Friday 8 June 2012

மீண்டும் சீண்டும் சிம்பு !

    சிம்பு நடிப்பில் நேற்று முதல் வாலு படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. ஹன்சிகா, சந்தானம், கணேஷ் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள்.
இப்படத்திற்கு TEASER ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் முழுக்க முழுக்க மீண்டும் தனுஷை சீண்டி இருக்கிறார் சிம்பு.

ஹன்சிகா சிம்புவைப் பார்த்து பேசும் வசனம் ஒன்று இந்த டீசரில் வருகிறது. அதில் " ஒருசில பசங்களை பார்க்கப் பார்க்கதான் பிடிக்கும், உன்னை மாதிரி பசங்களை பார்த்த உடனே பிடிக்கும் " என்பார் ஹன்சிகா. 

'படிக்காதவன்' படத்தில் தமன்னாவிடம் தனுஷ் " என்னை மாதிரி பசங்களை பார்த்த உடனே பிடிக்காது, பார்க்கப் பார்க்கதான் பிடிக்கும் " என்பார்.

அதை அப்படியே மாற்றி உன்னையெல்லாம் பார்க்க பார்க்கதான் பிடிக்கும், என்னை பெண்ணுங்களுக்கு பார்த்த உடனே பிடிக்கும் என சீண்டியிருக்கிறார் சிம்பு என்கிறது கோலிவுட்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சென்னையில் தான் நடைபெற இருக்கிறது. அதுமட்டுமல்லாது, சிம்பு நடிப்பில் உருவாகும் குறுகிய கால தயாரிப்பு படம் 'வாலு' தான். தீபாவளி தினத்தன்று 'வாலு' வெளிவரும் என்று தெரிவித்து இருக்கிறது படக்குழு.

TEASERல் லேசாக தனுஷ் சீண்டிருக்கும் சிம்பு, படத்தில் என்ன பண்ண போகிறாரோ... அவர் என்ன வாலுத்தனம் செய்தாலும் அது 'வாலு' படத்திற்கு விளம்பரம் தான்
!

No comments:

Post a Comment