Saturday 9 June 2012

ரஜினியின் சிறந்த பண்புக்கு இன்னொரு உதாரணம் .. அண்மையில் நடைபெற்ற உண்மைச்சம்பவம் !


    கார்த்திக் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகன். சிறு வயது முதலே ரஜினி மீது தீவிர ஈடுபாடுள்ள கார்த்திக் தனது வாழ்கையில் எதிர்பாராத விதமாக புற்றுநோய் தாக்கத்திற்கு உள்ளானார். இந்த விஷயம் ரஜினியிடம் அறிவிக்கப்பட்டது. மேலும் கார்த்திக் சூப்பர் ஸ்டாரை பார்க்க விரும்புவதாகவும் கார்த்திக்கின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்து இருக்கிறார்கள். அப்போது கார்த்திக் ஹாஸ்பிட்டலில் இருந்ததால் தான் அங்கு வந்து பார்ப்பதாக ரஜினி தெரிவித்தார்.

ஆனால் கார்த்திக்கின் அங்கிளும், அவரது பெற்றோர்களும் ரஜினிக்கு அறிவித்து விட்டு ரஜினியின் ஆபீஸிற்கே சென்று அவரை காண தீர்மானித்தார்கள்.

அவர்களுக்காக காத்திருந்த ரஜினி அவர்கள் வந்த காருக்கு அருகே சென்று அவர்களை வரவேற்றார். மகிழ்ந்து போனார் கார்த்திக். கார்த்திக்கை கட்டி அணைத்து கொண்டு ஆபிஸிற்குள் சென்ற ரஜினி கார்த்திக்கை கட்டி அணைத்தும், கார்திக்கோடு அன்பாக பேசியும், கையெழுத்து போட்டு கொடுத்தும், ரஜினியின் ஞாபகார்த்தமாக ஒரு மொமெண்டோ வழங்கியும் (சிவாஜி த பாஸ் மொமெண்டோ) கார்த்திக்கை மகிழ்வித்தார். தங்களுடைய மகன் தன்னுடைய இறுதி நாட்களில் அடைந்த மகிழ்ச்சியை கண்டு கண் கலங்கி போயினர் பெற்றோர்..

ரஜினிக்கு நன்றி செலுத்தி விட்டு மறுபடியும் காருக்குள் ஏறும் போது தான் நேசித்த ஒருவரை கடைசியாக கண்டு விட்டோம் என்ற பார்வையோடு கார்த்திக்கும், உயிருக்கு உயிராக அன்பு வாய்த்த ரசிகனை இழக்க போகுறோம் என்ற பார்வையோடு ரஜினியும் சந்திப்பை முடித்து கொண்டனர்.

கடந்த பத்து நாட்களுக்கு முன் அந்த கார்த்திக் இவ்வுலகை விட்டு பிரிந்து விட்டார்..

அந்த சந்திப்பில் எடுக்கப்பட்ட போட்டோஸ்..

No comments:

Post a Comment