Thursday 14 June 2012

கனவிலும் வடிவேலு வேண்டாம்!


   மைனா தந்த வாழ்க்கையும், தேசிய விருதும் தம்பி ராமையாவை முழுநேர நடிகர் ஆக்கி விட்டது! அடிப்படையில் திரைக்கதை எழுத்தாளர் ஆன ராமையா தற்போது மீண்டும் படம் இயக்க தயாராகிவிட்டார். இந்தப்படத்திற்கு "இரண்டு பாயும் புலியும் ஒரு பச்சைக்கிளியும்" என்று பெயர் வைத்து இருக்கிறார். 
ஹீரோவாக பிரகாஷ்ராஜ். அவருடன் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் மெர்ச்சி சிவாவும் நடிக்கிறார். இவர்களோடு தம்பி ராமைய்யா இல்லாவிட்டால் எப்படி? படத்தை இயக்குவதுடன் தம்பி ராமையாவும் ஒரு முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார்! முழுநீள காமெடி படமாக உருவாகும்.

இந்தப்படத்தில் ஹீரோயினாக புதுமுகம் ஒருவர் நடிக்க இருக்கிறாராம். ஏற்கனவே வடிவேலுவை ஹீரோவாகப் போட்டு இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படத்தை இயக்கி தனது முகவரியை தொலைத்த தம்பி ராமையா, எந்தச் சூழ்நிலையிலும் ஒரு காட்சியில் நடிக்கக் கூட மறந்தும் வடிவேலுவை அழைக்கமாட்டேன்” என்கிறார். “ வாடிவேலுவுக்காக சுமார் 75 படங்களுக்கு காமெடி டிராக் எழுதினேன். ஆனால் அவர் இந்திர லோகத்தில் நா.அழகப்பன் படத்தின் அளவுக்கு அதிகமாக தலையிட்டு படத்தையே கெடுத்து விட்டார். 

இதை இப்போதுதான் என்னால் தைரியாமாகச் சொல்ல முடியும். அவர் சார்ந்திருக்கும் கட்சியின் ஆட்சி இருக்கும் போது சொன்னால் அவ்வளவுதான்! “ என்று திகிலாகப் பேசும் தம்பிராமையாவுக்கு தற்போது தெலுங்குப் பட உலகில் இருந்தும் வாய்ப்புகள் வருகிறதாம்! “முதல்ல நம்ம ரசிகர்களை சந்தோஷப் படுத்துவோம் சார்! அதுக்கு அப்புறம் மத்த பயகள பாப்போம்!” என்கிறார் யதார்த்தமாக! சினிமாவில் இவருக்கு கிடைத்த வெற்றிக்கும் இவரது யதார்த்த குணம்தான் காரணம் என்கிறார்கள் தம்பி ராமையாவின் நண்பர்கள்! வாழ்த்துக்கள் அண்ணன் ராமையா!

No comments:

Post a Comment