Monday 9 July 2012

சகுனியை அடக்கிய நான் ஈ!


தமிழ்சினிமாவின் லேட்டஸ்ட் வசூல் சக்கரவர்த்தியாக இருக்கும் கார்த்தி, படப்பிடில் இருந்து பாதியில் வெளியேறி ஊர் ஊராக சுத்த வைத்திருகிறது மீடியாக்களின் விமர்சனம்!
 இவரது சகுனி படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் கடந்த ஜூன் 22 ஆம் தேதி வெளியானது! தெ‌லுங்‌கு, தமி‌ழ்‌ இரண்‌டு மொ‌ழி‌யி‌லும்‌ 1154 தி‌யே‌ட்‌டர்‌களி‌ல்‌ ரிலீஸ் செய்யப்பட்டது. இது எந்திரனை விட 54 திரையரங்குகள் அதிகம்! சகுனிக்கு முதல் மூன்று நாட்கள் முன்‌பதி‌வு‌ம்‌ வசூ‌லும்‌ கோடம்பாக்கத்தை கிடுகிடுக்க வைத்தது!
 இம்முறை தனக்கு இருந்த ஓபனிங்கை வியந்த கார்த்தி உடனடியாக  மீ‌டி‌யா‌க்‌களை‌  அழை‌த்‌து சக்‌சஸ்‌ மீ‌ட்‌ வை‌த்‌து பே‌ட்‌டி‌க்‌ கொ‌டுத்‌தா‌ர்‌. பி‌றகு சுரா‌ஜ்‌ இயக்‌கும்‌ அலெ‌க்‌ஸ்‌பா‌ண்‌டி‌யன்‌ படத்‌தில் நடிக்க பா‌ண்‌டி‌ச்‌ சே‌ரி‌ செ‌ன்‌றுவி‌ட்‌டா‌ர்‌. அங்‌கு சே‌சி‌ங்‌ கா‌ட்‌சி‌களி‌ல்‌ நடி‌த்‌துக்‌ கொ‌ண்‌டி‌ருந்‌த போ‌து, படத்‌தை‌ப்‌ பற்‌றிய‌ தா‌றுமா‌றாக கலவையான வி‌மர்‌சனங்‌கள்‌ வெ‌ளி‌யா‌னதை‌ பார்த்து கார்த்திக்கு சின்னதாய் பொறி தட்டியது!

மறுநா‌ள்‌ படப்‌பி‌டி‌ப்‌புக்குப் போன கார்த்தி,‌ வே‌லை‌யில் ஒன்றமுடியமால் அடுதடுத்து இரண்டு நாட்கள் படப்பிடிப்பில் தவர்க்க, உடனடியாக அலெக்ஸ் பாண்டியன் படத்தின் இயக்குனர் சுராஜ்.. “ உங்கள் மனப்போராட்டம் தேவையற்றது. வேண்டுமானால் தமிழ்நாடு முழுக்க ஒரு ரவுண்ட் போய் வாருங்கள் என்றாராம்! உடனடியாக உற்சாகமான கார்த்தி, பாண்டிசேரியில் இருந்து அப்படியே தி‌ருச்‌சி‌, மதுரை‌, நெல்லை, கோ‌வை‌, தி‌ருப்‌பூ‌ர்‌, ஈரோடு என்று  சகுனி‌ படம்‌ ஓடி‌க்‌கொ‌ண்‌டி‌ருக்‌கும்‌ தி‌யே‌ட்‌டர்‌களுக்கு நே‌ரி‌ல்‌ செ‌ன்‌று விசிட் அடித்திருகிறார்! மொத்தம் படம் வெளியாகி ஆறாவது நாள் விசிட் அடித்த அத்தனை தி‌யே‌ட்‌டர்‌களி‌லும் கூட்டம் அலைமோதி இருக்கிறது. கடந்தது இப்படியே மொத்தம் மூன்று நாள் விசிட்!

கடந்த ஜூலை 6-ஆம் தேதி நான் ஈ ரிலீஸ் ஆகிறவரை ஃபாக்ஸ் ஆபீஸில் சகுனிதான் முதலிடம்! தற்போது நான் ஈ யில் ஒரு தெரிந்த முகம் கூட இல்லாவிட்டாலும், சகுனிக்கு இருந்த அளவுக்கு தியேட்டரில் கூட்டம் அள்ளுகிறதாம். இந்த முழுவதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் நான் ஈ குறைந்தது 200 கோடி வசூல் செய்யும் என்று கணித்திருகிறார்கள். ஆந்திராவில் கடந்த இரண்டு நாள் கலக்‌ஷன் மட்டுமே 23 கோடி என்கிறார்கள். ஆந்திராவில் இன்னும் ஐந்து நாட்களுக்கு தொடர்ச்சியாக ஃபுல் ஆகி இருகிறதாம்!

தமிழ்நாட்டில் இத்தனை பெரிய வெற்றியை ஈ ஈட்டியதன் மூலம், கோலிவுட்டையும் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனராக ராஜமௌலி ஆச்சர்யபடுத்தியிருகிறார்.

No comments:

Post a Comment