Monday 3 September 2012

கோச்சடையான்.. அப்டேட்ஸ் !

      'கோச்சடையான் ' படம் எப்போதும் வரும், இசை வெளியீடு எப்போது நடைபெற இருக்கிறது, பணிகள் எங்கு நடைபெற்று வருகிறது என்பது குறித்து நாம் விசாரித்த போது நமக்கு கிடைத்த தகவல்களின் சில அப்டேட்ஸ் இதோ :

சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து 'டைட்டானிக்' படத்துக்கு பணியாற்றிய 3டி தொழில்நுட்ப கலைஞர்கள் மூன்றுபேர் சென்னை வந்துள்ளனர். இப்போது ' கோச்சடையான் ' படத்துக்கான கிராஃபிக்ஸ் வேலையில் இரவு, பகலாக பணியாற்றி வருகின்றனர்.



' கோச்சடையான் ' படப்பிடிப்பு நடந்த லண்டன் டெஸ்ட்ராய்டு ஸ்டுடியோவின் ஒருநாள் வாடகை 20 லட்சம். 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டம். ஏனோ திடீரென்று நான்கே நாளில் சென்னைக்கு பேக்கப்!

கேரளா திருவனந்தபுரத்தில் இருக்கும் அக்ஸல் ஸ்டுடியோவில் ரஜினி, தீபிகா படுகோன் தொடர்பான காட்சிகளை படம் பிடித்தனர். பட்டுப்புடவை கட்டிய பரதநாட்டிய தாரகை ஷோபனாவுக்கு நீல கலர் பேன்ட், ஷ்ர்ட், ஃப்ளோரோசென்ட் பச்சை காஸ்ட்யூம் மாட்டி நடிக்க வைத்தனர்!

பழைய ரஜினியின் பாடி லாங்வேஜ் காட்ட 'லொள்ளு சபா' ஜீவாவை முதலில் ஒப்பந்தம் செய்தனர். நண்பர்களிடம் எல்லாம் 'ரஜினியே என்னை செலக்ட் செய்தார்..' என்று பெருமைகொண்டார் ஜீவா. இருப்பினும், ஜீவா கடுமையாக முயற்சி செய்தும் லண்டனுக்கு விசா கிடைக்காததால் ஜீவா பயங்கர அப்செட்!

நான்கு நாள் ஷூட்டிங் என்று சொல்லி சரத்குமாரை அழைத்து சென்றனர்.. இரண்டே நாளில் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி முடித்தனர். ராதிகாவின் அம்மா லண்டன்வாசி என்பதால் அவரிடம் லண்டனில் வீடு வாங்குவது குறித்து விவாதித்து விட்டு வந்தாராம், ரஜினி!

‘ கோச்சடையான் ' படத்தில் நாசருக்கு முக்கியமான ரோல். அதனால் லண்டனில் காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை தொடர்ந்து இடைவேளையே இல்லாமல் டப்பிங் பேசினார். ஒருகட்டத்தில் தொண்டை வழியே ரத்தமே வந்து விட்டதாம்.

தீபிகா படுகோன், ஆதி வருகைக்காக லண்டனில் ' கோச்சடையான் ' மொத்த யூனிட்டும் காத்துக் கிடந்தது. கடைசிவரை ஏனோ இருவரும் வரவில்லை. இத்தனைக்கும் முன்கூட்டியே இருவருக்கும் லண்டனுக்கு விசா எடுத்து ரெடியாக வைத்து இருந்தார்களாம். அதன்பின் கேரளாவில் நடந்த ஷூட்டிங்கில் இருவரும் கலந்து கொண்டு யூனிட்டின் கோபத்தீயை பிஸ்லெரி வாட்டரால் அணைத்தனர்!

' கோச்சடையான் ' வெற்றிபெற வேண்டும் என்று ரஜினியைவிட அதிகமாக பிரார்த்தனை செய்து கொண்டு இருப்பது 'விருமாண்டி' சண்முகராஜன்! " கனமான காரெக்டர்.. பெரிசா பேசப்படும்.." என்று நம்பிக்கையோடு சொல்லிக் கொண்டு இருக்கிறார்!

' எந்திரன் ' ஆடியோ விழாவை சிங்கப்பூரில் நடத்தியது போல ' கோச்சடையான் ' ஆடியோ ஃபங்ஷனை அக்டோபரில் ஜப்பானில் நடத்துகிறார்கள். தனது சொந்தப்பட ஆடியோ விழாவிலேயே கலந்து கொள்ளாத அஜித், ரஜினிபட விழாவில் ஆஜராகப் போகிறாராம்!

No comments:

Post a Comment