Saturday 23 June 2012

கிராமியப் படத்திற்கு இசை அமைக்கும் பவதாரிணி




        முழுக்க முழுக்க கிராமத்தில் எடுக்கப் படவிருக்கும் ஒரு தமிழ் திரைப்படத்திற்கு இசைஞானியின் மகள் பவதாரிணி இசை அமைக்க இருக்கிறார்.

'வெள்ளச்சி' எனும் அக் கிராமத்து திரைப்படத்திற்கு இசை அமைக்கவிருக்கும் பவதாரிணி இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசியபோது, "வெள்ளச்சி திரைப் படத்தின் கதை எனக்குப் பிடித்திருந்தது. கிராமத்துக் கதை என்பதால், இசைக்கு முக்கியத்துவம் கொடுக்க இது நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று நினைத்து இசை அமைக்க சம்மதித்தேன். படத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் இருக்கும். கவிஞர் நா.முத்துக் குமார் எழுதிய ஒருபாடல் கம்போசிங் முடிந்து விட்டது. இனிதான் ஆண் பாடகர் யாரைப் பாடவைப்பது என்று முடிவு செய்ய வேண்டும்" என்றார்.

படத்தின் இயக்குனர் வேலு விசுவநாதன் பேசுகையில், "கிராமத்தில் எல்லோரும் கருப்பாக இருப்பார்கள். ஆனால் ஹீரோயின் மட்டும் வெள்ளையாக இருப்பதால் ஊரே அவளை வெள்ளச்சி என்று செல்லமாக கூப்பிடுவார்கள். ஆனால் அவ்வளவு செல்லமாக கூப்பிட்டவர்கள் கிளைமேக்சில் என்ன செய்கிறார்கள் என்பதுதான் கதை. வேலூர், குடியாத்தம், ஆம்பூர் போன்ற ஊர்களில் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது" என்றார்.

இத்திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் பாண்டுவின் மகன் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். சுசித்ரா எனும் பெண் அறிமுக நாயகி ஆகிறார். நடிகை ரேவதி இயக்கி, நடிகை ஷோபனா நடித்து ஆங்கிலத்தில் வெளிவந்த "மித்ர மை பிரன்ட்" எனும் திரைப்படத்தில் முதன் முதலில் இசை அமைப்பாளராக அறிமுகமானார் பவதாரிணி. பாரதி, அழகி, மங்காத்தா என்று பல திரைப்படங்களில் பாடல்கள் பாடியிருக்கும் பவதாரினிக்கு பாரதி படத்தின் "மயில்போல பொண்ணு ஒன்னு" பாடல் தேசிய விருதைப் பெற்றுத் தந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

ஆதிபகவன் படத்தில் திருநங்கை வேடத்தில் ஜெயம் ரவி.


  அமீர் ஒரு படத்தினை இயக்கி வெளிவர நீண்ட காலம் ஆனாலும், அப்படத்தில் நாயகனாக நடித்தவருக்கு கண்டிப்பாக நல்ல பெயர் கிடைக்கும்.

எப்போதுமே தனது நாயகர்களை எதார்த்தமாக நடிக்க வைத்து, அவர்களது முழுத்திறனையும் வெளிக் கொண்டுவர முயல்வார் அமீர்.

ஜெயம் ரவியை வைத்து 'ஆதிபகவன்' படத்தினை இயக்கி வருகிறார் அமீர். நீண்ட நாட்களாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது. நீது சந்திரா நாயகியாக நடித்து வருகிறார்.

ஜெயம் ரவி முதன் முறையாக இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார், ஆகையால் தான் படம் தாமதமாகிறது என்று செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இரட்டை வேடத்தில் ஒரு வேடம் திருநங்கை வேடமாம். இப்படம் வெளிவந்ததும் ஜெயம் ரவியின் நடிப்பை பார்த்து பலர் வாயைப் பிளக்கப் போவது உறுதி என்கிறது படக்குழு.

ஆரம்பத்தில் காதல் மற்றும் குடும்பக் கதைகளில் நடித்து வந்த ஜெயம்ரவி 'பேராண்மை' படத்தில் ஆக்ஷன் வேடத்தில் நடித்தார். 'ஆதிபகவன்' படத்தில் நடிப்பில் தனது இன்னொரு பரிமாணத்தை காட்டி இருக்கும் ஜெயம் ரவி தொடந்து வெவ்வேறு கதைக் களங்களில் நடிக்க உள்ளாராம்.

டிராபிக் ரீமேக்கில் நடிக்கும் சரத்குமார்,நாசர்,பிரகாஷ்ராஜ்,பிரசன்னா...


  மலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் 'டிராபிக்'. இப்படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட கமல், இப்படத்தில் நடிக்க விரும்புவதாக தெரிவித்தார்.

கமல் நடிக்க, மலையாள 'டிராபிக்' படத்தினை இயக்கிய ராஜேஷ் பிள்ளை தமிழ் ரீமேக் படத்தினையும் இயக்குவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால், கமல் தனது அடுத்தடுத்த படப்பணிகளை முன்னிட்டு இப்படத்தின் ரீமேக்கில் இருந்து விலகிவிட்டார். தற்போது 'டிராபிக்' படத்தின் தமிழ் ரீமேக் துவங்கி இருக்கிறது.

இப்படத்தினை இயக்குகிறார் ஹாகித் கேதிர். சரத்குமார், பிரகாஷ்ராஜ், சேரன், நாசர், பிரசன்னா, பார்வதி, ரோகிணி, ராதிகா சரத்குமார் மற்றும் பலர் நடிக்க இருக்கிறார்கள்.

தமிழ் ரீமேக் தாமதம் ஆனதால் ராஜேஷ் பிள்ளை இந்தி டிராபிக் ரீமேக் பணிகளில் ஈடுபட்டுள்ளார். அஜய் தேவ்கான் இந்தியில் நடிக்க இருக்கிறார்.

கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் மீண்டும் இணைகிறார்களா அஞ்சலி மற்றும் ஓவியா?



   இயக்குனார் பாண்டிராஜ் அடுத்ததாக தான் இயக்கும் படத்திற்கு கேடி பில்லா கில்லாடி ரங்கா என பெயர் வைத்திருக்கறார். இந்தப் படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் மற்றும பசங்க புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்க உள்ளது.
படத்தில் விமலுடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். இவர்கள் இருவரையும் இயக்குனர் பாண்டிராஜ்தான் முதன் முதலில் தனது படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். தற்போது தான் அறிமுகப்படுத்திய இரண்டு நாயகர்களை வைத்து பாண்டிராஜ் கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற புதிய படத்தை தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
விமல் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அஞ்சலி மற்றும் ஓவியாவுடன் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. கலகலப்பு படத்தில் இவர்கள் நாயகிகளாக நடித்து படம் பெரும் வெற்றியை அடைந்ததால், மீண்டும் இணையப்போகும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள் இருவரும்.

அஜீத் படப்பிடிப்பில் ரசிகர்கள் கூடியதால் பதற்றம்




     அஜீத் குமார் நடிப்பில் பில்லா-2 திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் அஜீத் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்புக்கு சென்றுவிட்டார். விஷ்ணுவர்த்தன் இயக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் நடந்து வருகிறது. இதனை அறிந்த ரசிகர்கள் அஜீத்தை காண அப்பகுதியில் பெருந்திரலாக கூடினர். மேலும் வாகனங்கள் மற்றும் சுவர்களில் ஏறியதால் பதற்றம் ஏற்பட்டது. நிலைமையை அறிந்த காவல்துறையினர் அப்பகுதிக்கு வந்து ரசிகர்களை கட்டுப்படுத்தினர்.
மும்பையில் நடக்கவிருந்த இந்தப் படப்பிடிப்பு அங்கு நிலவி வரும் சிதோஷ நிலை காரணமாக பெங்களூருக்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

இரண்டாம் உலகத்திற்காக தற்காப்புக் கலை பயின்று வரும் அனுஷ்கா.




         ஆர்யா, அனுக்ஷா நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் இரண்டாம் உலகம். இந்தப் படத்தை செல்வராகவன் இயக்கி வருகிறார். ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஒய்.ஜி.மகேந்திரன், ராதிகா சரத்குமார் மற்றும் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். படத்தில் அனுக்ஷாவுக்கு இரு வேடங்கள். அது என்ன வேடம்னா?

குடும்ப பெண்ணாகவும், பழங்குடியின பெண்ணாகவும்தான் நடிக்கிறார். இந்தப் பழங்குடியின பெண் வேடத்தில் நடிப்பதற்காக அனுகஷா முறையாக தற்காப்பு கலை பயின்றுள்ளார். தமிழில் முதன்முறையாக அவர் இரட்டை வேடங்கள் ஏற்று நடித்து வருகிறார்.

'நான் ஜெயிச்சா, ஃபெப்சிக்கு நல்லது. தோத்தா, எனக்கு நல்லது. அமீர்


  வேலை நிறுத்தம், போராட்டம் என்று அதகளப்படுத்தி வரும் ஃபெப்சி அமைப்புக்கு, கடந்த 19-ம் தேதி தேர்தல் நடந்தது. பொருளாளர் பதவிக்குப் போட்டியே இல்லாமல் சண்முகம் அங்கமுத்துவைத் தேர்வு செய்தனர். தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட விசுவை எதிர்த்துக் களம் இறங்கினார் அமீர். ஏற்கெனவே, பொதுச்செயலாளராக இருக்கும் சிவாவை எதிர்த்து உமாசங்கர் போட்டியிட்டார்.
 ஃபெப்சியில் மொத்தம் 23 அமைப்புகள். கருத்து வேறுபாடு காரணமாக டிரைவர்கள் யூனியன் மட்டும் விலகிப்போனது. மொத்தம் 24,000 தொழிலாளர்களைக் கொண்ட ஃபெப்சி அமைப்பின் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோரைத் தேர்ந்து எடுக்கும் உரிமை, ஒவ்வொரு சங்கத்தையும் சேர்ந்த தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோருக்கு மட்டுமே உண்டு. ஆக, 22 யூனியன்களுக்கும் சேர்த்து மொத்த ஓட்டுகளே 66-தான்.
இயக்குநர்கள் சங்கத்தில் செயலாளர், பொரு ளாளர் வாக்குகள் மட்டும் பதிவாயின. தலை​வரான பாரதிராஜா வெளியூரில் இருந்து, 'தனது வாக்கை ரெங்கராஜன் பதிவு செய்வார்’ என்று கடிதம் கொடுத்து அனுப்பினார். ஆனால், அந்தக்கடிதம் செல்லாது என்று விசுவும், அமீரும் அறிவித்தனர். அதனால், பதிவான 65 வாக்குகளை மட்டும் கணக்கில்கொண்டு, எண்ணிக்கை தொடங்கியது.
'நான் ஜெயிச்சா, ஃபெப்சிக்கு நல்லது. தோத்தா, எனக்கு நல்லது’ என்று சொல்லிவந்த அமீர், விசுவை விட 9 வாக்குகள் அதிகம் பெற்று வென்றார். அடுத்து, உமாசங்கரை விட இரண்டே வாக்குகள் அதிகம் வாங்கி செயலாளராக, சிவா ஜெயித்தார்.  
முன்பு, அமீர் ஊதியக் குழு தலைவராக இருந்தபோது, 'ஃபெப்சி தொழிலாளர் சம்பளம் குறித்த பேச்சுவார்த்தைக்கு அமீர் வரக்கூடாது’ என்று நிபந்தனை விதித்தது தமிழ்த் தயாரிப்பாளர்கள் சங்கம். இன்று, பெப்சி தலைவராக வந்திருக்கும் அமீரை எப்படி எதிர்கொள்ளப்போகிறது?

மதுப்பழக்கத்தை விட்டுவிட ஆன்மீகத்தில் மூழ்கினார் மனீஷா கொய்ராலா.



