Friday 8 June 2012

வழக்கு வெற்றியா? அலசிய டைரக்டர்கள்


கிழக்கும் மேற்கும் வடக்கும் தெற்கும் கொண்டாட வேண்டிய வழக்கு எண் படத்திற்கு எட்டு திசைகளில் இருந்தும் சுமாரான கலெக்ஷன்தானாம். ஹிட்டா, ஓக்கேவா? Lingusamyஎன்றால் ரெண்டாவது பதிலைதான் கமுக்கமாக சொல்கிறது பட வட்டாரம். இதில் கொந்தளித்துப் போனது அப்படத்தை இயக்கிய பாலாஜி சக்திவேல் இல்லை. அவரது சக தோழர் மிஷ்கின்தான். இந்த மாதிரி படத்தை மக்கள் பெரிய ஹிட்டாக்கியிருக்கணும். தமிழ்சினிமாவுல ஒண்ணு ரெண்டு காந்திங்கதான் இருக்காங்க. அவங்களையும் சுட்டுராதீங்க என்று உருக்கமாக வேண்டுகோள் வைத்தார். குத்துப்பாட்டு இல்லாத படங்களை வெத்துவேட்டுன்னு நினைக்கிற மனோ பாவம் மக்களுக்கு மாறவே இல்லையே, என்ன செய்ய என்று யாரும் கவலைப்பட வேண்டாம்.
இந்த படத்தின் முதல் வார சென்னை வசூலே போட்ட பணத்தை எடுத்து கொடுத்துவிட்டது. அப்புறம் வந்ததெல்லாம் லாபம் என்று கூறியிருக்கிறார் தயாரிப்பாளர் லிங்குசாமி.
அடுத்த கதைக்கு ஆலாய் பறக்காமல், வழக்கம்போல நிதானமாக யோசிக்க ஆரம்பித்திருக்கிறார் பாலாஜி சக்திவேல்.

No comments:

Post a Comment