Saturday 7 July 2012

புதுமுகங்களிடம் பணம் வாங்கும் இயக்குனர்கள் : பிரேம்ஜி புகார்



புதுமுக நடிகர், டெக்னீஷியன்களிடம் இயக்குனர்கள் பணம் வாங்கிக்கொண்டு வாய்ப்பு தருகிறார்கள் என்றார் பிரேம்ஜி. சிவாஜிதேவ், ரமேஷ் யாதவ், விஷ்ணு பிரியா, பானு நடிக்கும் படம் ‘புதுமுகங்கள் தேவைÕ. மனீஷ்பாபு இயக்குகிறார். ட்வின்ஸ் டியூன் இசை. இப்படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.
இயக்குனர் பாலு மகேந்திரா பாடல்களை வெளியிட்டார். விழாவில் காமெடி நடிகர் பிரேம்ஜி பேசியதாவது: இப்படத்தின் டிரைலர் பார்த்ததில் சினிமா பற்றிய கதை என்பது தெரிந்தது. புதுமுகங்களாக வருபவர்களிடம் இயக்குனர்கள் காசு வாங்கிக்கொண்டு நடிக்க வாய்ப்பு தருவதாக சீன்கள் இடம் பெற்றிருக்கிறது. இதைபார்த்தபோது எனக்கு ஏற்பட்ட அனுபவம் ஞாபகம் வருகிறது.
கொஞ்ச நாட்களுக்கு முன் ஒரு இயக்குனர் எனக்கு போன் செய்து, ‘என் படத்துக்கு நீங்கள்தான் இசை அமைக்கிறீர்கள். ஆனால் பாடகர்கள், ரெக்கார்டிங், சக இசை கலைஞர்கள் என எல்லோருக்கும் நீங்கள்தான் சம்பளம் கொடுக்க வேண்டும். உங்களுக்கு சம்பளம் தரமாட்டோம். பாடல் கேசட் விற்பனையில் வரும் தொகையை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்Õ என்றார்.
புதுமுகங்களிடம் காசு வாங்கி வாய்ப்பு தருவது சினிமாவில் நடக்கிறது. இசை அமைப்பாளரோ, நடிகரோ யாருக்கும் தயாரிப்பாளர்தான் சம்பளம் தருவார். அப்படி இல்லாமல் மற்றவர்களிடம் பணம் பெறுவது தவறு என்று கூறி மறுத்துவிட்டேன். எங்காவது ஒரு விழாவில் இதை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். இன்று வாய்ப்பு கிடைத்தது.

No comments:

Post a Comment