Monday 9 July 2012

மீண்டும் தமிழ் சினிமாவில் எஸ்.ஜானகியின் தேன் குரல்...!



singer S.Janaki comes after long time 1957-ல் "விதியின் விளையாட்டு" படத்தில் தன் முதல் குரலை பதிவு செய்தவர் பாடகி எஸ்.ஜானகி. ஆனால் அந்தப்படம் வெளியாகமல் நின்றுபோனது. அதற்கு அடுத்து தெலுங்கில் எம்.எல்.ஏ., என்ற படத்தில் பாடினார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடத்தொடங்கினார். மழலை கொஞ்சும் அவரது குரலின் இனிமையும், சிணுங்கும் அவரது ஹம்மிங் இன்றும் அவரது குரலில் ஒலித்து கொண்டு இருக்கிறது. தமிழில் அவர் பாடிய பாடல்கள் ஏராளம் என்றாலும் அதிலும், மச்சான பாத்திங்களா...(அன்னக்களி), தூக்கம் உன் கண்களை...(ஆலயமணி), செந்தூரப்பூவே...(16 வயதினிலே), ஆயிரம் தாமரை மொட்டுகளே... (அலைகள் ஒய்வதில்லை), நான் ஆளான... (இது நம்ம ஆளு), ஒரு கிளி உருகுது (ஆனந்த கும்மி), கட்டி வச்சுக்கோ (என் ஜீவன் பாடுது), பேரைச் சொல்லவா (குரு), நேத்து ராத்திரி (சகலகலா வல்லவன்), இஞ்சி இடுப்பழகா (தேவர்மகன்), காதல் கடிதம் தீட்டவே (ஜோடி) உள்ளிட்ட பாடல்கள் பிரபலம். இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார். 4முறை தேசிய விருதும், 31 மாநில விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை குவித்துள்ளார்.

வருடத்திற்கு ஒரு தமிழ் படத்திலாவது பாடவேண்டும் என்று ஆசைப்பட்டு கிட்டத்தட்ட 55 ஆண்டுகளாக பாடி வருகிறார். சமீபத்தில் பாத்ரூமில் வழுக்கி விழுந்து உடல்நலக் குறைவால் ஓய்வு எடுத்து வந்தவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு வெள்ளை காகிதம் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அவரை நாம் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தபோது, இப்போது கொஞ்சம் பரவா இல்லை. ஆனால் சோர்வாக இருக்கிறது. எங்கும் போகமுடிவதில்லை. சர்க்கரை வியாதி, இரத்த கொதிப்பு இருக்கிறது. பழையபடி உற்சாகமாக இருக்க முடியவில்லை என்றவர் சமீபத்தில் தான் பாடிய வெள்ளை காகிதம் படப்பாடலை பற்றி ‌பேசினார். ரொம்ப வருஷத்திற்கு பிறகு இந்த பாட்டு ரொம்ப நல்லா வந்திருக்கு. கிளைமாக்ஸ் பாடலில் ஒரு சோகபாட்டை பாடி இருக்கேன். ரொம்ப அழகான இசை சேர்ப்பு, வார்த்தைகள் தெளிவாக கேட்கின்றன. விழியோரம் விழியோரம்... என்ற பாடலை விவேகா எழுதி இருக்கார். படத்தில் கூட இந்த பாடலை அழகா காட்சிபடுத்தி இருக்காங்க. நான் சில பாடல்களை அவ்வப்போது கேட்பது உண்டு. இப்போதெல்லாம் மேற்கத்திய இசையின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கு. வரிகளே புரிவதில்லை, அது மாடர்ன்னா மாறிடுச்சு. இப்ப வர்ற பாடகர்கள் ரொம்ப திறமைசாலியா இருக்காங்க, நல்ல பாடுறாங்க என்று பாராட்டு தெரிவித்தார். எப்போதும் நான் ரசிகர்களுக்காக பாடிகிட்டே இருக்கணும்னு ஆண்டவனை வேண்டுகிறேன் என்றார் தேன் குரலுக்கு சொந்தக்காரான ஜானகி அம்மா.

No comments:

Post a Comment