Wednesday 29 August 2012

ஒரே கதையில் இரண்டு படங்கள்


Same Story in two filmsதமிழ் சினிமாவில் தலைப்புகளுக்கு பஞ்சம் ஏற்பட்டிருப்பதைப்போலவே கதைக்கும் பஞ்சம் ஏற்பட்டு விட்டதோ என்று தோன்றுகிறது. ஒருவார இடைவெளியில் வெளிவந்த நான் படத்தின் கதையும், 18 வயது படத்தின் கதையும் ஒன்றுதான். அம்மா, காம இச்சை அதிகமாகி கணவனை விட்டு இன்னொரு ஆணைத் தேடுகிறவர். இதை கண்டுபிடித்துவிடும் கணவன் தூக்கு மாட்டிக் கொண்டு சாகிறான். அப்பா மீது மிகுந்த பாசம் கொண்ட மகன் மனநோயாளியாகி, சைக்கோவாகி திரிகிறான். இதுதான் இரண்டு படத்தின் கதையும். நான் படத்தில் விஜய் ஆண்டனி அம்மாவையும், அவளது காதலனையும் கொல்கிறார். அதேபோல 18 வயது படத்தில் ஜான் அம்மாவையும், அவளது காதலனையும் கொல்கிறார். கொல்லும் விதம்தான் வெவ்வேறு. இரு படத்திலுமே ஹீரோக்கள் மனநோயாளியாக இருந்தாலும் நல்லவர்கள். என்னதான் கொலை செய்தாலும் நான் படத்தில் விஜய் ஆண்டனி எல்லா பிரச்னையிலிருந்தும் தப்பி தான் விரும்பியபடி டாக்டராகிவிடுகிறார். 18 வயது படத்தில் ஜானி தன் காதலியை கைபிடித்து விடுகிறார்.
இந்த கதை பஞ்சம் தொடருமா? நிற்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment