Wednesday 29 August 2012

'ஏ' என்னப்பா இது!

அடல்ஸ் ஒன்லி படங்களை இனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பக்கூடாது என Central Board for Film Certification (CBFC) முடிவு செய்துள்ளது.

சென்சாரால் 'A' வாங்கிய படங்களை தொலைக்காட்சியில் ஒளிப்பதிவு செய்ய வேண்டுமானால், ஆட்சேபிக்கத்தக்க காட்சிகள் நீக்கப்பட்டு 'தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தகுதியானது' என மீண்டும் சர்டிஃபிகேட் அளிக்கப்பட வேண்டும். அப்படித்தான் 'A' சர்டிஃபிகேட் படங்களை டிவியில் ஒளிபரப்பி வருகிறார்கள்.

சமீபமாக, பல படங்கள் 'A' முத்திரையுடன் வெளியாகின. அவற்றின் தொலைக்காட்சி உரிமையை விற்பதன் மூலம் தயாரிப்பாளர்கள் ஓரளவுக்கு தங்கள் பண வரவைக் கூட்டினார்கள். இப்போது CBFC எடுத்துள்ள முடிவால், பல தயாரிப்பாளர்கள் பதட்டத்தில் உள்ளனர். அது மட்டுமன்றி, படத்தை வாங்கிய தொலைக்காட்சி நிறுவனத்தினரும் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார்களாம்.

அஜீத் நடித்த 'பில்லா 2 ' படத்தின் டிவி உரிமை சுமார் 6.5 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. இப்போது, CBFC-யின் அறிப்பால், இப்படத்தை எப்படி ஒளிபரப்புவார்கள் என்பது தெரியவில்லை.

CBFC இந்த கட்டுப்பாட்டை நீக்கும் நாளை இந்திய திரைப்படத் தயாரிப்பாளர்களும், தொலைக்காட்சி நிறுவனங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.

No comments:

Post a Comment