கலாம் என்றும் திட்டமிட்டு அவரை அமீர்கான் அணுகி வற்புறுத்துவதாகவும் ரஜினியும் ஆட சம்மதித்து விட்டதாகவும், இந்திப்பட உலகில் கிசுகிசுக்கின்றனர்.
இதில் ரஜினியுடன் இந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன், கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் போன்றோரும் ஆட உள்ளதாக கூறுகின்றனர். இந்த பாடலுக்கு ஆடுவதற்காக   ரஜினிக்கு மட்டும் ரூ.15 கோடி சம்பளம் என்கின்றனர்.

நடிகை கார்த்திகாவின் அதிர வைக்கும் பழைய தோற்றம்! (பட இணைப்பு)

   தமிழ் சினிமா மேக்கப் பாய்ஸ் க்கு நிச்சயம் சல்யூட் போட்டுத்தான் ஆக வேண்டும்…!
கார்த்திகாவின் முன்னைய நாள் தோற்றத்தை பாருங்கள்…!
எப்படி பட்டி…. ரிங்கரிங் செய்து திரையில் காட்டியிருக்கிறார்கள்…!
இதையும் பாருங்க…!

உடம்பை ஏற்றி, இறக்க விக்ரமிற்கு 3 மாதங்கள் கெடு கொடுத்த ஷங்கர்.


படத்திற்கு படம் தன்னை இயக்குனர்கள் வித்தியாசமாக காட்ட நினைக்கிறார்களோ இல்லையோ, தன் கெட்டப்புக்கும் கேரக்டருக்கும் மெனக்கெடுவார் விக்ரம்.

'தெய்வத்திருமகள்' படத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள சிறு குழந்தைகளின் மனதில் இடம் பிடித்தவர் 'தாண்டவ'த்தில் ஆக்ஷன் அவதாரத்தில் தோன்ற இருக்கிறார்.

தாண்டவத்தினை தொடர்ந்து ஷங்கர் இயக்கும் 'ஐ' படத்தில் நடிக்க இருக்கிறார்.

'ஐ' படத்தில் விக்ரமிற்கு பல்வேறு கெட்டப்புகள் இருக்கிறதாம். முதல் பாதி படத்தில் விக்ரம் மிகவும் ஒல்லியாக இருக்க வேண்டுமாம். பிற்பாதியில் உடம்பை மிகவும் ஏற்றி இருக்க வேண்டுமாம்.

இதற்காக ஷங்கர் முதலில் விக்ரம் ஒல்லியாக இருக்க வேண்டிய காட்சிகளை அனைத்தையும் காட்சிப்படுத்தி விட்டு, மூன்று மாத காலம் விக்ரமிற்கு பிரேக் கொடுத்திருக்கிறாராம். அதற்குள் விக்ரம் உடம்பை அடுத்த பாதிக்கு ஏற்றபடி தயார் செய்து கொள்ள வேண்டுமாம்.

சீனாவில்' ஐ' படத்திற்காக கிட்டத்தட்ட 2 மாதங்கள் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. படத்தில் இரண்டு நாயகிகள் இருக்கிறார்கள். சமந்தா விலகியதை அடுத்து ஏமி ஜாக்சன் நடிக்கலாம் என்று செய்திகள் உலா வருகின்றன.

தம்பியுடன் ஆட்டம் போட்ட ப்ரணிதா, அண்ணன் சூர்யாவுடன் துப்பறிகிறார்.


மாற்றான்' படத்தினைத் தொடர்ந்து 'சிங்கம் 2' படத்திற்கு தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் சூர்யா. 'சிங்கம் 2' படத்தினை அடுத்து தேதிகள் கொடுத்து இருக்கும் படம் 'துப்பறியும் ஆனந்தன்'.

இப்படத்திற்கு இப்போதே எதிர்ப்பார்ப்பு கூடி இருக்கிறது. 'காக்க காக்க', 'வாரணம் ஆயிரம்' வெற்றிக் கூட்டணியான கெளதம் மேனன் - சூர்யா மீண்டும் இணைவது தான் இதற்கு காரணம்.

இப்படத்தினை கௌதம் மேனனின் போட்டோன் கதாஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முழுக்க முழுக்க ஜேம்ஸ்பாண்ட் பாணியில் அமையும் ஆக்ஷன் படம் இது. விஜய்யை வைத்து கௌதம் மேனன் இயக்கும் 'யோஹன்' முடிந்ததும், இப்பட படப்பிடிப்பு தொடங்குகிறது.