   குடும்ப பிரச்னையில் சிக்கிய மனீஷா கொய்ராலா, ஆன்மீகத்தில் மூழ்கியதால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதல்வன், இந்தியன், பாபா என பல்வேறு தமிழ் மற்றும் ஏராளமான இந்தி படங்களிலும் நடித்திருப்பவர் மனீஷா கொய்ராலா. கடந்த ஒரு வருடத்துக்கு முன் நேபாளத்தை சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலானார்.
இதையடுத்து நடிப்புக்கு முழுக்குபோட முடிவு செய்தார். இதற்கிடையில் கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக வேதனை அடைந்தார். கணவரை விவாகரத்து செய்யப்போவதாக டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டார். இது சர்ச்சையானதால் உடனடியாக அந்த தகவலை டுவிட்டர் பக்கத்திலிருந்து அகற்றியதுடன் கணவருடன் எந்த பிரச்னையும் இல்லை என்று அறிவித்தார்.
ஆனாலும் மும்பை திரும்பிய அவர் சமீபகாலமாக நள்ளிரவு பார்ட்டிகளுக்கு செல்ல ஆரம்பித்ததுடன் குடித்துவிட்டு தன்னிலை மறக்கத் தொடங்கினார். தள்ளாடியபடி அவர் நள்ளிரவு பார்ட்டியிலிருந்து வெளியேறிய காட்சிகளை படம் பிடித்து மும்பை பத்திரிகை, இணை தளங்களில் வெளியானது. மதுப்பழக்கத்தை விட்டுவிட வேண்டும் என்ற மனிஷாவுக்கு கமல்ஹாசன் அறிவுரை கூறினார்.
மேலும் திரையுலக நண்பர்கள் சிலர் அறிவுரை வழங்கினார்கள். அதன்படி ஆன்மீகத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலுக்கு ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் சென்று சாமி கும்பிடுகிறார். பின்னர் கோயில் வளாகத்திற்குள் தனிமையில் அமர்ந்து தியானம் செய்கிறார்.
சென்னையில் உள்ள பிரபல தியான மையத்திற்கும் அடிக்கடி வருகிறார். ஆன்மிக வகுப்பிலும் அவர் சேர்ந்து பயிற்சி பெறுகிறார். இப்போது தன் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதில் அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறாராம்.

தல நடிகரின் விமர்சனத்தை எதிர்பார்க்கும் சிறுத்தை நடிகர்.


  யோகியான அந்த மூன்றெழுத்து இயக்குனர், தற்போது இயக்கும் பகவான் படத்தில் ஜெயமான நடிகரை நடிக்க வைத்துள்ளார். இதுவரை காதல், கலாட்டாவென வலம் வந்த அந்த நடிகர் இப்படத்தில் இயக்குனர் அவருக்கு வித்தியாசமான கதாபாத்திரத்தை அளிக்கப் போவதாக சொல்லியிருந்தார்.

இதனால் கலங்கிப் போயிருந்த அந்த நடிகருக்கு, இடி இறங்குவதுபோல் ஒரு கடினமான கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர். அது வேறொன்றுமல்ல... இந்த படத்தில் ஜெய நடிகருக்கு திருநங்கை அவதாரத்தை கொடுத்திருக்கிறார். 

ஆனாலும் ஜெய நடிகர் கலங்கிவிடாமல் திருநங்கைகளிடம் நேரிடையாக சென்று அவர்களின் நடை, உடை, பாவனைகளை கற்று வருகிறாராம்.


சிறுத்தை நடிகர், தான் இதுவரை நடித்த எல்லா படங்களிலும் தான் நடித்த நடிப்பு பற்றி தனக்கு நெருங்கிய சக நடிகர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வாராம். எல்லோரும் அவரைப் பற்றி நல்ல கருத்துக்களை மட்டுமே கூறி வருகின்றனராம். 

ஆனால் இவரின் அபிமான தல நடிகர் மட்டுமே இவரின் நிறை குறைகளை சொல்லி திருப்தியான கருத்துக்களை சொல்வாராம். ஆகையால், தற்போது இவர் நடித்து வெளிவந்திருக்கும் படத்தில் தன் நடிப்பைப் பற்றி தல நடிகர் என்ன சொல்லப் போகிறார் என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறாராம் சிறுத்தையாக சீறிய சகுனி.

ரீமேக் ஆகிறது ‘சகலகலா வல்லவன்’: கமல் வேடத்தில் சூர்யா


 1982-ம் வருடம் ஏ.வி.எம். தயாரிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் கமல் நடித்து வெளிவந்த படம் சகலகலா வல்லவன். இப்படத்தில் கமல் கிராமத்துவாசி, பட்டணத்துவாசி என இரு வேடங்களில் அசத்தியிருந்தார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அம்பிகா நடித்திருந்தார். 

இப்படத்தில் இசைஞானி இசையமைப்பில் ‘நேத்து ராத்திரி யம்மா, தூக்கம் போச்சுடி யம்மா’, ‘இளமை இதோ இதோ..’ போன்ற பாடல்கள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றது. 

80-களில் தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கிய இந்த படத்தை தற்போது ரீமேக் செய்ய முடிவெடுத்திருக்கின்றனர். இப்படத்தின் ரீமேக்கில் நடிக்க சூர்யா விருப்பம் தெரிவித்திருந்தார். 

இப்படத்தின் ரீமேக் உரிமையைப் பெற சூர்யா வேறு ஒரு நிறுவனம் மூலமாக ஏ.வி.எம். நிறுவனத்தை அணுகியிருக்கிறார். ஆனால், ஏ.வி.எம்.நிறுவனமோ இப்படத்தை தாங்களே ரீமேக் செய்ய விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்படத்தில் நடிக்க சூர்யாவையே ஒப்பந்தம் செய்துள்ளது ஏ.வி.எம்., இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கஷ்டம் என்பதால் நடிக்க மறுத்த பாடகர் கார்த்திக்!

Acting is difficult says singer karthikபிரபல பாடகரான கார்த்திக் தற்போது இசையமைப்பாளராகவும் மாறியுள்ளார். கவுதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில், ஜெய் நடிக்கும் தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் என்ற படத்தில் இசையமைப்பாளராகியுள்ள அவர், நீதானே என் பொன்வசந்தம், இரண்டாம் உலகம், மாற்றான் உட்பட பல படங்களில் பாடல்களும் பாடி வருகிறார். மேலும் தெலுங்கு படமான ஒக்கடினேவுக்கும் இசையமைக்கிறார். பாடகர், இசையமைப்பாளராக அவருக்கு நடிக்கவும் வாய்ப்பு வந்ததாம். ஆனால், அதனை வேண்டாம் என்று அவர் தட்டிக்கழித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், பாடகரான நான் இசையமைப்பாளராகியுள்னேன். எனக்கு நடிக்க தெரியாது. அது வேறொரு துறை. பாடுவது, இசையமைப்பது எனக்கு சுலபமானது. நடிப்பு கஷ்டமானது. அதனால் நிறைய நண்பர்கள் கேட்டும் நடிக்க மறுத்து விட்டேன், என்று கூறியுள்ளார்.

ஓகே. ஓகே இயக்குனருக்கு தெலுங்கு நடிகர் பாராட்டு!

allu arjun praises director rajesh   படத்தயாரிப்பாளராக இருந்த உதயநிதி ஸ்டாலினை ஹீரோ அந்தஸ்துக்கு உயர்த்திய படம் ஒரு கல் ஒரு கண்ணாடி. இந்த படத்தின் மூலம் உதயநிதியின் நடிப்பு பாராட்டப்பட்டதுடன், இயக்குனர் ராஜேசுக்கும் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்துள்ளது. சமீபத்தின் அந்த படத்தை பார்த்து, ரசித்த தெலுங்கு நடிகர் அல்லுஅர்ஜுன் இயக்குனர் ராஜேசை வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் படத்தின் ஆரம்பம் முதல் இறுதி காட்சி வரை தான் சிரித்ததாகவும், இயக்குனர் ராஜேஷ்; தன்னை மிகவும் கவர்ந்துவிட்டார் எனவும் கூறியுள்ளார். மேலும் இயக்குனர் ராஜேஷ் மற்றும் அவரது படக்குழுவினருடன் இணைந்து முழு நீள காமெடி திரைப்படம் ஒன்றில் நடிக்க விரும்புவதாகவும் அல்லு அர்ஜூன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

டி.ராஜேந்தர் நடிக்கும் ஒருதலைக்காதல்!


t.rajendars oru thalai kadhal   நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என தமிழ் சினிமாவில் பல அவதாரங்களை எடுத்தவர் டி.ஆர்.ராஜேந்திரன். சில ஆண்டுகளாக அரசியலில் தீவிரமாக இறங்கியதாலும், அவரது மகன் சிம்பு கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்து விட்டதாலும் சினிமாவைவிட்டு சிலகாலம் ஓரம் கட்டி இருந்தார். தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு தலைக்காதல் என்ற படத்தை இயக்கி, கதாநாயகனாக நடித்து வருகிறார். இதற்கான முதல்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த அவர் அடுத்த கட்ட படப்பிடிப்பை நெல்லை மாவட்டத்தில் நடத்த இருக்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், ஒருதலைக் காதல் படத்தில் நானே கதாநாயகனாக நடித்து வெளியிட இருக்கிறேன். இந்த படத்துக்கான சூட்டிங்; முழுக்க, முழுக்க தேனி, தென்காசி, சங்கரன்கோவில், குற்றாலம் பகுதியில் நடத்தப்படும். அந்த காலத்தில் ஒருதலை ராகம் போல் இந்த படமும் வெற்றிப் படமாக அமையும் என்றார்.

விமலும் சிவாவும் இணையும் கேடி பில்லா கில்லாடி ரங்கா.



    தேசிய விருதை பெற்றுக்கொண்ட கூட்டணி மீண்டும் கைகோர்க்கவுள்ளது. எஸ்கேப் ஆடிஸ்ட் மோஷன் பட நிறுவனத்தின் மதன் மற்றும் இயக்குனர் பாண்டிராசும் இணைந்து மீண்டும் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளனர்.

இப்படத்தில் நடிகர்கள் விமல் மற்றும் சிவா கார்த்திகேயன் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.பாண்டிராஜ் இயக்கிய பசங்க படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் விமல், தற்போது வளர்ந்து வரும் கதாநாயகர்களில் ஒருவராக திகழ்கிறார், அதேபோல் பாண்டிராஜ் இயக்கிய மரினா படத்தின் மூலமாக கதாநாயகன் அந்தஸ்தை பெற்றுக்கொண்டவர் நடிகர் சிவகார்த்திகேயன் இவர்கள் இருவரையும் ஒரே சமயத்தில் இயக்கவுள்ளார் இயக்குனர் பாண்டிராஜ்.

மேற்படி புதிய படத்திற்கு கேடி பில்லா கில்லாடி ரங்கா என பெயர் சூட்டியுள்ளார்கள் முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக தயாரிக்கப்படவுள்ள இப்படத்தின் கதாநாயகிகள் இன்னும் முடிவாகாத நிலையில், நாயகி வேட்டை முடக்கிவிடப்பட்டுள்ளது.

ரஜினியின் கோச்சடையான் கதை என்ன?



இந்த ஆண்டின் பெரும் எதிர்ப்பார்ப்புக்குரிய படங்களில் முதலிடத்தில் இருப்பது சந்தேகமில்லாமல் சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான்தான்.

ஆரம்பத்தில் இது வெறும் அனிமேஷன் படம்தானே, எப்படி வரப் போகிறதோ என்று சந்தேகம் கிளப்பியவர்கள், நாளுக்கு நாள் அந்தப் படம் குறித்த உண்மையான தகவல்கள் தெரிய வந்ததும், அமைதியாகி, ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளது சௌந்தர்யாவுக்கு நிச்சயம் நல்ல செய்திதான்!

இந்தப் படத்துக்கு தமிழ் திரையுலகம் தாண்டி, இந்தி, தெலுங்கு, ஜப்பான், கொரியா, யுஎஸ் என பல நாடுகளிலும் விசாரிப்புகள் தொடர்கின்றன. ஹாலிவுட்டில் நடிக்காமலேயே, ஹாலிவுட் நடிகருக்கு நிகரான செல்வாக்கைப் பெற்றுள்ள ஒரே நடிகர் என்ற பெருமை ரஜினிக்குக் கிடைத்திருக்கிறது.

கோச்சடையான் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. சில பாடல்கள் மட்டுமே படமாக்க வேண்டியுள்ளது. அதற்காக மீண்டும் ரஜினி ஹாங்காங் செல்லப் போகிறார்.

