Friday 3 August 2012

எனக்கு எந்த விருதும் வேண்டாம். ரஜினியின் பாராட்டு ஒன்றே போதும். நான் ஈ சுதிர்.




       திடீரென ரஜினி போனில் அழைத்து பாராட்டியபோது இன்ப அதிர்ச்சியாக இருந்தது என்றார் வில்லன் நடிகர் சுதீப். ‘நான் ஈ’ படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் சுதீப். அவர் கூறியதாவது:

நான் எப்போதுமே ஸ்கிரிப்ட்டைவிட அதை யார் இயக்குகிறார்கள் என்று பார்த்துத்தான் நடிக்க ஒப்புக்கொள்கிறேன். இயக்குனர்கள் ராஜ்மவுலி, ராம் கோபால் வர்மா படங்களில் அப்படித்தான் நடித்தேன். பெங்களூரில் எனது தயாரிப்பாளர் நண்பர் ஒருவருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். அப்போது தொலைபேசியில் முக்கிய நபர் ஒருவர் என்னை அழைப்பதாக கூறி என்னிடம் போனை தந்தார்கள்.

மறுமுனையில் பேசுவது யார் என்று தெரியாத நிலையில் போனை வாங்கி பேசினேன். அது ரஜினிசார் குரல். ஒரு நிமிடம் என்னால் நம்ப முடியவில்லை. இன்ப அதிர்ச்சியாக இருந்தது. யாரோ குரல் மாற்றிப்பேசி ஏமாற்றுகிறார்கள் என்று நினைத்தேன். அது யார் என்று கேட்க கூட முடியாமல் தயங்கினேன். ‘நான் ஈ’ படத்தில் எனது நடிப்பை பாராட்டினார்.

பெரிய நடிகர்கள் போன் பட்டியலில் என் பெயர் இடம் பெற்றிருப்பது எண்ணி மகிழ்ந்தேன். எனக்கு இனிமேல் எந்த விருதும் வேண்டாம். எனக்கு கிடைத்த பாராட்டுகளே போதும். இப்போதைக்கு மற்றவர்களின் விமர்சனம்தான் அவசியம்.

No comments:

Post a Comment