Wednesday 11 July 2012

அடுத்தடுத்த பிரம்மாண்ட படைப்புகளுடனும், புதுஉற்சாகத்துடனும் பி.வி.பி.நிறுவனம்!






தமிழ் சினிமாவில் நாள்தோறும் புதுப்புது தயாரிப்பாளர்கள் வந்த வண்ணம் உள்ளனர். நல்ல படங்களை தர வேண்டும் என்று நோக்கத்தோடு, செலவினம் பற்றி கவலைப்படாமல் தரத்திற்கு முக்கியத்துவம் தரும் எத்தனையோ பெரிய நிறுவனங்கள் உள்ளன.

அந்தவகையில் அதேபாணியில் உலகத்தரத்திற்கு இணையான படங்களை கொடுத்து வருகிறது புதிய நிறுவனமான பி.வி.பி பட நிறுவனம். இந்நிறுவனம் ராஜபாட்டை படத்தை தான் தன் முதல் அறிமுகமாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ரிலீஸ் செய்தது. மேலும் இந்த நிறுவனம் பல நிறுவனங்களுக்கு பண உதவியும் செய்து வருகிறது.

ராஜபாட்டை அடுத்து தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ரிலீஸ் செய்துள்ள படம் நான் ஈ. மகதீரா டைரக்டர் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான இப்படம் இரு மொழியிலும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறது பி.வி.பி. நிறுவனம்.

இதனால் நல்ல கதைகளுக்கும், பிரம்மாண்ட படைப்புகளுக்கும் பின்னால் நாம் இருக்க வேண்டும் என்று பி.வி.பி. நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது. விரைவில் இவர்களது மற்று‌மொரு பிரம்மாண்டமான கமலின், விஸ்வரூபம் படம் வெளியாக இருக்கிறது. அதற்கு அடுத்து செல்வராகவனின் - இரண்டாம் உலகம், பாலாவின் - பரதேசி என்று அடுத்தடுத்த பெரிய படங்களை ரிலீஸ் செய்ய இருக்கிறது. நான் ஈ வெற்றிக்கு அடுத்து, இப்போது விஸ்வரூபம் வெற்றிக்காக பி.வி.பி.யின் ஒட்டுமொத்த டீமும் களத்தில் குதித்து இருக்கிறது.

No comments:

Post a Comment