Monday 9 July 2012

கவிஞர் வாலியிடம் சத்தியம் வாங்கிய எஸ்.பி.முத்துராமன்.


    படத்தில் 'சரக்கு' இருக்கிறதோ இல்லையோ? தனது படங்களில் சரக்கடிப்பது போல ஒரு பாடல் காட்சி இல்லாமல் எந்த படங்களையும் யோசிப்பதில்லை இயக்குனர்கள். ஆறாத இந்த எரிச்சலில் ஜோராக சில ஐஸ் கியூப்களை மிதக்க விட்டார்கள் 'மன்னாரு' பாடல் வெளியீட்டு விழாவில். காரணம், ஒரே ஒரு குடி பாடலை மட்டும்தான் திரையிட்டார்கள்! அதுவும் மொத்த பேரும் குடித்துவிட்டு ஆடும் கும்மாங்குத்து இல்லை என்பதே பெருத்த நிம்மதி.

இந்த ஒரே ஒரு கிளாஸ் சரக்கை ஸ்கிரீனில் பார்த்ததற்கே ஓவராக ஃபீலிங் ஆனார்

பிரபல இயக்குனர் எஸ்.பி.முத்துராமன். 'பேப்பரை பார்த்தா வயித்தெறிச்சலா இருக்கு. பொங்கல் அன்னைக்கு மட்டும் பதினைஞ்சாயிரம் கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையாகியிருக்கு. சின்ன சின்ன பசங்களும் பெண்களும் குடிக்கிற அளவுக்கு இன்னைக்கு சமுதாயம் கெட்டு குட்டிச்சுவராயிட்டு இருக்கு. உங்க எல்லாரையும் கேட்டுக்குறேன். என் மேல சத்தியமா இனிமே குடிக்காதீங்க' என்றார்.

கவிஞர் வாலி வீட்டுக்கு எதிர் வீட்டிலிருந்த இவர், ஒரு நாள் வாலியிடமும் இப்படிதான் சத்தியம் வாங்கினாராம். அன்றிலிருந்து குடியை விட்டவர்தான் வாலி. இன்று வரை தொடவில்லை என்பதையும் அதே மேடையில் எஸ்.பி.முத்துராமன் கூற, வந்திருந்த ரசிகர்களில் பாதி பேருக்கு அந்த வினாடியே டாஸ்மாக்கை மூடி சீல் வைத்ததை போல ஒரு 'மன பிராந்தி' ஏற்பட்டிருக்கும்.

வாழ்த்த வந்த இடத்தில் பாடம் எடுக்க முடியாதல்லவா? சப்ஜெக்டுக்கு தாவினார் எஸ்.பி.எம். 'இந்த படத்தின் பாடல்கள் அவ்வளவு அற்புதமா இருக்கு. இவர்தான் இந்த படத்தின் இசையமைப்பாளர் உதயன். அவருக்கு ஒருமுறை ஜோரா கைதட்டுங்க' என்றார். (சொல்லிட்டாரே என்பதற்காக இல்லை, நிஜமாகவே பாடல்கள் ரசிகர்களை பரவசப்படுத்தியிருந்ததால் கரகோஷம் தியேட்டரை அதிர வைத்தது)

No comments:

Post a Comment