Tuesday 14 August 2012

3டியில் வெளியாகும் ரஜினியின் முதல்படம் சிவாஜி...!


Rajinis first 3d movie is Sivaji  சில ஆண்டுகளுக்கு முன்னர் ரஜினி நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றிபெற்ற சிவாஜி படம் இப்போது 3டியில் உருவாகி ரஜினியின் முதல் 3டி படமாக வெளியாக இருக்கிறது. ஏ.வி.எம். தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ரஜினி, ஸ்ரேயா நடிப்பில் கடந்த 2007ம் ஆண்டு வெளிவந்த படம் சிவாஜி. ஷங்கர்-ரஜினி கூட்டணியில் அமைந்த முதல்படம் இது. கறுப்புபணத்தை மையப்படுத்தி வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. அத்துடன் இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் இடம்பெற்ற சஹானா, ஆம்பல் ஆம்பல், அதிரடிக்காரன் மச்சான்... போன்ற பாடல்கள் பிரபலமும் அடைந்தன.

இந்நிலையில் இப்படத்தை இப்போது 3டி தொழில்நுட்பத்தில் வெளியிட ஏ.வி.எம். நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி கடந்த ஒருவருடமாக சுமார் 400 தொழில்நுட்ப கலைஞர்களுடன் சிவாஜியின் 3டி தொழில்நுட்ப பணியை பிரசாத் லேப்பில் தொடங்கியது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் மிக பிரம்மாண்டமாக சிவாஜி 3டி படத்தை உருவாக்கி உள்ளனர். ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து தரப்பட்ட ரசிகர்களுக்கும் இப்படம் ஒரு புதுவித அனுபவமாக இருக்கும்.

படம் உருவான விதம் குறித்து நாம் கேட்டறிந்த செய்திகள் இதோ, பிரசாத் குரூப் நிறுவனம் திரு.சாய் பிரசாத் ஏ.வி.ஏம்.குகனை சந்தித்து 3டியில் படம் பண்ணலாமே என்று கேட்டபோது, ரஜினியின் சிவாஜி படத்தை எடுக்க முடிவு செய்தனர். அதன்படி இப்படத்தில் உள்ள காட்சிகள், பாடல்கள், சண்டைக்காட்சிகள் என்று ஒவ்வொரு காட்சியையும் பிரித்து எடுத்து, மிட் வைடு, க்ளோஸ் என்று ஒவ்‌வொரு பகுதியும் பிரிக்கப்பட்டு, ரோட்டோ ஸ்கோபி முறையில் தொடங்கி, அதற்கென உரிய சாப்ட்வேர் கொண்டு பிரேம் பை பிரேம் அவுட்புட் எடுத்து இறுதியாக படத்தின் தரம், கலர், சவுண்ட் உள்ளிட்டவைகள் 2டியில் எடுக்கப்பட்டு பின்னர் 3டியில் இப்படத்தை கொண்டு வந்துள்ளனர். மேலும் 3டியில் படத்தின் நீளமும் 2.17 மணி நேரமாக குறைக்கப்பட்டு உள்ளது.

`சிவாஜி 3டி படத்தின் ஒரு பாடல் மற்றும் டிரைலர் பத்திரிகையாளர்களுக்கு நேற்று மாலை திரையிட்டு காண்பிக்கப்பட்டது. சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்த இந்த நிகழ்ச்சியில், ரஜினிகாந்த் கலந்து கொண்டார். நிருபர்களுடன் அமர்ந்து கறுப்பு கண்ணாடி அணிந்தபடி, `சிவாஜி 3டி படத்தின் பாடல் மற்றும் டிரைலரை பார்த்து ரசித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ஏவி.எம். நிறுவனம் `சிவாஜி படத்தை 3டி படமாக உருவாக்கியிருக்கிறது. இந்த படத்தை சில நாட்களுக்கு முன்புதான் எனக்கு திரையிட்டு காண்பித்தார்கள். என் படம் என்று தெரியாமல், நானே கைதட்டி ரசித்தேன். குறிப்பாக, பாடல் காட்சிகளை மூன்று முறை பார்த்து பிரமித்துப் போய்விட்டேன். `கோச்சடையான் படம்தான் முதலில் 3டியில் வருவதாக இருந்தது. ஏவி.எம். நிறுவனம் முந்திக்கொண்டார்கள். பத்திரிக்கையாளர்களாகிய உங்களுக்கே இந்த படம் பிடித்து இருக்கிறது. ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். சிவாஜியை தொடர்ந்து எந்திரன் படத்தை 3டியில் கொண்டு வரலாம். தமிழ் படங்கள் தொழில்நுட்பத்தில் ஹாலிவுட்டை நெருங்கிவிட்டது. அதை எண்ணும்போது பெருமையாக இருக்கிறது என்றார்.

அருணா குகன் : சிவாஜி 3டி படத்தின் தயாரிப்பாளரான அருணா குகன் கூறுகையில், சிவாஜி 3டி படத்தின் டிரைலர் பார்த்தேன். நன்றாக வந்திருக்கிறது. நிச்சயம் இந்தப்படம் ரஜினி ரசிகர்களை வெகுவாக கவரும், படம் முழுமையாக முடிய இன்னும் சில பணிகள் இருக்கிறது. அது முடிந்ததும் விரைவில் திரைக்கு வரும் என்றார்.

No comments:

Post a Comment