படத்தின் நாயகி வேடத்திற்கு கடும் போட்டி நிலவியது. தற்போது அப்போட்டியில் வெற்றி பெற்று இருக்கிறார் ப்ரணீதா.

தம்பி கார்த்தியுடன் சகுனி ஆட்டம் ஆடியவர், அண்ணன் சூர்யாவுடன் துப்பறிய இருக்கிறார்.

நடன இயக்குனரின் புதிய காதலி?


நடன இயக்குனர், நயன நடிகையை காதலித்து அவருடன் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி, பின்னர் அவரை கழற்றிவிட்ட கதை அனைவரும் அறிந்ததே. இப்போது இயக்குனருக்குள் புதிய காதல் உருவாகியிருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

அவருடைய புதிய காதலியும் ‘சம’ கால நாயகிதான். தெலுங்கு பட உலகை கலக்கிக் கொண்டிருக்கும் அந்த நடிகை, ஒரு புதிய தமிழ் படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கும், நடன இயக்குனருக்கும் இடையே காதல் தீ பற்றிக் கொண்டதாக பரவலாக பேசப்படுகிறது.

தமிழ் சினிமா உலகில் வெயில் பட இசையமைப்பாளரான இசை இளவலின் கையில் தற்போது ஏகப்பட்ட தமிழ்ப்படங்கள் இருக்கின்றன. இருப்பினும் இந்தியின் மேல் தணியாத தாகம் கொண்டிருக்கிறார். இந்தி படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்று பார்த்துக் கொண்டிருக்கிறாராம். கிடைத்ததும் அங்கேயும் தனது வரவை அழுத்தமாக பதிக்க காத்திருக்கிறாராம் இசை இளவல்.

மீண்டும் ஆல்பம் போட்டியில் இறங்கும் தனுஷ்-சிம்பு.


'3' படம் வெளிவந்த பிறகு தனுஷை அவரது டிவிட்டர் இணையத்தில் கூட காண முடிவதில்லை.

வெற்றிமாறன் படத்தில் ஒப்பந்தமானவுடன் "க்ளவுட் நைன் மூவிஸ் தயாரிப்பில் வெற்றி படத்தில் நடிக்க இருக்கிறேன். எனது அடுத்த படங்கள் மரியான், ராஜன்ஹா அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் படம்" என்று ஏப்ரல் 18ம் தேதி அறிவித்தவர் இன்று வரை டிவிட்டர் இணையம் பக்கம் வருவதில்லை. 

காரணம் என்னவாக இருக்கும் என்று தனுஷிற்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்ததில், தனுஷ் தனியாக ஆல்பம் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறாராம்.

மும்பையில் இதற்கான பணியில் மும்முரமாக இருக்கும் தனுஷ் ஆல்பத்தின் முழுபொறுப்பையும் ஏற்று இருக்கிறாராம். பாடல்கள், இசை அனைத்தும் இவரே.

வெற்றிமாறனையும் அடிக்கடி மும்பைக்கு வாங்களேன் என்று கூப்பிட்டு தனது ஆல்பம் பணிகளை போட்டுக்காட்டி, அவர் ஏதாவது திருத்தம் சொன்னால் உடனே மாற்றி அமைக்கிறாராம்.

இந்த ஆல்பம் கூடிய விரைவில் வெளிவர இருக்கிறதாம்.

சிம்பு கூட LOVE ANTHEM ஆல்பத்தின் இறுதிகட்ட பணிகளில் ஈடுபட்டு கொண்டே இருக்கிறார். இருவரும் துபாயில் நீண்ட நேரம் SIIMA விருதுகள் வழங்கும் விழாவில் பேசிக் கொண்டு இருந்தார்கள்.

உங்கள் ஆல்பம் பணிகள் குறித்து சிம்புவுக்கு தெரியுமா தனுஷ்?

நயன் தாராவின் உண்மைக்காதல் கதையை படமாக எடுக்கும் சிம்பு?



சிம்புவின் மன்மதன் படம் ஹிட்டானது. அதன் இரண்டாம் பாகத்தை 'மன்மதன்-2' என்ற பெயரில் எடுக்கிறார். இதற்கான கதையை அவரே உருவாக்கி உள்ளார்.

