Wednesday 8 August 2012

ஒட்டிப்பிறந்தவர்கள் கதை! முந்துகிறது இருவன்


Iruvaan leads in twins storyஒரு படம் வந்து வெற்றி பெற்ற பிறகு அதைக் காப்பி அடித்து அதே மாதிரியான படங்கள் வருவது நடைமுறையில் உள்ளது. ஆட்டுகார அலமேலு வெற்றி பெற்ற பிறகு கழுதை, நாய், குரங்கை வைத்தெல்லாம் படம் வந்தது. சமீபத்தில் பருத்தி வீரன் ஜெயித்த பிறகு நிறைய ஹீரோக்கள் அழுக்கு லுங்கி அரிவாளுடன் வந்தார்கள். ஆனால் இப்போது ஒரு படம் வெளிவரும் முன்பே அதன் கதையை தெரிந்து கொண்டு அதே மாதிரியான படங்கள் வெளிவரத் தொடங்கி விட்டது.

கே.வி.ஆனந்த் இயக்கும் மாற்றான். ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளைப் பற்றியது. இதுவே ஒரு ஆங்கிலப் படத்தில் சுட்ட கதைதான். இதைப்பார்த்து கன்னடத்திலும், தமிழிலுமாக சாருலதா என்ற ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் படத்தை எடுத்துவிட்டார்கள். இதில் ஹீரோயின் பிரியாமணி ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தையாக நடித்திருக்கிறார்.

இப்போது இவர்கள் இருவரையும் மிஞ்சிவிட்டார் ஒரு சிறுபட இயக்குனர். இ.எஸ்.முருகானந்தம் என்ற இந்த புதுமுக இயக்குனர் குறுகிய காலத்தில் டிஜிட்டல் பார்மெட்டில் இருவன் என்ற படத்தை இயக்கி முடித்து விட்டு வருகிற 15ந் தேதி வெளியீடு என்று அறிவித்தும் விட்டார்கள். தமிழ் சினிமா வரலாற்றில் முதன் முறையாக உடல் ஒட்டிப் பிறந்தவர்களின் உண்மை கதை என்ற கேப்சனோடு. இதே போன்று இதற்கு முன்பு ஒரு கூத்து நடந்தது. ஒரு தென்கொரிய படத்தை காப்பி அடித்து அமீர் நடிக்க சுப்பிரமணிய சிவா யோகியை இயக்கினார். அதற்கு சில வாரங்கள் முன்பே அழுக்கன் என்ற படத்தை அதே கதையுடன் புதுமுகங்கள் எடுத்து வெளியிட்டுவிட்டனர்.

ஆங்கிலப் படத்தை காப்பி அடித்து படம் எடுப்பவர்கள். இந்தக் கதையை வேறு யாராவது உல்டா செய்து கொண்டிருக்கிறார்களா? என்பதை தீவிரமாக விசாரித்து உறுதி செய்து கொண்ட பிறகு படத்தை ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பித்த பிறகு யாராது தொடங்குகிறார்களா? என்று கண்காணிக்க வேண்டும். குறைந்தபட்சம் கதை வெளியில் தெரியாத அளவுக்காவது நடந்து கொள்ள வேண்டும். இதற்கென தனி உதவியாளர்களை வைத்துக் கொள்வது நல்லது. இல்லாவிட்டால் பலகோடியில் எடுக்கப்படும் படத்தின் எதிர்பார்ப்பை சில லட்சங்களில் எடுக்கப்பட்டும் சிறு படங்கள் காலிபண்ணிவிடும்.

No comments:

Post a Comment