இந்த நிலையில் படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

படத்தில் ரஜினி, அப்பா - மகன் என இரு வேடங்களில் நடித்துள்ளார். கதைப்படி ரஜினி, ஜாக்கி ஷெராப், நாசர் ஆகியோர் பண்டைய தமிழ் மன்னர்கள். ரஜினி, ஜாக்கி ஷெராப் ஆகிய இரு மன்னர்களுக்கும் இடையில் சண்டை நடக்கிறது.

இந்த சண்டை அடுத்த தலைமுறையிலும் தொடர்கிறது. ரஜினியின் மகனுக்கும் (ரஜினி), ஜாக்கி ஷெராப் மகனான ஆதிக்கும் நடக்கும் சண்டையில் யார் வெற்றி பெற்றார்கள்? எப்படி வெற்றி பெற்றார்கள் என்பதுதான் படத்தின் கதை.

இதில் ரஜினிக்கு உதவும் பாத்திரத்தில் சரத்குமார் வருகிறார்.

இந்த ஆண்டு இறுதியில் படம் வெளியாகும் என்கிறார்கள். படப்பிடிப்பு குறைந்த நாட்களில் முடிந்துவிட்டாலும், தொழில்நுட்ப நேர்த்திக்காக இன்னும் சில மாதங்கள் கூட அவகாசம் தேவைப்படுகிறதாம். ஹாங்காங், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் லண்டனைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர்கள் இந்தபர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விஸ்வரூபம் பட தலைப்புக்கு திடீர் எதிர்ப்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news   கமலின் ‘விஸ்வரூபம் பட தலைப்பை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கமல் நடிக்கும் படங்களின் தலைப்புக்கு அவ்வப்போது சர்ச்சை எழுவது வழக்கம். ‘சண்டியர் என்ற பெயர் வைத்தபோது அதை மாற்ற வேண்டும் என்று போராட்டம் நடந்தது. இதையடுத்து ‘விரும £ண்டி என பெயர் மாற்றப்பட்டது. ‘வசூல் ராஜா எம்பிபிஎஸ் தலைப்பு வைத்தபோது டாக்டர்கள் தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. தற்போது ‘விஸ்வரூபம் தலைப்பை மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்து மக்கள் கட்சியை சேர்ந்த கண்ணன் என்பவர் இது குறித்து கமலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வாழ்கிறீர்கள். பேரும் புகழும் தமிழ் படங்கள் மூலமே உங்களுக்கு கிடைத்துள்ளது. பிறகு தமிழ் மொழியை கண்டுகொள்ளாதது ஏன்? விஸ்வரூபம் என்பது சமஸ்கிருத வார்த்தை. அதை மாற்றி நல்ல தமிழ் பெயராக வைத்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். எங்களது எண்ணங்களை கமல் புரிந்துகொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. தமிழ் மொழி மீதான அக்கறையால் இதை தெரிவிக்கிறோம். தமிழில் பெயர் வைக்காத நிலையில் அதற்கு அரசின் கேளிக்கை வரி சலுகையும் கிடைக்க வாய்ப்பில்லை. இவ்வாறு கண்ணன் கூறி உள்ளார்.

வில்லன் வேடத்தில் நடிக்க தயக்கம் இல்லை: விவேக்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
   வில்லன் வேடத்தில் நடிப்பதற்கு தயக்கம் இல்லை என்றார் விவேக். இதுபற்றி அவர் கூறியதாவது: காமெடி வேடங்களிலேயே என்னை பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு ‘வழிப்போக்கன்’ என்ற படம் ஒரு ‘ஷாக்’காக இருக்கும். தமிழ், கன்னடம் இருமொழிகளில் இப்படம் உருவாகிறது. இதில் வில்லன் வேடம் ஏற்பது வித்தியாசம். வழக்கமான வில்லன்கள் இந்த வேடத்துக்கு பொருந்தமாட்டார்கள் என்பதால் என்னை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். த்ரில்லர் படமான இதில் ஆரம்பம் முதல் எனது கேரக்டர் நெகடிவ் குணம் கொண்டது என்பது தெரியாது. பிளாஷ்பேக்கில்தான் இந்த விஷயம் வெளிப்படும். ‘வில்லன் வேடத்தில் நடிப்பது ஏன்?’ என்கிறார்கள். வில்லன் வேடத்தில் நடிப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது. காமெடி, வில்லத்தனம் எல்லாமே நடிப்பு என்ற கோணத்திலேயே அணுகுகிறேன். சுந்தர்.சியுடன் முரட்டுக்காளை படத்தில் திருநங்கையாக நடித்திருக்கிறேன். இந்த வேடமும் ஒரு வகையில் சஸ்பென்ஸ் அம்சம் கொண்டது. திருநங்கையாக நடிப்பதற்கு முன் பல்வேறு ஆய்வுகளை செய்தேன். அதன்பிறகுதான் நடித்தேன். தொடர்ந்து ஹரி இயக்கும் ‘சிங்கம் 2’, வி.சேகர் இயக்கும் ‘சரவணப் பொய்கை’, ‘மச்சான்’, ‘பத்தாயிரம் கோடி’ உள்ளிட்ட படங்களில் நடிக்கிறேன்.
இவ்வாறு விவேக் கூறினார்.

டேவிட் – விக்ரம் நடிக்கும் புதிய இந்திப் படம்

  
 ‘சைத்தான்’ என்ற படத்தை இந்தியில் இயக்கியவர் பிஜய் நம்பியார். ‘டேவிட்’ என்ற புதிய படத்தை இயக்க உள்ளார். இதில் ஹீரோவாக விக்ரம். அவருடன் சேர்ந்து ஜீவாவும் நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆகிய மூன்றிலும் உருவாகிறது. ‘டேவிட்’ படத்தில் இரண்டு கதைகள் இடம் பெறுகிறதாம். விக்ரம் மூன்று மொழிகளிலும் நடிக்கிறார். தமிழ், தெலுங்கில் ஜீவா நடிக்கிறார். சுஷ்மிதா சென், தபு, இஷா ஷெர்வானி ஹீரோயின்கள். இரண்டு பேர் ஒளிப்பதிவு செய்ய மூன்று பேர் இசையமைக்கிறார்கள். மும்பை, லண்டன், கோவா, பகுதிகளில் ஷூட்டிங் நடக்கிறது.

சரத்+பிரகாஷ்ராஜ்+நாசர்+பிரசன்னா+…. ‘டிராபிக்’ !


Sarath Kumar


    கேரள திரையரங்குகளில் ரசிகர்களிடையே டிராபிக் ஜாம் ஏற்படும் அளவிற்கு மலையாளத்தில் சூப்பர் ஹிட்டானபடம் 'டிராபிக்'. இப்படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்ட கமல், இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் நடிக்கவிரும்புவதாக கூறும் அளவிற்கு அவரை கவர்ந்திழுத்தது ‘டிராபிக்’கின் கதை.

கமல் நடிக்க, மலையாள 'டிராபிக்' படத்தினை இயக்கியராஜேஷ் பிள்ளை தமிழ் ரீமேக் படத்தினையும் இயக்குவார்என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது தமிழ் ரீமேக்கில் நடிக்கப்போவது சரத்குமார்.

ராதிகா சரத்குமார் தயாரிக்கப்போகும் இப்படத்தினை, டிராபிக்கில் இணை இயக்குனராக பணிபுரிந்த ஹாகித்கேதிர் இயக்கவுள்ளார். சரத் தவிர பிரகாஷ்ராஜ், சேரன்,நாசர், பிரசன்னா, பார்வதி, ரோகிணி, ராதிகா சரத்குமார்உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.





தூம் 3: ரஜினிக்கு எத்தனை கோடி சம்பளம் தரவும் தயாராக நிற்கும் பாலிவுட் தயாரிப்பாளர்கள்!!



  கடந்த ஆண்டிலிருந்தே தூம் 3 குறித்து பல செய்திகள். இந்தப் படத்தில் ரஜினி வில்லனாக நடிக்கிறார் என்று முதலில் கூறப்பட்டது. ரஜினியுடன் பேசி வருவதாகவும் கூறினார்கள்.

ஆனால் ரஜினி தரப்பிலிருந்தே, இந்தப் படத்தில் அவர் நடிப்பதாக இல்லை என்று விளக்கம் வெளியானது. அடுத்த சில தினங்களில் இந்தப் படத்தில் அமீர்கான் அந்த வில்லன் வேடத்தில் நடிப்பார் என அறிவித்தனர்.

இப்போது மீண்டும் தூம் 3 உடன் ரஜினியை தொடர்புபடுத்தி செய்திகள் வெளியாகி வருகின்றன.

தயாரிப்பாளர் தரப்பில் நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து ரஜினியுடன் பேசி வருகின்றனர்.

இதுகுறித்து ரஜினி தரப்பில் நாம் விசாரித்தபோது, "ரஜினி சார்தான் இதற்கெல்லாம் பதில் கூற வேண்டும். இப்போது எங்கள் அளவில் சொல்வதற்கு எதுவும் இல்லை," என்றனர்.

ரஜினி நடித்தால் இந்தப் படம் பெரிய ரேஞ்சுக்குப் போய்விடும் என்பது அமீர்கானின் எதிர்ப்பார்ப்பாம். தயாரிப்பாளரிடம் தொடர்ந்து இதை அவர் வலியுறுத்துவதால், ரஜினிக்கு சம்பளமாக எத்தனை கோடி தரவும் தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளார்களாம்... அதாவது அமீர்கான் சம்பளத்தைப் போல ஒன்றரை மடங்கு!

ஆனால்... கோடிக்கு மயங்குகிற ஆளா அவர்?!

திருநங்கையாக ஜெயம் ரவி!

  அமீர் ஒரு படத்தினை இயக்கி வெளிவர நீண்ட காலம் ஆனாலும், அப்படத்தில் நாயகனாக நடித்தவருக்கு கண்டிப்பாக நல்ல பெயர் கிடைக்கும். எப்போதுமே தனது நாயகர்களை எதார்த்தமாக நடிக்க வைத்து, அவர்களது முழுத்திறனையும் வெளிக் கொண்டுவர முயல்வார் அமீர். ஜெயம் ரவியை வைத்து 'ஆதிபகவன்' படத்தினை இயக்கி வருகிறார் அமீர். நீண்ட நாட்களாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது. நீது சந்திரா நாயகியாக நடித்து வருகிறார். ஜெயம் ரவி முதன் முறையாக இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார், ஆகையால் தான் படம் தாமதமாகிறது என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இரட்டை வேடத்தில் ஒரு வேடம் திருநங்கை வேடமாம். இப்படம் வெளிவந்ததும் ஜெயம் ரவியின் நடிப்பை பார்த்து பலர் வாயைப் பிளக்கப் போவது உறுதி என்கிறது படக்குழு. ஆரம்பத்தில் காதல் மற்றும் குடும்பக் கதைகளில் நடித்து வந்த ஜெயம்ரவி 'பேராண்மை' படத்தில் ஆக்ஷன் வேடத்தில் நடித்தார். 'ஆதிபகவன்' படத்தில் நடிப்பில் தனது இன்னொரு பரிமாணத்தை காட்டி இருக்கும் ஜெயம் ரவி தொடந்து வெவ்வேறு கதைக் களங்களில் நடிக்க உள்ளாராம்.

அனன்யாவும் இப்போ ரெட்டைவால்!


 
பிரியாமணி நடித்துவரும் ஒட்டிப்பிறந்த ரெட்டையர்கள் பற்றி ‘சாருலதா’ படம், தமிழ் கன்னடம் ஆகிய மொழிகளில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது. இன்னொரு பக்கம் செல்வராகவன் இயக்கிவரும் ‘இரண்டாம் உலகம்’ படத்தில் அனுஷ்கா இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். அனுஷ்காவுக்கு இரட்டை வேடம் புதிதல்ல என்றாலும் கல்யாண சர்ச்சையில் மாட்டி இன்னும் விழி பிதுங்கித் தெரியும் நம்ம விழியழகி அனன்யாவுக்கு புதிதோ புதிது! கல்யாண விவகாரத்தை நினைத்து மூளையில் உடகார்ந்து இருந்தால் சரியாக வராது என்று எண்ணிய அனன்யா, மூலையில் முடங்கிக் கிடக்காமல் பழையபடி நடிக்க வந்து விட்டார். ஆனால் இம்முறை இரட்டை வேடம்! 

