Monday 9 July 2012

மாணவ-மாணவிகளுக்கு நடிகர் விஜய் ரூ.10 லட்சம் உதவி


     நடிகர் விஜய் தமிழகத்திலும், புதுவையிலும் பிளஸ்-2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு நிதி உதவியும் சான்றிதழ்களும் வழங்கினார்.

வருடம் தோறும் ரசிகர் மன்றம் சார்பில் இவை வழங்கப்படும். இந்த ஆண்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வழங்கப்பட்டது. இதற்கான விழா வடபழனியில் உள்ள ஜே.எஸ்.கல்யாண மண்டபத்தில் நடந்தது.

பொது தேர்வுகளில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ-மாணவிகளுக்கும் தமிழ் பாடத்தில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கும் வெள்ளிப் பதக்கம், கேடயம், சான்றிதழ்களை நடிகர் விஜய் வழங்கினார்.

200 ஏழை மாணவ-மாணவிகளுக்கு ரூ.6 லட்சம் கல்வி உதவி தொகையும், உயர் கல்வி பயிலும் மாணவ-மாணவிகளுக்கு ரூ.4 லட்சம் உதவி தொகையும் என மொத்தம் ரூ.10 லட்சம் நிதி வழங்கினார். நோட்டு புத்தகங்களும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், நடிகர் விஜய் பேசியதாவது:-

மாணவ-மாணவிகளை உற்சாகப்படுத்துவதற்காக வருடம் தோறும் கல்வி நிதி உதவி வழங்கி வருகிறேன். இந்த பணியை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து செய்வேன். அனைவருக்கும் கல்வி முக்கியமானது. மாணவ-மாணவிகள் நன்றாக படித்து பெரிய பொறுப்புகளுக்கு வரவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் மாணவிகளுக்கு விஜய் தன் கைப்பட சிற்றுண்டி பரிமாறி அவர்களுடன் உட்கார்ந்து சாப்பிட்டார். நிகழ்ச்சியில் அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் என். ஆனந்த், செயலாளர், ரவிராஜா, துணைத் தலைவர் சி.ராஜேந்திரன், துணை செயலாளர் ஏ.சி.குமார், மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment