Thursday 5 July 2012

மீண்டும் வி.சேகர் : விவேக், கருணாஸ் கூட்டணியில் சரவண பொய்கை


எப்போதும் குடும்பத் திரைப்படங்கள் என்றாலே இயக்குனர் வி.சேகர்தான் நினைவுக்கு வருவார்.
நான் புடிச்ச மாப்பிள்ளை திரைப்படம் மூலம் திரையுலகில் காலடி பதித்தவர் வி.சேகர். அதற்குப் பின், காலம் மாறிபோச்சு, வரவு எட்டணா செலவு பத்தணா, பொங்கலோபொங்கல், விரலுக்கேற்ற வீக்கம் என்று இவர் குவித்த குடும்பப்பாங்கான வெற்றிப் படங்கள் அதிகம். இப்போது சரவணப் பொய்கை என்று ஒருகாதல் படத்தை இயக்கி வருகிறார்.
     இந்த படம் பற்றி அவரே சொல்கிறார்."முதலில் என் மனைவி என்னைத் திட்டாமல் படம் பார்க்கவேண்டும் என்கிற கோணத்தில்தான் நான் குடும்பப் பட இயக்குனர் ஆனேன். அதன்பிறகு அப்படியே முத்திரை குத்தப்பட்ட நான் குடும்பப் பட இயக்குனராகவே மாறிவிட்டேன். எனக்கு மார்க்சிசிட் கம்யுனிஸ்ட் கட்சி சார்பில் குடும்ப இயக்குனர் பட்டமும் கிடைத்தது.
     இப்போது சரவணப் பொய்கை எனும் ஒரு காதல் திரைப் படத்தை இயக்கி வருகிறேன். இந்த படத்திற்கு நானே தயாரிப்பாளர். இதில்  என் மகன் கார்ல்மார்க்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். என் படத்தில் எப்போதுமே நகைச்சுவைக்குப் பஞ்சம் இருக்காது. இதில் விவேக், கருணாஸ் கூட ஹீரோவுக்கு நிகராகவே நடிக்கிறார்கள். அருந்ததி என்கிற பெண் கதாநாயகியாக நடிக்கிறார்,
      இந்த படத்திற்கு 'சரவணப் பொய்கை' என்று பெயர் வைத்தற்கு காரணம் ஏன் என்றால் படத்தின் கதை பழனியில் நடப்பதுபோல வருகிறது. காதலர்கள் இருவரும் பழனியில்தான்  சந்திக்கிறார்கள். படத்திற்கு விஜய் இசை அமைத்திருக்கிறார். 60 % படம் முடிந்து விட்டது. விரைவில் இசை வெளியீடு செய்ய உள்ளோம்" என்கிறார்.
       வி.சேகரின் மகனும் படத்தின் கதாநாயகனுமான கார்ல்மார்க்ஸ் பேசுகையில், "படத்தில் நான் ஹீரோ என்றெல்லாம் சொல்ல முடியாது. இந்த படத்தின் முதல் ஹீரோ, என் அப்பா. இரண்டாவது ஹீரோ, கதை. மூன்றாவது ஹீரோ விவேக் சார், நான்காவது ஹீரோ கருணாஸ் சார். இப்போது ஐந்தாவது இடத்தில்தான்  நான் வருகி வருடமாக டான்ஸ், சண்டை கற்றுக் கொண்டேன். படம் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் அருமையான படமாக வந்திருக்கிறது என்கிறார்.

No comments:

Post a Comment