இந்த படத்தில் திரிஷா, அனுஷ்கா, இலியானா, தமன்னா உள்பட 6 கதாநாயகிகள் நடிக்கின்றனர். இந்த படம் நயன்தாராவின் காதல் கதை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

சிம்புவும் நயன்தாராவும் ஏற்கனவே காதலித்தனர். பிறகு அவர்கள் காதலில் முறிவு ஏற்பட்டது. இருவரும் பிரிந்து விட்டனர். அப்போது ஒருவரையொருவர் குற்றம் சாட்டி அறிக்கை விட்டனர்.

பின்னர் நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் காதல் மலர்ந்தது. திருமணத்துக்கும் தயாரானார்கள். தற்போது அவர்களுக்குள்ளும் தகராறு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இந்த கதையை மன்மதன்-2 படத்தில் சிம்பு வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
as

இரண்டு ஹீரோக்களை இணைக்க படாத பாடுபடும் ஜன இயக்கம்.


ஜெயம், கோ டபுள் ஹீரோ நடிக்கற ஸ்கிரிப்ட்டை ஜன இயக்கம் தயார் பண்ணிட்டாராம்... பண்ணிட்டாராம்... ஆனா ரெண்டு ஹீரோவும் வேற படங்கள்ல பிஸியா இருக்காங்களாம். ஒரு ஹீரோ தயாருன்னா இன்னொரு ஹீரோ கிடைக்க மாட்டேங்கிறாராம். ரெண்டு ஹீரோவையும் சேத்து வச்சி படமெடுக்க மாசகணக்குல இயக்கம் காத்திருக்காராம். இது வருஷ கணக்குலேயும் இழுக்கலாம்னு கோடம்பாக்கத்துல பேசிக்கிறாங்களாம்... பேசிக்கிறாங்களாம்... 

லவ் சந்திய ஹீரோயினை ஒரேடியா கோலிவுட்காரங்க மறந்துட்டாங்களாம்... மறந்துட்டாங்களாம்... ஹீரோயினும் சொந்த ஊரான மல்லுவுட் இண்டஸ்ட்ரில மூழ்கிட்டாராம். ‘மறுபடியும் கோலிவுட்டுக்கு திரும்ப மாட்டீங்களா?Õனு கேட்டா விரக்தியா பதில் சொல்றாராம். ‘காத்து காத்து கண்ணு பூத்ததுதான் மிச்சம். கையை பிசஞ்சிட்டு காத்துகிடக்க¤றதைவிட குறைச்சலா பேமென்ட்னாலும் மல்லுவுட்ல நிறைய வாய்ப்பு க¤டைக்குது. அதுவே போதும்Õனு  சொல்றாராம்... ஹீரோயின் சொல்றாராம்...

வினுவான நடிகரு ரொம்ப வருஷம் கழிச்சி படம் இயக்க முடிவு பண்ணினாரு. அதுக்கான முயற்சிகள் முழு பலனையும் தரலையாம்... தரலையாம்... இருந்தாலும் நடிகரு தொடர்ந்து முயற்சி பண்ணிட்டே இருக்காராம். பெரிய ஹீரோக்கள்தான் உங்களுக்கு தெரியுமே அவங்களை வச்சு உதவி கேட்கலாமேன்னு சிலரு ஆலோசனை தர்றாங்களாம்... தர்றாங்களாம்... அவங்கள பத்தி தெரியும்கிறதாலதான் உதவி கேட்கலேன்னு நடிகரு ரீப்ளே தர்றாராம்... தர்றாராம்...

த்ரிஷா-லட்சுமிராய் சமரசம்: மோதல் முடிவுக்கு வந்தது


Trisha - lakshmirai clash overஅஜித் நடிப்பில் உருவான மங்காத்தாவில் நாயகிகளாக நடித்தவர்கள் திரிஷா, லட்சுமிராய். அந்த படத்தில் நடித்த போதே யார் சிறந்தவர்கள் என்ற போட்டி அவர்களுக்குள் எழுத்தது. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி பேட்டி அளித்தனர். அப்போது லட்சுமிராய், நான் தான் மங்காத்தா படத்துக்கு முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டேன். எனக்கு பிறகுதான் திரிஷாவை தேர்வு செய்தனர். நான் விட்டுக் கொடுத்த கேரக்டரில்தான் த்ரிஷா நடித்தார் என்றார். ஆனால் த்ரிஷாவோ, லட்சுமிராய் கூறியது சில்லித்தனமானது. அவரவருக்கு ஒதுக்கப்பட்ட கேரக்டரில் நடித்தோம் என்று கூறினார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் நீடித்து வந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளவே இல்லை. ஆனால் தற்போது இந்த தகராறுக்கு முற்றுப்புள்ளி விழுந்துள்ளது. இருவரும் சந்தித்து மனம்விட்டு பேசி சமரசமாகியுள்ளனர்.

