Sunday 8 July 2012

நடிகர் தனுஷுக்கு பிலிம்பேர் விருது கொடுத்த தீபிகா படுகோனே.


மும்பையைச் சேர்ந்த சினிமா இதழான பிலிம்பேர் ஆண்டுதோறும் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களுக்கு விருது வழங்கி வருகிறது.

2011-ம் ஆண்டுக்கான பிலிம்பேர் விருதுகள் நேற்று இரவு சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த விழாவில் அறிவிக்கப்பட்டது. தமிழில் சிறந்த நடிகராக தனுஷ் (படம்: ஆடுகளம்) தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு நடிகை தீபிகா படுகோன் விருது வழங்கினார்.

தமிழில் சிறந்த நடிகைக்கான விருதை அஞ்சலி (படம்: எங்கேயும் எப்போதும்) பெற்றார்.

மற்ற விருதுகள் விவரம் வருமாறு:-

சிறந்த படம்: ஆடுகளம்.

சிறந்த இயக்குனர்: வெற்றிமாறன் (ஆடுகளம்).

சிறந்த துணை நடிகர்: அஜ்மல் (கோ).

சிறந்த துணை நடிகை: அனன்யா (எங்கேயும் எப்போதும்).

சிறந்த இசை அமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் (ஆடுகளம்).

சிறந்த பாடகர்: ஆலப்ராஜு (கோ படத்தில் என்னமோ ஏதோ பாடல்).

சிறந்த பாடகி: சின்மயி (வாகை சூடவா படத்தில் சரசர பாடல்).

சிறந்த பாடலாசிரியர்: வைரமுத்து (சரசர பாடல்).

சிறந்த புதுமுக நடிகைக்கான விருது ஸ்ருதி ஹாசனுக்கு வழங்கப்பட்டது. அவரது தந்தை நடிகர் கமலஹாசன் விருது வழங்கி மகளை விழா மேடையில் வாழ்த்தினார்.

தெலுங்கு

தெலுங்கில் சிறந்த படம்: டோகுடு.

சிறந்த நடிகர்: மகேஷ்பாபு, (படம்: டோகுடு).

சிறந்த நடிகை: நயன்தாரா (ஸ்ரீராமராஜ்ஜியம்).

சிறந்த இசையமைப்பாளர்: எஸ்.எஸ். தமன் (டோகுடு).

சிறந்த பாடகர்: ராகுல் நம்பியார் (டோகுடு படத்தில் ‘குருவாரம் மார்ச் ஒகட்டி’ பாடல்).

சிறந்த பாடகி: ஸ்ரேயா கோசல் (ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் ‘ஜெகதன்னதா’ பாடல்).

மலையாளம்

மலையாளத்தில் சிறந்த படம்: டிராபிக்.

சிறந்த நடிகர்: சலிம்குமார் (படம்: ஆதாமின்ட் மகன் அபு).

சிறந்த நடிகை: காவ்யா மாதவன் (கத்தம்மா).

சிறந்த இயக்குனர்: பிலெஸ்சி (பரணயம்).

சிறந்த பாடகர்: விஜய் ஜேசுதாஸ்.

சிறந்த பாடகி: ஸ்ரேயா கோசல்.

கன்னடம்

கன்னடத்தில் சிறந்த படம்: ஒலவே மந்த்ரா.

சிறந்த இயக்குனர்: ஜெயதீர்த்தா (ஒலவே மந்த்ரா).

சிறந்த நடிகர்: புனீத்ராஜ் குமார் (குடுகாரு).

சிறந்த நடிகை: ரம்யா (சஞ்சு வெட்ஸ் கீதா).

சிறந்த பாடகர்: சேதன்.

சிறந்த பாடகி: ஸ்ரேயா கோசல்.

விருது வழங்கும் விழாவில் நடிகர்கள் கமலஹாசன், கார்த்தி, விக்ரம், நடிகைகள் குஷ்பு, திரிஷா, ரம்யா, இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரிச்சா கங்கோபாத்யாய், பூர்ணா ஆகியோரது நடன நிகழ்ச்சிகளும் நடந்தது.

No comments:

Post a Comment