Thursday 21 June 2012

450 தியேட்டர்களில் களமிறங்கும் சகுனி!

Saguni to release in 450 theatres   அஜித்தின் பில்லா 2 படம் வெளியாக தாமதமாகியுள்ளநிலையில், கார்த்தியின் சகுனி படம் சுமார் 450 தியேட்டர்களில் ரீலிஸ் ஆகவிருக்கிறது. சகுனி படம் ஜூன் 22 என அறிவிக்கப்பட்டதும், 21ம் தேதியே பில்லா 2 வெளியாகும் என்று கூறப்பட்டது. தியேட்டர்கள் முன்பதிவுக்கான வேலைகளை ஆரம்பித்த நிலையில், திடீரென்று சென்சார் பிரச்சினையில் சிக்கிக் கொண்டது பில்லா 2. இது சகுனிக்கு சாதகமாக அமைந்துள்ளது. தமிழில் சோலோ ரிலீசாகக் களமிறங்கும் இந்தப் படத்துக்கு இதுவரை 450 திரையரங்குகள் ஒப்பந்தமாகியுள்ளன. தியேட்டர்காரர்களும் பெரிய தொகையை மினிமம் கேரண்டியாகத் தந்துள்ளனர் என்பது கூடுதல் தகவல். சகுனி படம் நேரடியாக தெலுங்கிலும் அதே பெயரில் உருவாக்கியிருக்கிறது. இது கார்த்திக்கு முதல் தெலுங்குப் படமாகும்.

No comments:

Post a Comment