சமீபத்தில் துபாய் படவிழாவுக்கு சென்றபோது அங்குள்ள நட்சத்திர ஹோட்டல் விருந்தில் இந்த சமரச சந்திப்பு நடந்துள்ளது. அப்போது இருவருக்கும் நெருக்கமான நடிகர்-நடிகைகள் உடன் இருந்தனர். இருவரும் பழைய கசப்பான சம்பவங்களை மறந்து தோழிகளாக இருப்பது என்று கைகளை பற்றிக் கொண்டு நட்புணர்வை பரிமாறிக் கொண்டனர்.

பில்லா-2 மூலம் இந்தியிலிருந்து தமிழுக்கு வரும் புதுவில்லன்!


sudhanshu pandey in billa 2இந்தியில் கில்லாடி, கஹானி, மர்டர், சிங்கம் போன்ற வெற்றி படங்களில் நடித்த பிரபல நடிகர் சுதன்சு பாண்டே, தற்போது அஜித் நடித்து வெளியாக உள்ள பில்லா-2வில் வில்லனாக அறிமுகமாக உள்ளார். இதுபற்றி அவரிடம் பேசியபோது, தமிழ் மொழியில் அஜித் படத்தில் நடிக்க அறிமுகமாவது ரொம்ப மகிழ்ச்சி. இதற்காக 12 கிலோ எடை கூட்டியு‌ள்ளேன். பில்லாவில் அபாஸி என்ற டான் ரோலில் நடித்து உள்ளேன். 40 வயது நிறைந்த பிசினஸ் மேன்னாக நடித்துள்ளேன். அஜித் என்னிடம் வேலைக்கு சேருவார். எனக்கு ஜோடி தான் ப்ரூணா அப்துல்லா. ரொம்ப அழகான பெண், நல்ல நடிகை. அவர் சண்டைக்காட்சி, துப்பாக்கிசூடு என்று தூள் கிளப்பி இருக்கிறார். நான் இந்த படத்தில் ரொம்ப சிரத்தை எடுத்து நடித்துள்ளேன். இதற்காக கடவுளுக்கு என் நன்றியை சொல்கிறேன். படத்தில் நான் தமிழ்பேச நிறைய பயிற்சி எடுத்துள்ளேன். குறிப்பா நான் அஜித்கிட்ட பேசுற டயலாக் ரசிகர்கள் ரொம்ப கொண்டாடுவார்கள். இந்த அபாஸி இல்லேன்னா டேவிட் இல்லை என்று நான் பேசும்போது கண்டிப்பா அஜித் ரசிகர்கள் எழுந்து நின்று கத்துவார்கள். நான் என்னால் முடிந்த அளவு படத்திற்கு உழைத்துள்ளேன். அஜித் ரொம்பவே ஹெல்ப் செய்தார். படம்வந்த பிறகு மத்தபடி பேசுவோம் என்று கர்ஜித்து விடை பெற்றார் புதுவில்லன் சுதன்சு.

Tuesday 3 July 2012

விஜய் ரெட்டை வேடத்தில் அசத்தும் புதிய விளம்பரம்.


    விஜய் ரெட்டை வேடத்தில் அசத்தும் புதிய விளம்பரம்.
     டோகோமோ நிறுவனத்திற்கு விஜய் ரெட்டை வேடத்தில் அசாத்திய விளம்பரம்.



       

  



விஜய், அஜித்துக்கு வில்லனாக துடிக்கும் ஷக்தி


        சின்னதம்பி படத்தில் குழந்தை நட்சத்திரமாய் சினிமாவில் அறிமுகமாகி, பின்னர் ‌தனது அப்பா பி.வாசு டைரக்ஷ்னில் தொட்டால் பூ மலரும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடி‌கர் ஷக்தி.


தொடர்ந்து சிவா மனசுல் சக்தி, தொட்டால் பூ மலரும் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இருந்தும் அவரால் இன்னும் முழுமையாக ஒரு ஹிட் படத்தை கூட கொடுக்கவில்லை.


அதனால் இப்போது வில்லன் வேடங்கள் மீது ஷக்தியின் கவனம் திரும்பியுள்ளது. விஜய்,அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களில்,வில்லன் வேடம் கிடைத்தால் சவாலாக ஏற்று நடிக்க தயாராகி விட்டதாக சொல்லியுள்ளார்.