Thursday 9 August 2012

சுதந்திரத்திற்கு முந்தையகால கதை பாலாவின் பரதேசி...!


Balas Parathesi story is 1930s pre-independence India பாலா இயக்கி வரும் பரதேசி படத்தின் கதை, இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக அதாவது 1930ம் ஆண்டு காலத்து கதையாக உருவாகி வருகிறது. சேது, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் போன்ற வெற்றி படங்களை இயக்கி டைரக்டர் பாலா, இப்போது பரதேசி என்ற படத்தை இயக்கியும், பி ஸ்டூடியோ சார்பில் தானே தயாரித்தும் வருகிறார். இப்படத்தின் நாயகனாக மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வாவும், நாயகிகளாக வேதிகா மற்றும் பேராண்மை தன்ஷிகாவும் நடிக்கின்றனர்.

பொதுவாக பாலா படம் என்றாலே ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும், ஆனால் இப்படத்திற்கு வழக்கத்தை காட்டிலும் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகி இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் பாலாவின் முந்தைய படங்களை போன்று இந்தப்படம் இருக்காது. ஏ‌னென்றால் படத்தின் கதை 1930ம் ஆண்டு அதாவது நாடு சுதந்திரம் அடைவதற்கு முந்தைய காலத்து கதை. மேலும் பாலா தனது கூட்டணியை மாற்றியுள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் குமாரும், ஒளிப்பதிவாளராக செழியனும், வசனகர்த்தவாக நாஞ்சில் நாதனும், படத்தொகுப்பாளராக கிஷோரும் பணியாற்றி வருகின்றனர்.

மானாமதுரை, சிவகங்க‌ை, தேனி, மூணாறு மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அடர்ந்த காடுகளில் பரதேசி படத்தை படமாக்கி முடித்துவிட்டார் பாலா. அதுவும் வெறும் 90 நாட்களிலேயே முழு படப்பிடிப்பையும் முடித்துவிட்டார். இப்போது படத்திற்கான போஸ்ட் புரோடக்ஷ்ன் வேலைகள் நடந்து வருகிறது.

மேலும் எப்போதும் இல்லாமல் புதுமையாக பரதேசி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை லண்டனில் வருகிற 19 தேதி நடத்த திட்டமிட்டு இருக்கிறார் பாலா. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழியில் உருவாகி இருக்கும் இப்படம் அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது.

No comments:

Post a Comment