Friday 27 July 2012

துப்பாக்கிக்கு தொடர்கிறது கள்ளதுப்பாக்கி ஏழரை! தீர்வது எப்போ?


இளையதளபதியின் ‘துப்பாக்கி’ திரைப்படம் எமகண்டத்தில் சூட்டிங் தொடங்கியதோ என்னவோ தெரியவில்லை, தொடர்ச்சியாக பிரச்சினைதான்.

பட விளம்பர போஸ்டர்களில் சிகரெட் பாபனை தொடர்பில் தொடங்கிய தலையிடி, பட டைட்டில் வரை தொடர்கிறது.

கள்ளத்துப்பாக்கி என்று ஒருவர் பெயர் வைத்தால் துப்பாக்கி என்று பெயர் வைக்கக் கூடாதா. நான் ஈ மாதி‌ரி நெருப்பு ஈ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

சிங்கம்புலி என்று படம் வந்திருக்கிறது. சிங்கம் என்றும் படம் வந்திருக்கிறது. எனவே துப்பாக்கி மீதான தடையை நீக்க வேண்டும் என்று நேற்று லா‌ஜிக்காகதான் தாணு தரப்பு மனு செய்தது.

மனு விசாரனையில், துப்பாக்கி டைட்டிலுக்கான தடையை 25ஆம் தேதி (இன்று) வரை நீதிபதி நீட்டித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இதன்படி இன்று இவ் வழக்கு விசாரனைக்கு வந்தபோது…

படங்களின் தலைப்பை பதிவு செய்யும் ஃபிலிம் சேம்பர் தங்கள் தரப்பை விளக்க இன்னும் சற்று அவகாசம் கேட்டுள்ளது. அதனால் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை அவகாசம் அளித்து, அதுவரை துப்பாக்கி டைட்டிலை பயன்படுத்துவதற்கான தடையை நீட்டித்துள்ளது.

No comments:

Post a Comment