Thursday 10 January 2013

கொந்தளிக்கும் தேசம்! திரைப்படமாகும் டெல்லி பாலியல் பலாத்கார உண்மைகள்!


    சமீபத்தில் நடந்த டெலி பாலியல் பலாத்கார சம்பவம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. இந்திய நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து எவ்வித வேறுபாடும் பாராமல் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று குரல் கொடுத்து தலைநகரையே குலுங்கச் செய்தனர். குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளி மீது விசாரனையும், வழக்கும் நடந்துகொண்டிருக்கும் நிலையில், இந்த பாலியல் பலாத்கார சம்பவம் இந்தியில் திரைப்படமாகிறது. டெல்லி பாலியல் பலாத்கார சம்பவம் நடந்து பெரிய பாதிப்பை ஏற்படுத்திய உடனேயே ’டெல்லி மாஃபியா’ , ‘நிஷா’ என இரு படங்கள் டெல்லி சம்பவத்தை கருவாகக் கொண்டு துவங்கப்பட்டுவிட்டன. மூன்றாவதாக உருவாகவிருக்கும் இந்த படத்திற்கு ‘ஃப்ரீடம்(FREEDOM)' என பெயரிட்டுளனர். மற்ற இரண்டு படங்களைக் காட்டிலும் இந்த படத்தில் டெல்லி சம்பவத்துடன், பெண் உரிமை, பெண் சுதந்திரம் ஆகிய பல முக்கிய விஷயங்களை அலசுகிறார்களாம்.

மும்பையில் நடந்த மிகப்பெரிய குண்டுவெடிப்பை 'RDX’ என்ற படமாக எடுத்த டான் கௌதம் இந்த படத்தை இயக்குகிறார். டெல்லியைச் சேர்ந்த மாணவி பாதிக்கப்பட்ட பெண்ணாக நடிப்பதுடன், பாகிஸ்தானைச் சேர்ந்த குலாம் நபி என்ற இசையமைப்பாளர் படத்திற்கு இசையமைக்கிறாராம். இந்தப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்டதால், ஜனவரி 26-ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று பாலிவுட்டில் பேசப்படுகிறது. டெல்லி பாலியல் பலாத்கார கொடூர சம்பவம் பற்றி அமிதாப் பச்சன் ஒரு பாடல் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் இப்படம் தயாராகிறது.

No comments:

Post a Comment