Wednesday 11 July 2012

தமிழ்ப் படங்களில் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகும் நான் ஈ வில்லன்.


தற்போது சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாராட்டும் படம் 'நான் ஈ'. நாடு முழுவதும் இப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்து இருக்கிறது.

தெலுங்கில் 'ஈகா', தமிழில் 'நான் ஈ', மலையாளத்தில் 'ஈச்சா' என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது இப்படம். தமிழ் மற்றும் தெலுங்கு பாக்ஸ் ஆபிஸில், அனைத்து படங்களையும் பின்னுக்கு தள்ளிவிட்டு வசூலில் முந்திப் பறக்கிறது 'ஈ'.

வரும் வாரங்களில் இப்படத்தில் வசூல் கூடும் என்பதும் உறுதியாகி இருக்கிறது.

'நான் ஈ' படத்தின் இயக்குனர் ராஜமெளலி " பிரபாஸ், மகேஷ், ரவிதேஜா, வெங்கடேஷ், நாகார்ஜுனா, சித்தார்த், ராணா, விக்ரம், சூர்யா, கார்த்தி, தனுஷ், ரஜினி, இயக்குனர்கள் ராம் கோபால் வர்மா, விநாயக், பூரி ஜெகந்நாத், ஹரிஸ் சங்கர், க்ரிஷ், பிரகாஷ் ராஜ், நந்தினி, லிங்குசாமி, ஷங்கர் சார் என அனைவருமே நான் ஒரு LANDMARK படம் இயக்கி இருப்பதாக பாராட்டினார்கள். 'ஈகா' இன்னும் மேலே மேலே பறந்து கொண்டு இருக்கிறது.

எனது படக்குழுவிற்கு நன்றி. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகினர் அனைவரும் பாராட்டும் போது எனது மனநிலையை யோசித்து பாருங்கள். " என்று தெரிவித்து இருக்கிறார்.

படத்தில் வில்லனாக நடித்த சுதீப் " ரஜினி சார் மற்றும் நாகார்ஜுனா சார் இருவருமே எனக்கு போன் செய்து பாராட்டினார்கள். இந்திய சினிமா பிரபலங்கள் பலரும் எனது பெயரை குறிப்பிட்டு பாராட்டுகிறார்கள். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அனைத்திற்கு இயக்குனர் ராஜமெளலி தான் காரணம் " என்று தெரிவித்து இருக்கிறார்.

சுதீப்பின் நடிப்பை பார்த்து ரஜினி " இந்நாள் வரை நான் தான் சிறந்த வில்லன் என்று நினைத்து இருந்தேன். ஆனால் நீங்கள் என்னை மிஞ்சி விட்டீர்கள் " என்று தெரிவித்து இருக்கிறார்.

சுதீப்பை தமிழ்ப் படங்களில் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்ய பேசி வருகிறார்களாம் கோலிவுட்டில்.

No comments:

Post a Comment