நாடோடிகள், எங்கேயும் எப்போதும் படங்களில் நடித்த அனன்யாவுக்கு சீடன் செல்லாக்காசாகிவிட்டாலும், தமிழில் ஜூனியர் ஜோதிகா  என்றே உருகினார்கள் ரசிகர்கள் இவரிடம்! சீடனுக்குப் பிறகு தொடந்து நடிப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்த நேரத்தில்தான் திருவனந்தபுரம் தொழிலதிபர் ஆஞ்சநேயனுடன் கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. “ திருமணத்துக்குப் பிறகு நடிக்க மாட்டேன்’ என்றும் சொன்னார் அனன்யா!
 
ஆனால் ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்ற தகவல் வெளியானதால் அனன்யா குடும்பத்தினர் திருமணத்தை நிறுத்திவிட்டனர். ஆரம்பத்தில் ஆஞ்சநேயனைத்தான் மணப்பேன் என ஒற்றைக் காலில் நின்ற அனன்யா, தற்போது பின்வாங்கி விட்டார். மீண்டும் நடிக்க அனன்யா சின்னதாய் ஒரு போட்டோ சூட் நடத்தியதுதான் தாமதம், இயக்குநர்கள் மீண்டும் அவர் வீட்டுக் கதவை பணப்பெட்டிகளோடு  தட்ட, முதல் ரீஎண்ட்ரி படமாக மலையாளத்தில் ‘ரத்தா ராஷா’ என்ற 3டி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டார்.
 
கல்லூரி மாணவரி, மோகினிப் பேய் என இதில் அனன்யாவுகு இரட்டை க் கதாபாத்திரங்கள்!  ஏற்கனவே விழிகளால் மிரட்டும் அனன்யாவை மோகினிப் பேயாக 3டியில் பார்த்த பிறகாவது அஞ்சனேயன் பயந்து ஒதுங்குவார் என்று நம்பலாமா?

விஸ்வரூபத்தில் கமல்ஹாசனுக்கு ரூ.45 கோடி சம்பளம்?


Kamalhassan salary in vishwaroopamஉலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்டமாய் தயாராகி வரும் படம் விஸ்வரூபம். இந்த படத்தின் மூலம் கமல் ஹாலிவுட் களத்தில் கால்பதிக்கவுள்ளதால் இந்த படத்திற்கு இப்போதே ரசிகர்கள் மத்தியில் கடும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. மெகா பட்ஜெட்டில் தயாராகி வரும் இப்படத்தில் கமல்ஹாசன் கதக் கலைஞர், தீவிரவாதி உள்ளிட்ட பல்வேறு விதமான கெட்டப்பில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஆன்ட்ரியா, பூஜா குமார், ராகுல் போஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு சங்கர் எசான் லாய் இசையமைத்துள்ளார். சனுஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே தயாராகும் இந்தபடத்தின் வியாபாரம் மட்டும் ரூ.120 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கின்றனராம்.. அதே நேரத்தில் கமல்ஹாசனுக்கு சம்பளமாக மட்டும் ரூ.45 கோடி வரை தரப்பட்டது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

ரூ.196 கோடி சம்பளம் வாங்கும் ஹாலிட் நடிகை!


Kristen Stewart named highest paid actress in Hollywoodநம்மூர் ஹீரோக்களுக்கே அதிகபட்சமாக ரூ.40 முதல் 50 கோடி வரை சம்பளம் பெற்று வருகையில் ஹாலிவுட்டில் ஒரு நடிகை ஒரு படத்திற்கு ரூ.196 கோடி சம்பளம் வாங்குகிறார். பிரபல போர்ப்ஸ் பத்திரிக்கை மே 2011 முதல் மே 2012ம் ஆண்டு முடிய ஹாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 22வயதாகும் ஹாலிவுட்டின் கிறிஸ்டன் ஸ்டீவெர்ட் ஒரு படத்திற்கு 34.5 மில்லியன் டாலர்( இந்திய ரூபாயில் சுமார் ரூ.196 கோடி) பெறுகிறார். இவருக்கு அடுத்தபடியாக கேமரூன் டயஸ் 34 மில்லியன் டாலரும், சாண்ட்ரா புல்லாக் 25 மில்லியன் டாலரும் பெறுகின்றனர். நடிகை ஏஞ்சலா ஜூலியன் 20 மில்லியன் டாலர் சம்பளம் பெற்று 4வது இடத்தில் இருக்கிறார்.

ஹாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் டாப்-10 நடிகைகள் பட்டியல்:

01. கிறிஸ்டீன் ஸ்டீவெர்ட் (34.5 மில்லியன் டாலர்)

02. மேரூன் டயஸ் (34 மில்லியன் டாலர்)

03. சாண்ட்ரா புல்லாக் (25 மில்லியன் டாலர்)

04. ஏஞ்சலா ஜூலி (20 மில்லியன் டாலர்)

05. சார்லிஸ் தெரான் (18 மில்லியன் டாலர்)

06. ஜூலியா ராபர்ட்ஸ் (16 மில்லியன் டாலர்)

07. சாரா ஜெஸிகா பார்கர் (15 மில்லியன் டாலர்)

08. மெர்லி ஸ்ட்ரீப் (12 மில்லியன் டாலர்)

09. கிறிஸ்டன் வீக் (12 மில்லியன் டாலர்)

10. ஜெனிபர் ஆனிஸ்டன் (11 மில்லியன் டாலர்)

சில்க்காக நடிக்க மறுத்தது ஏன்...? நயன்தாரா விளக்கம்!!


Nayanthara replies why she reject dirty pictureபிரபுதேவாவுடன் ஏற்பட்ட காதலால் புதிய படங்களை ஒப்புக்கொள்ளாமல் இருந்தார் நயன்தாரா. பல பட வாய்ப்புகள் அவரிடம் வந்து சென்றன. கடைசியாக தெலுங்கில் ஸ்ரீராமராஜ்யம் என்ற படத்தில் சீதையாக நடித்தார். இதற்கிடையே பிரபுதேவா-நயன்தாரா காதலில் திடீரென முறிவுக்கு வந்தது. இதனையடுத்து மீண்டும் படம் நடிக்க முடிவு செய்த நயன்தாராவுக்கு, தெலுங்கில் ஒரு படம் அமைந்தது. தொடர்ந்து தமிழில் 3 படங்களும், தெலுங்கில் 4 படங்களும் கையில் வைத்துள்ளார். இதனால் மீண்டும் நம்பர்-1 நடிகை அந்தஸ்துக்கு உயர்ந்து வருகிறார்.

இந்தநிலையில், சமீபத்தில் அவருக்கு "தி டர்ட்டி பிக்சர்ஸ்" தமிழ் ரீமேக்கில் நடிக்க வாய்ப்பு வந்ததுடன், சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்க ரூ.2 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. அதனை ஒரே செக்காகவும் கொடுக்க தயாரிப்பாளர்களும் முன்வந்துள்ளனர். ஆனால் நயன்தாராவோ அந்த வேடத்தில் நடிக்க முடியாது சொல்லிவிட்டாராம். இதற்கு காரணம் கேட்ட போது, சீதாவாக நடித்து நல்ல இமேஜைப் பெற்றுள்ள தன்னால், ஐட்டம் நடிகை பாத்திரத்தில் நடித்து அந்த இமேஜக் கெடுத்துக் கொள்ள முடியாது. எவ்வளவு பணம் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்றுள்ளார்.

இறுதி கட்டத்தில் சிம்புவின் போடா போடி!


Poda podi in final stageசிம்பு ஜோடியாக வரலட்சுமி நடிக்கும் படம் போடா போடி. விக்னேஷ் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் துவங்கி 2 ஆண்டுகள் ஆகிறது. நீண்ட நாட்களாக நடந்து வந்த படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. படத்தில் இன்னும் 2 பாடல்கள் மட்டுமே எடுக்க வேண்டியுள்ளதாம். இந்த நிலையில் பாடல்கள் படப்பிடிப்பு நடத்துவதற்காக இடங்களை தேர்வு செய்ய இயக்குனர் விக்கேஷ் சிவா மலேசியா சென்றுள்ளார்.இன்னும் சில தினங்களில் அங்கு படப்பிடிப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பாடல்கள் நிறைவடைந்தால் அத்துடன் படப்பிடிப்பு முடிவுக்கு வந்து, ரீலிசுக்கு தயாராகி விடுமாம்.

Friday 22 June 2012

ரசிகர்களின் வயிற்றை பதம் பார்க்க அனுஷ்கா விருப்பம்.



காமெடி கதைகளில் நடிப்பதென்றால் அனுஷ்காவுக்கு ரொம்ப இஷ்டம். ஆனால், அவருக்கு கிடைப்பதோ அதிரடி, ஆவேசம், இல்லையேல் டூயட் பாடுவது. அதனால், புதிதாக தன்னை  ஒப்பந்தம் செய்ய வரும்  டைரக்டர்களிடம், தனக்குள் இருக்கிற நகைச்சுவை  உணர்வையும், அந்த மாதிரி  கதைகளில் நடிக்க வேண்டும் என்று இருக்கிற ஆர்வத்தையும் சொல்லி வரும் அனுஷ்கா,  "முழுநீள காமெடி கதைகளில் எனக்கு நடிக்க சான்ஸ்  கிடைத்தால், படம் பார்க்க வரும் ரசிகர்களின் வயிற்றை பதம் பார்த்து விடுவேன் என்கிறார்.
தன்னை கவரும் முழுநீள காமெடி கதையில் நடிக்க வாய்ப்பு தந்தால், தனது சம்பளத்தை குறைக்கவும் தயார் என அதிரடி அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இதனால் தயாரிப்பாளர்கள் சிலர் அனுஷ்காவிற்காக காமெடி கதையை தயார் செய்யும்படி சில இயக்குனர்களிடம் கேட்டுக்கொண்டதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

எல்லை தாண்டும் மீனவர் பிரச்சினையை கையில் எடுத்துள்ள 'நீர் பறவை' திரைப்படம்


    வெறும் 45 லட்சம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட மைனாவை 7 கோடி வசூலித்துக் காட்டிய வெற்றிப் படமாக மாற்றிக் காட்டினார் உதயநிதி ஸ்டாலின்!
     அந்தப் படத்தின் இயக்குனரையும் அடுத்து தனது பேனரில் படம் இயக்கும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் பிரபுசாலமன் நழுவிவிட்டார்! அடித்து 60 லட்சம் செலவில் தயாரான தென்மேற்கு பருவகாற்று படத்தை பற்றி கேள்விப்பட்டு அதை உதயநிதி ஸ்டாலில் வாங்க இருந்த நேரத்தில்தான் விஜயகாந்த் கட்சிப் பிரமுகரான மைகேல் ராயப்பன் முந்திக்கொண்டார்! ஆனால் அவரால் உதயநிதி ஸ்டாலின் போல விளம்பரம் செய்ய முடியவில்லை! இதனால் தென்மேற்கு பருவகாற்று விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்றதே தவிர, தமிழக பாக்ஸ் ஆபீஸில் ஐம்பது லட்சத்தைக் கூட வசூலிக்க முடியவில்லை. ஆனால் மூன்று தேசிய விருதுகளை அள்ளியது! படமும் உதயநிதி ஸ்டாலின்க்குப் பிடித்துப் போனது.

விளைவு! சீனு ராமசாமிக்கு 50 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்து தனது ரெட் ஜியாண்ட் மூவி தயாரிப்பில் சினு.ராமசாமியின் அடுத்த படைப்பான நீர் பறவையை இயக்கும் பொறுப்பை ஒப்படைத்து இருக்கிறார். இந்தப் படத்தில் வெண்ணிலா கபடி குழு புகழ் விஷ்ணுவும், சுனைனாவும் ஜோடியாக நடிக்கின்றார்கள். அழகி, கன்னத்தில் முத்தமிட்டால், துளசி ஆகிய படங்களுக்கு பிறகு நந்திதாஸ் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.
செல்லும் மீனவர்களுக்கு ஒரு சில நேரம் அதிகமான மீன்கள் கிடைக்கிறது. ஆனால் சில நேரங்களில் மிகச்சொற்பமாக மீன்கள் கிடைக்கின்றன. இதனால் அதிகமாக மீன் கிடைக்கும் ஆழ்கடல் நோக்கி அவர்கள் செல்லவேண்டியிருக்கிறது. இதன் காரணமாக கடல் எல்லையைத் தாண்டுவது தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது. இப்படி எல்லை தாண்டி மீன் பிடிக்கும்போது அந்நிய கடற்படையாலும், அந்நிய மீனவர்களாலும் கைது செய்யப்படுகிறார்கள், சில நேரம் குண்டடி கூட பட்டு உயிரிழக்கிறார்கள். இந்தப் போராட்ட வாழ்க்கைக்கு மத்தியில் அரசியலும், மதமும் அவர்களை எப்படி அலைக்கழிக்கிறது என்பதுதான் இந்த நீர் பறவை!

