Wednesday 1 August 2012

கம்ப்யூட்டரில் இருந்து திருடி கோச்சடையானை விற்க சதியா?


ரஜினி, தீபிகா படுகோனே ஜோடியாக நடித்துள்ள ‘கோச்சடையான்’ அனிஷேன் படம் டிசம்பரில் ரிலீசாகிறது. ஸ்டூடியோக்களில் இறுதிக் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.

யாரேனும் இப்படத்தை கம்ப்யூட்டரில் இருந்து திருடி திருட்டு வி.சி.டி.யாக வெளியிடப்பட்டு விடலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இதையடுத்து ‘கோச்சடையான்’ படத்தக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து ‘கோச்சடையான்’ படத்தின் தயாரிப்பாளர் முரளிமனோகர் கூறியதாவது:-

திரைப்படத்துறையில் திருட்டு வி.சி.டி. மிகப்பெரிய சவாலாக உள்ளது. ‘கோச்சடையான்’ படம் ‘3டி’ என்பதால் இந்த திருட்டு வி.சி.டி.யாக எடுப்பது கடினமாக இருக்கும்.

திருட்டு வி.சி.டி. பிரச்சினை நாடு முழுவதும் இருக்கிறது. ‘கோச்சடையான்’ படத்தை பாதுகாக்கும் பொறுப்பை படத்தின் இயக்குனர் சவுந்தர்யா கவனிக்கிறார். படத்துக்கான பணிகள் அனைத்தையும் அவர் தனது கண்காணிப்பிலும், கட்டுப்பாட்டிலும் வைத்துள்ளார். ஸ்டுடியோவுக்குள் யார் வருகிறார்கள், வெளியே யார் போகிறார்கள் என்பதெல்லாம் அவருக்கு தெரியும். அனைத்து விவரங்களும் ஒரு சர்வரில் பதிவு செய்யப்படுகிறது. சாதாரணமாக யாரும் ஸ்டூடியோவுக்குள் வரமுடியாது.

‘கோச்சடையன்’ படத்தில் பணிபுரிபவர்களுக்கு விசேஷ அடையாள அட்டை தரப்பட்டு உள்ளது. இந்த படத்துக்கான பணிகள் நடைபெறும் கம்ப்யூட்டர்களில் தகவல்களை பெறலாம். ஆனால் எதையும் டவுன்லோட் செய்ய முடியாது. ஏதேனும் டவுன்லோட் செய்ய வேண்டும் என்றால் சவுந்தர்யா அதற்கு ஒரு கோட் நம்பரை தரவேண்டும். அப்போதுதான் டவுன்லோட் செய்ய முடியும்.

அதுபோல் சி.டி.க்களிலோ பென் டிரைவ்களிலோ கூட விவரங்களை எதையும் காப்பி செய்யமுடியாது. ‘கோச்சடையான்’ படத்தை காமிக்ஸ் புத்தகமாக வெளியிட பலர் அணுகி உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment