Sunday 1 July 2012

சினிமா, டெலிவிஷன் சம்பளத்தில் நடிகர், நடிகைகளுக்கு 12 சதவீதம் சேவை வரி: இன்று முதல் அமல்



மத்திய அரசு புதிதாக சேவை மற்றும் சரக்கு வரி விதிப்பு சட்டத்தை (குட்ஸ் அண்டு சர்வீசஸ் வரி) கொண்டு வர உள்ளது. இந்த சட்டம் கடந்த ஆண்டே அமலுக்கு வருவதாக இருந்தது. ஆனால், பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வந்ததாலும் இந்த சட்டத்தில் எந்தெந்த பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு விலக்கு அளிப்பது என்பதில் தீர்க்கமான முடிவு காண்பதில் இழுபறி நிலை உள்ளதாலும் அமலுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இதற்கு முன்னோடியாக சேவை வரி பட்டியலில், மத்திய அரசு ஏராளமான சேவைகளை சேர்த்துள்ளது. 119 சேவைகளுக்கு வரி விதித்தும் 38 சேவைகளுக்கு வரி விலக்கு அளித்தும் எதிர்மறை (நெகடிவ் லிஸ்ட்) பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இதன்படி சினிமா, மற்றும் டெலிவிஷன் மூலம் வருமானம் பெறும் நடிகர், நடிகைகள், வருமான வரி தவிர இனி 12 சதவிகிதம் சேவை வரியும் செலுத்த வேண்டும்.

ஏற்கனவே ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஆகியோர் சேவை வரி பட்டியலில் கொண்டு வரப்பட்டுள்ளனர். இப்போது நடிகர், நடிகைகள் இதில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். சினிமா நடிகர், நடிகைகள், டெலிவிஷன் தொடர் நடிகர், நடிகைகள் இனி கட்டாயம் 12 சதவீகிதம் சேவை வரி செலுத்த வேண்டும்.

சேவை வரி விதிப்புக்கு உட்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 119 இனங்களில், பல ஏற்கனவே வரி விதிப்புக்கு உட்பட்டிருந்தன. அவற்றுக்கு 10 சதவிகிதம் சேவை வரி விதிக்கப்பட்டது.

No comments:

Post a Comment