Monday 2 July 2012

களஞ்சியம் கடன் வாங்கிய கமலின் தலைப்பு!


       இயக்குனர் மூ.களஞ்சியம், அஞ்சலி நடிப்பில் வெளியாகி, கலச்சார காவலர்களின் கடும் கண்டனத்துக்கு ஆளான படம் ‘கருங்காலி’.
படம் மிக ஆபாசமான ஒரு கதைக் கருவை வைத்து எடுக்கப்பட்டிருந்தலால், விமர்சகர்கள் அந்தப் படத்தை காட்டு காட்டு என்று காட்டி கடுமையாகத் தாக்கி எழுதினார்ககள். மலிவான பொருள் எப்போதுமே சுலபமாக விலை போய் விடும் என்பதால், ரசிகர்கள் இந்தப் படத்தை விழுந்து விழுந்து பார்த்தார்கள். ஒரு கோடியில் எடுக்கப்பட்ட இந்தபடம், மூன்று கோடி வசூலித்துக் கொடுத்தது. இதனால் தற்போது இந்தப் படத்தை தெலுங்கில் தைரியாமாக டப் செய்து ரிலீஸ் செய்கிறார் களஞ்சியம்!
கருங்காலி என்பது தூய தமிழ் தலைப்பு என்பதால், தெலுங்கு ரசிகர்களைக் கவரும் விதமாக, கமலின் புகழ்பெற்ற சதி லீலாவதி என்ற தலைப்பை எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் தலைப்புடன் ஆண்டையும் சேர்த்து ‘சதி லீலாவதி 2012’ என்று தலைப்பு வைத்திருகிறார். கூடவே தனது பெயரையும் மாற்றிக் கொண்டிருகிறார். களஞ்சியம் என்பதும் தமிழ்ப்பெயர் என்பதால், அதை தெலுங்கு ரசிகர்களுக்கு புரிகிறமாதிரி ‘பிரபாகரன்’ என்று தனது பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறார். கருங்காலி விரித்த வலையில் மன்னனிக்க! களஞ்சியம் விரித்த வலையில் தெலுங்கு ரசிகர்கள் சிக்குகிறார்களா பார்க்கலாம்!

No comments:

Post a Comment