நீர்பறவை பற்றிய இந்த சூடான தகவல்களுக்கு மத்தியில் அணல்பறக்கும் செய்தி ஒன்று அடிபடுகிறது உதயநிதி ஸ்டாலின் அலுவலக வட்டாரத்தில்! தமிழக எம்பிக்கள் குழு இலங்கைக்கு போய் வந்தாகிவிட்டது! பாரதிவிழாவும் கொழும்புவில் நடக்க இருக்கிறது. இந்தச் சுழ்நிலையில் நீர் பறவை படத்தை ஏன் நாம் இலங்கையில் விழா வைத்து வெளியிடக் கூடாது என்று இயக்குனர் சீனுவிடம் கேட்டாராம் உதயநிதி! ஆனால் சீனு யோசிங்க சார் என்று சொன்னாலும் இலங்கையில் இந்தப் படத்தின் இசையை வெளியிட்டால் என்னனென்ன பிரச்சனைகள் வரும் என்பதைப் பற்றி டிஸ்கஸ் செய்து கொண்டிருகிறாராம்!

ஹீரோவும்,தயாரிப்பாளரையும் பிடித்தால் மட்டுமே நடிப்பேன். சார்மி



       ஹீரோவை பிடித்தால்தான் படங்களை ஏற்பேன் என்றார் சார்மி. இதுபற்றி அவர் கூறியதாவது: மம்முட்டியுடன் ‘தப்பன்னா’ மலையாள படத்தில் மல்லிகா என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.  அமைதியான அதேநேரத்தில் உறுதியான மனம் படைத்த கேரக்டர். அந்த வேடத்தில் இருந்து இன்னும் என்னால் மீள முடியவில்லை.
மம்முட்டியுடன் முதன்முறையாக இணைந்திருக்கிறேன். அவர் பெரிய ஹீரோவாக இருந்தாலும் எல்லோருடனும் சகஜமாக பழகினார். ‘சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் ‘புரொபைல்’ என்ற படத்தில் நடிக்க மறுத்தது ஏன்?’ என்று கேட்கிறார்கள். அப்படத்தில் பல காட்சிகள் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.
ஒரு ஹீரோயின் என்றால் சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். அதற்காக இதுபோன்ற வேடங்களை ஏற்க விரும்பவில்லை. அதனால்தான் நடிக்கவில்லை. அடுத்து இந்தியில் ‘ஜில்லா காசியபாத்’ படத்தில் நடிக்கிறேன். விவேக் ஓபராய் ஹீரோ. என்னுடைய உடை மற்றும் பேச்சு வழக்கு எல்லாமே காஸியாபாத் பகுதியை சேர்ந்த பெண்ணைப்போலவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
தெலுங்கில் ‘சேவகுடு’ என்ற படம் விரைவில் வரவிருக்கிறது. மீண்டும் மலையாளத்தில் நடிப்பது பற்றி கேட்கிறார்கள். எந்த படத்தை ஒப்புக்கொள்வதற்கு முன்பும் தயாரிப்பாளர், உடன் நடிக்கும் ஹீரோ, எனது வேடம் என மூன்று அம்சமும் பிடித்திருந்தால்தான் நடிப்பேன். வரும் வாய்ப்புகளை கண்மூடித்தனமாக ஏற்க மாட்டேன். குறிப்பிட்ட வேடம் என்னை கவர வேண்டும். பேசும்படி இருக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிக்கு வாய்ப்பு கொடுத்த மோனிகா


  
  மாற்றுத்திறனாளி இயக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் மோனிகா. மனோஜ்குமார், லாரன்ஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் டி.சாமிதுரை. போலியோவால் பாதிக்கப்பட்டவர். இவர் குறும்புக்கார பசங்க என்ற படத்தை இயக்குகிறார். அவர் கூறியதாவது: சஞ்சீவ் உள்பட 4 நண்பர்கள் உயிருக்கு உயிராக பழகுகின்றனர். இவர்களுடன் பழகும் தோழி மோனிகாவிடம் யதார்த்தமாக ஒரு பொய் சொல்கிறார் சஞ்சீவ். இது பெரிய பிரச்னையாக வெடிக்கிறது. அதில் இருந்து அவர்கள் மீள்கிறார்களா என்பது கதை. சஞ்சீவுடன் கிட்டு, வைரவன், கோவிந்தன் நண்பர்களாகவும், வில்லனாக ரவி ராஜனும் நடிக்கின்றனர். அஜீத் ரசிகையாக நடிக்கிறார் மோனிகா.

மாற்றுத்திறனாளி என்பதால் எனக்கு படம் கிடைப்பது சிரமமாக இருந்தது. பல தயாரிப்பாளர்களை அணுகினேன். வீல் சேரில் அமர்ந்திருந்த எனக்கு யாரும் படம் தர முன்வரவில்லை. மனோஜ்குமார், லாரன்ஸ்தான் ஊக்கம் கொடுத்து என்னை தனது படங்களில் பணியாற்ற வைத்தனர். மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் என்னால் தனித்து செயல்பட முடியும். அந்த நம்பிக்கையில் நானும், நண்பர் ரவிராஜனும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறோம். படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் ஒத்துழைப்பு கொடுத்தார்கள். ஒளிப்பதிவு கே.பாண்டியன். இசை அருள்ராஜ். கள்ளக்குறிச்சி, கட்றாபாளையும் தண்டளை சுற்றுவட்டார பகுதிகளில் ஷூட்டிங் நடந்துள்ளது.

த்ரிஷா என நினைத்து, அவரது தோழிகளுக்கு தொல்லை கொடுக்கும் ரசிகர்கள்.



  


த்ரிஷா செல் நம்பர் என நினைத்து அவரது தோழிகளுக்கு ரசிகர்கள் போன் செய்து தொல்லை கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சமீபத்தில் செல்ல பிராணிகளை வளர்க்கும் ஆர்வத்தை உருவாக்கும் வகையில் ப்ளு கிராஸ் அமைப்பிற்கு சென்று அங்கிருந்த செல்ல நாய்களுக்கு உணவளித்தார் த்ரிஷா.

பின்னர் சில ரசிகர்கள் அவரது கையால் செல்ல நாய்களை வீட்டில் வளர்ப்பதற்காக பெற்று சென்றனர். இதுபோல் நாய்க்குட்டிகள் பராமரித்து வளர்க்க விரும்புபவர்கள் குறிப்பிட்ட செல்போன் நம்பரில் தொடர்பு கொள்ளுங்கள் என்று த்ரிஷா தரப்பில் அறிவிக்கப்பட்டது. இது த்ரிஷா நம்பர் என நினைத்து பல ரசிகர்கள் போன் செய்து தொல்லை கொடுக்க தொடங்கினர். மறுமுனையில் த்ரிஷா பேசாததால் எரிச்சல் அடைந்தனர்.

இதுபற்றி டுவிட்டர் பக்கத்தில் த்ரிஷா கூறும்போது,‘கைவிடப்பட்ட நாயக்குட்டிகளை வளர்க்கும் எண்ணம் உடையவர்கள் மட்டும் குறிப்பிட்ட செல்போனில் தொடர்பு கொள்ளுங்கள். இது என்னுடைய பர்சனல் நம்பர் இல்லை. சக தோழிகளின் நம்பர். நான் பேசுவதாக நினைத்து ரசிகர்கள் அவர்களுக்கு தொல்லை தர வேண்டாம்’ என்று குறிப்பிட்டுள்ளார்

சகுனி-விமர்சனம்

நடிகர்கள் : கார்த்தி,ப்ரணிதா,ராதிகா,பிரகாஷ்ராஜ்,

இசை: ஜி.வி.பிரகாஷ்ராஜ்

இயக்கம் : சங்கர் தயாள்
  ட்ரீம் வாரியர்ஸ் & ஞானசேகரன் தயாரிப்பில் கார்த்தி-சந்தானம் காம்பினேசனில் இன்று வெளியாகியிருக்கும் படம் சகுனி. நீண்ட இடைவேளைக்குப் பிறகு வரும் அரசியல் படம் என்பதாலும் கமல்-ரஜினி-ஸ்ரீதேவி காம்பினேசன் என ட்ரெய்லரே கலக்கியதாலும் கார்த்தி மாஸ் ஹீரோவாக ஆகிக் கொண்டிருக்கும் வேளையில் வெளியாகும் படம் என்பதாலும் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய படம் இது. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்றால்...


காரைக்குடி கார்த்தியின் ஒரே சொத்தான செட்டிநாட்டு பெரிய பங்களாவை ரயில்வே புராஜக்ட்டுக்காக அரசு எடுத்துக்கொள்ளப்போவதாக அறிவிப்பு வருகிறது. தன் பங்களாவைக் காப்பாற்றிக்கொள்ள, ரயிவே அமைச்சர்-முதல்வர் என அரசியல்வாதிகளைப் பார்த்து முறையிட சென்னை வருகிறார் முதல்வர். அப்பாவி பொதுஜனமாக முறையிட்டால், எந்த மரியாதையும் கிடைக்காது என்பதைப் புரிந்து கொண்டு, கார்த்தி எடுக்கும் அவதாரமே ‘சகுனி’.

கார்த்தியின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட் ஸ்டோரி செலக்சன் தான். எப்போதும் காமெடி கலந்த கதாபாத்திரத்தையே தேர்வு செய்வது மற்றொரு ப்ளஸ் பாயிண்ட். இதிலும் சமீபகாலமாக யாருமே தொடாத அரசியல் கதையை தேர்வு செய்திருக்கிறார். முதல் பாதி முழுக்க ஜாலியான இளைஞனாக, சந்தானத்தை கடுப்பேற்றுபவராக, ப்ரணீதாவை காதலிப்பவராக, அரசியல்வாதிகளின் ஆலோசகராக கலக்குகிறார் கார்த்தி. 

சந்தானம் வழக்கம்போல் ஒன் லைனரில் கலக்குகிறார். ரஜினி (அப்பாத்துரை)_ஆக சந்தானமும் ’கமல’(க்கண்ணன்)-ஆக கார்த்தியும் அறிமுகமாகி பேசிக்கொள்ளும் காட்சிகள் செம ரகளை. 

ட்ரெய்லரின் ரஜினி-கமல்-ஸ்ரீதேவி என பெரிய பில்டப் கொடுத்துவிட்டதால், அதை வைத்து இன்னும் நல்ல காமெடியைக் கொடுத்திருக்கலாம். அதில் ஏமாற்றமே! ஆனாலும் சந்தானம் வரும் காட்சிகளில் கலகலப்புகுப் பஞ்சமில்லை. ஒரு நடிகர் ஒரு ஹிட் கொடுத்துவிட்டால், அதை கம்பேர் செய்வது நம் வழக்கம் என்பதால்,........ஓகேஓகே அளவிற்கு இல்லை!

ப்ரணீதா.... பெரிதாக நடிக்க சான்ஸ் இல்லாவிட்டாலும் டூயட்களில் கல்ர்ஃபுல்லாக ஆடுகிறார், ஹீரோவைக் காதலிக்கிறார். இடைவேளைக்கு அப்புறம் காணாமல் போகிறார். படம் முடியும்போது கட்டிப் பிடிக்கிறார்(ஆடியன்ஸை இல்லீங்க..ஹீரோவைத் தான்!). தமிழில் இருக்கும் ஹீரோயின்கள் எல்லாம் (ஹி..ஹி..ஹன்சி தவிர) பழசாகி விட்ட நிலையில் ப்ரணீதாவுக்கு வளமான எதிர்காலம் உண்டு. அழகான கண்களுடன் ப்ரணீதா பளபளப்பாக வலம்வருகிறார். ஆளும் ‘வளமாகவே’ இருக்கிறார் என்பது மேலும் சிறப்பு!

