Monday 3 September 2012

ஆர்மோனிய பெட்டி என் கள்ள காதலி மாதிரி...! இளையராஜா!!


Ilayaraja speech at neethane en pon vasantham audio launchகவுதம் மேனன் இயக்கும் நீ தானே என் பொன்வசந்தம் பாடல் வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடந்தது. அந்த நிகழ்ச்சியில் கவுதம் மேனன் இளையராஜாவை பேட்டி கண்டார். அதன் துளிகள் இவை

கவுதம் மேனன்: உங்கள் கையில் இருக்கும் ஆர்மோனிய பெட்டி பற்றிய உணர்வுகளை பகிர்ந்து கொள்ள முடியுமா?

இளையராஜா: இதை பெட்டின்னு சொல்லக்கூடாது. அதுக்கு உயிர் இருக்கு. என்னோட அது பேசும். நீங்க கேட்ட ஆயிரக்கணக்கான பாடல்களை எனக்கு கொடுத்ததது அதுதான். இதை எங்க அண்ணன் பாவலர் வரதராசன் 85 ரூபாய்க்கு கோயம்புத்தூர்ல ஒரு ஆசாரிகிட்ட செஞ்சு வாங்கிட்டு வந்தார். அதுலேருந்து இது எங்க குடும்ப உறுப்பினராயிடுச்சு. இதை தொட்டா எங்கண்ணன் என் புறங்கையில பிரம்பால அடிப்பாரு. ராத்திரி எல்லோரும் தூங்கின பிறகு கள்ளக் காதலன் காதலிய சந்திக்கற மாதிரி இந்த பெட்டிய வச்சுக்கிட்டு பாடுவேன். அப்புறம் அண்ணன் எங்க போனாலும் நான்தான் இதை தூக்கிட்டு போவேன். கச்சேரி முடிந்து பஸ்சில வந்தா இதுமேல படத்து தூங்குவேன். பாரதிராஜாகூட இதுமேல படுத்து தூங்கியிருக்கான். என்னை முழுசா தெரிஞ்சது அதுதான்.

கவுதம் மேனன்: உங்க வெற்றிக்கு எதை காரணமா சொல்வீங்க?

இளையராஜா: ஒரு பாட்டு மாதிரி இன்னொரு பாட்டு இருக்க கூடாதுங்றதுல தெளிவா இருப்பேன். அதனாலேயே என் பாட்டை நான் திரும்ப கேட்குறதில்ல. சில இயக்குனர்கள் வந்து அந்த பாட்டு மாதிரியே போட்டு கொடுங்கன்னு கேப்பாங்க. அந்த பாட்டு அந்த பாட்டுதான் அது மாதிரியெல்லாம் போட முடியாதுன்னு சொல்லிடுவேன். எப்பவுமே நான் இயக்குனர்கள் பேச்சை கேட்க மாட்டேன். கதையையும், சூழ்நிலையையும் சொல்லிட்டா பாட்டை கொடுத்துருவேன் அவ்வளவுதான்.

கவுதம் மேனன்: உங்களுக்கு பிடிச்ச இசை அமைப்பாளர் யார்?

இளையராஜா: நிறைய பேர் இருக்காங்க. யாரைன்னு குறிப்பிட்டு சொல்றது. ஒரே இசைய ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமா கையாழுவாங்க. அந்த வகையில எம்.எஸ்.விசுநாதனை பிடிக்கும்.

கவுதம் மேனன்: உங்கள் பாட்டை எல்லோருக்கும் பிடிப்பது எதனால்?

இளையராஜா: ஒரு பாட்டு எனக்கு பிடிச்சப்புறம்தான் மக்களுக்கு தர்றேன். எனக்கு பிடிச்சது அவுங்களுக்கு எப்படி பிடிக்குதுங்றது எனக்கே இன்னிக்கு வரைக்கும் தெரியாது. நல்லா சமைக்றது எல்லோரும் நல்லா சாப்பிடணுங்றதுக்குத்தான். நான் சமைச்சு தர்றேன், நீங்க சாப்பிடுறீங்க. மக்களிடம் சென்று சேராத கலை கலையே அல்ல.

கவுதம் மேனன்: நீங்க பாடினதிலேயே உங்களுக்கு பிடிச்ச பாட்டை பாடுங்களேன்?

இளையராஜா: (பாடுகிறார்) ஜெனனி... ஜெனனி.. ஜெகம் நீ... அகம் நீ... ஜெக காரணி நீ... பரி பூரணி நீ..

No comments:

Post a Comment