Thursday 30 August 2012

எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு "திரை இசை சக்கரவர்த்தி எனும் பட்டம் வழங்கிய முதல்வர் ஜெயலலிதா


CM jayalalitha honoured M.S.Vishwanathanஜெயா "டிவியின், 14ம் ஆண்டு விழாவும், இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்திக்கு பாராட்டு விழாவும், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் பங்கேற்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு "திரை இசை சக்கரவர்த்தி எனும் பட்டத்தை வழங்கினார். ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல்வர் பங்கேற்ற முதல் சினிமா விழா இதுவாகும்.

தமிழத் திரையுலகில் மெல்லிசை மன்னர்களாகத் திகழ்ந்தவர்கள் எம்.எஸ்.விஸ்வநாதனும், டி.கே.ராமமூர்த்தியும். இருவரும் இணைந்தும், தனித் தனியாக பிரிந்தும் பல சாகாவரம் படைத்த பாடல்களைப் படைத்தனர். சென்னையில் நடந்த விழா ஒன்றில்தான் முதல் முறையாக மெல்லிசை மன்னர்கள் என்ற பட்டம் இந்த இசை மன்னர்களுக்கு வழங்கப்பட்டது. அதை வழங்கியவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆவார். அன்று முதல் இவர்கள் இருவரும் மெல்லிசை மன்னர் என்றும் மெல்லிசை மன்னர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.

இந்நிலையில் மெல்லிசை மன்னருக்கு இதுவரை பத்ம விருதுகள் எதுவும் வழங்கப்படவில்லை. அந்த குறையை போக்கும்பொருட்டு ஜெயா டி.வி. சார்பில் ஒரு பட்டம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஜெயா டி.வி. நேரடியாக மக்களிடம் போய் ஓட்டெடுப்பு நடத்தியது. அதில் "திரை இசை சக்கரவர்த்தி என்ற பெயரைத்தான் அதிகளவிலான மக்கள் ஓட்டளித்தனர். இதனையடுத்து அந்தபட்டத்தை அவருக்கு முதல்வர் வழங்கினார். மேலும் விஸ்வநாதன், ராமமூர்த்திக்கு, 60 பொற்காசுகள் கொண்ட, பொற்கிழியையும் ஜெயலலிதா வழங்கினார். பின்னர் மெல்லிசை மன்னர்கள் இருவரையும் வாழ்த்து பேசினார். இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் உள்ளிட்ட திரைபிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment