Monday 9 July 2012

பொது தேர்வுகளில் சித்தியடைந்த மாணவர்களுக்கு நடிகர் விஜய் கௌரவிப்பு



தமிழகம மாவட்டங்கள் மற்றும் புதுவையில் 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில், இளைய தளபதி விஜய் பதக்கம், சான்றிதழ் அளித்து கௌரவம் வழங்கினார்.
ஜே.எஸ் மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவின் பின்னர், அவர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடி சிற்றுண்டி சாப்பிட்ட விஜய், அவர்களை ஊக்கப்படும் வகையில் நன்றாக படித்து பெரிய பொறுப்புக்களுக்கு வரவேண்டுமெனவும் வாழ்த்தினார். இந்நிகழ்வில் அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் என்.ஆனந்த், செயலாளர் ஆர்.ரவிராஜா, துணை தலைவர் சி.ராஜேந்திரன் உட்பட அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

ஏழை, எளிய பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, நோட்டுப்புத்தகங்களை இலவசமாக வழங்கி வரும் விஜய், இந்த ஆண்டு 200 குழந்தைகளுக்கு ரூ.6 இலட்சம் செலவில் கல்வி உதவி தொகையும், உயர்கல்வி பயிலும் மாணவ-மாணவிகளுக்கு ரூ.4 இலட்சம் செலவில் கல்வி உதவி தொகையும் வழங்கியுள்ளார். மேலும் 5 இலசம் நோட்டு புத்தகங்களை ஏழை-எளிய மக்களுக்கு மாவட்டந்தோறும் வழங்கி வருகிறார்.

No comments:

Post a Comment