வில்லன் முதல்வராக பிரகாஷ்ராஜ். நீண்ட நாளைக்கு அப்புறம் படம் முழுக்க வரும் கதாபாத்திரம். வழக்கம்போல் கேஷுவலாக கலக்கிச் செல்கிறார் மனிதர். கவுன்சிலர்-மேயராக ராதிகா, சாமியாராக நாசர், எதிர்க்கட்சித் தலைவராக கோட்டா ஸ்ரீனிவாசராவ் என பொருத்தமான பாத்திரத் தேர்வுகள். படத்தின் பலமாக வசனங்களைச் சொல்லலாம். முடிந்தவரை திரைக்கதையை காமெடியாக அமைத்ததும் படத்தை ரசிக்க வைக்கிறது. 

கந்துவட்டி ராதிகாவை மேயராக ஆக்கும் கார்த்தியின் சகுனி வேலைகள் அட்டகாசம். ஆனால் அதே போன்றே கோட்டா ஸ்ரீனிவாசராவை கார்த்தி முதல்வர் ஆக்குவது ஒரு ரிப்பீட்னெஸைத் தருகிறது. பார்த்த காட்சிகளையே வேறு வடிவில் பார்க்கிறோம் என்ற சலிப்பு வரவே செய்கிறது. அதனாலேயே கடைசிக் காட்சிகளில் திரைக்கதையில் ஒரு தொய்வு விழுந்து விடுகிறது. 

முதல்பாதியில் அனுஷ்கா வரும் காட்சிகள் எவ்வித காமெடியைவும் உண்டாக்கவில்லை. அதைவிட ப்ரணீதா சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளை அதிகமாக்கியிருக்கலாம். ’சந்தானத்திடம் கதை சொல்லும்’ திரைக்கதை உத்தி அருமை. அது இல்லையென்றால் முதல்பாதி மொக்கையாகவே ஆகியிருக்கும்.


வீடு மேல் கார்த்தி கொண்டிருக்கும் செண்டிமெண்ட்டைப் பற்றி விரிவான காட்சிகள் இல்லை. அரசியல் ஆலோசகராக ஆகும் கார்த்திக்கு அதற்குரிய பின்புலம் ஏதாவது இருப்பதுபோல் காட்டியிருக்கலாம். அதனாலேயே படத்தை முழுக்க ரசிக்க முடியவில்லை.

ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் அருமை. முத்தையாவின் ஒளிப்பதிவும் ஸ்ரீஇதர் பிரசாத்தின் எடிட்டிங்கும் படத்துக்கு பக்க பலம். அனல் அரசுவின் சண்டைக்காட்சிகளில் அதிகம் எதிர்பார்த்தேன். தேவையில்லாத சண்டைக்காட்சிகள் என்பதால் படத்தோடும் ஒட்டவில்லை.

இருப்பினும் வித்தியாசமான கதைக்களனுடன், அரசியல் கதையை காமெடி கலந்து சொல்லியிருப்பதால் ஒரு முறை பார்க்கலாம்.

அபி நடிகையின் உச்சகட்ட விருப்பம்


  தமிழ் சினிமாவில் காதல் கோட்டை கட்டி, சுவர் ஏறிக் குதித்து இயக்குனரைக் காதல் திருமணம் செய்து கொண்ட அந்த நடிகை சின்னத்திரையில் அழகாக கோலமிட்டார். 

தற்போது மீண்டும் வெள்ளித்திரை பக்கம் திரும்பியிருக்கும் இந்த அபி நடிகை, பல முன்னணி தமிழ் ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்திருந்தாலும் ஒரே ஒரு நடிகருடன் தான் நடிக்கவில்லையே என்று மனதால் நொந்து போயிருக்கிறாராம். அந்த நடிகர் வேறு யாருமல்ல,  உச்ச நடிகர்தானாம். 

தற்போது உச்சத்தில் இருக்கும் தல, தளபதி நடிகர்களுடன் நான் நடித்து இருந்தாலும் என்றைக்கும் உச்சத்தில் இருக்கும் உச்ச நடிகருடன் ஒரு சின்ன காட்சியிலாவது நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கி கிடக்கிறேன் என பார்ப்பவர்களிடமெல்லாம் புலம்பிக் கொண்டிருக்கிறாராம். 

நடிகையின் இந்த ஆசை நிறைவேறுமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மணியான இயக்குனர் தான் இயக்கும் சமுத்திரப் படத்தில் நாயகியாக பழைய நடிகையின் இரண்டாவது மகளை நடிக்க வைத்துள்ளார். அந்த பழைய நடிகையின் மூத்த மகள் ஜீவ நடிகருடன் இணைந்து நடித்த படம் மெகா ஹிட்டானதில் நடிகைக்கு பெரும் சந்தோஷம். அதேபோல் தனது இளைய மகளின் முதல் படமே பெரிய இயக்குனரின் படம் என்பதால் மேலும் சந்தோஷத்தில் உள்ளார். 

இந்நிலையில் அந்த மணியான இயக்குனர் பழைய நடிகையிடம் என் படத்தில் நடிக்கும் இரண்டாவது மகளின் புகைப்படத்தை வெளியிடக்கூடாது என கறாராக சொல்லிவிட்டாராம். ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்துவதற்காகவே இந்த கட்டளையை விடுத்திருக்கிறாராம் இயக்குனர்.

சீதையாக நடித்த நான் சில்க் ஸ்மிதாவாக நடிப்பதா? நயன்தாரா மறுப்பு



   சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை இந்தியில் டர்ட்டி பிக்சர் என்ற பெயரில் படமாக எடுத்து வெளியிட்டனர். அப்படம் வெற்றிகரமாக ஓடியது. அதில் சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்த வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது.

இதனால் சில்க் ஸ்மிதா கதையை பல்வேறு மொழிகளில் படமாக்க ஏற்பாடு நடக்கிறது. மலையாளத்திலும் தயாராகிறது. மலையாள மொழியில் சில்க் ஸ்மிதா வேடத்தில் சனாகான் நடிக்கிறார்.

தமிழிலும் இப்படத்தை எடுக்கின்றனர். இதற்காக நட்சத்திரங்கள் தேர்வு நடக்கிறது. தமிழ் படத்தில் சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சு நடத்தினர். ரூ.2 கோடி சம்பளம் தருவதாகவும் பேசினர். ஆனால் சில்க் வேடத்தில் நடிக்க நயன்தாரா மறுத்து விட்டார்.

ஏற்கனவே ஸ்ரீராம ராஜ்ஜியம் படத்தில் சீதையாக நயன்தாரா நடித்தார். விரதம் இருந்து அப்படத்தில் நடித்து முடித்தார். சீதையாக நடித்த என்னால் சில்க் ஸ்மிதா வேடத்தில் கவர்ச்சியாக நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம். இதனால் வேறு நடிகையை தேடுகிறார்கள்.

அமீர்கான் வில்லனாக நடிக்கும் தூம் 3 படத்தின் முக்கிய வேடத்தில் ரஜினி?



  ஹிருத்திக் ரோஷன்- ஐஸ்வர்யாராய் நடித்து வெளியான தூம் 2-ம் பாகம் படம் வெற்றிகரமாக ஓடியது. இதன் முதல் பாகத்தில் அபிஷேக் பச்சன், ஜான் அபிரகாம், இஷா தியோல் நடித்து இருந்தனர். 2004-ல் இப்படம் வந்தது.

தூம்-3 பாகம் தற்போது தயாராகி வருகிறது. இதில் அமீர்கான் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். இதில் நடிக்க ரஜினிக்கு அழைப்பு வந்துள்ளது. ரஜினியின் ஸ்டைல் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தி ரசிகர்களாலும் விரும்பப்படுகிறது. எனவே அவர் நடித்தால் படத்துக்கு கூடுதல் வரவேற்பு இருக்கும் என கருதுகின்றனர்.

அத்துடன் அமீர்கானும் ரஜினி நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம். எனவே ரஜினியை அணுகி பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதில் நிச்சயம் ரஜினி நடிப்பார் என்று படக்குழுவினர் நம்பிக்கை வெளியிட்டு உள்ளனர்.

சத்யம் சினிமாஸ்’ நிறுவனத்தின் புதிய ஸ்பெக்ட்ரம் மால். கமல் திறந்துவைத்தார்



   சத்யம் சினிமாஸ்’ நிறுவனம் பெரம்பூரில் உள்ள ஸ்பெக்ட்ரம் மாலில் ‘எஸ்-2’ என்ற பெயரில் 5 நவீன சினிமா தியேட்டர்களை திறந்துள்ளது. நடிகர் கமலஹாசன் இந்த தியேட்டர்களை இன்று காலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 

‘3டி’, டிஜிட்டல் என நவீன தொழில்நுட்பத்தில் 5 தியேட்டர்களும் வடிவமைக்கப்பட்டு உள்ளன. 1381 சொகுசு இருக்கைகளுடன் இது உருவாக்கப்பட்டு உள்ளது. பெரிய தியேட்டரில் 300 இருக்கைகளும், சிறிய தியேட்டர்களில் 222 இருக்கைகளும் உள்ளன. ஸ்பெக்ட்ரம் மாலில் இரண்டாவது தளத்தில் இத்தியேட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

மூன்று தியேட்டர்களில் இன்று கார்த்தி நடித்த ‘சகுனி’ படம் திரையிடப்பட்டது. மற்ற இரு தியேட்டர்களில் ஆங்கிலம், இந்திப் படங்கள் வெளியாயின. 

தியேட்டரை திறந்து வைத்து கமலஹாசன் பேசியதாவது:- 

பெரம்பூருக்கு பல வருடங்களுக்கு முன் ஒரு நண்பரை பார்க்க நான் அடிக்கடி வருவது உண்டு. இன்று பெரம்பூர் முன்புபோல் இல்லாமல் நிறைய மாறி இருக்கிறது. நண்பரின் வீடு அடையாளம் தெரியவில்லை. 

1959-க்கு முன் இந்த இடம் நாடக கொட்டகையாக இருந்தது. அதன்பிறகு வீனஸ் தியேட்டராக மாறியது. தற்போது ‘மால்’ ஆகி நவீன தியேட்டர்கள் வந்துள்ளது. சினிமா கலை வேகமாக வளர்கிறது என்பதையே இது காட்டுகிறது.

நாடக கொட்டகை இங்கு இருந்தபோது எனது குருநாதர் அவ்வை சண்முகம் நடித்து இருக்கலாம். சிவாஜி நடித்து இருக்கலாம். இப்போது அவர்கள் குழந்தையான கமல் நடித்த ‘விஸ்வரூபம்’ படம் இத்தியேட்டரில் வரப்போகிறது. சினிமாவை யாராலும் அழிக்க முடியாது என்பதற்கு இது உதாரணம் ஆகும். 

1980-ல் டி.வி. வந்தபோது தியேட்டர்கள் அழிந்துவிடும் என்றனர். நான் வளரும் என்றேன். நான் சொன்னதுதான் இப்போது நடந்து வருகிறது. டி.வி. மூலம் வீட்டுக்குள் எத்தனை படங்கள் வந்தாலும் மக்கள் வெளியேபோய் படம் பார்ப்பதைதான் விரும்புகிறார்கள். 

‘விஸ்வரூபம்’ படத்தில் சவுண்ட் தொழில்நுட்பத்தில் புதுமை செய்ய உள்ளோம். படங்களில் 5.1, 7.1 அளவுதான் சவுண்ட் தொழில்நுட்பம் இருக்கிறது. விஸ்வரூபம் படத்தில் முதல் முறையாக 11.1 அளவு சவுண்ட் தொழில்நுட்பத்தை பயன்படுதத உள்ளோம். இதற்காக அமெரிக்கா செல்ல உள்ளோம். 

இவ்வாறு கமலஹாசன் பேசினார். 

இந்நிகழ்ச்சியில் சத்யம் சினிமாஸ் நிர்வாக இயக்குனர் சொரூப் ரெட்டி கலந்து கொண்டார்.

கலவரத்தில் தொடங்கிய விஜய் பிறந்த நாள் விழா!



