Monday 9 July 2012

அமேசிங் ஸ்பைடர் மேன் வசூலில் ரெக்கார்ட் பிரேக்


Amazing Spiderman made record break இந்தியாவில் சமீபத்தில் வெளியான ஹாலிவுட் படம் அமேசிங் ஸ்பைடர் மேன். ஆன்ட்ரூ கார்பீல்ட்-எம்மா ஸ்டோன், பாலிவுட் நடிகர் இர்பான் கான் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் கடந்த 29ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் டப் செய்யப்பட்டு 3டி, 2டியில் ரிலீஸ் ஆனது. இந்தியா முழுவதும் 1,236 திரையரங்குகளில் வெளியிடப்பட்ட இந்த படம் ரிலீஸான அன்று ரூ.8.50 கோடியும், மறுநாள் அதாவது சனிக்கிழமை ரூ.9.60 கோடியும், ஞாயிற்றுக்கிழமை ரூ.11 கோடியும் வசூலாகியுள்ளது. ஆக படம் ரிலீஸான 3 நாட்களில் மட்டும் ரூ. 29.10 கோடி வசூலாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் ரிலீஸான ஹாலிவுட் படங்களில் அவதார் படத்திற்கு தான் வார இறுதி நாட்களில் அதிகபட்சமாக ரூ.16 கோடி வசூலானது. தற்போது அவதாரின் சாதனையை அமேசிங் ஸ்பைடர் மேன் முறியடித்துள்ளது.

No comments:

Post a Comment