Thursday 21 June 2012

நரிக்குறவ மாணவருக்கு நடிகர் ஜீவா செய்த உதவி


  

தருமபுரி அருகில் உள்ள வெள்ளிமலை வாழ் நரிக்குறவ மாணவனின் மருத்துவ கல்வி செலவு மற்றும் அந்த மாணவன்

படிக்கும் வரை ஏற்படும் அத்தனை செலவுகளையும் தானே ஏற்றுக் கொள்வதாக நடிகர் ஜீவா உறுதிக் கடிதம் கொடுத்திருக்கிறார்.

வெள்ளிமலை வாழ் நரிக்குறவ இனத்தை சேர்ந்த மாணவன் ராஜபாண்டி. 12ம் வகுப்பில் இந்த மாணவன் எடுத்த மதிப்பெண்கள், 1167 . ராஜபாண்டி மருத்துவ படிப்பு படிக்கவேண்டும் என்று ஆசை எனவும், அதற்கு நிதி உதவி வேண்டும் என்றும் ஊடகங்கள் மூலம் தெரிந்து கொண்ட முன்னணி நடிகர் ஜீவா, தானே முன் வந்து, உதவி செய்திருக்கிறார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது

"டாக்டருக்குப் படிக்க ஆசைப் பட்டார் என்று தெரிந்து கொண்ட பின் இந்த உதவியை செய்ய ஆசைப் பட்டேன். இவர் படிப்புக்கும், படித்து முடிக்கும் வரை இவருக்கு ஆகும் செலவையும் நானே செய்வதாக சொல்லியிருக்கிறேன். அதோடு ராஜபாண்டி மேற்கொண்டு எம் எஸ் படிக்க ஆசைப் பட்டாலும், படிக்கவைப்பேன். பொதுவாக ஒருகை கொடுப்பது இன்னொரு கைக்கு தெரியக் கூடாது என்று சொல்வார்கள். நான் நடிகனாக இருப்பதால் என்னைப் பார்த்து மற்றவர்களும் முன் வருவார்கள் என்றுதான் செய்தியாளர்களிடம் கூட சொல்கிறேன்" என்றார்.

பயனாளி மாணவன் ராஜபாண்டி பேசும்போது, "என் அம்மா என்னை மிகவும் கஷ்டப் பட்டு குலத்தொழில் செய்துதான் படிக்க வைத்தார்கள். அவர்கள் பெயரைக் காப்பாற்றுவேன். நடிகர் ஜீவா பெயரையும் காப்பாற்றுவேன். மருத்துவர் ஆனதும், எங்கள் இன மக்களுக்கு சேவை செய்வதே என் நோக்கம்" என்றார்.

No comments:

Post a Comment