Vijays birthday party in the riots began!
  விஜய் தனது 38வது பிறந்த நாளை இன்று (22.06.2012) கொண்டாடினார். வருடா வருடம் ரசிகர்களோடு பிறந்த நாளை கொண்டாடுவது வழக்கம். அன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு அளித்து மகிழ்வார். அதே போல் இந்த வருடமும் சென்னை எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனைக்கு காலை 11 மணிக்கு சென்றார், அங்கு பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார். மொத்தம் 40 குழந்தைகளுக்கு அணிவிக்க இருந்தார். சரியான இட வசதி இல்லாததாலும், நெருக்கடி மிகுதியாக இருந்ததாலும் 5 குழந்தைகளுக்கு மட்டுமே மோதிரம் அணிவித்தார். இதற்கிடையே விஜயின் பாதுகாவலராக வந்தவர்கள் மற்றும் அங்கு இருந்த ரசிகர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனை கண்ணாடி கதவுகள் அடித்து நொறுக்கப் பட்டன. பிறகு அங்கு இருந்த போலீசார் வந்ததும் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப் பட்டது, இப்பிரச்சனை காரணமாக விழாவின் பாதியிலே விஜய் சென்று விட்டார். புனேயில் நடைபெறும் துப்பாக்கி படப் பிடிப்பில் கலந்து கொள்ள விமான நிலையம் சென்று விட்டார். மேலும் இன்றைய ரசிகர்கள் நிகழ்ச்சி மற்றும் உதவிகள் வழங்கும் நிகழ்சிகளை அவர் தந்தை எஸ்.எ.சந்திரசேகர் சாலி கிராமத்தில் உள்ள அவர் திருமண மண்டபத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு நடத்தி வருகிறார்,

காமெடியை விரும்பும் அனுஷ்கா!


anushka  like comedy!

   காமெடி கதைகளில் நடிப்பதென்றால் அனுஷ்காவுக்கு ரொம்ப இஷ்டம். ஆனால், அவருக்கு கிடைப்பதோ அதிரடி, ஆவேசம், இல்லையேல் டூயட் பாடுவது. அதனால், புதிதாக தன்னை ஒப்பந்தம் செய்ய வரும் டைரக்டர்களிடம், தனக்குள் இருக்கிற நகைச்சுவை உணர்வையும், அந்த மாதிரி கதைகளில் நடிக்க வேண்டும் என்று இருக்கிற ஆர்வத்தையும் சொல்லி வரும் அனுஷ்கா, "முழுநீள காமெடி கதைகளில் எனக்கு நடிக்க சான்ஸ் கிடைத்தால், படம் பார்க்க வரும் ரசிகர்களின் வயிற்றை பதம் பார்த்து விடுவேன் என்கிறார்.

தெனாலிராமனாக வருகிறார் வடிவேலு!



Vadivelu comes to tenaliraman film
   அரசியல் புயலில் சிக்கியதால், சில காலம் சினிமாவை விட்டே ஒதுங்கிய வைகைப் புயல் வடிவேலு, மீண்டும் களத்தில் குதிக்கப் போவதாக சொல்கிறார். அடுத்து சினிமாவில் நடித்தால், ஹீரோவாக மட்டுமே நடிப்பது என்பதில் உறுதியாக இருக்கிறேன். என்னை வைத்து, "இம்சை அரசன் 23ம் புலிகேசி என்ற படத்தை இயக்கிய சிம்புதேவன், ஏற்கனவே ஒரு, "ஸ்கிரிப்ட் தயார் செய்து, அதை படமாக்க தயாராகி வருகிறார். இந்த நிலையில், தற்போது புதுமுக டைரக்டர் ஒருவர், "தெனாலிராமன் என்ற தலைப்பில், ஒரு கதை சொன்னார். ரொம்ப அருமையாக இருந்தது. அதனால், அந்த படத்திலும் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளேன். வெகு விரைவிலேயே, இந்த படங்களில் நான் நடிப்பது குறித்த செய்திகள் வெளியாகும். இவ்வாறு கூறியுள்ளார் வடிவேலு.

சகுனிக்கு ஷாக் கொடுத்த சம்பளம்!


  
   இன்று உலகம் முழுவதும் வெளியாகும் சகுனி படத்தை கடந்த மே மாதமே கோடை வெளீயிடாக ரிலீஸ் செய்யவே முதலில் திட்டமிட்டார்கள்.

ஆனால் அதற்கு சாத்தியமில்லாமல் செய்து விட்டார்களாம். முதலில் அதில் வில்லனாக நடித்தார் சலீம்கௌஸ். சகுனி படப்பிடிப்பு முடிந்த்து மொத்தப்படத்தையும் முடித்துப் பார்த்தபோது சலீம் நடிப்பில் அப்பயொன்றும் சத்து இல்லை என்று சொல்லி, அவர் நடித்த காட்சிகளை நீக்கிவிட்டு அவர் நடித்த பொலிட்டிகல் புரோக்கர் கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜை நடிக்க வைத்திருக்கிறார்கள்!

தெலுங்கில் கார்த்திக்கு நல்ல மார்க்கெட் என்பதால், பிரகாஷூம் மறுபேச்சு பேசாமல் 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடித்திருகிறார். ஏற்கனவே கார்த்தியின் பட நிறுவனமான க்ரீன் ஸ்டூடியோவுக்கு பிரகாஷ்ராஜ் பணம் தர வேண்டியிருந்ததால் அட்வான்ஸ் கூட வாங்காமல் நடித்து முடித்திருக்கிறார். பிறகு டப்பிங் பேச அழைத்தபோது பிரகாஷ்ராஜுக்கு ஒரு நாளைகு இரண்டு லட்சம் சம்பளம் வீதம் 20 நாட்களுக்கு 40 லட்சம் என்று ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுத்திருகிறார்கள்.

ஆனால் தற்போது பாலிவுட்டின் மோஸ்ட் வாண்டெட் வில்லன் ஆகியிருக்கும் பிரகாஷ்ராஜ், ரவுடி ரத்தோர் படத்துக்கு 2 கோடி சம்பளம் வாங்கியிருகிறார். தமிழுக்கு 1 கோடிக்கு குறைந்து நடிக்கமுடியாது என்று சொன்னவர் க்ரீன் ஸ்டூடியோ 70 லட்சம் செட்டில் செய்த பிறகே டப்பிங் பேசிக்கொடுத்தாராம்! நேற்று பொறந்த ஹீரோ எல்லாம் ஐந்துகோடி பத்து கோடி என்று சம்பளம் வாங்கும்போது பெரிய ரசிகப்பட்டாளத்தைக் வைத்திருக்கும் நான் ஒரு படத்துக்கு ஒரு கோடி கேட்கக் கூடாதா என்று அதிரடியாகக் கேட்டாராம் பிரகாஷ்ராஜ்!

சகுனியில் இன்று எக்ஸ்போஸ் ஆக இருக்கும் இன்னொரு உள்குத்து அனுஷ்கா! தற்போது கார்த்தியுடன் ‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்தில் ஹீரோயினாக நடித்துவரும் அனுஷ்காவின் காலை கைப் பிடித்து, சகுனியில் ஐந்து காட்சிகளில் வந்துபோகும் பெண் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துவிட்டார்கள். படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு சர்ப்பிரைஸாக இருக்கட்டும் என்று இதை மீடியா மோப்பம் பிடிக்காமல் பார்த்துக் கொண்டிருகிறார்கள்!

மழையில் நின்ற நகுல் என்னாவொரு டெடிக்கேஷன்?


    
naan rajavaga pogiren
   சில டைட்டில்கள், பத்து பாட்டில் சலைன் பாட்டில்களை ஏற்றிய தெம்பை தரும். நகுலுக்கும் அப்படியொரு தெம்பை தருகிறது இந்த டைட்டில். 'நான் ராஜாவாக போகிறேன்'

பிருத்வி ராஜ்குமார் இயக்கிக் கொண்டிருக்கும் இப்படம் நகுலின் நைந்து போனமார்க்கெட்டை தூக்கி நிறுத்தக்கூடும். ஏனென்றால் இந்த பிருத்வி பிரபல இயக்குனர் வெற்றிமாறனின் வலது கையாகவும் இடது சுவாசமாகவும் இருந்தவர். பொல்லாதவன் வெற்றிக்கு பெரிய காரணமாக இருந்தவர் என்று ஒரு மேடையில் இந்த பிரித்வியை குறிப்பிட்டிருந்தார் வெற்றிமாறன். அதுமட்டுமல்ல, இந்த படத்திற்கு வசனத்தையும் எழுதி உதவியிருக்கிறார் வெற்றி. (சப்போர்ட் இதோடு நின்றபாடில்லை, ஒரு காட்சியில் நடித்தும் இருக்கிறாராம்)

முதல் படம் ஹிட்டானால் போதும், முழு கோடம்பாக்கமும் நம்ம பாக்கெட்டில்தான் என்று திணவெடுத்து திரிவார்கள் எல்லா ஹீரோக்களும். நம்ம நகுலும் அப்படி திரிந்தவர்தான். காலம் ஒரு மிகப்பெரிய டுடோரியல் இன்ஸ்ட்டியூட் அல்லவா? அது கற்றுக் கொடுத்த பாடத்தினால் கப்சிப் ஆகிவிட்ட நகுல், இப்படத்தில் காட்டிவரும் ஈடுபாடு எப்படி? பிருத்வி ராஜ்குமாரிடம் கேட்டால் நகுலின் படத்தை பிரேம் போட்டு மாட்டி சூடம் கொளுத்துவார் போலிருக்கிறது. அப்படியொரு பாராட்டுமழை.

போன வாரம் மூணு நாள் ஒரு ஃபைட் சீன் எடுத்தோம். கம்ப்ளீட் மழை செட்டப். அந்த மூணு நாளும் ராப்பகலா தண்ணியிலேயே நின்னாரு நகுல். அவரோட டெடிக்கேஷன் எங்களை வியக்க வச்சுருச்சு என்றார்.

நகுலுக்கு ஜோடியாக சித்து ப்ளஸ் 2 சாந்தினியும், அவனி மோடி என்ற மும்பை கிளியும் நடிக்கிறார்களாம். ஏதோ ஒரு படத்தை எடுத்தோம், நாலு பாட்டு ஒரு பைட்டுன்னு முடிச்சோம்னு இல்லாமல் கொஞ்சம் சமூக அக்கறையும் காட்டியிருக்கிறார் இந்த ப்ருத்வி. போபால் விஷவாயு தொடர்பான சில காட்சிகளை அந்த மண்ணிலேயே எடுத்திருக்கிறாராம். அதுமட்டுமல்ல, படத்தில் வரும் மணிவண்ணன் கேரக்டரும் அவர் பேசும் வசனங்களும் நிறைய யோசிக்க வைக்கும் என்றார்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் எல்லா பாடல்களையும் கம்போஸ் பண்ண ஃபாரின் லொகேஷன் கேட்டு தயாரிப்பாளரை டரியல் ஆக்காமல் இங்கேயே முடித்துக் கொடுத்தார் என்பது மேலதிக தகவல்!

ஆர்யா-ஜீவா அதிர்ச்சி போட்டு உடைத்த பிரதர்


Arya - Jeeva    நட்பென்ற மூழ்காத ஷிப்புகளில் முடிஞ்சளவுக்கு ஓட்டையை போடுவதுதானே இல்லத்தரசிகளின் இனிய பணியாக இருக்கும்? அப்படியொரு பொற்ற்ற்ற்ற்றாமையில் ஈடுபட்டு ஒரு புராஜக்டையே பலி கொடுத்திருக்கிறார் திருமதி ஜீவா. (நம்ம நடிகரு ஜீவாவோட லகான்தாங்க)

ஆர்யா, ஜீவா, சந்தானம் நடிக்க ஒரு புதிய படத்தை உருவாக்க நினைத்தார்கள்நண்பர்கள். ஆர்யாவும் ஜீவாவும் அப்படியொரு திக்னஸ் என்பதுதான் ஊருக்கெல்லாம் தெரியுமே! இப்படத்தை நானே தயாரிக்கிறேன் என்று முன் வந்தாராம் ஜித்தன் ரமேஷ். இவர் ஜீவாவின் சகோதரர் அல்லவா?

என்னதான் பிரண்ட்ஷிப், சொந்தம் என்றாலும் சம்பளம் தராவிட்டால் கதை நடக்குமா? இங்குதான் பிரச்சனை ஆரம்பம் என்கிறார்கள் கோடம்பாக்கத்து சில்வண்டுகள். ஜீவாவை விட ஆர்யாவுக்கு கொஞ்சம் கூடுதல் சம்பளத்தை கொடுத்துவிட்டாராம் ரமேஷ். மார்க்கெட் நிலவரப்படியே ஆர்யாவின் கைதான் உச்சம் என்பதால்தான் இப்படி.

இதை கேள்விப்பட்ட ஜீவாவின் மனைவி, 'அப்ப நீங்க என்ன டம்மி பீஸா? இந்த படமே வேணாம். விட்டு தள்ளிட்டு வாங்க' என்று சீற, மனைவி சொல்லே மந்திரம், மற்றதெல்லாம் தந்திரம் என்று புராஜக்டிலிருந்தே விலகிவிட்டாராம் ஜீவா.

அண்ணன் என்னடா, தம்பி என்னடா அவசரமான உலகத்திலே?

விஜய், அஜீத், சிம்பு என்றால் உடனே அதிரடி ஆட்டத்துக்கு ஆயத்தமாகி விடுவேன் - ஓவியா!


Ajith Vijay Simbu if ok-Oviya
"களவாணி படத்தில் கண்ணியமாக நடித்த ஓவியா, "கலகலப்பு படத்தில் ஒரு பாடலில், அஞ்சலியுடன் இணைந்து அயிட்டம் நடிகைகளே அசந்து போகும் அளவுக்கு அதிரடி ஆட்டம் போட்டார். அவரிடத்தில், "இந்த கவர்ச்சி ஆட்டம் குத்தாட்டமாக மாறுமா? என கேட்டதற்கு, "ஒரு காலத்தில் அயிட்டம் பாடல்களுக்கென்று நடிகைகள் இருந்தனர். ஆனால், இப்போது கதாநாயகிகளையே அந்த மாதிரி பாடல்களுக்கு ஆட வைக்கின்றனர். இது காலத்தின் மாற்றம். அதனால் தான், அந்த பாடலில் ஆட சம்மதித்தேன். அதற்கு நல்ல பெயரும் கிடைத்தது."ஆனால், நான் நாயகியாக நடிக்காத படங்களில் குத்துப்பாட்டுக்கு ஆடுவேனா என கேட்டால், அது எந்த மாதிரி நடிகர்களுடன் ஆடும் வாய்ப்பு என்பதை பொறுத்து முடிவெடுப்பேன். குறிப்பாக, விஜய், அஜீத், சிம்பு மாதிரியான பிரபல ஹீரோக்களுடன் நடனமாடும் வாய்ப்புகள் என்றால், எந்த ஆட்சேபனையும் இல்லை. உடனே அதிரடி ஆட்டத்துக்கு ஆயத்தமாகி விடுவேன் என்கிறார் ஓவியா.

அஜீத், விஜய், சிம்பு, ஆர்யா... எல்லாருக்கும் நான் நண்பன்! கார்த்தியின் அசத்தல் பேட்டி


ரசியலைப் பத்தி ஒரு கமென்ட் வந்தாலே திணறிப்போயிடுறோம்... நீங்க ஃபுல் லெங்த் அரசியல் சினிமாவே எடுத்திருக்கீங்களே... செம தில்லுதான்’னு இண்டஸ்ட்ரி நண்பர்கள் சொல்றாங்க. இப்போதைய அரசியலுக்கும் படத்துக் கும் துளிகூடச் சம்பந்தம் இல்லை. இந்தப் படத்துக் குனு ஒரு கற்பனை அரசியல் சூழலை உருவாக்கி, அதுலதான் ஜாலி பண்ணியிருக்கோம். 'சிறுத்தை’யை எப்படி லாஜிக் பார்க்காம ரசிச்சீங்களோ... அப்படியே 'சகுனி’யையும் சந்தோஷமா என்ஜாய் பண்ணுங்க'' - குறும்பாகச் சிரிக்கிறார் 'சகுனி’ கார்த்தி.
 '' 'பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன்’னு வித்தியாசம் காட்டிட்டு இருந்தீங்க. இப்ப 'சகுனி, அலெக்ஸ் பாண்டியன், ஆல் இன் ஆல் அழகுராஜா’னு கமர்ஷியல் சக்கரம் மட்டும் சுத்துறீங்களே...''
''பெர்ஃபார்மன்ஸுக்காக மட்டுமே இப்பப் படம் எடுக்க முடியாது. பெர்ஃபார்மன்ஸ்ல கமர்ஷியல் காக்டெய் லும் இருக்கிற ஸ்க்ரிப்ட்டுக்காகக் காத்திருந்தா... காத்துட்டே இருக்க வேண்டியதுதான்.ஏற்கெனவே அப்படி நாலு வருஷம் காத்திருந் தேன். அவ்வளவு நேரம் செலவழிச்சுக் காத்திருக்கிறதுக்குப் பெரிய விலை இருக்கு. நல்ல டீம் வேணும், பிரமாத மான ஆர்ட்டிஸ்ட்டுகள் தேவை. 'பையா’வில் மட்டும்தான் நான் ஹீரோ. 'நான் மகான் அல்ல’ படத்தில் நான் மிடில் கிளாஸ் பையன். இது எல்லாத்தையும்விட முக்கியம்... இப்ப கடவுள் புண்ணியத்தில் நமக்கு பிசினஸ் நல்லாப் போயிட்டு இருக்கு. நம்ம படத்தை வாங்கி ரிலீஸ் பண்றவங்களுக்கு 'இவனை நம்பலாம்டா’னு நம்பிக்கை கொடுப்போம். அப்புறம் இன்னும் வித்தியாசமா செய்வோம்!''
''குழந்தைகளுக்கு உங்களை ரொம்பப் பிடிச்சிருக்கே... சமயங்களில் சூர்யாவைவிட நிறைய ஸ்கோர் பண்றீங்கபோல... எப்படி இது?''
''எனக்கே புரியலைங்க! ஏர்போர்ட் செக்கிங் ஆரம்பிச்சு ஃப்ளைட் சீட்ல உக்கார்ற வரைக்கும் குழந்தைகளை வாங்கி, தூக்கி, பேர் கேட்டு, 'நல்லாப் படிங்க’னு சொல்ல அவசியம் வந்திருக்கு. 'இதுக்கெல்லாம் நாம என்னடா பண்ணோம்?’னு யோசிச்சுப் பார்த்தால், ஒண்ணும் புரியலை. என் கண்ணு பெரிசா இருக்கு, வாய் பெரிசா இருக்குனு ஆச்சர்யமாப் பார்க்கிறாங் களா? இப்போலாம் டைரக்டர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாவே சீன்களை வைக்கச் சொல்றேன். நம்ம படங்களைக் குழந்தைங்கதானே ரொம்ப விரும்பிப் பார்க்குறாங்க!''
''மத்த ஹீரோக்களோட டச்ல இருக்கீங்களா?''
''ஆர்யா, 'ஜெயம்’ ரவி, ஜீவா எல்லாரும் அடிக்கடி பேசிப்போம். மாத்தி மாத்திப் படங்களைப் பத்தி கமென்ட் அடிச்சுக் கலாய்ச்சுப்போம். எங்க செட்ல அத்தனை பேரும் ஈஸியாப் பழகுறோம். சிம்பு எங்கே பார்த்தாலும் 'நல்லாப் பண்றீங்க’னு சொல் லிப் பேசிட்டு இருப்பார். லயோலா காலேஜ்ல அண்ணனைப் பார்க்கப் போகும்போதே, விஜய் சாரைப் பார்ப்பேன். நிறையப் பேசுவார். அஜீத்தை ஏர்போர்ட்ல பார்த்தா, அப்பாவில் ஆரம்பிச்சு ஒருத்தர் விடாமல் விசாரிப்பார். என் படங்களைப் பத்தி உண்மையான கருத்துகளைச் சொல் வார். அவரோட இருக்கிற, பேசுற நேரம் ரொம்ப உண்மையா இருக்கும். இப்ப இருக்கிற யாரையும் நம்ப முடியாது. சான்ஸ் கிடைச்சா சட்டுனு பின்னியெடுத்து எங்கேயோ உயரமா முத்திரை பதிச்சிட்டுப் போயிடுறாங்க!''
''அப்படிப் பொதுவா சொன்னா எப்படி... உங்களுக்குத் தமிழ் சினிமாவில் பிடிச்ச நடிகர் யார்?''
''சந்தானம்தான்!
அவர் உழைப்பை நினைச்சா, ஆச்சர்யமா இருக்கு. நாமெல்லாம் ஒரு படத்தில் கவனம் செலுத்தி நடிச்சுட்டு ஏதோ பெரிசா வொர்க் பண்ணிட்டு இருக்கிறதா நினைக்கிறோம். ஆனா, சந்தானத்துக்கு எப்பப் பார்த்தாலும் ஆறேழு டைரக்டர்கள் கதை சொல்லக் காத்துட்டு இருக்காங்க. எல்லாத்தையும் எல்லாரையும் சமாளிக்கிறார். ஸ்பாட்ல நடிக்கும்போதே ஹ்யூமர் சரியா ஸ்பார்க் ஆகலைன்னா, 'ஒரு நிமிஷம்’னு உட்கார்ந்து யோசிக்கிறார். ஷூட் முடிஞ்சதும் ஆபீஸுக்குப் போய் உக்காந்து அடுத்த நாள் காமெடிக்கு விஷயம் தேடுறார். இத்தனைக் கும் ஃபேமிலி ஆள் வேற. அவர் அளவுக்கு கிரியேட்டிவா, எனி டைம் எனர்ஜியோட ஒருத்தரை நான் பார்க்கலை!''
''மிசஸ் கார்த்தி எப்படி இருக்காங்க?''
''குடும்பம் நடத்த இன்னொரு 24 மணி நேரம் இருந்தா டபுள் மடங்கு சந்தோஷமா இருக்கும். வீட்ல அவங்ககூட இருக்கிற நேரம் ரொம்ப குறைச்சல். அவுட்டோர் ஷூட்டிங்னா அழைச்சுட்டுப் போவேன். அங்கே வந்தும் ரூம்ல அடைஞ்சே இருக்கப் பிடிக்காது அவங்களுக்கு. ஷூட்டிங் பார்க்க வந்துட்டு 'இவ்வளவு கஷ்டமா?’னு வெறுத்துட்டாங்க. மூணு நிமிஷம் வர்ற சீனுக்கு மூணு நாள் ஷூட்டிங் நடத்துற கஷ்டத்தை எல்லாம் புரிஞ்சுக்கிட்டாங்க. வீட்டுக்கு ரொம்ப சோர்வா வந்தா, 'இன்னிக்கு ஃபைட் டா?’னு கேட்கிறாங்க. அவங்களுக்கு இந்த செல்போன்தான் பெரிய எதிரி. 'என்கூட இருக்கிற கொஞ்ச நேரத்துலயும் அதுல என்ன பேச்சு?’னு சண்டை போடுவாங்க. ஆனா, கிடைக்கிற எல்லா நேரத்திலும் அவங்ககூடதான் நான் இருக்கேன்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும்.''
''ஆரம்பத்துல கொஞ்சம் தமன்னாபத்தி வந்தது. அப்புறம் பெருசா கிசுகிசு இல்லை. என்ன விஷயம்?''
''வளர்ந்த விதம் அப்படி. 'சினிமாவில் எல்லாமே கேட்காமலேயே கிடைக்கும். நீதான் கவனமா இருந்துக்கணும்’னு அப்பா சொல்வார். நான் ரொம்ப லேட்டா 26 வயசில்தான் சினிமாவுக்கு வந்தேன். விலகிப் போயிட்டு விரும்பி வந்தேன். அமிதாப் பச்சனே சொல்லியிருக்கார்... 'உன் கடைசிப் படம்தான் உனக்கு விசிட்டிங் கார்டு’னு! அப்படி இருக்கும்போது மத்த விஷயங்களுக்கு இடம் இல்லை. 'சினிமாவில் இருக்கிறது புண்ணியம்டா. பொறுப்பா இருங்கடா’னு அப்பா சொல்வார். நான் பொறுப்பா இருக்கேன்!''